Tuesday, January 27, 2015

நீங்கள் ஒரு காந்தம்!


உண்மையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காந்தம். எப்படி காந்தம் பல பொருட்கள் சுற்றி இருந்தாலும் இரும்புத் துண்டுகளை மட்டுமே கவர்ந்திழுக்குமோ மனிதனும் தனக்குத் தக்க மனிதர்களையும், சூழ்நிலைகளையும் மட்டுமே தன் வாழ்க்கையில் கவர்ந்திழுக்கிறான். காந்தத்திற்கும் ஒரு படி மேலே போய் அவன் தன் காந்த சக்தியைத் தானே தீர்மானம் செய்கின்ற சக்தி பெற்றிருக்கிறான். அவன் தன் காந்தசக்தியின் தன்மையை தீர்மானிக்கும் முக்கியமான விதங்கள் மூன்று.

முதலாவது, கர்மா-மனிதன் முன்பு விதைத்ததை அறுவடை செய்யத் தேவையான மனிதர்கள் அவனால் ஈர்க்கப்படுகிறார்கள். அதற்கான சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் எல்லாம் தானாக அவனைத் தானாக வந்தமைகின்றன. முன்பு சில செயல்களைத் தீர்மானித்து செயல் புரிந்த அந்தக் கணத்திலேயே அதன் விளவுகளுக்கான காந்த சக்தியைத் தன்னிடம் ஏற்படுத்திக் கொள்கிறான். எல்லாம் துல்லியமான கணக்கோடு சரியான நேரத்தில் அவன் வாழ்வில் வந்து சேருகின்றன.

இரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள்-உலகில் நல்ல விஷயங்களில் ஆழமான நம்பிக்கைகள் கொண்டிருப்பவர்கள் நல்ல மனிதர்களையும் நல்ல விஷயங்களையும் தங்கள் வாழ்வில் தங்களை அறியாமல் வரவழைத்துக் காண்கிறார்கள். அதே போல நல்ல விஷயங்களில் அவநம்பிக்கையை ஆழ்மனதில் வளர்த்துக் கொள்கிற மனிதர்கள் அதை உறுதி செய்கிறது போன்றவற்றையே தங்கள் வாழ்வில் வரவழைத்துக் கொள்கிறார்கள். நான் அப்போதே சந்தேகப்பட்டேன் என்று பிறகு தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இவர்கள் அப்படி வரவழைத்துக் கொண்டதே தாங்கள் தான் என்பதை அறிவதில்லை.

மூன்றாவது அதீத ஆர்வம்-ஒரு மனிதன் எதில் எல்லாம் அதீத ஆர்வம் காட்டுகிறானோ அதுகுறித்து மேலும் ஞானமும், அனுபவங்களும் தரக் கூடிய மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும் காந்தமாக ஈர்த்துக் கொள்கிறான்.

ஆன்மீக ஆர்வம் அதிகமாக இருந்த விவேகானந்தரை ராமகிருஷ்ண பரம்ஹம்சரிடம் அழைத்துச் சென்றது அந்த காந்த சக்தியே. அதே போல் ஆன்மீகம் என்ற பெயரில் சித்து வித்தைகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களைப் போலிச் சாமியார்களை சந்திக்க வைப்பதும் அந்தக் காந்த சக்தியே. இப்படி அவரவர் ஆர்வம் காட்டும் விஷயங்களில் ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே அவன் அனுபவங்களை விருத்தி செய்யக்கூடியவை அவனை வந்து சேருகின்றன.

ரமண மகரிஷி தானாகப் போய் ஆன்மிகப் பிரசாரம் செய்ததில்லை. சிஷ்யகோடிகளைச் சேர்த்ததில்லை. திருவண்ணாமலையை அடைந்த பிறகு அந்த ஊரை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை. பல நாட்கள் தொடர்ந்து மௌனமாகவே இருந்திருக்கிறார். ஆனாலும் அவரது ஆன்மீக காந்த சக்தி இந்தியாவில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பல ஆன்மீகவாதிகளை அவரிடம் வரவழைத்த அதிசயத்தைக் கண்டிருக்கிறோம்.

ஆகவே தற்போது நம்மிடம் உள்ளதும், இது வரை வந்ததும் நாம் காந்தமாகக் கவர்ந்தவையே. நாம் நம் வாழ்வில் எல்லாவற்றையும் மேலே குறிப்பிட்ட மூன்று வழிகளில் வர வைத்திருக்கிறோம். பிற காந்தங்களால் நாம் கவரப்படுவதும் இந்த விதிகளின் படியே. பிரபஞ்சம் இந்த மூன்றின்படியே எல்லாவற்றையும் நமக்கு வினியோகித்திருக்கிறது.

இந்தப் பேருண்மை நம்மை ஒரு விதத்தில் ஆசுவாசப்படுத்துகிறது. வாழ்க்கையில் பலவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நமக்குள்ள சுதந்திரத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த மூன்றில் முதல் விதியான கர்மாவால் வந்தது நமது பழைய சுதந்திரமான செயல்களின் விளைவு என்பதால் அதைத் தவிர்க்கும் சக்தி மட்டும் நமக்கில்லை. அதை அனுபவித்து தீர்த்துக் கொள்ளுதலே ஒரே வழி.

இரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள். நோய்க்கிருமிகளின் சக்தி மேல் பலமான நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமே நோய்வாய்ப்படுகிறான். தன் உடலின் எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமாக நோய்வாய்ப்படுவதில்லை. அப்படியே நோய் வந்தாலும் வந்த வேகத்தில் அது போயும் விடுகிறது என்று இன்றைய மருத்துவம் கண்டுபிடித்து இருக்கிறது.

ஆழ்மனதில் முன்பே வைத்திருக்கும் தவறான நம்பிக்கைகளை உடனடியாக மாற்றிக் கொள்வது சிறிது கஷ்டமே என்றாலும் அது முடியாததில்லை. நாம் எதை பலமாக நம்புகிறோம், எதை எதிர்பார்க்கிறோம் என்பதைப் பட்டியலிட்டு அதில் தேவையற்றவற்றையும், தவறானவற்றையும் நீக்கிக் கொள்ளுதல் நலம். 

