Friday, December 19, 2014

நம்முடைய மனம்

கிராமத்தில் மிகவும் பலகீனமானர் ஒருவர் இருந்தார். அவருக்கு நம்பிக்கை அதிகமாக இருத்தது. எதனையும் தன்னால் செய்ய முடியும் என்று நம்பினார்.
இறுகிப்போன பாட்டிலின் மூடியையும் பேனாவின் மூடியையும் திறப்பதில் அவருக்குத் தனித்திறமை இருந்தது. மற்றவர்களால் திறக்க முடியாது என்ற மூடியை இவர் முடியும் எனக் கூறித் திறந்து விடுவார்.ஒருநாள் தன்னுடைய உடல்வலிமையில் அதிக நம்பிக்கையுள்ள ஒருவர் பேனாவைத் திறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்தார் பலகீனமானர்.
‘என்னிடம் கொடுங்கள்’ என்று கேட்டார். பேனாவைப் பெற்றதும் ஒரே அழுத்தில் மூடியைத் திறந்து விட்டார்.
இதைப் பார்த்ததும் பலசாலிக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. “தாங்கள் என்னை விட பல சாலியா?” என்று கேட்டார்.உடனே பலவீனமானவர், “நான் உள்ளத் தால் பலசாலி” என்றார்.

முடியும் என்று எண்ணினால் வலிமை வந்துவிடும். முடியாது என்று கருதினால் வலிமை வெள்ளம் போல வடிந்து போய்விடும். ஆற்றல் இருந்தும் அதனை இழந்து விட நேரிடும்.

நம்மால் இயலவில்லை என்று நினைத் தால் நாம் அதன் மேல் அக்கறைப்படவில்லை என்றுதான் அர்த்தம். ஒருசெயலைச் செய்ய முடியும் என்று எண்ணிப்பார்க்கக் கூட விரும்பவில்லை என்றுதான் பொருள்படும்.

செயலை என்னால் ஆற்ற இயலும் என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். மனத்தை உறுதி படுத்த நம்பிக்கை அவசியம் வேண்டும். நம்மாலும் மனதை அலையவிடாமல் அடக்கி ஒரு காரியத்தில் செலுத்த இயலும் என்ற நம்பிக்கையுடன் பயிற்சியைத் தொடங்கினால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

நம்பிக்கை இல்லாவிட்டால் ஓன்றும் செய்யமுடியாது. செயல்படுவதற்கு முன் நம்பிக்கை கொள்வதை, பயிரிடுவதற்கு முன் நிலத்தை உழுவதற்கு ஒப்பிட முடியும்.

நம்மால் முடியுமா, முடியாதா என்று சபலப்பட்டுக் கொண்டிருக்கும் உள்ளத்தில் முடியும் என்று உறுதி கொள்ள வேண்டும். மனதை உறுதியுடன் ஒருமைப்படுத்த முடியும். அலையும் மனதை அடக்கி ஒரு குறிப்பிட்ட திசைக்குத் திருப்ப முடியும் என்ற நம்பிக்கை முதலில் வேண்டும்.

இந்த நம்பிக்கை வந்தபின் மனதைச் செலுத்துவதற்கான ஒரு குறிக்கோளை தேர்ந் தெடுத்து எடுக்க வேண்டும். இதன் பின்பு மனதை ஒரு செயலில் ஒருமைப்படுத்திப் பார்ப்போம் என்று அமர்ந்தும் மனதில் பல எண்ணங்கள் உருவாகும்.

நாம் விரும்பியதைத் தவிர்த்து வேறு எதோ எண்ணங்கள் எல்லாம் வந்து குவியும். இந்த நிலையில் நம் மனம் அலைக்கழியும். கவனம் சிதறும். கருத்து மாறுபடும்.

இந்த நிலையில் நாம்செய்ய வேண்டியது எல்லாம், வந்து குவியும் எண்ணங்களை முற்றிலும் விரட்டி விட வேண்டும். விரும்பும் எண்ணத்தில் மீண்டும் மீண்டும் மனதைத் திருப்ப வேண்டும்.

கொல்ல வரும் பகைவரை வெட்டி வீழ்த்தும் வீரரைப் போன்று விளங்க வேண்டும். இப்படி இருந்தால்தான் வேண்டாத எண்ணங் களின் வலிமை குன்றிவிடும் வேம் தனிந்துவிடும்.

அதன் பிறகு நாம் விரும்பிய எண்ணத்தை நெஞ்சின் நிலைக்களனாய் ஆக்கிக்கொள்ள முடியும். அப்பொழுது நெஞ்சத்தில் அது மட்டும் அரியணையில் அமர்ந்து இருக்கும்.

இதைத் தவிர வேறு எதனையும் அங்கு காணமுடியாது. ஒரே எண்ணத்தின் ஒப்பற்ற ஆட்சி உள்ளத்தில் நடந்து கொண்டிருக்கும். இந்த நிலைதான் வெற்றியின் அடித்தளமாகும்.

எதனையும் கற்றுக் கொள்வதற்கு சிறந்தவழி, எதைக் கற்க விரும்புகிறோமோ அதனையே செய்து பார்ப்பதுதான்.நீச்சல் கற்றுக் கொள்ள விரும்பினால் நீரில் துணிந்து இறங்கி விட வேண்டியதுதான். மன ஒருமைப்பாட்டை அறிந்து கொள்ள எளிதான முறை மனத்தை ஒரு நிலையில் இருக்கும் படி செய்து பார்ப்பது தான்.

விதையை நிலத்தில் ஊன்றி நீர் ஊற்றலாம். ஆனால் நாமே அதனை வளரச் செய்ய இயலுமா வளர்வது விதையின் வேலை தானே! தோட்டக்காரன் மரஞ்செடி கொடி களுக்கு நிர் ஊற்றிப் பாதுகாப்பான். ஆனால் வளர்ந்து மலர்ந்த கனிதர வேண்டியது மரத்தின் வேலை அல்லவா? எனவே முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் எல்லாமே வெற்றி யாக அமையும்.

டாக்டர் இராதா கிருஷ்ணன் அமெரிக்காவிற்கு சென்றிருந்த போது அவரிடம் நிருபர்கள் கேட்டார்கள் “அமெரிக்கா வான வெளியில் செலுத்திய செயற்கைச் சந்திரனைப் பற்றி தங்கள் கருத்தென்ன?”

உடனே டாக்டர் இராதா கிருஷ்ணன் ஒருவர் செய்ததை மற்றவராலும் செய்ய முடியும் என்பதற்குச் சான்று அமெரிக்காவின் சாதனை என்றார்.

உண்மையில் நம்மால் முடிந்த செயலை தான் முடியாது என்று நினைக்கிறோம். ஒரு செயலைச் செய்து கொண்டே அதனை நம்மால் செய்ய இயலாது என்று கூறுகிறோம்.

மனதை ஒரு நிலையில் நிறுதத முடிய வில்லையே என்று அங்கலாய்க்கிறோம். உண்மையில் நாம் மன ஒருமைப்பாட்டை அடைந்து இருக்கிறோம்.

எப்படி என்றால் நம்மை ஒருவர் அவமதித்ததும் என்ன செய்கிறோம்? நம்மை இவர் இப்படி அவமதித்து விட்டாரே என்ற எண்ணத்தை தவிர வேறு எந்த எண்ணமும் இடம் பெறாது.அப்பொழுது நம்மால் டி.வி.யில் வரும் சினிமாவைக்கூட ரசித்துப் பார்க்க முடியாது. இந்த நிலைக்கு மனம் ஒருமையாகிவிட்டது என்று அறிந்து கொள்ள முடியும்.

நம்முடைய மனம் அவமானத்திலே முழ்கி இருப்பதானால்தான் மற்றவற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மற்ற சமயத்தில் மனத்தைக் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் செலுத்த முடியாமல் தவிக்கும் நாம், அவமானம் நேர்ந்த நிலையில் மனத்தை அதை விட்டு அப்புறப் படுத்த முடியாமல் தவிக்கிறாம்.

விரும்பும் விஷயத்தில் வேண்டிய நேரத்தில் மனத்தை ஒருமைப்படுத்தும் இயல்பு நிலையே வலிமையாகும். இதுதான் மனம் ஒன்றிய நிலை. இந்த திறமை வாய்ந்த வலிமையே உண்மையானது.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி நாம் அதிகமாகச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. நம்முடைய மனதை ஒரே நிலையில் நிறுத்தும்படி செய்ய எத்தனையோ வழிகள் இருந்தாலும் நாம் அதை உணர்ந்து கொள்வதில்லை.

நமக்கு வேண்டியவர்களிடம் பேசும் பொழுது நேரம் போவதே தெரிவதில்லை. இதற்குக் காரணம் அவருடைய பேச்சில் ஒன்றிவிடுகிறோம்.

நம்முடைய மனம் அவருடைய பேச்சில் கவனமாக இருப்பதால் ஒருமைப்பட்டு விடுகிறது. மனதை ஒரு நிலையில் வைக்கமுடியும் இவைகள் எல்லாம் சான்றுகளாக இருப்பதனால் நம்மால் ஒரே மனநிலையில் இருந்து செயலாற்றி வெற்றி பெறமுடியும்.

Tuesday, November 25, 2014

நுனிப்புல் மேயாதீங்க!

