Thursday, January 30, 2014

Meditation ஆல்ஃபா அலைகள்





ஆல்ஃபா அலைகள்



விபாசனா தியான முறை


1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத்திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். சத்தங்களே இருக்கக்கூடாது என்பதல்ல நம்மை அதிகமாக அலைக்கழிப்பது போன்ற சத்தங்கள் இருக்கக் கூடாது என்பது முக்கியம். 
 
2) உங்களுக்கு வசதியானபடி சம்மணமிட்டோ, பத்மாசனத்திலோ, நாற்காலியிலோ அமருங்கள். நீண்ட நேரம் அமர்கையில் உங்களுக்கு சிரமமாக இருக்கும்படியாக மிக இறுக்கமாக அமராதீர்கள். அதே நேரம் கூன் போட்டோ, விறைப்பாகவோ இல்லாமல் முடிந்த அளவு நேராக நிமிர்ந்து இருங்கள். உதாரணத்திற்கு வயலின் தந்தி மாதிரி இருக்கச் சொல்கிறார்கள். ஒரேயடியாக இறுக்கமாகவோ, தளர்ச்சியாகவோ இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள்.
 
 3) உங்கள் வலது உள்ளங்கை இடது உள்ளங்கையின் மீது இருக்கும்படியாக கைகளை திறந்த நிலையில் மடியில் வைத்துக் கொள்ளவும் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டாம். கண்களை மூடியோ, லேசாகத் திறந்தோ வைத்துக் கொள்ளலாம். 
 
4) உங்கள் கவனத்தை வயிற்றுப் பகுதியில் வையுங்கள். உங்கள் உள் வாங்கும் மூச்சினால் உங்கள் வயிறு விரிவடைவதையும், வெளி விடும் மூச்சினால் வயிறு குறுகுவதையும் கவனியுங்கள். உங்கள் கவனத்தை அதைத் தவிர வேறெதிலும் வைக்க வேண்டாம். ஆரம்ப நாட்களில் அதை “விரிவடைகிறது”, “குறுகுகிறது” என்று மனதில் பெயரிட்டு கவனத்தை பலப்படுத்தலாம். ஆனால் அதற்கு மேல் உங்கள் மூச்சை அலசப் போக வேண்டாம். ’உள் மூச்சு ஆழமாகிறது” “வெளிமூச்சு முழுமையாக இல்லை” போன்ற விமரிசனங்களுக்குப் போகாதீர்கள். 
 
5) போகப் போக அந்த பெயரிட்டு அழைப்பதையும் நிறுத்தி வயிர்றின் அசைவுகளை மட்டும் உணர ஆரம்பியுங்கள். இது படிக்க சுலபமாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவு சுலபமில்லை. வேண்டுமானால் உங்கள் கைகளை முன்பு சொன்ன நிலையிலேயே வயிற்றை ஒட்டினாற் போல் வைத்துக் கொள்ளலாம். கைகளாலும் அந்த அசைவுகளை உணர்வது தியானத்தை ஆழப்படுத்த உதவும்.
 
 6) மூச்சை நீங்களாகக் கட்டுப்படுத்த முயலாதீர்கள். அது இயல்பாக இருக்கட்டும். மூச்சினால் ஏற்படும் வயிற்றசைவில் மட்டும் வைக்கையில் நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள். அப்போது அடுத்த அசைவைப் பற்றி சிந்திக்காதீர்கள். உதாரணமாக உள்மூச்சின் அசைவில் கவனம் வைக்கையில் வெளிமூச்சின் அசைவைப் பற்றி முன்பே நினைக்க ஆரம்பிக்காதீர்கள். உங்களைப் பொறுத்த வரை அந்த ஒரு கணம் மட்டுமே கவனமிருக்கட்டும். மனம் ஆரம்பத்தில் முரண்டு பிடிக்கும். கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் கவனத்தை பெரும்பாலும் சிதற வைக்கும் மனதிற்கு நிகழ்காலம், அதுவும் சுவாரசியம் இல்லாத இந்த மூச்சு ஏற்படுத்தும் அந்த ஒரே அசைவில் கவனம் வைப்பது இமாலயப் பிரயத்தனமாகவே இருக்கும். ஆனால் அவசரமில்லாமல், அலைபாயாமல் அந்த நிகழ்கால கணத்தின் அந்த அசைவில் மட்டுமே மனம் வையுங்கள். 
 