அதற்கு எதிர்மாறான நல்ல விஷயங்களைப் பற்றி படித்தும், கேட்டும், அப்படி வாழ்பவர்களின் சகவாசத்தை வளர்த்துக் கொள்ளுவதும் சிறிது சிறிதாக நம் ஆழ்மன நம்பிக்கைகளை நல்ல திசையில் திருப்பும். நம் முன்னோர்கள் இதன் முக்கியத்துவத்தை பெரிதும் உணர்ந்து நல்ல மனிதர்களின் சேர்க்கையை "சத் சங்கம்" என்ற பெயரில் வலியுறுத்தியுள்ளார்கள்.

மூன்றாவதான ஆர்வம் நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. உயர்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டும் போது நல்ல எண்ண அலைகளை நாம் ஏற்படுத்துகிறோம். அவை பலப்படும் போது நன்மையைப் பெருக்குகின்ற பலதும் நம் வாழ்வில் வந்து சேர ஆரம்பிக்கும். நாம் எதில் அதிக ஆர்வம் காட்டுகிறோம் என்பதை முதலில் கவனியுங்கள்.

அடுத்தவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் தன் தவறுகளை வளர்த்துக் கொள்கிறான். சில்லரை விஷயங்களிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் அந்தத் தரத்திலேயே சாதித்து மடிகிறான். ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே பெறுகின்றதன் தரமும் அமையும்.

நீர் நிறைந்திருக்கும் டம்ளரில் பாலை நிரப்ப வேண்டுமானால் முதலில் நீரைக் கொட்ட வேண்டும். பின்பு தான் அதில் பாலை நிரப்ப முடியும். அது போல அற்ப விஷயங்களில் ஆர்வம் காட்டிக் கொண்டு பெரிய சாதனைகள் புரிய நாம் கனவு காண்பது வீணே. முதலில் அற்பங்களை அப்புறப்படுத்துங்கள். மேற்போக்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்வில் அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் ஆர்வம் உங்களிடம் ஆழமாக இருக்குமானால் மட்டுமே அது காந்தத் தன்மை பெறும்.

எனவே இது வரை நாம் கவர்ந்தவற்றின் கணக்கை நம் வாழ்வில் ஆராய்வோம். எதற்கும் யாரையும் குறை கூறாமல் கவர்ந்து பெற்றதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வோம். இனி எதைக் கவர வேண்டும் என்று சிந்தித்து அவற்றை நம் மனதில் ஆழப் பதிப்போம். அதற்கான ஆர்வத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி அதைப் பலப்படுத்துவோம்.

இப்படி புதிய காந்த சக்தியை நம்மில் வளர்த்துக் கொண்டால் மீதியை இந்த பிரபஞ்ச விதிகள் பார்த்துக் கொள்ளும். வாழ்க்கை சிறப்படையும். அதற்குத் தேவையான சூழ்நிலைகள் நம் வாழ்வில் அமைய ஆரம்பிக்கும். சந்தர்ப்பங்கள் உருவாகத் துவங்கும். உதவும் படியான மனிதர்கள் நம் வாழ்வில் வந்து சேர்வார்கள். கனவுகள் மெய்ப்படும்.

http://rajasithamedical.blogspot.in/

Tuesday, January 20, 2015

ஆழ்மனம் என்றொரு வேலைக்காரன்

      பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப்பிறந்தோமா? என்று.

நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம்தான் மாற்றம். அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும், நம் அன்றாட செயல்களி லிருந்தும் ஆரம்பமாக வேண்டும். மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மாறாத, மாறவிரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை. இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத் தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத் தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது.

ஆனால், “பூமி சுற்றுவதை உணர முடிவதில்லை. நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அது உண்மை. அதேபோல் நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது. இதை உணர முடிவதில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இதுவும் உண்மை.”

சூரியன் தன் ஈர்ப்புச்சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது? சூரியனுக்கு அச்சக்தி கொடுத்த பிரபஞ்சம்தான். நம் அனைவருக்கும் சக்தியை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக அறிந்தவர்களில்லை. எனினும் சிறு துளிகள். நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும். பல கோடிக்கணக்காக அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம் (மய்ண்ஸ்ங்ழ்ள்ங்) பிரபஞ்சம் எனப்படுகிறது. மனிதனின் கற்பனைக்கும் எட்டாத ஒன்றுதான் பிரபஞ்சம்.

கற்பனையே செய்ய முடியாத பிரபஞ்சத்தின் ஒரு சிறுபகுதிதான். நாம் உயிர் வாழும் பூமி. இந்த பூமியை இயக்கிக்கொண்டிருப்பது பிரபஞ்ச சக்தி ஆகும். இதே பிரபஞ்ச சக்திதான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது. இருக்க நினைப்பவர்களுக்க வசிக்க இடம் கொடுக்கிறது. இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை. மனித மனம்தான் அறிவுமனம் (இர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள் ஙண்ய்க்) ஆழ்மனம் (நன்க்ஷஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள் ஙண்ய்க்) என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

“உருவமே இல்லாத ஆழ்மனம்தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது. அடையாளம் காண முடியாத ஆழ்மனம்தான் நம்மை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய முடியாத ஆழ் மனம்தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது.” இதுவரை நாம் வாழ்ந்த நாட் களுக்கும், இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும். இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காதிருந் தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்!

ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது? இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்லமுடியும். நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே. ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும். நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.

நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம் ஆழ்மனம்.

நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்வதுதான். அந்த எண்ணங் களுக்கு உருவம் கொடுப்பதுதான்.

ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்துப்பபார்க்கத் தெரியாது. எண்ணத்தை வலிமைப்படுத்துவதுதான் ஆழ்மனதை வசியப் படுத்த ஒரே வழி.

ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம்.

