Tuesday, October 8, 2013

நவக்ரகங்கள் நமக்கு தேவையில்லை


வணக்கம்!
தலைப்பு ஏன் வித்யாசமாக இருக்கிறது என தோன்றுகிறதா? எப்போதுமே அப்படித்தான்! மனம் ஒப்புக்கொண்டுவிட்ட ஒரு வழியில் இருந்து விலகிய சிந்தனை நம்மை அடைந்தால், உடனே குழப்ப நிலை தோன்றும். விரிவாக அலசினால் உண்மை நிலை புரியும்.

நவக்ரகங்கள் நம்மை ஆட்டி படைக்க இறைவனால் நியமிக்க பட்டவை. இதில் சந்தேகம் இல்லையே. இறைவனே பூமிக்கு வந்தால் கூட, இவர்கள் பாதிப்புக்கு உட்பட்டு தான் ஆக வேண்டும்! அது தான் தர்மம். அதை விலக்க இறைவனுக்கு கூட அதிகாரம் கிடையாது. உதாரணமாக, சிவனை பிடித்து சனி "ஈஸ்வர" பட்டம் பெற்றான்.

ஒரு பெரியவரிடம் பேசியபோது சில உண்மைகள் எனக்கு புரிந்தது. உண்மைகளை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், உண்மை மாறிவிட போவதில்லை. நாம் தான் இழப்புக்கு ஆளாவோம். அவரின் ஓர் உண்மை விளக்கம் கீழே தருகிறேன். புரிந்துகொள்ளுங்கள்.

"நவக்ரகங்கள் நம்மை நம் கர்மாவுக்கு ஏற்ற படி கட்டு படுத்த நியமிக்க பட்டவை. அவர்கள் தான் நம்மை சுற்றவேண்டும். நாம் அவர்களை சுற்றகூடாது. மேலும், ஒன்பதுக்கும், தன்னை தேடி வந்து பூசை பண்ணிவபர்களுக்கு, சலுகை அளிக்க உரிமை கிடையாது. ஏதேனும் சலுகை அளித்தால், அவர்கள் தலை மீது தொங்கும் கத்தியானது தன் வேலையை பார்க்கும். இப்படி பட்ட சூழ்நிலையில், இவர்கள் பாதிப்பை குறைக்க தான் பிற தேவதைகளை, ப்ரத்யாதி தேவதை என்று பெயரிட்டு இறைவன் நியமித்துள்ளார். மனம் திருந்தி, பாதிப்பின் தன்மையை குறைத்துக்கொள்ள இவர்களை தான் நாம் அணுகவேண்டும். "

இன்றைய ஜோசியர்களின் நிலையை பார்க்கும் போது, இதுதான் உண்மை என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு சிலர் தவிர, எல்லா சோதிடனும், தங்கள் வாழ்க்கையை மட்டும் கணக்கில் வைத்துகொண்டு, தன் வருமானத்தை பெருக்கிகொள்ளவே, உண்மையை மறைத்து, தேவை இல்லாத பரிகாரங்களை சொல்லி, மக்களை வருத்துகின்றனர். சுருக்கமாக சொல்ல போனால் மக்களை அலைய விட்டு தங்கள் வாழ்க்கையை வளமாக்கி கொள்கின்றனர்.

சரி! இந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்க, நம்மை காத்துக்கொள்ள என்ன வழி?
எந்த சோதிடனாவது நேராக நவக்ராஹங்களுக்கு பூசை, பரிஹர்ரம் செய்ய சொன்னால் அதை நம்பாதீர்கள்!
எந்த கோவிலுக்கு சென்றாலும், நவக்ரஹ சன்னதி இருந்தால், அங்கு செல்லாமல், ஏன், அவர்களை திரும்பி கூட பார்க்காமல், சுவாமியை தரிசனம் செய்யுங்கள். நவக்ரக சன்னதிக்கு சென்று தரிசனம் செய்து வேண்டிகொள்வது, கசப்பு கடை காரனிடம், ஆடே சென்று கழுத்தை கொடுத்து "என்னை வெட்டு" என்று சொல்வது போல்.
ஒன்பது பேர்களில் ஒருவரைதவிர (வியாழன்) பாக்கி எட்டு பேர்களும் கழிசடைங்க. இருக்கும் இடம், சேரும் இடம், பார்வைக்கு ஏற்ப சுபாவத்தை மாற்றி கொள்வார்கள்.
கலியுகத்தில் "அன்னதானத்துக்கு" சமமான தானம் உலகில் வேறு ஒன்றும் இல்லை. அதை செய்யுங்கள், ஆத்மார்த்தமாக, அது போதும்.







No comments:

Post a Comment