7) மனம் எத்தனை முறை அலைபாய்ந்தாலும் சலிக்காமல் அதைத் திரும்ப வயிற்றின் அசைவுக்குக் கொண்டு வாருங்கள். இதெல்லாம் நமக்கு சரிப்படாது என்று ஆரம்பத்தில் தோன்றலாம். அது இயற்கையே. ஆனால் எந்தப் புதிய வித்தையும் ஆரம்பத்திலேயே சுலபமாகக் கை கூடாது என்கிற போது அது கைகூடுகிற வரை பொறுமையுடன் பயிற்சி செய்யத் தான் வேண்டும் என்கிற போது இந்த தியானப் பயிற்சியில் ஆரம்பத்திலேயே வெற்றி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் அல்லவா?
 
 8) சில நாட்கள் இப்படியே இந்த தியானத்தை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் செய்யுங்கள். பின் அடுத்த கட்டமாக மனம் எப்போதெல்லாம் மூச்சின் அசைவை விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறதோ அதன் செயலுக்கு ஒரு பொதுவான பெயரை வைத்து உணர்ந்து திரும்ப மூச்சின் அசைவுக்கே மனதைக் கொண்டு வாருங்கள். உதாரணத்திற்கு கவனம் வெளியே ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்பதிற்கு சென்றால், சுருக்கமாக “சத்தம்” என்று மட்டும் என்று பெயரிடுங்கள். அடுத்த கணம் மீண்டும் மூச்சின் அசைவுக்கு கவனத்தைக் கொண்டு வாருங்கள். மனம் வேறு எதையோ நினைக்கிறது என்று எடுத்துக் கொண்டால் “நினைப்பு” என்று பெயரிட்டு மறுபடியும் மூச்சின் அசைவுக்குக் கொண்டு வாருங்கள். கால்வலிக்கிறது என்று மனம் சொன்னால் “வலி” என்று பெயரிட்டு உடனடியாக கவனத்தை மீண்டும் திருப்புங்கள்.
 
 9) நீங்கள் கவனச் சிதறல்களுக்கு வைக்கும் பெயர் எப்போதும் பொதுவாகவும் ஒரு சொல் அளவாகவே இருக்கும்படி சுருக்கமாகவும் இருக்கட்டும். வேறெதையும் நினைக்கவே கூடாது என்று தீர்மானமாக உட்கார்ந்தால் கண்டிப்பாக தோற்றுப் போவீர்கள். மனம் கட்டுப்பாடுகள் அதிகமாக அதிகமாக முரண்டும் அதிகமாகவே பிடிக்கும். மாறாக ஒவ்வொரு கவனச்சிதறலையும் நீங்கள் அறிந்திருந்து, அதற்கு ஒரு பெயர் வைத்து அங்கீகரித்து, சலிக்காமல் உங்கள் கவனத்தை உடனடியாக மீண்டும் திருப்புவதே பெரிய வெற்றி. 
 
10) கவனம் சிதறுகிறது என்பதை உடனடியாக உணர்வதும், அது எது விஷயமாக என்று பொதுவாக அறிந்திருப்பதும், அது விஷயமாக மேற்கொண்டு சிந்தனையை நீட்டிக்காமல் எங்கு கவனம் வர வேண்டுமோ அங்கு உடனடியாக மனதைக் கொண்டு வர முடிவதுமே தியானத்தில் முதல் பெரிய வெற்றி. கவனச் சிதறல் எதிலோ ஆரம்பித்து அதிலேயே தொடர்ந்து சில நேரம் இருந்து அதை அறியாமலேயே இருப்பது தான் தியானத்தின் எதிர்மாறான நிலை.
 
 11) உட்கார்ந்த நிலை சில நிமிடங்கள் கழித்து அசௌகரியத்தை ஏற்படுத்தினால் தாராளமாக மாறி உட்கார்ந்து கொள்ளுங்கள். ஆனால் அந்த எண்ணம் தோன்றியவுடனேயே “மாற்றம்” என்று பெயரிட்டு அந்த எண்ணத்தை அங்கீகரித்து முழுக் கவனத்துடன் மாறி உட்கார்ந்து மறுபடியும் வயிற்றின் அசைவிற்கு கவனத்தைக் கொண்டு வாருங்கள். 
 
12) இப்படி இந்த உள்நோக்கு தியானம் உங்கள் கவனம் செல்லுமிடங்களைக் கூர்மையாக அறியச் செய்வதுடன் கவனத்தின் மீது உங்கள் ஆளுமையை வளர்த்த உதவுகிறது.
 