Friday, January 16, 2015

வாஸ்துவின் அடிப்படை விதிகள்!

ஒரு வீடோ அல்லது தொழில் நிறுவனமோ அமைக்கப்படும்போது அதனை வாஸ்து விதிகளுக்கு உட்படுத்தி அமைப்பது சிறந்தது. 

வாஸ்துவில் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஆறு அடிப்படை விதிகள். அவை,

(1) ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம்.

(2) ஒரு கட்டடம் கட்டும் போது தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் அவசியம்.

(3) ஒரு இடத்தின் வடகிழக்கு பகுதி பள்ளமாகவும் / கனமில்லாமலும், தென்மேற்கு பகுதி உயரமாகவும் / கனமாகவும் இருத்தல் அவசியம்.

(4) ஒரு இடத்திற்கு அமைக்கப்படும் தலைவாசல் கட்டாயம் உச்சத்தில் தான் இருக்க வேண்டும்.

(5) உட்புற மற்றும் வெளிப்புற படிக்கட்டுகள் அமைக்கப்படும் நிலையை அறிவது அவசியம்.

(6) ஒரு இடத்தின் தெருக்குத்து மற்றும் தெரு தாக்கம் பற்றி அறிவது அவசியம்.

1.வாஸ்து முறைப்படி வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் அமைப்பது எப்படி:- (Car Parking)

நம் அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் வெவ்வேறு இடத்திற்கு செல்ல ஒவ்வொருவரும் வாகனங்கள் பயன்படுத்துகின்றோம். நாம் வசிக்கும் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக தனி இடத்தை அமைக்கின்றோம். அவ்வாறு அமைக்கப்படும் இடத்தை வாஸ்துப்படி சரியான முறையில் அமைக்க வேண்டும்.

* ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் எந்த பகுதியையும் / முனையையும் உடைத்து போர்டிகோ அமைக்க கூடாது.

* ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தை ஒட்டி அமைக்கப்படும் போர்டிகோ Cantilever முறையில் தூண் (Pillar) இல்லாமல் அமைக்க வேண்டும்.

நம் அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் வெவ்வேறு இடத்திற்கு செல்ல ஒவ்வொருவரும் வாகனங்கள் பயன்படுத்துகின்றோம். நாம் வசிக்கும் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக தனி இடத்தை அமைக்கின்றோம். அவ்வாறு அமைக்கப்படும் இடத்தை வாஸ்துப்படி சரியான முறையில் அமைக்க வேண்டும்.

* ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் எந்த பகுதியையும் / முனையையும் உடைத்து போர்டிகோ அமைக்க கூடாது.

* ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தை ஒட்டி அமைக்கப்படும் போர்டிகோ Cantilever முறையில் தூண் (Pillar) இல்லாமல் அமைக்க வேண்டும்.

* ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) அந்த இடத்தில் கட்டப்படும் தாய் சுவரையும், மதில் சுவரையும் தொடாமல் தனியாக அமைக்க வேண்டும்.

* ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) - மேல்கூரை (Roof) சமமாக அல்லது தெற்கு / மேற்கு உயர்த்தியும் வடக்கு / கிழக்கு தாழ்த்தியும் அமைக்க வேண்டும்.

2. மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள்

இயற்கையின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள். மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயுவான அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் தான் இவைகள்.

ஒரு புல் கூட கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை. அப்படி இருக்க ஒரு மரம் எந்த அளவு பலன் கொடுக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. 

இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. மழையை வருவிக்கும் வருணபகவானாக மரங்களும், செடி, கொடிகளும் உள்ளன.

நம்மால் ஒரு காட்டை உருவாக்க முடியாது. குறைந்தது ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க முடியும். அப்படி வளர்ப்பதால் நம் வீட்டிற்குத் தேவையான நிழல், குளுமை கிடைப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் நல்லது.

கொஞ்சம் நேசம், கொஞ்சம் மெனக்கெடல், கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் போதும், எல்லோரும் பசுமையைப் பயிரிடலாம். உடலுக்கும் பயிற்சி. அழகுக்கு அழகு. குழந்தைகளுக்கும் தொலைக்காட்சியிலிருந்து விடுதலை

• ஒரு வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் மரம், செடி, கொடிகள் அமைக்க வேண்டும்.

• ஒரு வீட்டின் தென்மேற்கு பகுதியில் உறுதியான உயர்ந்த மரங்களை வளர்ப்பது சிறப்பானது.

• ஒரு வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மரம், செடி, கொடிகள் அமைக்கக்கூடாது

3. வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை

கடந்த பல ஆண்டுகளாக நடத்திய நீர் பற்றிய ஆராய்ச்சியில், மனிதர்களுக்குத் தேவைப்படும் உயிர்ப்பாற்றலைக் கிரகித்து, அதனை மனிதர்களுக்கு வழங்கும் திறனைத் தண்ணீர் தன்னுள்ளே கொண்டிருப்பதால் உடல் நலத்தைப் பொறுத்தவரை தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. 

சக்தி ஊட்டப்பட்ட நீரில் குளிப்பது நன் மருந்தாகக் கருதப்படுகிறது. மனித உடம்பானது தோலின் மூலம் பிராண சக்தியை வெகுவேகமாகக் கிரகிப்பதாகக் கூறப்படுகிறது. பிராண சக்தியைப் பெற நீங்கள் ஒருநாள் முழுவதும் குடிக்கும் மொத்த நீர் இரண்டு லிட்டர் என்றால் பத்து நிமிடக் குளியலின் மூலம் அதே அளவு பிராண சக்தியைப் பெற முடியும். 

எனவே மிகுந்த சக்தி வாய்ந்த நீரைத் பயன்படுத்தி குடும்பத்தில் உள்ள எல்லோரும் நல்ல உடல் நலனைப் பெற ஒரு வீட்டில் / கட்டடத்தில் வசிக்கும் அனைவரும் ஆழ் துளை கிணறு மூலம் பெறும் நீரைத் தேக்கி வைக்க, அந்த வீட்டின் / கட்டடத்தின் மேல் தளத்தில் நீர்த் தேக்க தொட்டி (Over Head Tank) அமைப்பது உண்டு. அவ்வாறு அமைக்கப்படும் நீர் தேக்கத் தொட்டி சரியான முறையில் அமைக்க வேண்டும்.