நுனிப்புல் மேயாதீங்க! அறிவை வளர்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு !! மிஸ் பண்ணிடாதிங்க !!
சகலகலா வல்லவனாக வேண்டும் எனும் ஆர்வம் இன்று பலரிடம் காணப்படுகிறது. ஒரு விஷயத்தைக் கற்க ஆரம்பிப்பார்கள். நண்பனிடம் இன்னொரு திறமை இருக்கும், அதை நோக்கி மனம் தாவும். அதைக் கற்க ஆரம்பிக்கும்போது இன்னொன்றில் மனம் லயிக்கும். அதன்பின் வேறொன்றுக்குத் தாவும். கடைசியில் நமது ‘ஸ்பெஷாலிட்டி’ எது என்பது பிரித்தறிய முடியாக் கூட்டாஞ்சோறாகிப் போகும்.
கொஞ்சம் ஆற அமர உட்கார்ந்து உங்களுடைய ‘பெஸ்ட்’ திறமை எதில் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சட்டென ஒரு விஷயம் உங்களுக்குத் தோன்றினால், உண்மையிலேயே உங்களுடைய திறமையை நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். அந்தத் திறமை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கவிதை எழுதுவதாகவோ, காபி போடுவதாகவோ… எதுவாகவும் இருக்கலாம்.
ஒருவேளை நீங்கள் யோசிக்கும்போது ஒரு விஷயமும் உங்களுக்குப் பிடிபடாமல் போனால் விழித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் திறமைகளை எல்லாம் பட்டியலிட்டு எதில் நீங்கள் வல்லவர், எதில் நீங்கள் சுமார், எது உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயம் என வரிசைப்படுத்துங்கள். அந்தப் பட்டியலைப் பார்க்கும்போது ‘இதுதான் என்னோட ஸ்பெஷாலிட்டி’ என உங்களுக்கே ஒரு விஷயம் நிச்சயம் பிடிபடும்.
உங்களுடைய உண்மையாக விருப்பம் இருக்கும் விஷயத்தில் உங்களுக்கு இயல்பாகவே திறமையும் இருக்கும். அந்த ஏரியாவில் நீங்கள் மூச்சடக்கி, முக்குளித்து முத்தெடுக்க வேண்டும். அது நிச்சயம் உங்களை வெற்றிகளின் உச்சியில் கொண்டு சேர்க்கும்.
நீங்கள் தேர்வு செய்யும் விஷயம் குறித்த தகவல்களையும், விஷயங்களையும் தேடித் தேடிப் படிப்பது அடுத்த கட்டம். வெறுமனே வாசிப்பது மட்டுமல்லாமல் அது குறித்த சிந்தனைகளிலும் அதிகம் ஈடுபடுங்கள். குறிப்பாக ஒரு பாடகராக மாறுவது உங்கள் லட்சியம் என்றால் அது குறித்த நூல்களைப் படியுங்கள். பாடகர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள். அவை உங்களுக்குத் தூண்டுதலாய் மாறும்.
அதே துறையில் விருப்பமுடைய நண்பர்களைக் கொண்டிருப்பது அடுத்த தேவை. அந்தத் துறையில் திறமை மிக்கவர்கள் நண்பர்களாகக் கிடைத்தால் நல்லது. யாராவது ஒரு நல்ல நபர் வழிகாட்டியாய்க் கிடைத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. நல்ல உற்சாகமூட்டக்கூடிய வழிகாட்டி, லட்சியப் பாதையில் உங்களைச் சுமந்து செல்லும் ஒரு குதிரையைப் போன்றவர்.
இன்றைக்கு இணையம் பல்வேறு குழுக்களையும், சமூக வலைத்தளங்களையும் நமக்கு முன்னால் நீட்டுகிறது. இசைப் பிரியர்கள் அதற்கான குழுக்களில் இணையலாம், தையல் பிரியர்கள் அதற்கான குழுக்களில் இணையலாம். இங்கே அரட்டைகளைத் தவிர்த்த உருப்படியான பல விஷயங்கள் பரிமாறப்படும்.
‘உங்களுக்குப் பிடித்தமான விஷயமே வேலையாகிப் போனால் வாழ்க்கையில் ஒருநாள் கூட வேலை செய்யும் உணர்வே வராது’ என்கிறார் கன்பூஷியஸ்.
எதை அபரிமிதமாக நேசிக்கிறோமோ அது நமது உணர்வுகளில் பின்னிப் பிணைந்து நம்மை மாபெரும் வெற்றியாளராய் கொண்டு சேர்க்கும். வின்சென்ட் வான்கா எல்லாவற்றையும் விட அதிகமாய் ஓவியத்தை நேசித்தார். ஓவியம் வரைய அமர்ந்தால் சாப்பிடவே மறந்து போய் விடுவாராம். தனது தூரிகையிலிருந்து விழும் ஒவ்வொரு துளியையும் நேசித்ததால்தான் இன்று ஓவிய உலகம் அவரை கொண்டாடுகிறது.
உங்களுக்குப் பிரியமான வேலையை கண்டுபிடிப்பது ஒன்றும் கம்ப சூத்திரமில்லை. எந்த வேலை உங்களை மெய்மறக்க வைக்கிறதோ, எந்த வேலை செய்யும் போது சோர்வே ஏற்படவில்லையோ, எந்த வேலை உங்களை உற்சாகம் கொள்ள வைக்கிறதோ அதுவே உங்களுடைய கனவு வேலையாய் இருக்கலாம்.
கனவு வேலைக்குள் காலெடுத்து வைத்தபின் உடனடியாகப் பயன் கிடைக்கவில்லையே எனும் கவலையே இருக்கக் கூடாது. விதைகள் உடனடியாக மரமாகி விடுவதில்லை. முளை விட்டதும் கனிகளைத் தேடுவதிலும் நியாயமில்லை. ஒவ்வொரு வளர்ச்சியையும் கவனமுடன் கவனித்து, முன்னேறிச் செல்கிறோம் எனும் நிலையை மட்டும் உறுதிப்படுத்திக் கொண்டாலே போதுமானது.
யோ அலை என அலைந்தார். ஏகப்பட்ட உணவகங்களில் அதை நிராகரித்தார்கள். ஆனால் அவரோ சிக்கன் தயாரிப்பில் சாதனையாளராய் மாற வேண்டும் எஹார்லண்ட் டேவிட் சாண்டர்ஸ் என்றொருவர் இருந்தார். சிக்கன் சமைப்பதில் கில்லாடி. தனது சிக்கன் செய்முறையை எடுத்துக்கொண்டு அலைனும் ஒரே பிடிவாதத்தோடு முயன்றார். கடைசியில் வென்றார். அதுதான் இன்று உலகெங்கும் கொடிகட்டிப் பறக்கும் கே.எப்.சி. (KFC )சிக்கனின் வரலாறு!
‘எதில் இருக்கிறாயோ, அதில் சிறப்பானவனாய் இரு’ என்கிறார் ஆபிரகாம் லிங்கன். பிரபல எழுத்தாளர் மால்கெம் கிளாட்வெல் தனது தியரியில் சொல்லும் விஷயம் கவனிக்கத்தக்கது. ஒரு மனிதன் ஒரு துறையில் வல்லவனாக விளங்க நிறையப் பயிற்சி தேவைப்படுகிறது. 10 ஆயிரம் மணி நேரம் ஒரு மனிதன் ஒரு செயலுக்காக அர்ப்பணிக்கும் போது அவன் அதில் உச்சத்தைத் தொட்டு விடுகிறான் என்கிறார் அவர்.
அதென்ன 10 ஆயிரம் மணி நேரம்? வாரம் 20 மணி நேரம் வீதம் பத்து ஆண்டுகள். அதுதான் அவரது கணக்கு. ஒரு கால்வாசி உயரத்தை எட்டிப் பிடிக்க இதில் கால்வாசி நேரம் ஆகும், அதாவது 2 ஆயிரத்து 500 மணி நேரம். உச்சத்தை எட்டிப் பிடிப்பதொன்றும் எளிய வேலையல்ல, அதற்கு ஏகப்பட்ட உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
ஒரு துறையில் நிபுணர் ஆகி விட்டால் அந்தத் துறையில் உங்களுடைய இருப்பை பலப் படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக பளீரடிக்கும் வைரமானாலும் அதைப் பத்தாயத்தில் போட்டு வைத்தால் யாருக்குமே தெரியாமல் போய்விடும். எனவே இருக்கும் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை வரவேற்கவேண்டும்.
ஒரு விஷயத்தில் கில்லாடியானதும் உங்களுடைய உழைப்பு அத்துடன் முடிந்துபோய் விடுவதில்லை. அந்த இடத்தைத் தக்க வைக்கத் உங்கள் கவனத்தை அதன் மீது தொடர்ந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
ஒருவர் பல விஷயங்களில் கில்லாடியாய் இருக்கலாம் என பலர் சொல்வதுண்டு. உண்மையில் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. ஒருவர் பல விஷயங்களில் திறமைசாலியாய் இருக்கலாம். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை ஆழமாகக் கற்கும்போதுதான் அவர் சாதனையாளராய் மாறுகிறார். சாதாரண வெற்றிக்கும், சாதனை வெற்றிக்கும் இடையேயான வேறுபாடு அங்கே உண்டு.
குவிலென்ஸ் ஒரு புள்ளியில் தனது சக்தி அனைத்தையும் குவிக்கும்போது எரிக்கும் தன்மையைப் பெறுகிறது. அது போலத்தான் இதுவும். நமது சக்தியெல்லாம் ஒரே லட்சியத்தில் குவிக்கப்படும் போது அதன் தாக்கம் வீரியமானதாக இருக்கும். பரந்துபட்ட சிந்தனை பல விஷயங்கள் மீது பரிச்சயத்தைத் தரும், ஆனால் ஒன்றிலும் உங்களை உச்சத்தில் வைக்காது.
நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் அசைக்க முடியாத நபராய் இருப்பதுதான் உங்களை அலுவலகத்திலும் வெற்றியாளராக்கும். ‘இந்த துறையில் இவனை விட்டால் ஆளே கிடையாது’ எனப் பெயர் வாங்கியவர்களே சடசடவென முன்னேறிக் கொண்டிருப்பார்கள் மதிக்கப்படுவார்கள். ‘அவனுக்கு எல்லாம் தெரியும், ஆனா எதிலும் ஸ்ட்ராங் கிடையாது’ எனப்படுபவர்கள் சறுக்கிக் கொண்டிருப்பார்கள்.
நமது சமகால வாழ்க்கையில் சச்சின் தெண்டுல்கர், மைக்கேல் ஜோர்டான், பில் கேட்ஸ், டைகர் உட்ஸ், ஸ்பீல்பெர்க், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என யாரை எடுத்தாலும் அவர்கள் ஒரு துறையைத்தேர்ந்து எடுத்து பிடித்துக்கொண்டு அதில் முழுக் கவனத்தையும் செலுத்தி சாதித்துக் காட்டியவர்கள் தான். பல படகுகளில் கால் வைத்து தவறி விழுந்தவர்களல்ல.
கடைசியாக ஒன்று. ஒரு துறையில் உச்சத்தில் போக வேண்டுமென்பதன் பொருள் மற்ற எல்லா துறைகளிலும் முட்டாளாய் இருக்க வேண்டுமென்பதல்ல. ஒரு துறையில் கில்லாடியாய் இருப்பவர்கள் வேறு சில துறைகளிலும் பரிச்சயமும், அறிவும், திறமையும் பெற்றிருக்க வேண்டும். அது கூடுதல் பலன் தான். ஆனால் முதல் கவனம் எங்கே இருக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியா உறுதி வேண்டும்.
அறிவின் ஆழம் புரியட்டும்
சிகரம் கண்ணில் தெரியட்டும்!
http://www.seithy.com/

Friday, November 21, 2014

மனமே ஒரு மகாசக்தி


இயற்கையின் படைப்பில் மிகவும் பிரமிக்க வைப்பது பிரபஞ்சம். பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பு. இவற்றுடன் தொடர்புடைய வன் தான் மனிதன். நீர்நிலை என்பது வாய்ப்பகுதியாகவும், நிலம் என்பது தேகமாகவும், காற்று என்பது சுவாசமாகவும், ஆகாயம் என்பது மனிதனின் நெற்றிப்பகுதியாகவும், நெருப்பு என்பது உடம்பின் உஸ்ண- மாகவும் மனித உடற் கூறுகளை இயற்கை இரசித்து அமைத்து இருக்கின்றது. இதற்கும் மேலாக உடலின் உறுப்புக்கள் யாரும் உணரமுடியாத உன்னதமாக படைப்புக்கள். இதற்கெல்லாம் மேலாக மனிதனின் உடல், மற்றும்..

உடல் உறுப்புக்கள் அனைத்திற்கும் தலைமைப் பீடமாக விளங்குவது மனம். ஒவ்வொரு உறுப்புக்களின் இயக்கங்களும். செயல்பாடுகளும் மனமே.எந்தக் காரியத்தை எடுத்தக்கொண்டாலும் நன்மையோ அல்லது தீமையோ மனச்சாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் என்று நடைமுறையாக சொல்லுகின்றோம். மனம்தான் சாட்சி.அந்த மனச்சாட்சி என்பதையே நாம் இறைவன் எனக் கூறுகின்றோம். சித்தர்களும் ஞானிகளும் சொல்லும் வார்த்தைகளோ மனதில் குடிகொண்டிருக்கும் ஆண்டவனே என்று கூறுவார்கள். மனத்தை ஆண்டு கொண்டிருக்கும் அந்த மகாசக்திக்கு அண்டவன் என்று பொருள் கொள்கின்றோம். அந்த மனதை அமைதிப்படுத்தி உடலையும் பக்குவப்படுத்தி அமைதி நிலையை அடைந்து விட்டால் பல சாதனைகளை செய்யலாம் என்று யோகிகளும் சித்தர்களும் கூறி உள்ளார்கள்.

இந்த மனக்கோவிலில் வாழும் புனிதத்தை புனிதமாக வைத்துக்கொள்ள மனிதன் மறுக்கின்றான்.

இந்த மனதை நல்வழிப்படுத்திக் கொள்ளும் வழிகள் பலவகை இருந்தாலும் சராசரி வாழ்வை மட்டுமே மனம் நாடுகின்றது. இதற்கு பிறந்த நாள்முதல் பிறவி நாள்வரை புகட்டும் ஆரம்ப நிலைப்பாடமும் வழியில் நாம் முறைகேடாக கற்றுக்கொண்ட பாடங்களிலும் மனிதனை சராசரி நிலைக்கு தள்ளுகின்றது. இதை எவ்வாறு சரிசெய்து கொள்வது ? உயர்ந்த நிலைப்பாடான நமது நல்லமனம் என்பது பிறக்கும் போது வெற்றிடமாகத்தான் படைக்கப்படுகின்றது. இந்த வெற்றிடத்தில் எதை செயல்படுத்துகின்றோமோ அதுவாகவே மனம் செயல்படுகின்றது. கோபம், காமம், அன்பு, விருப்பு, வெறுப்பு என்று எதை நெஞ்சில் விதைக்கின்றோமோ அந்த வகையைச் சார்ந்த குணங்களே உருவாக்கப்படுகின்றது. குணங்களையோ, எண்ணங்களையோ மாற்றி அமைப்பதின் மூலமாக பழுதடைந்த மனங்களைக் கூட தெய்வீக மனம்கொண்ட மாமனிதனாக மாற்றலாம். ஆகவே எண்ணங்களின் வடிவமைப்புக்களை மாற்றிக் கொள்வதன் மூலம் நம்முடைய மனங்கள் பண்படுத்தப் படுகின்றது.

இறைநிலை என்றால் என்ன.? அமைதியான மனதை, மனநிலையை இறைநிலை என்கின்றோம். மனம் அடங்கவில்லை, மன அமைதியில்லை என்றால் கோவிலுக்கு செல்கின்றோம். ஏன்? கோவிலுக்கு செல்லும்போது நம்மைப்போல் பல மனிதர்களின் மன அதிர்வுகள் மன அலைகளாக நேர்மறையான அதிர்வுகளாக மண்டபத்துக்குள் பரவியிருக்கும். அந்த அதிர்வுகளால் நம்மனம் சீர்படுகின்றது. அங்கே செல்லும்போது நம் மனத்துக்கு சக்தி கிடைக்கின்றது. இந்த பேருண்மையை உணர்ந்தவர்கள்தான் யோகிகளும், சித்தர்களும். இவர்களின் மனதின் சூட்சும சக்திகளை தெரிந்து கொண்டு மனித குலங்களுக்கு மகா காவியங்களை நூல்களாக நமக்கு படைத்துத் தந்து விட்டுச் சென்றுள்ளார்கள். ஆகவே எண்ணங்களின் வீரியத்தை நம்வாழ்க்கையின் தேவைக்கு ஏற்ப வடிவமைத்துக் கொள்ளுதல் அவசியம். எங்களின் எண்ணங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள சில வழி முறைகள் உண்டு.

பயம், கவலை எதிர்மறையான எண்ணம் தன்னைத் தானே நொந்து கொள்ளுதல் தேவை இல்லாத சிந்தனைகளை மனதில் இருந்து அகற்றி எண்ணங்களை சுத்தப்படுத்தி கொள்ளுதல் போன்ற பயிற்சிகள் மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். மனித வாழ்க்கையின் மூலாதாரமாக விளங்கும் மனத்தின் நிலைகளை பலவாறாகப் பிரித்துக் கூறலாம்.. இந்த மனம் தனது வாழ்நாள் முழுவதும் இறைநிலை என்னும் தெய்வீகத்தை மனதோடு சேர்த்து வாழ்தல் எனவும் நல்ல விசயங்களுக்காகச் சொல்லப்படும் வார்த்தைகளும். நேர்த்தியுடன் நல்லகாரியங்களை செய்து முடிக்கும் மன உறுதியும். ஏற்படும் போது மனித உள்ளத்தில் அமைதி ஏற்படும்.. சில நேரங்களில் இனிமையான, சுவையான சில விசயங்கள் கூட துன்பத்தைத் தழுவ நேரிடுகின்றது. மலையாக தெரிகின்ற பெரும் துன்பம் கூட இன்பமாக மாறிவிடுகின்றது. இவை அனைத்துக்கும் என்ணங்களே காரணம். அதற்காகத்தான் எண்ணங்களை சரிசெய்ய வேண்டுமென நம்மூத்தோர் நமக்கு சொல்லி உள்ளார்கள்.

அதுபோல் நாம் சொல்லுகின்ற சொல்லுக்கு ஒருவகை வலிமை உண்டு. அதை எந்த கோணத்தில் செயலாக்கம் செய்கின்றோமோ அவ்வாறே அந்தக் காரியம் இனிமையான காரியமாகவோ, இல்லை துன்பம் தரும் காரியமாகவோ அமைந்து விடுகிறது. இந்த மனநிலைகளை அறிந்து, புரிந்து, வாழ்ந்தால் மனித வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் உண்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை. பிறவியில் உயர்ந்த பிறவி மனிதப்பிறவி. இந்தப்பிறவி எடுத்து விட்டாலே தெய்வீகத்துக்கு சமம். என்பார்கள்.. அப்படி என்றால் வாழ்நாளில் நம்மோடு வாழ்பவர்களிடம் உண்மையோடும் நம்பிக்கையோடும் நடந்துகொள்வது அவசியம். உண்மை மட்டும் இருந்தால் போதுமா ? நன்மையும், நம்பிக்கையும் இருக்கவேண்டாமா? அவ்வாறு உண்மையுடன் சேர்ந்து பயன் தரக்கூடிய நன்மைகள் இருந்தால் உலகமே உன்னைப் போற்றும். அதுபோல மனித வாழ்க்கையில் உயர்வு தாழ்வு என்பது இயற்கைதான். அதேசமயம் உயரும்நிலை வரும்போது பணிவும் வரவேண்டும். பணிவோடு சேர்ந்த உயர்வே நிரந்தரமானது.