 13) நாளடைவில் தியானத்தில் இருக்காத நேரங்களிலும் உங்களுக்குள் ஏற்படும் உணர்வுகளை அறிந்திருக்க இந்த தியானப் பழக்கம் உதவுகிறது. கோபம் வருகிற போது “கோபம்” என்று பெயரிட்டு அறியும் அளவு விழிப்புணர்வு இருந்தால் கூட மனதிற்கு கவனத்தை அதிலிருந்து வேண்டும் இடத்திற்கு திருப்பவும் எளிதில் முடியும் என்பது அனுபவம். விபாசனா என்னும் இந்த உள்நோக்கு தியானம் வாழ்க்கை முறையாக பரிணமிக்கும் போது வாழ்க்கை ஆழப்படுகிறது. அதைப் பற்றி ஒரு புத்தகமே எழுதக் கூடிய அளவு மேலும் பல பயிற்சிகள் இருக்கின்றன என்றாலும் நம் தற்போதைய குறிக்கோளுக்குத் தேவையான அளவு அறிந்து விட்டோம்

Monday, January 20, 2014

ஈர்ப்பு விதி - 6


நாம் எல்லோருக்கும் பிரச்சினை இங்குதான் உள்ளது , நாம் எப்போதும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும்தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம் ,பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம் . நீங்கள் சிந்திக்கும் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளையும் உற்று கவனித்து கொண்டே இருங்கள் , ஏன் என்றால் நீங்கள் உங்களுக்கு தேவையானதைவிட,எது தேவை இல்லையோ அதை பற்றிதான் யோசித்து கொண்டிருப்பதும், பேசிகொண்டிருப்பதும் தெரிய வரும், நீங்கள் ஒரு எண்ணத்தை நினைகிறீர்கள் என்றால் அது நல்லதா கேட்டதா என்றெல்லாம் ஈர்ப்பு விதி சட்டை செய்வதில்லை ,அது வெறுமனே உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப இயங்குகிறது . ஈர்ப்பு விதி ஒரு இயற்கை விதி ,அது உங்களது எண்ணங்களை பெற்றுக்கொண்டு அதையே உங்களது வாழ்க்கையின் அனுபவங்களாக உங்களுகே திருப்பி அனுப்பும் , நீங்கள் என்ன என்னிகொண்டிருகிறேர்களோ அதை அப்படியே உங்களுக்கு திருப்பி கொடுக்கும் ஒரு விதியாகும் . ஈர்ப்பு விதி என்பது மிகவும் கீழ்படிதல் உள்ள விதி நான் இனி கடன் வாங்க மாட்டேன் என்பதை பற்றி நீங்கள் சிந்தித்து கொண்டிருந்தால் , உடனே விதியானது நீங்கள் எதை சிந்தித்து கொண்டு இருக்கீரீர்களோ ,அதை உங்களிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும் , அதற்கு நல்லது ,கேட்டது தெரியாது . நீங்கள் தவறான எண்ணங்களை சிந்திக்கும்போது அது அப்படியே எடுத்து கொள்ளும் ,அதற்கு சில உதாரணம் " நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போக மாட்டேன் நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போவேன் " " இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியாது இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியும் " "எனக்கு காய்ச்சல் வரகூடாது " எனக்கு காய்ச்சல் வர வேண்டும்" "நான் இனி எந்த விசயத்திலும் தோற்க மாட்டேன் நான் இனி எந்த விசயத்திலும் தோர்ப்பேன் " நீங்கள் நினைத்து கொண்டிருப்பதை ஈர்ப்பு விதி அப்படியே உங்களுக்கு திருப்பி அளிக்கிறது . மொத்த பிரபஞ்சமுமே எண்ணத்திலிருந்து உதித்ததுதான் என்று குவாண்டம் இயற்பியலாளர்கள் கூறுகின்றனர் . நாம் எல்லா சமயங்களிலும் சிந்தித்து கொண்டு தான் இருக்கிறோம் ,நாம் பேசிக்கொண்டிருக்கும்போதும் ,டிவி பார்த்து பேசிக்கொண்டிருக்கும்போதும், கார் ஓட்டும்போதும் , வேலை செய்து கொண்டிருக்கும்போதும் ,நாம் சிந்திக்காத ஒரே நேரம் தூங்கும் நேரம் மட்டும்தான் ,ஆனால் நாம் தூங்க முயலும் பொது கடைசியாக நாம் சிந்தித்த வற்றை ஈர்ப்பு விதியானது , அசை போட்டு கொண்டிருக்கும் ,அதனால் நாம் தூங்க போகும் போது நல்ல எண்ணங்களை மனதில் நினைத்து விட்டு தூங்க வேண்டும். இன்றைய உங்கள் சிந்தனை நாளைய வாழ்க்கை ,நீங்கள் எவற்றை குறித்து அதிகமாக சிந்திக்கிறீர்களோ அவையே உங்களது வாழ்வாக மலரும் .நீங்கள் தான் உங்கள் வாழ்வை சிருஷ்டிகிறீர்கள் .நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள் .உங்களது எண்ணங்கள் தான் விதை .உங்கள் அறுவடை நீங்கள் விதைக்கும் விதையை பொறுத்துதான் இருக்கும்.