* ஒரு வீட்டில் / கட்டடத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அந்த வீட்டின் / கட்டடத்தின் தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும். 

* ஒரு வீட்டில் / கட்டடத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அந்த வீட்டின் / கட்டடத்தின் வடகிழக்கு / வடமேற்கு / தென்கிழக்கு மூலையில் கண்டிப்பாக வரக் கூடாது.

4. ஜன்னல் அமைக்கும் முறை

ஓவ்வொரு மனிதனும் நோயற்ற வாழ்வு வாழ்வதற்குத் தூய்மையான காற்றும் சூரிய ஒளியும் மிக முக்கிய பங்கு ஆற்றுவது போல், ஒரு வீட்டில் / கட்டடத்தில் வசிக்கும் நபர்கள் வாழ்வில் சிறந்து விளங்க அந்த வீட்டிற்கு / கட்டடத்திற்குக் காற்றும் சூரிய ஒளியும் நன்கு உள்ளே வர வேண்டும். அப்படி வரவே நாம் ஜன்னல்கள் அமைக்கின்றோம்.

இவற்றை எவ்வாறு அமைக்க வேண்டும் எனப் பார்ப்போம்.

* ஒரு வீட்டில் / கட்டடத்தில் அமைக்கப்படும் ஜன்னல்கள் (Windows) உச்சத்தில் தான் அமைக்க வேண்டும்

* ஒரு வீட்டிற்கு / கட்டடத்திற்குக் கிழக்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் (Window), அந்த அறையின் வடக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும்

* ஒரு வீட்டிற்கு / கட்டடத்திற்கு வடக்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் (Window), அந்த அறையின் கிழக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும் 

* ஒரு வீட்டிற்கு / கட்டடத்திற்குத் தெற்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் (Window), அந்த அறையின் கிழக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும்

* ஒரு வீட்டிற்கு / கட்டடத்திற்கு மேற்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் (Window), அந்த அறையின் வடக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும்

* வடகிழக்கு பகுதியில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு திசையில் உள்ள ஜன்னல், 24 x 7 திறந்தே இருக்க வேண்டும்.

5. கழிவறை அமைக்கும் முறை

ஒவ்வொரு மனிதனும் தன் மனத்தைத் தூய்மையாக வைத்திருக்க எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து, நேர்மறையான சிந்தனைகளை நினைப்பது போல, தன் உடம்பை ஆரோக்கியமாக வைக்க, உடல் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற வேண்டும். அப்படிப்பட்ட கழிவுகளை வெளியேற்ற கூடிய இடமே கழிவறை ஆகும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கழிவுநீர்த் தொட்டி (Septic Tank) அமைப்பது எப்படி என்று பார்ப்போம்.

நாம் அன்றாடம் நமது உடலில் இருந்து வெளியேற்றும் கழிவுகள், கழிவறையில் இருந்து குழாய் மூலமாகவோ, கால்வாய் மூலமாகவோ, தனியாக அமைக்கப்பட்ட ஒரு தொட்டியில் வந்து சேரும். அப்படிப்பட்ட கழிவுகளைத் தேக்கும் தொட்டியே கழிவுநீர்த் தொட்டி ஆகும். 

கழிவுநீர்த் தொட்டி (Septic Tank) அமைக்கும் முறை:-

* ஒரு இடத்தில் அமைக்கும் கழிவுநீர்த் தொட்டியை, அந்த இடத்தின் வடமேற்கு - வடக்குப் பகுதியில் தான் அமைக்க வேண்டும். 

* ஒரு இடத்தில் அமைக்கும் கழிவுநீர் தொட்டியை அந்த இடத்தின் தாய்ச் சுவரையும் மதில் சுவரையும் தொடாமல் அமைக்க வேண்டும்.

* ஒரு இடத்தின் வடமேற்கு - வடக்குப் பகுதியில் அமைக்கும் கழிவுநீர்த் தொட்டியை, வடக்கு மதில் சுவருக்கு வெளியே, மதில் சுவரைத் தொடாமலும் அமைக்கலாம்.

* ஒரு இடத்தில் அமைக்கும் கழிவுநீர் தொட்டியை, அந்த இடத்தின் தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் கண்டிப்பாக அமைக்கக் கூடாது.

* கழிவறையில் இருந்து கழிவு நீர்க் குழாய் மூலம், கழிவுநீர்த் தொட்டிக்கு வரும் கழிவுகளில் அடைப்பு ஏற்பட்டால் பழுது பார்க்க அமைக்கப்படும் சிறிய தொட்டியை (Chamber), தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் அமைக்கக் கூடாது.

கழிவறை அமைக்கும் முறை:-

* ஒரு வீட்டில் கழிவறையை வடமேற்கு மூலையில் தான் அமைக்க வேண்டும்

* கழிவறையில் அமைக்கப்படும் கோப்பை (Closet)- யை வடக்கு <---> தெற்கு ஆகத் தான் அமைக்க வேண்டும் 

* கழிவறையின் தரைத் தளம், வீட்டின் தரைத் தளத்தை விட உயரமாக இருக்கக் கூடாது

* மேல்மாடியில் அமைக்கப்படும் கழிவறையின் தரைத் தளம் உயராமல் இருக்க, அதன் தளத்தை 1 அடி பள்ளமாக (Sunken Type) அமைப்பது சிறந்தது

6.. பொருட்கள் வைக்கும் அறை (Store Room) அமைக்கும் முறை

நாம் வசிக்கும் வீட்டில் / கட்டடத்தில் பொருட்கள் வைப்பதற்கென்று தனி அறை (Store Room) அமைப்பது உண்டு. பொருட்கள் வைப்பதற்காக அமைக்கப்படும் அறையை மிகுந்த கவனத்துடன் சரியான முறையில் அமைக்க வேண்டும். வாஸ்து அடிப்படையில் அதை எவ்வாறு அமைக்கலாம் எனப் பார்ப்போம்.