உண்மை என்றால் என்ன? அன்பு என்றால் என்ன? அன்போடு இருந்தால் உண்மை என்றுமே நிலைத்து நிற்கும். இந்த உண்மை என்பது அன்பைப் பொறுத்தது. அதேபோல பணிவு என்பது பண்பைப் பொறுத்தது. இந்த வகையான மனநிலைகளும் நம் வாழக்கைக்கு நன்மையான விசயங்களை உருவாக்கித் தருவதற்கான சாத்தியக்கூறுகளே.

மனித மனம் தவிர்கப்படவேண்டிய விசயங்கள் என்னவென்றால் ஆசை ,கோபம், களவு இவைகள் தான். இந்த மனோநிலையில் உள்ள மனிதர்கள் பேசத்தெரிந்த மிருக இனத்தை சேர்ந்தவர்கள் எனலாம். முயற்சியோடு சேர்ந்த நல் வழிப்பயிற்சியும் எடுத்துக் கொண்டால் தான் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். இதற்கு மாறாக அன்பு, நன்றி, கருணை அகியவற்றைக் கொண்ட மனம். மனித வடிவிலே நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லமனம் என்றே கூறலாம்.

ஆக்கம்:வேலணையூர் பொன்னண்ணா

பிரபஞ்சம்

பிரபஞ்சம் உங்களிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறது. பிரபஞ்சமானது , மக்கள் , சம்பவங்கள் , சின்னங்கள் , சகுனங்கள் , கனவுகள் , இவைகள் மூலமாக உங்களிடம் பேசிக் கொண்டேதான் இருக்கிறது . சிலர் மட்டுமே அதன் குரலை கேட்கிறார்கள். நாம் எல்லோருமே அவ்வப் போது நடக்கும் பிரச்சனைகள் அல்லது பகல் கனவு காணுதல் அல்லது நமக்கு பிரபஞ்ச செய்தி சொன்னவரிடமே வாக்கு வாதம் செய்தல் இப்படி செய்து பிரபஞ்ச செய்திகிடைப்பதை தடுத்துக்கொள்கிறோம்!

பிரபஞ்ச ஆற்றல் என்பது காஸ்மிக் கதிர்கள்தான் . இந்த காஸ்மிக் கதிர்கள் உலகில் மேலும் கீழும் பரந்து வியாபித்து சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறது. நமது எண்ண அலைகள் இந்த காஸ்மிக் அலைகளின் பிரபாவத்தில் சேர்ந்து ஆற்றல்களை அதிகப்படுத்துகிறது , நம் எண்ண அலைகள் நல்லவையாக இருப்பின் நன்மையும, தீயவையாக இருப்பின் தீமையும் நமக்கு நடக்க செய்கிறது ! நம் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி , சுக துக்கங்களுக்குநம் எண்ணங்களே காரணம் ! !

எல்லாம் வல்ல பிரபஞ்ச சக்தி எதை கேட்டாலும் தரும் . இதை எவர் ஒருவர் பூரணமாக நம்புகிறாரொ ? அவர் எதிலும் வெற்றி மேல் வெற்றி பெற்று எல்லா வளங்களும் , நலன்களும் பெறுகிறார் !!

மானுட உடலானது தெய்வீக மின் கலம் . ஞுவிட்சைத் தட்டினால் மின்சாரம் பாய்வது போலவே , உள்மனதை தட்டினால் , தெய்வீக மின்காந்த அலையானது உடலெங்கும் உள்ள நாடி நரம்புகளில் பாய்ந்து, நுண்ணுடல் , பருஉடலும் ஆரோக்கியத்தையும் , வலிமையினையும் , வல்லமைகளையும் , வீடுபேற்றையும் பெறவல்ல தாகின்னது ! !

கர்மவினைக்குக் கலங்காதே? கர்ம வினையோ.,.. தண்டனையோ .,,, அதிர்ஷ்டமோ,,,. கடவுளின் அருளோ.,,,. எதுவானாலும் மனதின் வழியாகத்த்தான் வந்தாக வேண்டும் . மனத்தின் சக்தியைப் பெருக்கி சரியான வழியில் மனத்தைப் பயன் படுத்தும் நுட்பத்தைத் தெரிந்து கொண்டால் கர்ம வினைகளைச் சர்வசாதாராணமாய் வெல்லலாம் .!

ஒரு சித்தரின் எழுத்தில் மனம் லயித்து , அவரின் எண்ண அலைகளுடன் நாம் தொடர்பு கொள்ளும் போது , சித்தரால் விட்டது , காலத்தின் பயன் கருதி நம் மூலம் வெளிப்படும் ! இது எநதத் துறைக்கும் பொருந்தும் . ஒத்த மனமுள்ள முன்னோடிகளின் எண்ணங்களி லிருந்து நாம் எண்ணியதைத் தேடினால் அது கன்டிப்பாக கிடைக்கும் !

சித்தர்களை வரவைக்கும் மந்திரம் : ஓம் சிங்ரங் அங்சிங் மசிவசி . என்று தியானத்தால் தியானிப்பவரின் பிரான ரிதத்தில் அது உடுருவும் போது கோடிட்ட இடத்தில் அவரவர் விரும்பும் முன்னோடி தமிழ் சித்தர்களை பூர்த்தி செய்து ஏற்க்கும் போது தியானிப்பவரின் பிராணசலனம் அந்த சித்தரை வரவைக்கும் ! ! சித்தர்களால் நிரூபணமானதுதான் !

டெலிபதி : டெலிபதி எப்படி வேலை செய்கிறது? நம் எண்ண அலைகள் நம்மைச் சுற்றிலும் உள்ள ஆகாயத்தில் பரவுகிறது. நமது மனோ சக்திகளைப் பயன் படுத்தி , நம் மனத்திரையில் ஒருவரைப் பார்த்து பேசும் போது , ஆகயத்தில் பரவும் நமது எண்ண அலைகள் அவர்கள் மனதில் உடனே பரவி பதிந்து விடுகிறது. நம் ஒருவருக்கு டெலிபதி மூலம் ஒரு செய்தி அனுப்பும் போது , அவர் ஐம் புலன்களும் அடங்கி (தூக்கத்தில்) ஆழ் நிலையில் இருக்கும் போது , நம் அனுப்பும் செய்தி உடனே அவர் (ஆழ் ) மனதில் பதிந்து விடும் ! இந்த முறையில் நாம் அனேக காரியங்களில் வெற்றி அடையலாம் ! !

பிராண ஓட்டம் , இரத்த ஓட்டம், விந்தோட்டம் , மன ஓட்டம், இவைகளே சமச் சீர்ப்படுத்துவதே குண்டலினி பயிற்சியாகும் . இதில் தேர்ந்து , சகஸ்ராரத்தில் ஊடுருவும் போது , மாவடு போல் உள்ள ஞானக்கண் எனப்படும் பீனியல் தெரபியிலிருந்து வடியும் சக்திப் பாலைப் பருகி தெய்வீகத்தை உணரும் சித்தனுக்கு , உடலை வலுப் படுத்தும் தேங்காய்ப் பால் தேவையில்லை என்பதை குதம்ம்பை சித்தர் : மாங்காய் பாலுண்டு ' , மலைமேலிருப்பார்க்குத் , தேங்காய்ப்பால் ஏதுக்கடி _ குதம்பாய் தேங்காய்ப்பால் ஏதுக்கடி" என்கின்றார்

பிரச்சனைகளுக்கு கனவின் மூலம் விடை ? 1 படுக்கையில் படுத்துக் கொண்டு பார்வையை மேலே உயர்த்தி கண்களை மூடி ஆல்பா லெவல் தியானத்தில் இருக்கவும் . 2 மனதுக்குள் நான் எனது பிரச்சனைகளுக்கு விடை காண கனவில் ஒரு தீர்வைச் சொல்லவும் , நான் கனவை ஞாபகம் வைத்துக் கொள்வேன். என பலமுறை மனதுல் சொல்லிக் கொண்டே உறங்கி விடவும் . 3 காலையில் கண் விழித்ததும் நீங்கள் கண்ட கனவுகள் ஞாபகத்திற்க்கு வரும் அதன் மூலம் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்! பல நாள் முயற்ச்சி செய்ய நல்ல தேர்ச்சி அடைவீர்கள் !

மனித மூளையில் நான்கு விதமான அலைகள் உள்ளன . ஆலஃபா , பீட்டா , தீட்டா , டெல்டா . இந்த அலைகளை C,.P.S. என்ற அலரு முறையினால் அளவிடுகிறாகள். CYCLES PEF SECOND என்பதாகும் . இதை E.E.G. என்ற கருவி மூலம் அளக்க முடியும் என்பது மருத்துவ உண்மை . 1 ஆல்பா நிலை(8முதல் 12 G.P.S.வேகம்) என்பது சாதாரண மனிதர்கள் சற்று தன்னை மறந்த நிலை . 2 பீட்டா நிலை(12 முதல் 15G.P.S. வேகம்) நம்முடைய சாதாரண விழிப்பு நிலையே . 3 தீட்டா நிலை (4முதல்8 G.P.S வேகம்) இது மிக அதீத ஆழநிலைத் தியானம் சமாதி , வலிப்பு நோயினால் மயங்கும் நிலை. 4டெல்டாநிலை(4 G.P.S குறைவான வேகம்) மிக ஆழ்ந்த உறக்கம் , கோமா நிலை . இதில் சாமான்யருக்கும் அனுபவத்தால் உணரக்கூடிய நிலை ஆல்ஃபா!

மன காட்சி மூலம் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றலாம் . ? நீங்கள் உங்கள் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று ஆசைப் படுகிறிர்களொ , அந்த மாதிரி வாழ்க்கையை உங்கள் மனதில் சினிமா பார்பது போல் அடிக்கடி பார்த்து வர வேண்டும். எதிர் காலத்தில் இது நடக்கும் என்ற உறுதியான எண்ணமும் வேண்டும் . இல்லா விட்டால் அது ஒரு பொழுது போக்குகான எண்ணமாகி தோல்வி அடைந்து விடும். . !

ஓம் சிவாய நம :

Wednesday, November 19, 2014

திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம்


திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் (சனிப் பெயர்ச்சியும் (2/11/2014) சில நுட்பமான விளக்கங்களும்):

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை சனிப் பெயர்ச்சி நடந்தேறும். சனி கிரகத்தின் அதிதேவதை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதை பெயர்ச்சி என்று சோதிட சாத்திரங்கள் குறிக்கிறது. ராசிகள் மொத்தம் 12.

தற்பொழுது சனி கிரகம் விருச்சிக ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொருவரின் ராசிக்கும் விருச்சிக ராசிக்கும் இடையே அமைந்துள்ள இடைவெளியைக் கணக்கில் கொண்டு தான் பொதுப் பலன்கள் அமையும். (உ.) முதல் ராசியான மேஷ ராசியில் இருந்து விருச்சிகம் 8ஆம் இடத்தில் அமைந்துள்ளது. இதையே ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி என்பர்.

கோடிப் பிறவிகளில் ஒரு ஆன்மா சேர்த்து வந்துள்ள நல்வினை; தீவினைக் குவியல் 'சஞ்சித வினை' என்று அழைக்கப் பெறும். அக்குவியலில் இருந்து ஒரு சிறு பகுதியை அனுபவித்து முடிக்க ஒரு ஆன்மா பிறவி எடுக்கிறது. இது 'பிராரப்த வினை'.

கிரகங்கள் துன்பங்களையோ இன்பங்களையோ புதிதாக உற்பத்தி செய்து வழங்குவதில்லை. துன்பமோ இன்பமோ பிராரப்த வினையின் பலனாகவே ஒவ்வொரு ஆன்மாவையும் வந்து எய்தும்.

ஒரு கிரகம் சாதகமான இடத்தில் பெயர்ச்சியுற்றால் பிராரப்த வினையில் உள்ள நல்வினைப் பலன்கள் மிகுதியாகவும், பாதகமான இடத்தில் பெயர்ந்தால் அதே பிராரப்தத்தின் தீவினைப் பலன்கள் மிகுதியாகவும் அந்தந்த ராசியினரை வந்துச் சேரும்.

கிரகங்கள் ஒவ்வொருவரின் வினைகளையும் உரிய நேரத்தில் சேர்ப்பிக்கும் அஞ்சல் நிலைய அதிகாரிகள் (Post Masters). நம் தீவினைகளே நமக்கு துன்பத்தை ஊட்டுகின்றன; கிரகங்கள் அல்ல என்ற புரிதல் மிக மிக அவசியம்.

ஞானசம்பந்தர் பரம கருணையோடு அருளியுள்ள சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை அனுதினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின் வேகத்தை சர்வ நிச்சயமாய் குறைத்துக் கொள்ள முடியும்.

கோளறு பதிகத்தின் 11 பாடல்களின் பதங்களையும் முறையாகப் பிரித்து, பொருளையும் எளிமைப் படுத்தி கீழ்க்கண்ட வலைத் தள முகவரியில் பதிவேற்றம் புரிந்துள்ளேன்.

http://hindusanatanadharmam-saivam.blogspot.com/…/blog-post…

கிரக வழிபாட்டை தவிர்த்து இஷ்ட தெய்வத்தின் கருணையை மட்டுமே வேண்டுவோம். கிரகங்களுக்கு திருவிளக்கு ஏற்றுவதை விடுத்து தெய்வத்தின் பொருட்டு திருவிளக்கு ஏற்றுவோம். விதவிதமான கற்களை அணிவதால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை.

நற்கருமங்களை மிகுதியாகப் புரிவதும் இறை வழிபாடும் மட்டுமே சிறந்த பரிகாரம். (ஓம் நமசிவாய).

கோளறு பதிகம் (திருஞானசம்பந்தர் அருளியது):

முதல் பாடல்:

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பொருள்:
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது.

இரண்டாவது பாடல்:

என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பொருள்:
அனைத்து நட்சத்திரங்களும், நாள்களும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் புரியாது. மாறாக நன்மையே விளைவிக்கும்.

மூன்றாம் பாடல்:

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பொருள்:
திருமகள், துர்க்கை, அஷ்ட திக்குப் பாலகர்கள், பூமியை இயக்கும் அதி தேவதை ஆகியோர் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். குற்றமற்ற செல்வமும் வந்து எய்தும்.