ஈர்ப்பு விதி - 5


உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் ,அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும் .-பாப் பிராக்டர் உங்களது தேவை என்னவோ அதை பற்றி நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால் , உங்களது அந்த எண்ணத்தை ஆதிக்க எண்ணமாக மாற்ற முடியும் என்றால் , கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை உங்களால் வாழ்வில் கொண்டு வரபோவது உறுதி . ஆற்றல் மிக்க இந்த விதியின் மூலம் எண்ணங்கள் பௌதீக பொருட்களாக பரிணமிக்க போகின்றன . எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் பயணிக்கும் என்று பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்வதில்லை ,நாம்மால் எண்ணத்தை அளவிட முடியும் ,நாம் நமக்கு தேவையான விசயத்தை பற்றி திரும்ப திரும்ப எண்ணிகொண்டே இருக்க வேண்டும் , நான் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் , பெரிய வீடு வாங்க வேண்டும் ,கார் வாங்க வேண்டும் ,நீங்கள் இது போல தொடர்ந்து எண்ணிகொண்டே இருக்கும்போது ,நீங்கள் தொடந்து அதன் எண்ணங்களை ஒரு குறிபிட்ட அலைவரிசையில் வெளிப்படுத்தி கொண்டு இருக்கறீர்கள் .எண்ணங்கள் அந்த காந்த சமிகைகளை வெளியே அனுப்பி அவற்றிற்கு இனையானவற்றை உங்களிடம் ஈர்க்கின்றன. எண்ணங்கள் காந்த சக்தி உடையவை ,நீங்கள் சிந்திக்கும் போது எண்ணங்கள் குறிபிட்ட அலைவரிசையில் பிரபஞ்சதினுள் அனுப்பபடுகின்றன ,அவை அதே அலைவரிசையில் உள்ள அணைத்து விசயங்களையும் ஈர்க்கின்றன ,பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொன்றும் திரும்ப அதன் மூலத்துக்கே அனுப்பப்படும் ,அந்த மூலம் தான் நீங்கள் . உதரணமாக நாம் தொலைகாட்சி நிகழ்சிகளை நாம் பார்க்கிறோம் , அது எப்படி நம் டிவியை வந்து சேர்கிறது , அதன் ஒளிபரப்பு நிலையத்தில் இருந்து , ஒளிபரப்பபடுகிறது , நாம் வீட்டில் நமக்கு எந்த சேனல் தேவையோ அதற்கு ஏற்ற சேனல் மாற்றும் போது அது சம்பந்தமான அலைகளை உள்வாங்கி நமக்கு படமாக காண்பிக்கிறது டிவி . இதே போல மனிதனும் ஒரு ஒளிபரப்பு கோபுரம் தான் ,அதாவது சிக்னல்களை வெளியே அனுபிகொண்டு இருக்கும் ஒரு உயிர் உள்ள ஒளிபரப்பு கோபுரம் தான் , நாம் எந்த மாதிரி அலைகளை வெளியே அனுப்புகிறோமோ அதற்கு ஏற்றார் போல நமது வாழ்க்கை அமைகிறது , ஏன் என்றால் நாமிடம் இருந்து எந்த மாதிரி அலைவரிசை வெளியே போகிறதோ, அதே மாதிரி தான் நமக்கு எல்லாமும் வந்து சேரும் . உங்களது வாழ்வில் இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் காட்சிகள் அனைத்தும் , உங்களிடம் இருந்து வெளியே போன எண்ணங்கள் கவர்ந்து இழுத்தவையே ,உங்கள் வாழ்கையில் நீங்கள் எதாவது மாற்ற விரும்பினால் , முதலில் நீங்கள் வெளிப்படுத்தி கொண்டிருக்கும் எண்ணங்களின் அலைவரிசையை மாற்ற வேண்டும் . எப்போதும் நல்ல எண்ணங்களையே சிந்தியுங்கள் . நாம் எல்லோருக்கும் பிரச்சினை இங்குதான் உள்ளது , பெரும்பாலான மக்கள் எல்லோரும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும்தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம் ,பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம் . இதை பற்றி இன்னும் விரிவாக அடுத்த தொடரில் பார்க்கலாம் . காந்தம் இன்னும் ஈர்க்கும் Read more: http://karurkirukkan.blogspot.com/2011/07/3.html#ixzz2qvpZjQWD