* ஒரு வீட்டிலோ / கட்டடத்திலோ அமைக்கப்படும் பொருட்கள் வைக்கும் அறையை (Store Room) அந்த இடத்தின் தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும்.

* ஒரு வீட்டில் / கட்டடத்தில் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சமையல் அறையில் அதன் தென்மேற்கு மூலையில் பொருட்கள் வைக்கும் அறையை (Store Room) அமைக்க வேண்டும்.

* ஒரு வீட்டில் / கட்டடத்தில் வடமேற்கு பகுதியில் உள்ள சமையல் அறையில் அதன் தென்மேற்கு மூலையில் பொருட்கள் வைக்கும் அறையை (Store Room) அமைக்க வேண்டும்.

* ஒரு வீட்டில் / கட்டடத்தில் எந்த ஒரு மூலையிலும் அதன் மேல் தளத்தைத் தாழ்வாக (Low Roof) அமைத்து, அந்த இடத்தை பொருட்கள் வைக்கும் அறையாக அமைக்கக் கூடாது.

* ஒரு வீட்டிலோ / கட்டடத்திலோ அமைக்கப்படும் பொருட்கள் வைக்கும் அறையை (Store Room) வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்கக் கூடாது.

* ஒரு வீட்டிலோ / கட்டடத்திலோ உபயோகம் இல்லாத பொருட்களைக் கிடங்கில் (Store Room) பாதுகாப்பதைத் தவிர்ப்பது நல்லது.

7. வீட்டில் படுக்கையறை அமைக்கும் முறை

உழைத்திடு, அமைதியாய் உறங்கிடு என்பதற்கேற்ப, மனிதர் ஒவ்வொருவருக்கும் அமைதியான உறக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.

ஒரு மனிதன் அமைதியான உறக்கம் பெற, வாஸ்து படி, வீட்டில் படுக்கையறையைச் சரியான முறையில் அமைத்திட வேண்டும். அது மட்டுமன்றி வீட்டில் உள்ள கணவன் - மனைவி உறவு நல்ல முறையில் இருந்திடவும் ஒரு வீட்டில் படுக்கையறையைச் சரியான முறையில் அமைத்திட வேண்டும். 

வீட்டில் படுக்கையறையை அமைக்கும்போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள்.

* ஒரு வீட்டில் கணவன் - மனைவி படுத்து உறங்கும் அறையை, வீட்டின் தென்மேற்குப் பகுதியில்தான் அமைக்க வேண்டும். வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் கட்டாயம் அமைக்கக் கூடாது.

* குழந்தைகளுக்கு மற்றும் வயது முதிந்ர்தவர்களுக்கு வடகிழக்குப் பகுதியில் படுக்கையறையை அமைத்துக்கொள்ளலாம்.

* படுக்கையறையில் படுக்கையைத் தென்மேற்கு மூலையில்தான் போட வேண்டும்.

* மேலும் படுக்கையறையில் போடப்படும் கழிவறை, வடமேற்கு மூலையில் போட வேண்டும்.

* படுத்து உறங்கும் போது வடக்கு திசையில் கட்டாயம் தலை வைத்து உறங்கக் கூடாது.

8. வா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை!

பொதுவாக வீட்டில் பூஜையறையை ஈசானிய மூலையில் அமைக்க வேண்டும் என்ற கருத்து பலரால் கூறப்பட்டு வருகின்றது. இந்த கருத்து முற்றிலும் தவறான ஒன்று. மேலும் வீட்டில் பூஜையறை அமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிகள்.

ஒரு வீட்டில் பூஜையறையை தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் தான் அமைக்கவேண்டும்.

பூஜையறையை கிழக்கு திசை பார்த்தவாரு அமைக்க வேண்டும்.

பூஜையறையை கட்டாயம் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் அமைக்கக்கூடாது.

9. கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (Sump) அமைக்கும் மூறை

இன்றைய காலகட்டதில் நீரின் பற்றாக்குறை அதிகரிப்பதை அடுத்து, ஒரு வீட்டிற்கோ, ஒரு தொழிற்சாலைக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ தங்களது தேவைக்காக கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பது அவசியமான ஒன்றாகும். வாஸ்து படி ஒரு இடத்தில் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் முறை.

ஒரு இடத்திற்கு கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை வடகிழக்கு பகுதியில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் அமைத்துக் கொள்ளலாம்.

கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஒரு கட்டடத்தின் தாய் சுவரையும், மற்றும் அந்த இடத்தின் மதிற்சுவரையும் ஒட்டாமல் அமைக்க வேண்டும்.

கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் பகுதி தரை தளத்தோடு சமமாக இருக்க வேண்டும்.

த‌விர, ஒரு இடத்தின் வடமேற்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் கட்டாயம் அமைக்ககூடாது. 

10. ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை...

ஒவ்வொரு இடத்திற்கும் அந்த இடத்தை சுற்றிலும் மதிற்சுவர் கட்டாயம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் வேலியாவது அமைக்கவேண்டும். 

மதிற்சுவர் என்பது ஒரு இடத்தினை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், வாஸ்து படி ஒரு இடத்திற்கும் மற்றொரு இடத்திற்கும் பிரிவை உண்டாக்கி அந்த இடத்தை அதன் தனித்தன்மையுடன் செயல்பட வைக்கிறது.

மதிற்சுவர் அமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள்.

ஒரு கட்டடம் கட்டும் முன் அதன் மதிற்சுவரின் நான்கு மூலைகளையும் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்கும்படி சரியாக அமைத்திடவேண்டும்.

11. க‌ட்டட‌த்‌தி‌ன் தலைவாசல் அமைக்கும் முறை!

நம் உடலுக்கு மூளை எவ்வளவு அவசியமான ஒன்றோ, அது போல் ஒரு கட்டடத்திற்கு தலைவாசல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு கட்டடம் எந்த திசையை நோக்கி இருந்தாலும் அதன் தலை வாசலை உச்சத்தில் அமைப்பது அவசியம். 