நான்காம் பாடல்:

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
சினம் மிகுந்த கூற்றுவன், அக்கினி, காலனின் தூதுவர்கள் ஆகியோர் இடர் புரியாமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். கொடிய நோய்கள் வருத்தாது.

ஐந்தாம் பாடல்:

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
கொடிய சினத்தை உடைய அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும். இல்லாமையாகிய வறுமை வந்து எய்தாது.

ஆறாம் பாடல்:

வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
சிங்கம், புலி, கொல்லும் தன்மை கொண்ட யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியவைகளால் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும்.

ஏழாம் பாடல்:

செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
வெப்பம், குளிர், வாதம்; பித்தம் முதலான நாடிகள் ஆகிவைகளும் தம் இயல்பில் இருந்து நீங்காமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே விளைவிக்கும்.

எட்டாம் பாடல்:

வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
கயிலை மலையை பெயர்க்க முற்பட்ட இராவணனை பெரும் இடர் எய்தியது. அது போன்று இடர்கள் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நேராது. ஆழ்கடலும் நன்மையே செய்யும்.

ஒன்பதாம் பாடல்:

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
நான்முகன், ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, மறைகள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். மேலும் வரும் காலங்கள் ஆன பலவும், கடலும், மேரு மலையும் நன்மையே விளைவிக்கும்.

பத்தாம் பாடல்:

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
புத்தரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான பெற்றியை உடையது சிவபெருமானின் திருநீறு. இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் நேராத வண்ணம் காத்து நிற்கும் பெருமானின் திருநீறு.

பதினோறாம் பாடல்:

தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!!

பொருள்:
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். இது நம் ஆணை.

Tuesday, November 11, 2014

வெற்றியின் ரகசியம் விஜயாபதி

வெற்றியின் ரகசியம் விஜயாபதி

எத்தனையோ மகான்களின் சமாதி மற்றும் ஒடுக்கங்களை வழிபட்டு வரக்கூடிய எனக்கு மிகவும் பிடித்தமான இடம் விஜயாபதி. விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். இந்த இடத்தின் ரகசியத்தை முழுமையாக அறியாத வரையில் என் வாழ்க்கையில் வெற்றி என்பது எட்டிப்பிடிக்க முடியாத தூரம் ஆகும். ஆனால், இன்று என் வாழ்க்கையில் வெற்றி என்பது தொடக்கூடிய தூரம் ஆகும்.

அப்படி என்னதான் இந்த இடத்தில் ரகசியம் உள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் குலகுரு வெள்ளைச்சாமி அடிகள் அருளாலும், நான் விடும் மூச்சுக் காற்றின் வழியாக என்னை வழிநடத்தும் குருவருளாலும் இந்த இடத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள முடிந்தது.

வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். யார் இந்த விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர். அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர், கோபப்படுபவர். இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் வெற்றியின் ரகசியம் ஆரம்பமாகிறது.

இறைவனுக்குப் போட்டியாக சொர்க்கத்தைப் படைத்த காரணத்தால் தன்னுடைய தவசக்தியை முழுமையாக இழந்த விஸ்வாமித்திர மகரிஷி அந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் உள்ள இடிந்தகரை ஊருக்கு அடுத்து உள்ளது. இங்கே வந்து தவம் செய்யும்பொழுது தவத்தைத் கெடுக்கும் வகையில் இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய தசரதசக்கரவர்த்தியின் புதல்வர்களாகிய இராமன், லட்சுமணனை அழைத்துக் கொண்டு விஜயாபதி என்ற இந்த இடத்திற்கு வந்தார். இந்த இடம் அந்தக் காலத்தில் தில்லை மரங்கள் நிறைந்த வனப்பகுதியாகும்.

அருகில் கடற்கரை அமையப் பெற்ற இடம் ஆகும். தன்னுடைய தவத்தைத் தொடங்க தன்னுடைய இஷ்ட்ட தெய்வமான பராசக்தியான தில்லை மகா காளியை சிதம்பரத்தில் இருந்து அழைத்து வந்து கடற்கரை ஓரத்தில் பிரதிஷ்டை செய்தார். மேலும் தவத்தின் போது இரவு, பகல் பாராமல் பசி, தூக்கம் தெரியாமல் இருக்க வேண்டி ராமர், லட்சுமணருக்கு பலா அதிபலா என்ற மந்திரத்தை குரு உபதேசம் செய்தார். இங்கு ஒரு ரகசியம் மறைவாக உள்ளது. ஏனெனில் தசரதனின் குரு வசிஷ்ட்ட மகரிஷி ஆவார். இந்த வசிஷ்ட்ட மகரிஷியினால் வளர்க்கப்பட்டவர்கள் இராமர் லட்சுமணர் ஆவார்கள். ஆனால் இராமன் லட்சுமணர்களுக்கு குருவாக இருந்து குருமந்திர உபதேசம் செய்தவர் விஷ்வாமித்திர மகரிஷி ஆவார். ஆகவே இராமர், லட்சுமணரின் குருநாதர் பிரம்மரிஷி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட விஷ்வாமித்திர மகரிஷி ஆவார்.

இதனை படிக்கும் அன்பர்கள் மறக்காமல் இதனை புரிந்து கொள்ள வேண்டும் தாடகை என்ற அரக்கியை இராமர், லட்சுமணர்கள் வதம் செய்தனர். விஷ்வாமித்திர மகரிஷி இழந்த சக்தியை மீண்டும் திரும்பப் பெற்றார். இராமர், லட்சுமணருக்கு பெண்ணை வதம் செய்ததால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. இதனை நீக்குவதற்கு சிவனையும், தாய் அகிலாண்ட ஈஸ்வரியை பிரதிஷ்டை செய்து அந்த இடத்தில் உள்ள கடற்கரையில் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கினார். தனக்கு உதவிய ராமனுக்குப் பரிசளிக்க விரும்பி ராமனை அழைத்துக் கொண்டு மிதிலைக்குச் சென்றார். ஏனெனில் மிதிலையில் ஜனக மன்னனின் மகள் சீதா திருமணம் நடைபெற சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ராமனுக்கு சீதையை மணம் முடிக்க வேண்டும் என்பது விஷ்வாமித்திரரின் ஆசை ஆகும். காலத்தின் கட்டாயமும் அதுவாகும். ஆனால், தசரதனின் குருநாதர் வசிஷ்ட்டர் விஷ்வாமித்திர மகரிஷியின் எதிரி போன்றவர். விஸ்வா மித்திரர் பிரம்ம ரிஷி பட்டம் பெறுவதை விரும்பாதவர் ஆவார். இந்த வசிஷ்ட்ட மகரிஷி சீதை இருவரால் கவர்ந்து செல்லப்பட வேண்டும் என்று விதி உள்ளது. எனவே ராமனுக்கு சீதையை கல்யாணம் செய்யக்கூடாது என்று கூறி தடை செய்தவர். ஆனால் இந்த தடையை மீறி விஷ்வாமித்திரரின் அருளால் இராமன் வில்லை வளைத்து சீதையை மணம் முடிக்கச் சென்றார்.

திருமணத்தைத் தலைமையேற்று நடத்தித் தர விஷ்வாமித்திரரும் சென்றார். ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் விஷ்வாமித்திரரை அவமானப்படுத்தக் காத்திருந்த வசிஷ்ட்டர் தசரதனின் துணையுடன் ராமன் திருமணத்தை நடத்தினார். ராமன் தன்னுடைய குரு விஷ்வாமித்திரர் தான் திருமணத்தை நடத்தித்தர வேண்டும் என்று சபையில் எடுத்துக்கூறாமல் மவுனம் காத்தார். இதனால் குருவின் மன வருத்தத்திற்கு ஆளானார். திருமணத்தை நடத்தக்கூடாது என்ற வசிஷ்ட்டர் தன் சுயநலத்திற்காக திருமண சடங்கை நடத்தினார். இதனால் ராமன், சீதா திருமண வாழ்க்கையில் துன்பமும், போராட்டமும் நிறைந்ததாக அமைந்தது. இதிலிருந்து நாம் புரிய வேண்டியது என்னவென்றால் தாய், தந்தையை விட குருவே மேலானவர் ஆவார் என்பதை உணர வேண்டும். எனவே நாம் அனைவரும

ஓம் விஸ்வாமித்ராய வித்மஹே

பிரம்ம ரிஷியாய தீம மஹி

தன்னோ சத்திய மித்திர ப்ரசோதயாத்

என்று அனுதினமும் ஜெபித்து குருவருளைப் பெறுவோம்.

முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் என்ற புராண சிறப்பினை அறிவோம். தில்லை மரங்கள் அடர்ந்த காடு போன்ற இந்த கடற்கரை பகுதியில் தற்சமயம் இரண்டு தில்லை மரங்கள் மட்டுமே சாட்சியாக இருக்கின்றன. கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் அன்னை தில்லை மகா காளி குடியிருந்து அருள் ஆட்சி செய்து வருகிறார்.

இங்கு இவர்களுக்கு கொய்யா பழம், சாக்லேட், மிட்டாய், எள்மிட்டாய் நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது. இதன் மூலம் நம் குடும்பத்தில் இறந்த சிறு கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வழி கிடைக்கிறது. மேலும் இங்குள்ள கடற்கரை மண்ணில் புரண்டு, உருண்டு எழுந்து மீண்டும் கடல் நீராடி பின்பு தில்லை காளியை வணங்குவதன் மூலம் நம்முடைய பாவகர்மாக்களை அன்னை காளி நீக்கி அருள்புரிகிறார். மேலும் விஷ்வாமித்திரரால் பூஜிக்கப்பட்ட ஓம குண்ட விநாயகர் கோவில், சிவன் சந்நிதி, தாய் அகிலாண்டேஸ்வரி, கன்னி மூல கணபதி, வள்ளி தெய்வானை சமேத முருகன், கால பைரவர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் அமையப்பெற்றுள்ளன. இவற்றில் சிகரம் வைத்தாற்போல கோவிலின் பின்புறம் இராஜராஜேஸ்வரி பீடம் மற்றும் சித்தர் சன்னதி அமைய பெற்றுள்ளது. இங்கு ஒவ்வொரு பௌர்ணமி இரவும் பக்தகோடிகளால் சிறப்பாக அன்னதானத்துடன் பௌர்ணமி பூஜை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இங்கு விஷ்வாமித்திர மகரிஷியின் சூட்சம சமாதி நிலையும் அமையப் பெற்றுள்ளது. இந்த தகவல் வல்லநாட்டு சித்தர் சாது சிதம்பர சுவாமிகளால் கண்டு உணர்ந்து சொல்லப்பட்டது. இந்த ஆலயம் சுமார் 60வருடங்களுக்கு முன்பு சிதிலம் அடைந்து இருந்த காலத்தில் வல்லநாட்டு சுவாமி சாது சிதம்பரம் அவர்களால் இரண்டு முறை 1008 நவக்கிரக தீப ஜோதி ஏற்றி வழிபட்டு பூஜை செய்யப்பட்ட பின்பு தான் இன்று தமிழகம் முழுவதும் பக்தர்களால் வழிபட கூடிய சிறந்த பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.

இக்கோயில் சிறப்புகள்:

இக்கோவிலில் செய்யப்படும் நவ அபிஷேகபரிகார பூஜையின் பயனாக நம்முடைய முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவகர்மாக்கள் மற்றும் நவகிரக தோஷங்கள் நீக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்

1. தீராத கர்ம வியாதிகள், ஆயள் கண்டம்.

2. எதிர்ப்புகள்,கோர்ட், கேஸ் விவகாரங்கள்.

3. குழந்தை பாக்கிய தடை பிரச்சனைகள்.

4. தொழில் முடக்கம், புத்தி மாறாட்டம் போன்ற பிரச்சனைகள் நிவர்த்தி ஆவதை நான் 100 சதவீதம் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறேன். மேலும் ஒவ்வொரு ஜோதிடரும் கட்டாயம் 3 வருடங்களுக்கு ஒரு முறை இங்குள்ள கடலில் குளித்து விநாயகர், காளி, சிவனை வணங்கி பின்புறம் உள்ள விஷ்வாமித்திரர் சித்தர் பீடத்தில் ராஜராஜேஸ்வரி பீடத்தில் அவரவர் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதிக்கு உரிய எண்ணிக்கையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர கட்டாயம் ஜோதிடத்தில் வாக்குபலிதம் அதிகரிக்கும் என்பது நான் கண்டு உணர்ந்த அனுபவ உண்மை ஆகும்.

மூன்று பௌர்ணமிக்கு மற்றும் அமாவாசைக்கு தொடர்ந்து சென்று தீபம் ஏற்றினால் எப்படிப்பட்ட பிரச்சனைனகளையும் தவிடுபொடியாக்கி விஸ்வாமித்திர மகரிஷி காத்து அருள்வார். இங்குள்ள கடலில் குளித்துவிட்டு குளித்த ஆடைகளை கடலில் விட்டுவிட வேண்டும். மேலும் இங்குள்ள கோவிலில் இருந்து எந்த ஒரு பிரசாதங்களையும் வீட்டிற்கு கொண்டு செல்ல கூடாது. நான் பெற்ற இன்பத்தை வாசகர்களுக்கு படம் பிடித்து காட்டி விட்டேன்.

வேணும் சுபம் வல்லநாட்டு சுவாமி அருள் துணை! ஸ்ரீகண்ணையா யோகி அருள் துணை! ஸ்ரீவெள்ளைச்சாமி அடிகள் அருள் துணை!

Sunday, November 9, 2014

வாஸ்து பார்ப்பது உண்மையா?