ஈர்ப்பு விதி - 4


ஈர்ப்பு விதியின் இயக்க நிதிக்கு ஒரு உதாரணம் : மிகபெரும் பணக்காரர்கள் எல்லோரும் தங்களது செல்வங்களை இழந்தவுடன் , மிக குறுகிய காலத்திலேயே அவைகளை திரும்ப பெற்று விடுகிறார்கள் , இவர்களைபோன்றவர்களை பற்றி நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள் , இப்படிப்பட்டவர்கள் உணர்ந்து இருந்தார்களோ இல்லையா தெரியாது !அவர்களுடைய எண்ணங்கள் முழுவதையும் செல்வங்கள் மட்டும் ஆக்கிரமித்து இருக்கும் .அதாவது உங்களது எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் இவ்விதி அதற்கு ஏற்றவாறே இயங்கும் . ஒத்தவை ஒத்வைற்றையே ஈர்க்கும் ஈர்ப்பு விதி என்பது என்னை பொறுத்தவரை , நான் என்னை ஒரு காந்தமாக எண்ணி கொள்வதற்கு ஒப்பானது .-ஜ்ஹோன் அசரப் சுலபமா சொல்றேன் கேளுங்க .... உங்களுடைய நண்பர்களை எல்லோரையும் பாருங்கள் நீங்கள் எல்லோரும் ஒத்த எண்ணங்கள் உள்ளவர்களாக இருப்பீர்கள் , அதே உங்களுடைய எண்ணத்திற்கு எதிரான எண்ணங்கள் உள்ளவர்களுடன் நீங்கள் நெருங்கி பழக மாட்டீர்கள் ,அன்னாஹசாரே ஊழலுக்கு எதிராக போராட ஆரம்பித்தவடன் எப்படி இந்தியாவில் உள்ள லட்சகணக்கான மக்கள் ஒன்று திரண்டு அவருக்கு கை கொடுத்தார்கள் , இங்கே பாருங்கள் அன்னா ஹசாரே -வின் எண்ணமும் மக்களின் எண்ணமும் ஒன்றாக இருந்த காரணத்தால் சுலபமாக அவர்களை அவரால் ஈர்க்க முடிந்தது , உங்களது வாழ்கையிலும் இந்த ஈர்ப்பு விதியின் தாக்கத்தை உணர்ந்து இருக்க கூடும் , உங்கள் நடந்த சோகமான நிகழ்வுகளை பற்றி நீங்கள் எண்ண ஆரம்பித்தவுடன் , அது தொடர்பாக மேலும் சோகமான நினைவுகள் உங்களுக்கு வர ஆரம்பித்திருக்கும் ,நீங்கள் நீடித்து இருக்கும் ஒரு எண்ணங்களை பற்றி எண்ணும்போது,ஈர்ர்பு விதி உடனடியாக அதனுடன் ஒத்த எண்ணங்களை உணக்ளுக்கு கொண்டு வந்து சேர்க்கும் ,அதனால் நீங்கள் மேலும் சோகமாக மாறுகிறீர்கள். எந்திரன் படத்தில் உள்ள கிளிமஞ்சாரோ பாடலை நீங்கள் கேட்கும்போது உடனே உங்களது மன திரையில் ரஜினியும் ,ஐஸ்வர்யாராயும் ஆடுவதும் , இந்த பாடல் படம் ஆக்கப்பட்ட விதம் குறித்து டைரக்டர் ஷங்கர் அளித்த பேட்டி உங்களுக்கு எப்படி நினைவுக்கு வருகிறது ?,நீங்கள் எதன் மீது கவனத்தை செலுத்துகிறீர்களோ அது சம்பந்தமாக விசயங்களை ஈர்ப்பு விதி உங்களிடம் கொண்டு வந்து சேர்த்து விடும் . நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமக்கு என்ன தேவையோ அது குறித்த எண்ணங்களை நம் மனதில் விடாபிடியாக பிடித்து கொண்டிருப்பதோடு ,அவை குறித்த முழுமையான தெளிவையும் நம் மனதில் இறுதி கொள்ள வேண்டும் ,அப்பொழுது நீங்கள் எதை குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டு இருக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் ஆகி விடுவீர்கள். நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய் .- சுவாமி விவேகனந்தர் . இன்றைய உங்களது வாழ்க்கை உங்களது கடந்த கால எண்ணங்களின் பிரதிபலிப்பே , அதில் நல்லவையும் அடங்கும் கெட்டவையும் அடங்கும் ,நீங்கள் அதிகமாக யோசிக்கும் விசயங்களை உங்களின் பக்கம் ஈர்ப்பதால் ,உங்களின் வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் அந்த எண்ணத்தின் ஆக்கிரமிப்பு அடங்கியுள்ளது என்பதை நீங்களே உணரலாம் . உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் ,அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும் .-பாப் பிராக்டர் இன்னும் ஈர்க்கும் ... *************