தலைவாசல் இருக்க வேண்டிய இடங்கள்:

12. வாஸ்து படி குழந்தைகள் படிக்கச் சிறந்த இடம் எது?

இன்றைய நவீன காலகட்டத்தில் கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியமான ஒன்றாகும். ஒரு வீட்டில் குழந்தைகளுக்கென படிக்க ஒரு தனி அறை அமைத்து கொடுக்க வேண்டியது அவசியமாகும். எனவே, இந்த அறையை அமைக்கும் முன் கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிகள்.

ஒரு வீட்டில் குழந்தைகள் படிக்கும் அறையை வடகிழக்கு பகுதியில் தான் அமைக்க வேண்டும் .

இந்த அறையில் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் நிறைய திறப்புகளுடன் (ஜன்னல்கள்) அமைக்க வேண்டும்.

குழந்தைகள் படிக்கும்போது கிழக்கு திசையை நோக்கியவாறு அமர்ந்து படிக்க வேண்டும்.

இந்த அறையில் கனமான பொருட்களை வைக்ககூடாது.

மேலும் இந்த அறையின் வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் அலமாரி, பரண்கள் போன்றவற்றை அமைக்ககூடாது. 

13. மாடிப்படி அமைக்க சிறந்த இடம் மற்றும் அமைக்கும் முறை

ஒரு இடத்திற்கு தலைவாசல் அமைப்பதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறோமோ அது போல்தான் ஒரு கட்டிடத்திற்கு படிக்கட்டு அமைக்கும்போது மிகவும் கவனமாக செயல்படவேண்டும். 

ஒரு இடத்தின் நல்ல செயல்பாடுகளுக்கும் தவறான செயல்பாடுகளுக்கும் ஒரு இடத்தில் அமைக்கப்படும் படிகட்டுகள் பெரும் பங்கு வகிக்கும். 

ஒரு இடதிற்கு உட்புறமாகவும் மற்றும் வெளிப்புறமாகவும் படிக்கட்டினை அமைக்கலாம் அவை வரக்கூடிய இடங்கள்.

ஒரு இடத்திற்கு உட்புறத்தில் படிக்கட்டு அமைக்க விரும்பினால் அதனை தெற்கு அல்லது மேற்கு பகுதி நடுவில் அமைப்பது சிறந்தது.

ஒரு இடத்திற்கு வெளிப்புறத்தில் படிக்கட்டு அமைக்க விரும்பினால் அதனை தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடமேற்கு முலையில் திறந்த வெளி படிக்கட்டு "கேண்டிலிவேர்" (Cantilever) முறையில் மட்டுமே அமைக்க வேண்டும்.

14. கிணறு, ஆழ்துளை கிணறு அமைக்கும் முறை

வாஸ்து விதி படி ஒரு இடத்தில் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு அமைக்கும் முறை:

ஒரு மனை எந்த திசையை பார்த்து இருந்தாலும் அந்த மனையில் கட்டாயம் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு வடகிழக்கு பகுதியில் தான் வரவேண்டும்.

ஒரு இடத்திற்கு பூமி பூஜை செய்த உடன் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு தோண்டுவது மிகவும் நல்லது.

ஒரு இடத்தின் வடகிழக்கு பகுதியில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் கட்டிடத்தின் தாய்சுவரையும், மதில்சுவரையும் ஒட்டாமல் அமை‌க்க வேண்டும்.

ஒரு கட்டிடத்திற்குள் கிணறோ அல்லது ஆழ்துளை கிணறோ கண்டிப்பாக அமைக்ககூடாது.

மேலும் ஒரு இடத்தின் வடமேற்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் கட்டாயம் அமைக்ககூடாது.

15. மின் இணைப்புப் பெட்டி (E.B Box) அமைக்கும் முறை

நாம் வசிக்கும் ஒரு வீட்டில் / கட்டடத்தில் இருள் நீங்கி வெளிச்சத்துடன் இருக்கவும், ஒரு வீட்டை / கட்டடத்தை வண்ண விளக்குகளால் மென்மேலும் அழகுபடுத்தவும் பற்பல இதர பணிகளுக்காகவும் மின் இணைப்பு தேவைப்படுகின்றது.

வாஸ்து அடிப்படையில் மின் இணைப்புப் பெட்டியை (E.B Box) எப்படி அமைக்கலாம் என்று பார்ப்போம்.

* மின் இணைப்புப் பெட்டியை ஒரு வீட்டின் / கட்டடத்தின் அக்னி மூலையான தென்கிழக்குப் பகுதியில் அமைக்கலாம்.

* மின் இணைப்புப் பெட்டியை ஒரு வீட்டின் / கட்டடத்தின் வாயு மூலையான வடமேற்குப் பகுதியிலும் அமைக்கலாம்.

* ஒரு வீட்டின் / கட்டடத்தின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் மின் இணைப்புப் பெட்டி (E.B Box) கட்டாயம் அமைக்கக் கூடாது.

* Inverter - ஐ ஒரு வீட்டின் / கட்டடத்தின் அக்னி மூலையான தென்கிழக்குப் பகுதியில் அமைக்கலாம்.

* Inverter - ஐ ஒரு வீட்டின் / கட்டடத்தின் வாயு மூலையான வடமேற்குப் பகுதியிலும் அமைக்கலாம்.

* ஒரு வீட்டின் / கட்டடத்தின் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதியில் Inverter கட்டாயம் அமைக்கக் கூடாது.

16. அடுக்கு மாடி (Appartment) வீடுகளி‌ன் அடிப்படை வாஸ்து விதிகள்!

அடுக்கு மாடி (Appartment) வீடுகளில் வடகிழக்கு மூலையில் உள்ள வீடுகளுக்கு மட்டும்தான் ஓரளவு வாஸ்து பொருந்தும். 

அடுக்கு மாடி (Appartment) வீடுகளில் பார்க்க வேண்டிய முக்கிய அடிப்படை வாஸ்து விதிகள். 