வாஸ்து பார்ப்பது உண்மையா?
அதன் நோக்கம் என்ன?
வாஸ்து என்பது நம் முன்னோர்கள் தங்கள் அறிவியல் நுண்ணறிவால் கண்டுபிடித்த ஒரு கட்டுமான சாஸ்திரம்.
ஆனான் தற்போது வஸ்து பணம் பொருட்டு பலவிதமாக திரித்தும்,பொய்யாகவும் பிரச்சாரம் செயப்படுகிறது.
எப்போது வாஸ்து பார்ப்பார்கள்?
----------------------------------------------------
பொதுவாக பண்டைய காலங்களில் புதிதாக ஒரு ஊர் நிர்மாணித்தால் அதற்க்கு வாஸ்து பார்பார்கள்.
உதாரணமாக வடகிழக்கு சனி மூளை எனப்படும் இடத்தில் திசையில் பொதுவாக நீரோட்டம் அதிகம் இருக்கும் ஆதலால் அங்கு குளம்,ஏறி போன்ற நீர்நிலைகளை அமைப்பர்.சனிமூலை தாழ்வான பகுதி.ஆதால் அங்கு நீர் தேங்கும்.அதற்க்கு நேர் எதிரான திசை தென்மேர்க்காகும்.அது மேடான பகுதி.ஆதலால் மழை காலங்களில் அங்கு நீர் தேங்க வாய்ப்புகள் குறைவாதலால் அத்திசையில்தான் உழவு செய்வர்.
ஆக வாஸ்து என்பது மிக முக்கியமாக ஊர் நிர்மாணத்திற்காக இயற்றப்பட்ட அறிவியல் கட்டுமான நூல்.
வீடு கட்டும்போது வஸ்து பார்ப்பது எதற்கு?
-------------------------------------------------------------------------
முன்கூரினார்போல தாழ்வான பகுதுயாதளால் வடகிழக்கில் நீர்நிலைகள் இருக்குவேண்டும்.
தென்மேற்கு திசை வாயு திசை எனப்படும்.நம் நாட்டு பூகோள அமைப்பாவது தென்மேற்கில் இருந்து காற்று வீசும் நமக்கு பருவமழையும் தென்மேற்கு பருவமழை தான்.ஆகையால் காற்று பலமாயுள்ள இடத்தில் சமையல் அரை இருக்ககூடாது.
அதற்க்கு நேரெதிர் திசை தென்கிழக்கு திசை அக்னிமூலை எனப்படும்.காற்று குறைவாக இருக்கும் அவ்விடம் நெருப்பு எரியூட்ட ஏற்ற இடம்.
அது போன்று தான் வீடுகளுக்கு வஸ்து பார்க்கும் முறை துவங்கியது.
எங்கு வாஸ்து பார்க்க அவசியம் இல்லை?
-----------------------------------------------------------------------
1000 வாசல்கள் உள்ள ஊரில் வாஸ்து பார்க்க வேண்டாம் என்றும்,சூரிய கிரணங்கள் நேரடியாக வீட்டில் விழும் பட்சத்தில் அந்த வீட்டில் வாஸ்து தோஷம் அண்டாது என்றும் தான் வாஸ்து சாத்திரம் சொல்கிறது.அதை யாரும் சொல்லக்காணோம்.
தயவு செய்து யாரும் வஸ்துக்கள், வச்துமீன் , வச்துபரவை , வச்துபோம்மை,வஸ்துசெடி போன்றவற்றை வங்கி ஏமாறவேண்டாம்.
நம் வாழ்கையை இறைவன் நன்றாகத்தான் தீர்மானம் செய்து வைத்துள்ளான்.அவன் இயக்கத்தின் படி நடந்து வாழ்வை சிறப்பாக வாழ்வோம்.
நிம்மதி வாஸ்துவிலோ,ராசிகளிலோ,ராசிக்கல் மோதிரத்திலோ இல்லை.நிம்மதி நம்மிடம் தான் உள்ளது.

Friday, November 7, 2014

வெற்றிக்கான வீரிய விதைகள்
ஏன் என்னால் வெற்றி பெற இயலவில்லை …? – வெற்றிக்கான வீரிய விதைகள்

நாம் அனைவருமே எடுத்துக்கொண்ட காரியத் தில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகி றோம். ஆனால், அனைவராலும் வெற்றி பெற முடிவதில்லை. இந்த காரியத்தில் ஏன் என்னா ல் வெற்றி பெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பதில்லை; மாறாக, அவ்வளவுதான் என் விதி என்று விட்டுவிடுகிறோம் . ஆசை மட்டும் இருந்தால்

வெற்றி கிட்டாது. ஆசையுடன் சிலசெயல்களையும் மேற்கொண்டா ல் மட்டுமே வெற்றிகிட்டும். அதற்குசெய்ய வேண்டியன என்ன ?

இதோ சில டிப்ஸ் உங்களுக்காக …

*நாம் எடுத்துக்கொண்டகாரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடா முயற்சியும் , நம்பிக் கையும்தேவை. அந்த நம்பிக்கை, “என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும் ” என்ற மன உறுதியுடன் அமைய வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் திறமை உள்ளவராக இருந்தா லும் கூட உங்களால் வெற்றி பெற இயலும் .

* பிரச்னைகள் வரும்போது, நான் இவ்வளவுதான், இது என்விதி என்றுமனம் தளரக்கூடாது. மாறாக, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்கவேண்டும். அப்ப டி நம்பினால், நீங்கள் புதியவனாக, புதியவளாக மாற முடியும். அந்த தன்னம்பிக்கைதோல்வியுறுபவர்களை, வெற்றியாளராக்கும்; சோம்பேறிகளை சுறுசுறுப்பான வர்களாக மாற்றும் .

*உங்கள் இலக்கை தெளிவாக வைத்துக்கொள்ளுங்க ள். அந்த இலக்கை பாசிடிவ் எண்ணங்களும், நம்பிக் கைகளும் சூழ்ந்திருக்க வேண்டும். பின், ஆக்கப்பூர்வமாக அதை தொடர்ந்து செய்யும்போது உங்களால் வெற்றி அடைய முடியும் .

* தன்னம்பிக்கையும் தைரியமும் நீங்கள் நினைக்கும் எண்ணங்களோடு இணைந் திருக்கும் போது உங்களுக்கு வெற்றி நிச்ச யம். மாறாக, எதிர்மறையான (நெகடிவ்) எண்ணங்களை வளர்த்துக்கொண்டால், விளைவும் மோசமானதாகத்தான் இருக்கும் . ஏனென்றால் , உங்கள் ஆழ்மனம், உங்கள் எண்ணங்கள் அனை த்தையும் ஏற்றுக் கொள்கிறது. ஆழ்மன திற்கு நீங்கள் எதை அனுப்புகிறீர்களோ, அதையே உங்களுக்கு திருப்பி அனுப்புகி றது. உதாரணமாக, தாழ்வுணர்ச்சி, பயம் போன்றவற்றை நீங்கள் வளர்த்துக் கொ ள்ளும்போது, அது உங்கள் ஆழ்மனதினு ள்சென்று அதையே திரும்ப அனுப்புகிறது. ஆக நீங்கள் உங்கள் மனதினுள் அனுப்புவதையே பெறுகிறீர்கள்.

எனவே, மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதில், ஆரோக்கியமான, ஆ க்கப்பூர்வமான, தைரியமான எண்ணங்களால் நிரப்புங்கள். வெற்றி நிச்சயம் !

கௌதம் @ http://vidhai2virutcham.com/

Monday, November 3, 2014

ஆன்மீகப் பயணம் தரும் அற்புதமான அனுபவங்கள்!!!


வாழ்க்கையில் முன்னேற ஆன்மீகப் பயணம் தரும் அற்புதமான அனுபவங்கள்!!!
=======================================================
மாற்றம் ஒன்றே மாறாதது' என்று சொல்வார்கள். ஆம். அன்றாட வாழ்க்கையிலிருந்து சிறிது விடுபட்டு இருந்தால் தான் எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் நாம் நம் வாழ்க்கையைச் சிறப்பாகக் கொண்டு செல்ல முடியும். காலையில் எழுவது, அவதி அவதியாக வேலைக்குக் கிளம்புவது, பார்த்த முகங்களையே பார்ப்பது, செய்த வேலைகளையே செய்வது, பின் பரபரவென்று வீட்டுக்குக் கிளம்புவது, மணிக்கணக்கில் டிராஃபிக்கில் காத்திருப்பது, வீட்டுக்கு வந்தாலும் மனைவி-குழந்தைகளுடன் மீண்டும் வெளியே செல்வது... இப்படி ஆண்டு முழுவதும் நம் வாழ்க்கை ஒரு எந்திர கதியாகவே ஆகிவிட்டது. இதனால் பயங்கரமாக போர் அடிப்பது மட்டுமல்ல, மனமும் உடலும் சோர்ந்து போய் விடுவதும் உண்டு. இந்தச் சோர்விலிருந்து விடுபட ஆண்டுக்குக் குறைந்தது ஒரு முறையாவது ஹாயாக ஒரு டூர் அடிப்பது நல்லது. அன்றாட வேலைகளை மறந்து தெரியாத முகங்களையும் இடங்களையும் ஓரிரு நாட்கள் பார்த்து விட்டு வந்தால் தெம்பாக இருக்கும். அடுத்த டூர் வரை கொஞ்சம் சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கலாம். அதிலும், இந்த டூர் ஒரு ஆன்மீகப் பயணமாக அமைந்து விட்டால் மனம் அமைதியாக இருக்கும். உள்ளத்தில் ஒருவித ஒளி பிறக்கும். இன்ன மதம் தான் என்றில்லை. அனைத்து மதங்களிலும் ஆன்மீகப் பயணத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய ஆன்மீகப் பயணங்கள் நம் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதற்கான 10 காரணங்களைப் பார்க்கலாம்.
1.வாழ்க்கை அழகை உணர்தல்.
-------------------------------------------------
அரைத்த மாவை அரைப்பது போல் ஒரே வேலைகளையே திரும்பத் திரும்பச் செய்வதால், நம் வாழ்க்கையின் உண்மையான அழகைப் பார்க்காமல் விட்டு விடுவோம். அல்லது, அந்த அழகையே மறந்து விடுவோம். அன்றாட வேலைகளிலிருந்து விடுபட்டு வெளியே வந்தால் தான் நாம் அந்த அழகைக் கண்டு, ரசித்து, தக்கவைத்துக் கொள்ளவும் முடியும்.
2.வாழ்க்கையைப் புதுப்பித்தல்.
------------------------------------------------
2005 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சில உணவு வகைகளை நாம் இப்போது சாப்பிட முடியுமா? அவற்றைத் தூக்கி எறிந்து விட்டு புதிதாகத் தயார் செய்யப்பட்ட உணவுகளைத் தானே சாப்பிடுகிறோம்? வாழ்க்கையும் அப்படித் தான். அதைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு ஒருவிதமான சாகசப் பயணம் நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.
3.புதிய உறவுகள், நட்புகளை வளர்த்தல்.
---------------------------------------------------------------
நாம் மேற்கொள்ளும் பயணங்களின் போது, பல புதிய உறவுகளும் நட்புகளும் கிடைக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. டூர் முடிந்து அவர்களிடம் பிரியா விடைபெற்று வந்தாலும், சில நாட்களுக்குப் பின் அவர்களுடன் போனில் பேசும் போது நமக்குக் கிடைக்கும் உற்சாகமே தனி! அடுத்த டூரின் வருகையை இரு தரப்பினருமே சுறுசுறுப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.
4.நம்மையே புதுப்பித்தல்.
----------------------------------------
வீட்டில் சில சமயம் தனியாக இருந்தாலும், அதை ஒரு தனிமை என்றுகூட சொல்ல முடியாது. நமக்கென ஒரு தனிமை எது என்பது நம் உள்ளத்திற்குத் தான் தெரியும். இத்தகைய ஆன்மீகப் பயணத்தின் போது மட்டுமே நமக்கு அந்தத் தனிமை கிடைக்கும். அதை நாம் தவறவே விடக் கூடாது.
5.புதிதாகக் கற்றுக் கொள்ளல்.
----------------------------------------------
குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஓட்டுவது போலத்தான் நாம் நம் அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். வாழ்க்கையின் உண்மையான அழகோ, நம் உண்மையான திறனோ நமக்குப் பிடிபடாது. ஆனால், ஒரு ஆன்மீகப் பயணத்தின் போது, நாம் புதிது புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள முடியும். பல்வேறு மனிதர்கள் மற்றும் பொருள்களின் மூலம் அதற்கான வாய்ப்புகள் நமக்கு நிறைய கிடைக்கும்.
6.பொறுப்புணர்ச்சி, முக்கியத்துவம் வளர்தல்.
----------------------------------------------------------------------
வயதாக வயதாக வாழ்க்கையில் நமக்குப் பொறுப்புணர்ச்சி அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதே நேரம், எதற்கு முக்கியத்துவம், முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் திணறுவோம். அன்றாட வேலைகளிலிருந்து நாம் விலகி இருக்கும் போது இந்தத் தகுதிகளை வளர்த்துக் கொள்ள அதிக வாய்ப்புக்கள் கிடைக்கும்.
7.பிரச்சனைகளை சமாளித்தல்.
-------------------------------------------------
நம் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் மிகவும் திண்டாடிக் கொண்டிருப்போம். மனத்தில் ஒரு நிம்மதியே இருக்காது. வீட்டை விட்டு வெளியேறி, ஒரு தியான நிலையில் இருக்கும்போது அந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எளிதாகக் கிடைக்கும்.
8.மன நிம்மதி கிடைத்தல்.
----------------------------------------
வாழ்க்கையின் சில கட்டங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியாமலும் குழம்பிப் போய்க் கிடப்போம். இத்தகைய குழப்பங்களைத் தகர்த்து எறிய ஆன்மீகப் பயணங்கள் நிறைய உதவும்.
9.நல்ல சிந்தனைகளை வளர்த்தல்.
------------------------------------------------------
ஆன்மீகப் பயணங்களின் போது நாம் பார்க்கும் மரங்கள், அருவிகள், ஆறுகள், கோவில்கள், அந்நிய பாஷைகள், மக்கள் ஆகியவை நம்மிடம் உள்ள பாஸிட்டிவ் விஷயங்களை வெளிக் கொண்டு வர மிகவும் உறுதுணையாக இருக்கும்
10.உடல் நலம் ஆரோக்கியமாதல்.
-----------------------------------------------------
வீட்டை விட்டு வெளியில் சென்று சாப்பிடுகையில், அந்த உணவுகளின் தரத்தைப் பற்றி நாம் நிச்சயம் சிந்திப்பதுண்டு. அப்படியிருக்கையில், பயணங்கள் மேற்கொள்ளும் போதும் சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்சம் அக்கறையாகத் தான் இருப்போம். நல்ல சத்தான உணவுகளை அப்போது உண்பதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

Thursday, October 30, 2014

ஆண்டாள் ஓர் அறிமுகம்


சூடிக்கொடுத்த சுடர்க்கொடி

ஆண்டாளைப் பற்றி சரித்திரக் குறிப்புகள் அதிகம் கிடையாது. குரு பரம்பரைப்படி, ஸ்ரீவல்லிபுத்தூரே நம் ஆண்டாளின் பிறப்பிடமாகும். கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் கொத்தி வைத்த பூமியில் துளசி மடியில் கிடந்த பெண் குழந்தை என்று சொல்கிறது. இவளைப் பெரியாழ்வார் எடுத்து ‘கோதை’ எனப் பெயரிட்டு வளர்த்தார். கோதை என்றால் தமிழில் மாலை. வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள்.