ஈர்ப்பு விதி - 3


உலகில் சம்பாதிக்கபபடும் மொத்த பணத்தில் தொண்ணூற்றாறு சதவிகிதத்தை , உலகில் உள்ள மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் வகிபவர்கள் மட்டுமே சம்பாதிகிறார்கள், அவர்களுக்கு நமக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?அவர்கள் எதோ ஒன்றை புரிந்து வைத்து இருகிறார்கள் , நமக்கு அது தெரியவில்லை ? அந்த ரசசியம் என்னவென்று பார்ப்போம் !.. நாம் அனைவரும் ஒரே மஹா சக்தியுடன் தான் இணைந்து செயல்படுகிறோம் , ஒரே விதிகள் (சக்தி) தான் எல்லாவற்றையும் வழி நடத்துகின்றன ,அதாவது ஈர்ப்பு விதி தான் அந்த ரகசியம் ! நீங்கள் இப்போது மனதில் என்ன என்ன நினைத்து கொண்டு இருக்கிறீர்களோ அவை அனைத்தையும் நீங்கள் இப்போது நீங்கள் ஈர்த்து கொண்டு இருகிறீர்கள் என்று அர்த்தம்! . உங்களது ஒவ்வொரு எண்ணமும் உண்மையில் ஒரு மெய்யான மெய்பொருள் தான் .அது ஒரு சக்தி . பிரண்டிஸ் மல்போர்ட் (1834-1891) இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விதி நீங்கள் தான் என்று இந்த உலகில் வாழ்ந்து மறைந்த மாபெரும் ஆசான்கள் கூறியுள்ளார்கள் . வில்லியம் ஷேக்ஸ் பியர் ,ராபர்ட் பிரௌனிங் ,வில்லியம் போன்ற கவிதை மூலமாக இதை கூறி உள்ளார்கள் . இன்னும்பல பேர் தங்களது இசை மூலமும் , ஓவியங்கள் மூலமும் இதை வெளிப்படுத்தி உள்ளார்கள் ,இந்து மதம் ,புத்த மதம் , யூத மதம் ,கிருத்துவ மதம் ,இஸ்லாம் , ஹீர்மேடிக் பாரம்பரியம் போன்ற மதங்களும் மற்றும் பாபிலோனிய மற்றும் எகிப்து நாகரிகங்களும் இதை வெளிப்படுத்தி உள்ளன . காலத்தின் மூலதோடையே இவ்விதி உதித்தது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கனத்தையும் ,ஒவ்வொரு செயலையும் ,நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு விசயத்தையும் இவ்விதி தான் நிர்ணயிக்கிறது ,இந்த ஈர்ப்பு விதியை நடைமுறை படுத்துவது நீங்கள்தான் ,அதை நீங்கள் உணளது எண்ணங்கள் மூலமாக செய்கிறீர்கள் .இதற்கு இன்னொரு பெயரும் உண்டு " படைப்பு அமைப்பின் சகலமும் சார்ந்து இருக்கும் ஒருபோது பிறலாத மாபெரும் விதி " மெய்யறிவு படைத்தோர் இதை எப்போதும் அறிந்து இருந்தனர் .பண்டைய காலத்தில் பாபிலோனியர்கள் செல்வ செழிப்பாக வாழ்ந்து இருப்பார்கள் , உலகில் உள்ள தொங்கும் தோட்டத்தை உருவாகிய பெருமை அவர்களுக்கு உண்டு , பிரபஞ்ச விதிகளை சரியாக புரிந்து கொண்டு அதை பயன்படுத்தியது மூலம் வரலாற்றிலேயே அவர்கள் செல்வசெழிப்பான முறையில் வாழ்ந்தார்கள் . மிகப்பெரும் பணக்காரர்கள் எல்லோரும் செல்வத்தை ஈர்த்தவர்கள் (அதாவது சம்பாதித்தவர்கள் ) இந்த ரகசியத்தை தெரிந்தோ தெரியாமலோ உபயோகபடுத்தி உள்ளார்கள் , அவர்கள் எப்போது அபரிவிதமான செல்வ செழிப்பான எண்ணங்களை என்னிகொண்டிருகின்றனர் .அதற்கு நேர் மாறான எண்ணங்களை அவர்கள் மனதில் எழாமல் பார்த்து கொண்டனர்.அவர்கள் மனது முழுவது எப்போதும் செல்வ செழிப்பு பற்றி மட்டும்தான் என்று தான் எண்ணிக்கொண்டு இருகிறார்கள் ,அவர்களிடம் இருந்த செல்வ செழிப்பு குறித்த ஆதிக்க எண்ணங்களே அவர்களுக்கு செல்வங்களையும் ,செழிப்புகளையும் கொண்டு வந்து சேர்த்து உள்ளன .அது தான் ஈர்ர்பு விதியின் இயக்க விதி . இன்னும் ஈர்க்கும் ..