வடக்கு மற்றும் கிழக்கு பகுதி பொது சுவராக இல்லாமல் திறப்புகளுடன் இருக்க வேண்டும்.

தலை வாசல் உச்சத்தில் இருக்க வேண்டும். 

தாய்சுவரின் எந்த முனையும் உடையாமல் இருக்க வேண்டும்.

கழிவறை வடகிழக்கிலும், தென்மேற்கிலும் கண்டிப்பாக இருக்க கூடாது.

சமையலறை / பூஜையறை வடகிழக்கிலும், தென்மேற்கிலும் கண்டிப்பாக இருக்க கூடாது.

17.நன்மை தரக்கூடிய தெருக்குத்து...

நாம் வாஸ்து படி ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகும். அதில் முக்கியமாக, ஒரு இடத்தை வாங்கும் போது அந்த இடத்தில் ஏதேனும் தெருக்குத்து இருக்கிறதா என்பதை நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும்.


தெருக்குத்து என்பது ஒரு மனைக்கு எதிரில் தெரு இருந்தால் அது தெருக்குத்து எனப்படும். தெருக்குத்து இரண்டு வகைப்படும். அவை, நன்மை தரக்கூடிய தெருக்குத்து, நன்மை தராத தவறான தெருக்குத்து.

நன்மை தரக்கூடிய தெருக்குத்து,

வடகிழக்கு(வடக்கு) தெருக்குத்து.
வடகிழக்கு(கிழக்கு) தெருக்குத்து.
வடமேற்கு (மேற்கு) தெருக்குத்து.
தென்கிழக்கு(தெற்கு) தெருக்குத்து.


Thursday, January 15, 2015

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)


இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது.

பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது. எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். 

முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும். அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும். அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும்தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும். இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று. அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்.. அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்).. அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம். இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது..

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்),குங்குமப்பூ (சேஃப்ரான்), கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது. இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம்.இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க; மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க. 

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அற்புதமான கலவை தான் இந்த தீர்த்தம்.கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த
ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள். அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.

பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். 

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின்  மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது. அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்..அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர். அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம். இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர்..

இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான்..கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது.. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி....

Sunday, January 4, 2015

ஆகாயம்-வெற்றியின்-வாயில்படி


எத்தனை எத்தனை முயற்சி செய்தாலும் எனக்கு மட்டும் வெற்றி கிட்டுவதில்லையே? நான் செய்வதைத் தானே அவனும் செய்கிறான் ஆனால் அவன் மட்டும் வெற்றி பெறுகிறானே என்று ஆதங்கப்படுவரா நீங்கள்? சரி, ஒரே செயலை ஒருவர் செய்யும் போது கிட்டும் வெற்றி, மற்றொருவருக்கு சாத்தியப்படுவதில்லையே எதனால்? இது ஆகாய சக்தியை நாம் கிரகித்துக் கொள்ளும் விதத்தினால்தான் என்கிறார் சத்குரு. அதை வளர்த்துக் கொள்வதற்கு வழியும் சொல்கிறார். ஆகாயம் உங்கள் வசமாகட்டும்!

சத்குரு:

காரணமே இல்லாமல் சில பேர் வாழ்க்கை முழுவதும் அலைகழிக்கப்படுகிறார்கள், இல்லையா? காரணமே இல்லாமல் மற்ற சிலர் அனைத்திலும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகத் தோன்றுகிறார்கள். இதற்கெல்லாம் எந்தவிதமான காரணமும் இல்லை. நம்மை விட பெரியதான அந்த அறிவாற்றலின் ஒத்துழைப்பை, விழிப்புணர்வுடனோ அல்லது விழிப்புணர்வின்றியோ பெற முடிகின்ற உங்களுடைய திறமைதான் காரணம். ஆகாயமே அடிப்படையான சக்தி.

இந்த அறிவாற்றல் உங்களுக்குச் சாதகமாக வேலை செய்கிறதா அல்லது பாதகமாக வேலை செய்கிறதா என்பதுதான் உங்கள் வாழ்க்கையின் தன்மையை முடிவு செய்யும். ஒரு மனிதனை மிகப் பெரிய சாத்தியமாக மாற்றுவதற்கு, நீர், நிலம், நெருப்பு, காற்று, இவற்றோடு ஐந்தாவது மற்றும் மற்ற நான்கை விட மிகப் பெரிய பரிமாணமான ஆகாயம் ஆகியவை எப்படி செயல்படுகின்றன என்பது மிக முக்கியம். இன்றைய நவீன விஞ்ஞானம், ஆகாஷிக் புத்திசாலித்தனம் என்றழைக்கப்படும் ஒரு விஷயத்தை ஏற்றுக் கொண்டுள்ளது; அதாவது வெற்றிடத்துக்கென்று ஒரு அறிவாற்றல் இருக்கிறது. இந்த அறிவாற்றல் உங்களுக்குச் சாதகமாக வேலை செய்கிறதா அல்லது பாதகமாக வேலை செய்கிறதா என்பதுதான் உங்கள் வாழ்க்கையின் தன்மையை முடிவு செய்யும். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவரா அல்லது வாழ்க்கை முழுவதும் அலைகழிக்கப்படப் போகிறீர்களா என்பது அந்த அறிவாற்றலைப் பொறுத்தே இருக்கிறது.

ஆகாயம் – அதை ஐந்தாவது பூதம் என்று சொல்வது சரியல்ல, ஏனென்றால் பிற பூதங்களைவிட உயர்ந்தது. மற்ற நான்குமே அதைச் சார்ந்தே செயல்படுகின்றன. இப்போது நாம் ஒரு வட்டவடிவ கிரகத்தில் இருக்கிறோம். பூமி, சூரிய மண்டலம், இந்தப் பால்வெளி மண்டலம், ஒட்டுமொத்த பிரபஞ்சம் என்று அனைத்துமே ஆகாயம் என்னும் வெளியில்தான் இருக்கின்றன. நீங்களுமே ஆகாயத்தின் பிடியில்தான் இருக்கிறீர்கள்.