பெரியாழ்வார் பெருமாளுக்குத் தொடுக்கும் மாலைகளைத் தானே ரகசியமாகச் சூடி கண்ணாடியில் அழகு பார்த்து, இந்த அழகு பெருமானை மணக்க தனக்குப் பொருந்துமோ என எண்ணிக்கொடுத்து அனுப்புவாளாம். அதைத் தினமும் செய்து வந்தாள். ஒருமுறை பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டு, “இது தகாத காரியம்” என்று கோபித்துக்கொண்டார். அடுத்த முறை சூடாத மாலையை எடுத்துக்கொண்டு சென்றபோது பெருமாள், “அந்தப் பெண் சூடிய மாலைதான் எனக்கு உகப்பானது; அதை எடுத்து வாரும்!” என்றாராம்.

பெரியாழ்வார் வியந்து, ‘நம் பெண் மானிடப் பிறவி இல்லை; ஒருவேளை பூமித் தாயாராக இருக்கலாம்’ என்று எண்ணி, ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்று பெயரிட்டு அழைத்தார். அவளுக்கு மணப்பருவம் நெருங்க, “நீ யாரை மணம் செய்துகொள்வாய்” என்று தந்தை பெரியாழ்வார் வினவ, அவள்

வானிடை வாழும் அவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதும் ஒப்ப, ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள் மானிடர்வக் கென்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

[தேவர்களுக்காக அந்தணர்கள் யாகங்களில் சேர்த்த உணவை காட்டில் திரியும் நரி புகுந்து மோப்பம் பிடிப்பது போல, உடலைப் பிளக்கும் சக்கரமும் சங்கமும் தாங்கிய திருமாலுக்கென்று ஏற்ப்பட்ட என் மார்பகங்கள் மனிதர்களுக்காக என்கிற வார்த்தை காதில் பட்டாலே என்னால் வாழ முடியாது] என்று சொல்லிவிட்டாள். அவன் எந்த ஊரான் என்று பெரியாழ்வார் கேட்டு, திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தையும் சொல்ல, திருவரங்கனின் பெயர் கேட்டதும் நாணினாள். ‘இந்தத் திருமணம் எவ்வாறு சாத்தியம்? அரங்கனோடு மணம் புரிவதாவது’ என்று பெரியாழ்வார் கவலைப்பட அவர் கனவில் பெருமாள் தோன்றி `“அவளை அலங்கரித்து கோயில் என்னும் திருவரங்கத்துக்கு அழைத்து வா!’ என்று கட்டளையிட்டார். கோவில் பரிசனங்களுக்கும் அவள் வரவைத் தெரிவித்தார். அவ்வாறே கோதையை அலங்கரித்து திருவரங்கத்துக்கு அழைத்து வர, அவர்களுக்குப் பெரிய வரவேற்பு. பெருமானிடத்தில் அவளை விட்டுவிட, கோதை அவருடன் ஐக்கியமாகி மறைந்து போனாள்.

இது ஆண்டாளை பற்றி குரு பரம்பரை சொல்லும் ஏறக்குறைய உண்மையின் அருகில் இருக்கும் கதை. இதன் அடிப்படைச் சம்பவங்கள் ஆண்டாளின் பல பாசுரங்களில் இருக்கின்றன. மேலும் கண்ணன் மேல் ஆசைப்பட்டு, அவனை விரும்பிப் பாவை நோன்பு, ‘வாரணமாயிரம் சூழ வலம் செய்து’ என்று துவங்கும் நாராயணனுடைய திருமந்திரத்தைப் பற்றி பாசுரங்கள் எல்லாம் இந்த வசீகரமான கதையின் அடிப்படையாகின்றன.

அவைகளில் நமக்கு வெளிப்படும் பெண்ணின் தெய்வீகச் சாயல்களுக்கும் திருமாலை மணக்கும் இச்சைக்கும் பொருத்தமாக, பின்னர்தான் ஆண்டாளின் திவ்ய சரித்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும். தெய்வத்தை மணக்கும் பெண் தெய்வீகம் பொருந்தியிருக்க வேண்டும். மானிடருக்குப் பிறந்தவளாக இருக்கக்கூடாது என்று அவள், சனக மன்னர் யாக சாலைக்கு ஸ்தலம் எழுப்பும்போது சீதை கண்டெடுக்கப்பட்டதுபோல் கண்டெடுக்கப்படுகிறாள். ‘நாச்சியார் திருமொழி’யில் வரும் பாடல்கள் அனைத்தும் திருமாலை விரும்பி அவருடன் ஐக்கியமாகிவிடும் இச்சையை வெளிப்படுத்தும் அற்புதமான பாடல்கள். அந்தப் பாடல்களுக்கேற்ப சரித்திரம் பின்னப்பட்டிருக்கிறது என்று நம்பலாம். எப்படியாவது என்னைத் திருமாலிடம் சேர்த்துவிடு என்று காமதேவனை வேண்டிக்கொண்டு நோன்பெடுக்கும் பாடல்களில் துவங்குகிறது நாச்சியார் திருமொழி. அதன்பின் கண்ணனின் லீலைகளில் திளைக்கும் பாடல்கள்; தரையில் வட்டம் வரைந்து அது கூடினால் கண்ணன் என்னுடன் கூடுவான் போன்ற கவிதைத்தனமான விருப்பங்கள்; மேகங்களையும் குயில்களையும் கார்கோடற் பூக்களையும் விளித்து திருமாலைப் பற்றி பேசுவது;ரணமாயிரம் சூழ வலம் செய்யும் கல்யாணத்தைக் கனவு காண்பது; அவன் ஆடையைக் கொண்டு என்மேல் வீசுங்கள், அவன் திருத்துழாயை என் குழலில் சூட்டுங்கள், அவன் மாலையை என் மார்பில் புரட்டுங்கள், அவன் வாய் நீரைப் பருகக் கொடுங்கள், அவன் குழல் ஊதிய துளைவாய் நீரை என் முகத்தில் தடவுங்கள், அவன் அடிப்பொடியை என் மேல் பூசுங்கள்; இப்படி ஆண்டாள் பாசுரங்கள் அனைத்திலும் ஒருவிதமான பாசாங்கற்ற உடல்சார்ந்த விருப்பம் இருப்பதைக் காண்கிறோம். பக்தி மறைமுகமாகத்தான் உள்ளது.

யார் இந்தப் பெண்?

ஆண்டாளின் பாடல்களின் உள்ளடக்கத்திலிருந்து நமக்கு மிக மிக உண்மையான ஒரு பெண்ணுருவம் கிடைக்கிறது. பெரியாழ்வாரின் பாடல்களின் சாயல் இருந்தாலும் அவை ஒரு பெண்ணுக்கே உரிய மென்மையான எண்ணங்கள் வெளிப்படும் பாடல்கள் என்பதில் சந்தேகமே இல்லை. திருமாலின் மேல் அதீதமான விருப்பம் தன் உடலை வாட்டும் ஒரு பெண்ணால்தான் இப்படி எழுத முடியும்.

பிரேமா அருணாச்சலம் எழுதிய ‘பத்தினித் தெய்வங்களும் பரத்தையர் வீதிகளும்’ என்ற நூலில் பெண் தன் காதல் வேட்கையை வாயினால் சொல்வதற்கு வாய்ப்பூட்டு போடும் தொல்காப்பிய விதியான, “தன்னுள் வேட்கை கிழவன் முற் கிலித்தல் எண்ணும் காலை கிழத்திக்கில்லை” என்கிற தளையை ஆண்டாளே முதன் முதலில் உடைத்தது. ஆண்டாளாகிய பெண் இலக்கியவாதியின் இந்த மரபு மீறலின் குரல் வியப்பானதே” என்கிறார். எனினும் ஒரு தெய்வத்தின் மூலம்தான் இந்த மரபு மீறல் முடிந்திருக்கிறது.

காமமும் காதலும் மிகுந்த இந்தப் பாடல்களை வைணவ சம்பிரதாயத்தில் வேறுவடிவில் பார்க்கிறார்கள். ‘தமிழ் இலக்கியத்தில் வைணவம்’ என்கிற இந்திரா பார்த்தசாரதியின் நூலில் இந்த வரிகள் கவனிக்கத்தக்கவை. இவர் ஸ்ரீ வைணவத்தின் ஒரே பெண் ஆழ்வார். விஷ்ணு பூமியுடன் கொண்ட தொடர்பு நன்கு தெரிந்ததே! மனித குலம் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரமாக உள்ள பூமி விஷ்ணுவின் கூட்டுறவால் வளமுடையதானது என்பதை மையமாகக்கொண்ட பல கதைகள் தோன்றின. அதனால் காதற் கடவுளான காமன் விஷ்ணுவுடன் இந்த நோக்கில் ஒன்றாகிறான். விஷ்ணு கிருஷ்ணன், காமன் எனப்படுகிறான்; கண்ணனுக்கும் காமனுக்கும் வேறுபாடில்லை. காமனின் பெயரால் திருமால் வழிபடப்படுகிறான். விஷ்ணுவின் பல பெயர்களில் காமனும் ஒன்று என்று மகாபாரதம் கூறுகிறது. ஆகவே இந்த இணைப்பிலுள்ள சிற்றின்பக் கூறு என்பது நாச்சியார் திருமொழியில் உள்ள சிற்றின்பப் பாடல்கள் காமனாக இருந்த கண்ணன் ஆண்டாளிடம் உருவாக்கிய இன்ப உணர்வு மனநிலைகளின் வெளிப்பாடாகும். ஆண்டாளை பூமித்தாயாகவும் விஷ்ணுவை வரங்களை நல்கும் கடவுளாகவும் கொண்டு படித்தால் கோதையின் கதை வேறு பல புதிய பரிமாணங்களைக் கொடுக்கும்.

கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்

ஆண்டாளைப்பற்றி யோசிக்கும்போது அவளை ஒரு அறியாப் பெண்ணாக, நாராயணனையே நினைந்து அவனுக்கு வாழ்க்கைப்பட பிடிவாதம் செய்யும் பெண்ணாக மட்டும் நினைக்க இயலவில்லை. அவர் பாடல்களிலுள்ள தேர்ந்த புலமையும் திறமையும் பிரமிக்க வைக்கின்றன. திருப்பாவை மிகக் கடினமான ‘இயற்றர விணை கொச்சகக் கலிப்பா’ வகையைச் சேர்ந்தது. நாச்சியார் திருமொழியில் ஆசிரிய விருத்தமும் கலி விருத்தமும் களிநடம் புரிகின்றன. திருப்பாவை சந்தம் மட்டுமின்றி வெண்பாவுக்குரிய தளைகளையும் பெற்றிருக்கிறது.

அவர் பாடல்களில் உள்ள நுட்பமான பழக்கவழக்கங்கள், நுட்பமான இயற்கை வருணனைகள் எல்லாவற்றையும் நோக்கும்போது ஆண்டாளை ஒரு அறியாச்சிறுமியாக எண்ணுவதில் சிரமமிருக்கிறது. அவர் பாடல்களிலேயே கிடைக்கும் உண்மையான ஆண்டாளின் வடிவம் இது.

அவர் பிறந்தது கி.பி. 885 நவம்பர் 25 அல்லது அல்லது 886 டிசம்பர் 24. ஆண்டாள் அவதார காலம் அவள் இயற்றிய திருப்பாவையில் வரும் ”புள்ளின் வாய் கீண்டானை“ என்று தொடங்கும் பாடலில் வரும் ”வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று“ என்று சொற்றொடரை ஆராய்ச்சி செய்து அறுதியிடப் பட்டுள்ளது. (ஆழ்வார்கள் கால நிலை பக் 123-128 ஆரய்ச்சிப் பேரறிஞர் திரு.மு.இராகவைய்யங்கார்)

அவருடைய தந்தை தாய் யாரென்று தெரியவில்லை, அந்தக் காலங்களின் தெய்விகம் ஏதும் கலக்காமல் இதை ஆராய்ந்தால் துளசித்தோட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட குழந்தை என்பது தெரிகிறது. பெரும்புலவரான பெரியாழ்வாரிடம் நிச்சயம் அவர் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் பயின்றிருக்க வேண்டும். பயின்று அதில் தந்தையின் பக்தி ரசம் மிகுந்த பாடல்களில் திளைத்து கண்ணனின் மேல் ஆசை வந்திருக்க வேண்டும். கடவுளுக்காக தன்னை அர்ப்பணித்த பெண்கள் சரித்திரத்தில் பலர் உள்ளனர். மீராபாய், அக்கமகாதேவி, காரைக்கால் அம்மையார் போன்ற பல உதாரணங்கள் உண்டு.

ஆண்டாளின் நாச்சியார் திருமொழி

ஆண்டாளின் நாச்சியார் திருமொழியின் 143 பாடல்களைப் பலர் பலவிதத்தில் ஆராய்ந்திருக்கிறார்கள். சிலர் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். சிலர் மிக ஆழ்ந்த விசிஷ்டாத்வைதக் கருத்துகளைக் கண்டிருக்கிறார்கள். ஆண்டாளைப் படிப்பவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அவர் பாடல்களால் பாதிப்பு அடையாமல் இருக்கவே முடியாது.

ஒரு பெண் தன் காதலனை அடையச் செய்யும் பிரார்த்தனைகள், குட்டித் தெய்வங்களிடம் வேண்டுகோள்கள்; சிறு நம்பிக்கைகள் இவைகளை எல்லாம் அழகாகச் சித்திரிக்கும் பலவகைப் பாடல்கள் உள்ளன. அவள் காதலன் மானிடனல்லாமல் திருமால் என்று உயரும்போது அதில் உள்ள காதல் உணர்ச்சிகள் எல்லாம் தூய்மையடைகின்றன. இருந்தாலும் அவள் காட்டும் விருப்பம் மிகமிக மனம் சார்ந்தது. அந்தரங்கமும் அன்னியோன்யமும் எச்சிலும் வாசனைகளும் கொண்டது.