ஈர்ப்பு விதி - 2


இந்த உலகில் மனிதன் தனது அறிவை கொண்டு எவ்வளவு பெரிய விசயங்களைஎல்லாம் கண்டு பிடித்து விட்டான் , ஆனால் அவனால் அவனை திருப்தி படுத்தி கொள்ளவோ , தன்னை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளவோ ,முடியவில்லை , உதரணமாக உலகில் எவ்வளவு வன்முறைகள் நடக்கின்றன , நாடுகள் சண்டையிட்டு கொல்கின்றன , நாடு மக்களை கொல்கிறது , ஏன் தனக்கு என்ன வேண்டும் என்றே தெரியாமல் பல பேர் உள்ளார்கள் , ஏழை மேலும் , ஏழை ஆகிகொன்டே இருகிறார்கள் , வியாதிகள் மேலும் பெருகிகொண்டே இருகின்றன , இவை எல்லாவற்றையும் சரி செய்ய முடியுமா , இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்ன ?நாம் இவற்றை எல்லாம் மாற்ற முடியாது , ஆனால் நம்மால் நம்மை சரி செய்து கொண்டால் நம் ஒருவர் மூலம் இந்த சமுதாயத்திற்கு நல்ல விசயங்களை கொடுக்க முடியும் , இதே போல் எலோரும் நம்மை சரி செய்து கொண்டால் இந்த நாட்டில் அனைவர்க்கும் எல்லாம் கிடைத்து விடும் , இந்த தொடர் இந்தியாவை மாற்றுவதற்காக எழுதபடுவது அல்ல , ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு தேவை பட்டதை எவ்வாறு அடைவது என்பதை பற்றித்தான் , பொதுவாக எல்லா மனிதனுக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு இலக்கு இருக்கும் , உதாரனமாக ஒருவர் I.A.S பரிட்ஷை எழுத்து பாஸ் பண்ண வேண்டும் என்று வைத்து கொள்வோம் , எவளவு பேர் அதை செய்கிறார்கள் , ஏன் செய்ய முடியவில்லை ,? மனித உறவுகளுக்கு உள்ளே எவ்வளவு முரண்பாடுகள் ?மொத்தத்தில் இந்த தொடர் தங்களது ஆளுமை திறனை வளர்த்து கொள்ள உதவியாக இருக்கும் இங்கே அடிக்கடி பிரபஞ்சம் என்ற வார்த்தை உபயோகபடுத்த படும் , பிரபஞ்சம் என்றால் நீங்கள் இயற்கை என்று வைத்து கொள்ளலாம் , அல்லது உங்களுக்கு பிடித்த கடவுள் என்று வைத்து கொள்ளுங்கள் , அல்லது மஹா சக்தி என்று வைத்து கொள்ளுங்கள் . உங்களுக்கு தெரியுமா ? உலகில் சம்பாதிக்கபபடும் மொத்த பணத்தில் தொண்ணூற்றாறு சதவிகிதத்தை , உலகில் உள்ள மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் வகிபவர்கள் மட்டுமே சம்பாதிகிறார்கள், அவர்களுக்கு நமக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?அவர்கள் எதோ ஒன்றை புரிந்து வைத்து இருகிறார்கள் , நமக்கு அது தெரியவில்லை ? அது என்ன வென்று இனி வரும் தொடர்களில் நாம் பார்க்க போகிறோம் . ஒத்தவை தன்னை ஒத்தவற்றையே ஈர்க்கும் என்பது விதி .அதன் விளைவாக மனப்போக்கு அதை ஒத்த சூழல்களை கண்டிப்பாக தன்பால் ஈர்க்கும் . -சார்லஸ் ஹானால் இன்னும் ஈர்க்கும் ...