கடவுளா மனிதனா, பக்தியா காதலா என்கிற இருநிலை, நாச்சியார் திருமொழியில் எப்போதும் விரவியிருக்கிறது. ஆண்டாள் தனக்காகப் பாடுகிறார்; சிறுமிகளுக்காகப் பாடுகிறார்; ஆயர்பாடிப் பெண்களுக்காகப் பாடுகிறார்; கூடல் குறிப்புகள் கேட்கிறார். குயில், மேகம் போன்றவற்றைத் தூது விடுகிறார். நேராக வழிபடுகிறார். கனவுகளில் திருமாலை மணந்து கொள்கிறார். இப்படிப் பலவித உணர்வுகளைக் காட்டும் நாச்சியார் திருமொழி, ஓர் இளம் பெண்ணிடம் இத்தனை எண்ணங்களா, சொல்லாட்சியா, இத்தனை அழகான வரிகளா என்று வியக்க வைக்கின்றன. உலக இலக்கியத்தில் வேறு எந்த மொழியிலும் இவ்வகையிலான கவிதைகள் இருப்பதாக தெரியவில்லை. காரைக்கால் அம்மையார், சில சங்ககால அகத்துறைப் பாடல்கள், கன்னடத்தில் அக்கமகாதேவியின் வசனங்கள், மீரா பஜன் போன்றவை ஆண்டாளின் கவிதைகளுக்கு அருகில் வருகின்றன. ஆனால் ஆண்டாள் தருவது முழுமையான உடலையும் உள்ளத்தையும் இரண்டறக் கலக்கும் அனுபவம்.

வாலண்டைன்ஸ் டே- காதலர் தினம் என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள். அதற்கு ஆண்டாள் தினம் என்று பெயர் மாற்றலாம். அந்த அளவுக்குக் காதல் தெய்வமான மன்மதன் பண்டிகைக்கான விவரங்கள் தருகிறார். மதமத்தம் பூவும் முருக்கம் பூவும் சேர்த்து, சுவரில் மன்மதன் பேரை எழுதி, பெண் கவரிமானைப் பிடித்துக் கட்டி, கரும்பை வில்லாகக் கட்டித்தந்து நெல், கரும்பு, கட்டியரிசி படைத்து, உதடுகளை வெண்மையாக்கி தலையலர்த்தி ஒரு வேளை மட்டும் உண்டு (இது போன்ற பழக்கங்கள் அந்த நாள்களில் இருந்திருக்க வேண்டும்) இவைகள் எல்லாம் செய்கிறேன் திருமாலை மட்டும் எனக்குக் கட்டிவை என்கிறபோது, மிகமிக யதார்த்தமான ஒரு மானுட நோன்பை தெய்வத்தை அடையப் பயன்படுத்தும் போது, அதன் குறிக்கோள் கொச்சை நீக்கப்படுகிறது. காமம் காதலாகி பக்தியாகிறது.

பெண்களில் சிலருக்கு இளமை, அழகு போன்றவை ஒரு சுமையாக உபத்திரவமாக இருந்திருக்கிறது. மனிதர்களைக் கல்யாணம் செய்வதும் பிள்ளை பெறுவதும் பிடிக்காமல் தெய்வத்தை நாடும் ஒரு விதமான மனப்பாங்கு எல்லா நூற்றாண்டுகளிலும் சில பெண்களுக்கு இருந்து வந்திருக்கிறது. இன்றுகூட பலரை நாம் பாக்கலாம். அவ்வையார், காரைக்கால் அம்மையார், மணிமேகலை, அக்கமாதேவி, மீரா போன்றவர்கள் உதாரணம். இந்த மரபில் வந்த கிறித்தவ கன்னியா ஸ்த்ரீகள், புத்த பிக்ஷுணிகள், பிரம்மகுமாரிகள் இவர்களுக்கெல்லாம் ஆண்டாள் ஒரு முன்னோடி என்று சொல்லலாம். மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன் என்பதுதான் அவர்கள் எண்ணங்களின் சாரம். இந்தப் பாடல்களின் ஆழ்ந்த கருத்துகளில் சிற்றின்பத்திலிருந்து பேரின்பம் நாடும் தத்துவத்தையும் பார்க்க முடிகிறது.

நாச்சியார் திருமொழியின் முதல் பத்து பாடல்கள் காமனுக்குத் தொழுதலுடன் துவங்குகிறது. அடுத்த பத்துப் பாசுரங்களை நதிக்கரையில் மணல் வீடு கட்டும் சிறுமிகள், எங்கள் சிறிய வீட்டைக் கலைக்காதே, நாங்கள் போட்ட கோலங்களைச் சிதைக்காதே என்று கெஞ்சும் பாடல்களாக யாத்திருக்கிறார். அடுத்த பத்துப் பாசுரங்களை ஆண்டாள் அதிகாலைப் பொய்கையில் குளிக்கச் சென்ற கன்னிப் பெண்களில் ஒருத்தியாகத் தன்னை எண்ணிக் கொண்டு கண்ணன் அவர்கள் ஆடைகளைக் கவர்ந்து செல்ல அவனிடம் திருப்பித்தா என்று கெஞ்சும் பாடல்களாக எழுதியிருக்கிறார். தலைவனைப் பிரிந்த பெண்கள் அவன் வருவான் என்று நிமித்தம் அறிய தரையில் சுழித்து அது கூடுகிறதா என்று பார்க்கும் வழக்கம் கூடல் குறிப்பு என்று அந்த நாள்களில் இருந்திருக்கிறது. ஆண்டாள் இந்த வகையில் பத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

ஆழ்வார்கள் காலத்தில் ஜ ஷ ஸ ஹ போன்ற கிரந்த எழுத்துகள் தமிழுக்கு வரவில்லை. சமஸ்க்ருத வார்த்தைகளை அவர்கள் அழகாக தமிழ்ப்படுத்தினார்கள். கிரந்த எழுத்துகள் இல்லாவிடினும் அழகான தமிழ் எழுத முடியுமென்பதற்கு ஆழ்வார் பாடல்களும் கம்பனும் உதாரணங்கள்.

திருமால் வருவதற்காகக் கூவுவாய் என்று குயிலைக் கேட்கிறார். உன்னொடு தோழமை கொள்வன் குயிலே உலகளந்தர் வரக் கூவுவாய் என வேண்டுகிறார்.

ஆண்டாளின் மிகப் பிரசித்தி பெற்ற பத்துப் பாடல்கள் அவருடைய கனவுகளின் தொகுப்பு.

ஆயிரம் யானைகள், தோரணங்கள், பாளை, கமுகு, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், நான்கு திசைகளிலிருந்து தீர்த்தங்கள், மத்தளம், சங்கம், முத்துப்பந்தல், தீவலம், அம்மி மிதித்தல், பொரி தட்டல், குங்குமம், சாந்தம், மங்கல வீதி வலம், மஞ்சனம் என்று அமர்க்களமான கல்யாணம். (தாலி கட்டுவதை மட்டும் ஏனோ குறிப்பிடவில்லை.)

இதில் சிறந்த பாடல் ஒன்று

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மையுடையவன் நாராயணன் நம்பி செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி அம்மிமிதிக்கக் கனாகண்டேன் தோழீநான்

இப்பிறவிக்கும் மேலுள்ள பிறவிகளுக்கும் பற்றாக இருப்பவனும், நமக்குத்தலைவன் நாராயணன் தனது திருக்கையினால் என் காலைப் பற்றி அம்மிமீது எடுத்துவைக்க நான் கனாக்கண்டேன் தோழி! என்கிறாள்.

நாராயணனைப் பற்றாகக் கொண்டால் எத்தனை பிறவியெடுத்தாலும் அவன் துணையிருப்பான் என்கிற கருத்து பௌத்த மதத்தினரின் மிகப் பெரிய கவலைக்கு பதிலாக உள்ளது. திரும்பத் திரும்ப பிறக்கும் சக்கரத்திலிருந்து எப்படி விடுபடுவது என்பதுதான் புத்தரின் கவலையாக இருந்தது.

அதை நீக்கும் வகையில் எத்தனை பிறவியெடுத்தாலும் நாராயணன் பற்றாவான் என்கிறார் ஆண்டாள்.

அடுத்த பத்தும் சிறப்பானவையே. நாராயணன் வாய்வைத்து முழங்கிய சங்கை சில கேள்விகள் கேட்கிறார்.

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே!

அவன் உதடுகள் என்ன வாசனை, கற்பூரமா? தாமரைப் பூவா? அவன் வாய் தித்திக்குமா? விரும்பித்தான் கேட்கிறேன். சொல்; சங்கே; ஆண்டாளின் இப்பாட்டு அவள் பகவான் மேல் கொண்ட வெறியை; அதீத இச்சையை வெளிப்தப்படுத்துகிறது:

உள்ளே உருகி நைவேனை உள்ளோ இலளோ என்னாத கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்தனனைக் கண்டக்கால் கொள்ளும்பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்தென் அழலை நீர்வேனே

நான் உள்ளுக்குள் உருகி வேதனைப் படுகிறேன்; இருக்கிறேனா, செத்தேனா, தெரியவில்லை. அக் கோவர்தனைப் பார்த்தால் எந்தப் பயனும் இல்லாத இந்த என் மார்பகங்களை அடியோடு (கிழங்கோடும்) அள்ளிப் பறித்து அவர் மார்பில் வீசி என் உஷ்ணத்தைத் (அழலை) தீர்வேன்.

ஆண்டாள் தன் அழகான மேனியின் மிக அழகான அடையாளங்களைப் பிடுங்கி எறிய விரும்புவது அவள் பெண் என்பதால் அடையும் வேதனையை பல படிமங்களில் இயக்குகிறது. அவளுடைய பெண்மையை மறக்க, ஏன் மறுக்க விரும்புகிறாள். Denial of femininity?

ஆண்டாள் திருப்பாவை

ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்தான கண்ணனை மணப்பதையே எண்ணிக்கொண்டிருப்பதற்கு சிகரம் வைத்ததுபோன்றது திருப்பாவை. ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் ‘சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப்படுகின்றன. திருப்பாவை என்பது பின்னர் வைத்த பெயராக இருக்கலாம். முதலில் இதற்கு ‘சங்கத் தமிழ்மாலை’ என்றுதான் பெயர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

தொல்காப்பிய நூற்பா பேராசிரியரின் உரையில் பாவைப் பாட்டு என்பது குறிப்பிடப்படுகிறது. பாவை நோன்புக்கு அடிப்படை தமிழ் நாட்டின் பழைய வழக்கத்தை தழுவியது. இந்த நோன்பு சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை, பரிபாடல்களில் பாவை நோன்பும் தைந்நீராடலுமாகக் குறிப்பிடப்படுகிறது.

”நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த வண்டற் பாவை“ என்று நற்றிணையில் உள்ளது. அகநானூறிலும் உள்ள கடற்கரையோரப் பாவை விளையாட்டுகள்தாம் நாளடைவில் சமய வடிவு பெற்றது என்று கூறுகிறார்கள். ‘தைந்நீராடல்’ என்றாலும் மார்கழித் திங்களில் பௌர்ணமியில் திருவாதிரையில் தொடங்கியதால் இந்த நீராடல் தை மாதத்தில் தொடர்ந்தது. அதனால் தைந்நீராடல் என்பதும் பொருந்தும் என்று இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார். எப்படியும் மகளிரின் பாவை நோன்பு பழந்தமிழ் வழக்கம் என்பதில் சந்தேகமில்லை.

கண்ணனை அனுசரித்த பெண்ணாக தன்னை பாவித்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்ப்பாடியாகக் கொண்டு வடபெரும் கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும் அதில் உள்ள தெய்வத்தை கிருஷ்ணனாகவும் பாவித்து அந்தப் பெண்கள் செய்த பாவை நோன்பை ஆண்டாள் செய்வதாக யாத்த முப்பது பாட்டுகளின் மேல் வைணவ ஆச்சாரியர்களுக்கு- குறிப்பாக இராமானுஜருக்கு- மிகுந்த ஈடுபாடு. (அவரை திருப்பாவை ஜீயர் என்றும் அழைப்பர்). இதற்கு வைணவ ஆச்சாரியர்கள் பலர் விளக்கம் எழுதியுள்ளனர். அவைகளில் பெரியவாச்சான்பிள்ளை மூவாயிரப்படியும் அழகிய மணவாளப் பெருமான் நாயனார் ஜகந்நாதாசாரியார் போன்றவர்கள் வியாக்கியானங்களும் முக்கியமானவை.

திருப்பாவையின் முப்பது பாடல்களையும் மார்கழி மாதத்தில் அனுசரிப்பது வைணவர்கள் வழக்கம். பாவை நோன்பு என்பது பெண்கள் பழகும் ஒரு விதமான austerity. இது எல்லா நோன்புகளிலும் இருப்பதைப் பார்க்கலாம். கிறித்தவர்களின் லெண்ட், இஸ்லாமியர்களின் ரம்ஜான் போன்றவையுடன் ஒப்பிட முடிகிறது. எல்லா மதங்களிலும் நம்பிக்கைகளிலும் கடவுளை அடைய கொஞ்சமாவது மெய்வருத்தம் தேவை என்கிற கருத்து அடிப்படையானது. இதன் அதீத வடிவங்கள்தாம் காவடி எடுப்பது, அலகு குத்திக் கொள்வது, முதுகுத் தோலில் கொக்கி வைத்து தேர் இழுப்பது போன்றவை.

ஆண்டாளின் பாவை நோன்புக்கான கிரிசைகள் (காரியங்கள்) எளிமையானவை. எல்லாப் பெண்களும் கடைப்பிடிக்கக் கூடியவை.

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யும் ஆறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்

”நெய் கிடையாது, பால் கிடையாது, கண்ணுக்கு மை கிடையாது. கூந்தலுக்கு மலர் கிடையாது. செய்யக்கூடாத காரியங்களைச் செய்ய மாட்டோ ம், கோள் சொல்ல மாட்டோம் (குறளை), அதிகாலையில் (நாட்காலே) குளித்துவிட்டு தகுந்தவர்களுக்குப் பொருளும் பிச்சையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு (ஆந்தனையும்) கொடுப்போம். இப்படிப் பிழைக்கும் வழியை எண்ணி சந்தோஷப்படுவது எம் பாவை நோன்பு.“

அதற்காகத் தோழிகளை எழுப்பி நீராட அழைக்கும் காலை நேரப் பாடல்களில் இருக்கும் நுட்பமான அன்றாட சங்கதிகள் பல நம்மை பிரமிக்க வைக்கின்றன.

திருப்பாவையில் பொழுது விடிவதற்குரிய அடையாளங்கள் பல கூறப்பட்டுள்ளன. அவை, கீழ்வானம் வெளுப்பது, கோழி கூவுவது, பறவைகள் ஒலிப்பது, முனிவர்களும் யோகிகளும் துயிலெழுந்து செல்வது போன்றவை. அதை விரிவாகக் கீழே பார்க்கலாம். காலை நேரத்தின் பலவித சப்தங்களையும் நடைமுறைகளையும் இயல்பாகச் சொல்லும் திருப்பாவை பக்தியும் இலக்கிய நயமும் கலந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்று.

மார்கழி மாதம் பெளர்ணமியில் துவங்குகிறது திருப்பாவை. மார்கழி மாதத்தை வைஷ்ணவமான மாதம் என்று சொல்வார்கள். கண்ணன் கீதையில் ”மாஸாநாம் மார்க ஸீர்ஷோ அஹம்“ என்னும்போது மாதங்களில் நான் மார்கழி என்கிறார். மழை பெய்து பயிர்கள் விழிக்கும்போது உயிர்களும் விழிக்க வேண்டுமல்லவா?

மார்கழி மாதத்தில் மட்டுமில்லாமல் எல்லா மாதங்களிலும் பெண்கள் இப்படியே இருந்துவிட்டால் உலகத்தில் கலகமே இருக்காது என்பது யோசிக்கத்தக்கது. பெண்களின் அழகினாலும் அலங்காரத்தினாலும் போர்களே நிகழ்ந்திருக்கின்றதைச் சரித்திரம் கூறுகிறது.

ஆண்டாளின் நான்காவது திருப்பாவையில் ஓர் அற்புதமான மழைக்காட்சியும் விஞ்ஞானக் குறிப்பும் உள்ளது. மழை எப்படிப் பெய்கிறது என்று ஆண்டாள் விவரிப்பதை இன்றைய வானிலை நிபுணர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்.

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து பாழியந்தோளுடை பற்பநாபன் கையில் ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

வருண தேவனே சிறிதும் ஔதக்காதே (கைகரவேல்) சமுத்திரத்தினுள்ளே புகுந்து அங்கிருந்து நீரை மொண்டு இடிஇடித்து ஆகாயத்தில் ஏறி மாலின் திருமேனிபோல் கறுப்பாகி அழகான தோள் கொண்ட பத்மநாபன் கையில் உள்ள சக்கரம் போல மின்னலடித்து அவனுடைய சங்கம் போல அதிர்ந்து முழங்க அவனுடைய சக்கரத்தால் சிதறப்பட்ட சரங்கள் போல மழை பெய்து உலகம் அனைத்தும் வாழ நாங்களும் அந்த மழையில் நனையப் பொழிவாயாக.

மழை எப்படிப் பெய்கிறது என்பதற்கு ஆண்டாள் இரண்டுவிதமான படிமங்களைப் பயன்படுத்துவது அவரது கவிதைத் திறமையைக் காட்டுகிறது. ஒரு படிமம் திருமாலின் கரிய உடல் சங்கு சக்கரம் இவைகளோடு மழையை ஒப்பிட மற்றதில் மழை பெய்வதின் இயற்கையான விளக்கத்தைத் தப்பில்லாமல் தருகிறார். அந்த ஒன்பதாம் நூற்றாண்டில் ஆண்டாளுக்குத் இது தெரிந்திருந்தது விந்தையே.

ஐந்தாவது திருப்பாவையில் மாயனை மன்னு வடமதுரை மைந்தனை வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தால் செய்த பாவங்களும் வரப் போகிற பாவங்களும் (போய பிழையும் புகுதருவான் நின்றனவும்) நெருப்பில் இட்ட தூசி போல அழிந்துவிடும் என்கிறார்.

ஆறாவது திருப்பாவையில் (புள்ளும் சிலம்பின காண்) அதிகாலைக் காட்சி நம்முன் விரிகிறது. பறவைகள் ஒலிக்கின்றன. சங்கநாதம் நம்மை எழுப்புகிறது. பாற்கடலில் உறங்கும் திருமாலை முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுப்புகிறார்கள். அவர்கள் அரி அரி என்று அழைப்பது உள்ளத்தைக் குளிர்விக்கிறது.

ஏழாவது பாட்டில் (கீசு கீசென்று) இன்னும் அதிகாலை சப்தங்கள். ஆனைச் சாத்தன் என்னும் வலியன் குருவியின் கீச்சு கீச்சு சப்தம், ஆய்ச்சியர்கள் மத்தில் ஓசைப்படுத்தும் தயிர் சப்தம், நாங்கள் நாராயணனைப் பாடும் பாட்டின் சப்தம் இவையெல்லாம் கேட்டுக் கொண்டே படுத்திருக்கிறாயே, கதவைத் திற.

எட்டாவது பாட்டில் கீழ்வானம் வெளுக்கிறது. எருமைகள் மெல்லப் புறப்படுகின்றன. ஒன்பதாவதில் (தூமணி மாடத்து) மணி மாடத்தில் சுற்றிலும் விளக்கெரிய தூபம் கமழ உறங்கும் மாமன் மகளை ஊமையா செவிடா களைப்பா இப்படித் தூங்குகிறாளே மாமி என்று அதட்டி எழுப்புகிறார்.

பத்தாவது திருப்பாவையில் உன் தூக்கத்துக்கு கும்பகர்ணன் தோற்றுப் போனான் என்கிறார்.

பதினொன்றாம் பாட்டில் என்ன இப்படி அசையாமல் பேசாமல் தூங்குகிறாய் என்று வியப்பு.

பனிரெண்டாம் பாடல் ஆயர்பாடியின் செல்வச் சிறப்பை விளக்கும் பாடல் - இளம் கன்றைக் கொண்ட எருமை கனைத்து தன் கன்றை நினைத்து வருந்த அதன் மடியில் தானாக பால் வடிய வீட்டையே சேறாக்கும் இல்லத்தவனின் தங்கையே, எங்கள் தலைமேல் பனி விழ உன் வாசலில் காத்திருக்கிறோம். இராவணைனைக் கொன்ற மனத்துக்கினிய இராமனைப் பாடுகிறோம். பேசாமல் இருக்கிறாய். இனியாவது எழுந்திரு. இது என்ன தூக்கம்? சுற்றத்தார் எல்லாருக்கும் தெரிந்துவிட்டது.

திருப்பாவை பதின்மூன்றாம் பாட்டில் (புள்ளின் வாய் கீண்டானை.) வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்னும் வரியில் உள்ள வானவியல் குறிப்பை வைத்துக் கொண்டு திருப்பாவையின் காலத்தை கி.பி.885 என்று ஆராய்ச்சியாளர்கள் அறுதியிட்டிருக்கிறார்கள்.

பதினான்காம் பாட்டில் மேலும் காலைக் காட்சிகள் விரிகின்றன. உங்கள் வீட்டுக்கு பின்னால் இருக்கும் குளத்தில் செங்கழுநீர் பூத்துவிட்டது. ஆம்பல் மலர் கூம்பியது. காவி உடை அணிந்த, வெண்மையான பற்கள் கொண்ட துறவிகள் தங்கள் கோவில்களுக்கு சங்கு ஊதப் போய்க் கொண்டிருக்கிறார்கள். எங்களை எழுப்புகிறேன் என்றாயே, நீயே தூங்குகிறாயே. எழுந்திரு.

பதினைந்தாம் பாட்டில் கடைசியாக தோழியை எழுப்ப முயற்சித்து விட்டு, பதினாறாம் பாடலில் வாயில் காப்போனைக் கதவைத் திறக்கச் சொல்கிறார்…

பதினோழாம் பாட்டில் நந்தகோபனையும் யசோதையையும் பலராமனையும் வாசுதேவனையும் ஒவ்வொருவராக எழுப்புகிறார்.

பதினெட்டாம் பாட்டில் நப்பின்னையை எழுப்புகிறார். பத்தொன்பதிலும் இருபதிலும் அவள் மார்பின் மேல் படுத்துறங்கும் கண்ணனை எழுப்புகிறார். இருபத்தொன்றிலும் அந்தத் துயிலெழுப்பும் முயற்சி தொடர்கிறது. இருபத்திரண்டாம் பாடலில் பெரிய பெரிய அரசர்கள் எல்லாம் தம் அகங்காரம் குலைந்து, உன் கட்டிலடியில் காத்திருக்கிறார்கள். உன் தாமரை போன்ற கண்களால் சூரியனும் சந்திரனும் ஒரே சமயத்தில் பார்ப்பது போல் எங்களை ஒருமுறை பார்த்தால் எங்கள் சாபமெல்லாம் நீங்கும் என்கிறார்.

இருபத்து மூன்றாம் பாடலில் கண்ணன் எழுந்திருப்பதை மழைக்காலத்தில் குகைக்குள் படுத்திருக்கும் சிங்கம் விழிப்பதுடன் ஒப்பிடுகிறார். பிடரியை சிலிர்த்துக் கொண்டு சிம்மாசனத்தில் அமர்ந்து நாங்கள் வந்த காரியத்தைக் கேள் என்கிறார்.

இருபத்து நான்கில் திருமாலின் அவதாரங்களைச் சொல்கிறார். அன்று உலகம் அளந்தவனே, தென் இலங்கையை வென்றவனே, சகடாசுரனை உதைத்தவனே, கன்றின் ரூபத்தில் வந்த அசுரனை வென்றவனே, கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தவனே, பகைவர்களைக் கெடுக்கும் வேல் கொண்டவனே உன்னைப் போற்றுகிறோம். உனக்கு என்றென்றும் சேவகம் பண்ணுகிறோம். உன்னிடமிருந்து பறை கொள்வதற்காக வந்திருக்கிறோம் என்கிறார்.

இருபத்தைந்தாம் பாட்டில் தேவகிக்கு மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் யசோதையின் மகனாக ஒளித்து வளர்ந்து அதையும் பொறுக்காத கம்சனின் கருத்தை வீணாக்கி அவனுடைய வயிற்றில் நெருப்பைக் கட்டிய திருமாலே, உன்னை யாசித்துக் கொண்டு வந்தோம் பறை தருவாய். உன்னை நாங்கள் பாடி வருத்தம் தீர்வோம் என்கிறார்.

இருபத்தாறாம் பாடலில் மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவதற்கும் பாவை நோன்புக்கும் ஏற்ற உபகரணங்களைக் கொடுத்தருள்வாய். பால்நிறம் கொண்ட உன் சங்கைப் போல சங்கங்களும் பறை, அழகான விளக்கு, கொடி, விதானம் இவையெல்லாம் அருள்வாய் என்று வேண்டுகிறார்.

இருபத்தேழில் பகைவரை வெல்லும் கோவிந்தனே, உன்னைப் பாடிப் பறை கொண்டால் எங்களுக்குக் கிடைக்கப் போகும் சன்மானங்கள் இவை. சூடகம், தோள்வளை, தோடு, செம்பூ, பாடகம் போன்ற பல ஆபரணங்கள் பட்டாடைகள், முழங்கை வரை நெய் வழியும் பால்சோறு இவைகள் எல்லாம் கிடைத்து மகிழ்வோம்.

இருபத்தெட்டாம் பாடலில் பசுக்களின் பின்னே சென்று காடுகளில் உண்போம். அறிவு அதிகமில்லாத எங்கள் ஆயர் குலத்தில் நீ வந்து பிறந்த புண்ணியம் உடையவர்கள் நாங்கள். குறையே இல்லாத கோவிந்தா உன்னோடு எங்கள் உறவு உன்னாலும் எங்களாலும் ஒழிக்க முடியாத பரஸ்பர உறவு. அறியாத சிறு பெண்களான நாங்கள் உன்னை அன்பினால் சின்னச் சின்ன பெயர்களாலே அழைக்கிறோம். கோபித்துக் கொள்ளாதே இறைவனே, நாங்கள் விரும்பும் பறை தருவாய்.

த்வயம் சரம ஸ்லோகம் இரண்டும் வைணவர்களுக்கு மிக முக்கியம். இவைகளின் முற்பாதியை இப்பாடல் விளக்குவதாகவும் வியாக்யானம் செய்கிறார்கள். ஒழிக்க ஒழியாத உறவு என்பது பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள பரஸ்பர பந்தத்தை நிலை நிறுத்துகிறது. இதுவும் வைணவத்தின் ஆதாரக் கருத்துகளில் ஒன்று.

இருபத்தொன்பதாம் - ”சிற்றம் சிறுகாலே வந்துன்னை.." என்ற - பாடலும் மிக முக்கியமான பாடல். அதிகாலையில் வந்து உன்னை சேவித்து உன் தாமரைப் பாதங்களைப் போற்றுவதன் பலனைக் கேளாய்! மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்த நீ எங்கள் சிறு கைங்கர்யங்களை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். இன்று ஒரு நாள் பறை கொள்வதற்காக மட்டும் நாங்கள் வரவில்லை. எப்போதும் எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னோடு உறவு கொண்டவர்கள் நாங்கள். உனக்கு நாங்கள் அடிமை. எங்களுடைய மற்ற விருப்பங்களை மாற்றிவிடு.

திருப்பாவையை நிறைவு செய்யும் முப்பதாம் பாடல் பட்டரின் மகளான கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதையும் தப்பில்லாமல் சொல்பவர்கள் திருமாலின் திருவருள் பெற்று இன்புறுவர் என முடிகிறது.

இந்த முப்பது பாடல்களையும் நோக்கும்போது ஆண்டாள் பெரும்பாலும் தன் தோழிகளையும் கண்ணனின் உறவினர்களையும், இறுதியில் கண்ணனையும் துயிலெழுப்புகிறார். ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து ஒரு பெண் தன் தோழிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, நீங்கள் வெறும் போகப் பொருள்களல்ல; பகவானையே எழுப்பி நீங்கள் விரும்பும் பறையைக் கேட்கலாம். புறத்தூய்மையாலும் அகத்தூய்மையாலும் அவனை அடைய உங்களால் முடியும் என்ற புது நோக்கில் அவரை ஒரு புரட்சிப் பெண்ணாகப் பார்க்க முடிகிறது. அதை எழுதிய அந்த இளம் பெண் நூற்றாண்டுகள் கடந்தும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறாள்.

http://vijayastreasure.blogspot.in/

Wednesday, October 29, 2014

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்

1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.

நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.

நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.

மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!

2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.

3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் - அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.

4. பொறாமை கொள்ளாதீர்!

வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!

நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!

5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.

6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!

இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.

7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.

8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்

தியானம் - உள்மன ஆய்வு - மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.

சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.

9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!

வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லாத் தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.

10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!

"இது என்னால் முடியுமா? முடியாதா?" என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.

முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது - மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?

http://vijayastreasure.blogspot.in/