ஈர்ப்பு விதி - 1


* நீங்கள் அன்புணர்வின் கதிர்களை வெளிப் படுத்திக் கொண்டிருந்தால் மொத்தப் பிரபஞ்சமுமே உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வது போலவும், அனைத்து மகிழ்க்கியான விஷயங்களையும் உங்களை நோக்கிச் செலுத்துவது போலவும், எல்லா நல்லவர் களையும் உங்களை நோக்கி நகர்த்துவது போலவும் தோன்றலாம். உண்மையும் அதுதான். * உறவு ஒன்றைக் கவர்ந்திழுக்க நீங்கள் விரும்பினால் உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மற்றும் சூழல்கள் ஆகியவை உங்களுடைய விருப்பத்தோடு முரண்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். * உங்களுக்கு நீங்களே அன்பும் மரியாதையும் செலுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் அன்பும் மரியாதையும் செலுத்தும் நபர்களை நீங்கள் கவர்ந்திழுப்பீர்கள். * நீங்கள் உங்களைப் பற்றி மோசமாக உணரும் போது, அன்பைத் தேடுகிறீர்கள். அதோடு உங்களைத் தொடர்ந்து அந்நிலையிலேயே வைத்திருக்கும் நபர்களையும் சூழல்களையும் கவர்ந்து இழுக்கிறீர்கள். * உங்களிடம் நீங்கள் நேசிக்கும் குணங்களில் கவனம் செலுத்துங்கள். உங்களிடம் இருக்கும் மேலும் அதிகமான சிறப்புகளையும் ஈர்ப்பு விதி உங்களுக்குக் காட்டிவிடும். * உங்களுடைய சக்தியை சரியான முறையில் இடம்பெயரச் செய்து நீங்கள் வேண்டுபவற்றை உங்கள் வாழ்வில் அதிகமாகக் கொண்டு வருவதற்கு சிறந்த செயல்முறை நன்றியுணர்தல் ஆகும். * நீங்கள் வேண்டும் என்று விரும்பிய வற்றிற்கு, முன்னதாகவே நன்றி தெரிவிக்கும் செயல், உங்களுடைய ஆசைகளை முடுக்கிவிட்டு, பிரபஞ்சத்திற்கு இன்னும் சக்தி வாய்ந்த சமிக்ஞையை அனுப்பும். * உங்களுக்கு வேண்டியதை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை உங்கள் மனத்தில் உருவாக்குவது தான் அக்காட்சியின் படைப்பாகும். அகக் காட்சிப் படைப்பில் ஈடுபடும்போது அவற்றை இப்போதே கொண்டிருக்கும் உணர்வையும் எண்ணங்களையும் உருவாக்குகிறீர்கள். நீங்கள் உங்கள் மனக்கண்ணால் என்ன பார்த்தீர்களோ? அதே யதார்த்தத்தை ஈர்ப்பு விதி உங்களுக்கு திருப்பி அளிக்கும். * ஒரு நாளின் இறுதியில், தூங்கப் போவதற்கு முன்பு அன்றைய தினத்தின் நிகழ்வுகளை மனக் கண்ணால் பாருங்கள். ஏதாவது ஒரு நிகழ்வோ, அல்லது தருணமோ, நீங்கள் விரும்பியபடி அமைய வில்லை என்றால் அதை அழித்துவிட்டு நீங்கள் எப்படி நிக வேண்டும் என்று விரும்பியிருந் தீர்களோ அப்படி நடை பெற்றதைப் போல உங்கள் மனத்தில் மாற்றி ஓடவிட்டுப் பாருங்கள். அடுத்தநாள் நீங்கள் விரும்பியபடி எல்லாம் மாறிவிடும்.

உங்களுடைய எண்ணங்கள்

1-உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
2. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
3. உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
4. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
5. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
6. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரயம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
7. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
8. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
9. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
10. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
11. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
12. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
13. மன்னிக்கப் பழகுங்கள்..
14. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
15. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
16. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
17. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
18. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டேஇருங்கள்.
19. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
20. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.