டெண்டுல்கர் கூட சதமடித்த பிறகு ஆகாயத்தை அண்ணாந்து பார்ப்பதை கவனித்திருக்கிறீர்களா? அவர் மட்டுமல்ல, ஆதிகாலத்திலிருந்து மனிதன் ஏதாவது ஒரு சாதனையை செய்து முடித்தவுடன், ஆகாயத்தை அண்ணாந்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறான். அவர்களில் சிலர், மேலே இருப்பவனையோ அல்லது வேறு சில கடவுள்களையோ ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து கண்டுபிடிக்க முயற்சி செய்யக்கூடும், ஆனால் மற்ற பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே அங்கு ஏதோ ஒன்று இருக்கிறது என்கிற உண்மை தெரிந்துள்ளது.

ஏதாவது ஒரு சமயத்தில், நீங்கள் ஒரு உச்சபட்ச அனுபவத்தை எட்டுகிறபோது, உங்கள் விழிப்புணர்வில் இல்லாமலேயே உங்கள் உடல், நன்றியுணர்வில் மேல் நோக்கிப் பார்க்கிறது. ஏனென்றால் மனிதனுக்குள் இருக்கும் ஏதோ ஒரு அறிவாற்றலுக்கு அதைப் பற்றிய ஒரு புரிதல் இருக்கிறது.

உங்கள் வாழ்க்கையில் அந்த ஆகாயத்தின் ஒத்துழைப்பை எப்படிப் பெறுவது என்று உங்களுக்குத் தெரிந்தால், பிறகு உங்கள் வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும். உங்களால் கற்பனையே செய்து பார்க்க முடியாத ஒரு அறிவாற்றல் உங்கள் வசமாகும், ஏனென்றால் உங்கள் புரிதலுக்கும், எல்லைக்கும் அப்பாற்பட்ட ஒரு அறிவாற்றல் இங்கு, இப்போது உங்களுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, இல்லையா? அந்த அறிவாற்றல்தான் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஒன்றாக பிணைத்து, பிடித்து வைத்திருக்கிறது; அதுதான் படைப்பின் கருவறையும்கூட. அந்த அறிவாற்றலின் கருவறையில்தான் அத்தனை படைப்புகளும் நிகழ்கின்றன. அது உங்களுக்கு மறுக்கப்படவில்லை. அதைப் பெறுவதற்கான அனுமதி உங்களுக்குத் தடை செய்யப்படவில்லை. ஆனால் அந்தத் திசையில் நீங்கள் பார்க்கவில்லை, அவ்வளவுதான்.

ஏதாவது ஒரு சமயத்தில், நீங்கள் ஒரு உச்சபட்ச அனுபவத்தை எட்டுகிறபோது, உங்கள் விழிப்புணர்வில் இல்லாமலேயே உங்கள் உடல், நன்றியுணர்வில் மேல் நோக்கிப் பார்க்கிறது. நீங்கள் யார் என்கிற அந்தச் சிறிய தன்மைக்குள் நீங்கள் மூழ்கிக் கிடக்கிறீர்கள். உங்கள் உடல், எண்ணம், உணர்ச்சிகள், சுரப்பிகள் எல்லாமே உங்களை ஆக்கிரமித்துள்ளன. அதனால் உங்களுக்கு அப்பாற்பட்டிருக்கும் ஒரு விஷயத்தைப் பார்த்து, அதன்மேல் கவனம் செலுத்துவதைப் பற்றிய எண்ணம் உங்களுக்குத் தோன்றவே இல்லை.

நிறைய அற்புதமான, அதிசயமான விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் மிக ஆச்சரியகரமான முறையில் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன என்றாலும், உங்கள் தலையில் குடைந்து கொண்டிருக்கும் ஒரு சிறிய புழு போன்ற எண்ணம், மற்ற எதையும் கவனிக்க விடாமல் உங்களை ஆட்கொண்டிருக்கிறது. இதுதான் மாயை.

மாயை என்றால் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லாத ஒன்று என்று அர்த்தம் கிடையாது. ஏதாவது அற்புதமான, முக்கியமான விஷயம் நடக்கிறபோது, இதுபோன்ற சிறு விஷயங்கள் உங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. இந்தச் சின்னஞ்சிறு விஷயங்கள் மற்ற அனைத்தையும் விட முக்கியமானவை என்று உங்களை நினைக்க வைக்கின்றன. இதுதான் மாயை.

எனவே ஆகாயத்தின் ஒத்துழைப்பைப் பெற, ஒரு எளிமையான செயல்பாட்டை நீங்கள் செய்யலாம். சூரிய உதயத்திற்க்குப் பிறகு, சூரியன் 30 டிகிரி கோணத்தைக் கடப்பதற்கு முன்னர், வானத்தை ஒரு முறை அண்ணாந்து பார்த்து, இன்று இந்த இடத்தில் உங்களைப் பிடித்து வைத்திருப்பதற்காக அதற்கு நன்றி சொல்லுங்கள்.

சூரியன் 30 டிகிரி கோணத்தைக் கடந்தபிறகு, அன்றைய நாளின் வேறெதாவது ஒரு சமயத்தில், ஒருமுறை வானத்தை அண்ணாந்து பார்த்து, தலை வணங்குங்கள். சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு, மீண்டும் ஒரு முறை ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து, தலை வணங்குங்கள். அங்கிருக்கும் ஏதோ ஒரு கடவுளைப் பார்த்து நீங்கள் தலை வணங்கவில்லை.

உங்களை இன்று, இந்த இடத்தில் பிடித்து வைத்திருக்கும் அந்த வெற்றிடத்தை வணங்குகிறீர்கள். இதைச் செய்து வந்தால், உங்கள் வாழ்க்கை ஆச்சரியப்படத்தக்க வகையில் மாறும். ஒரு நாளைக்கு மூன்று முறை இப்படி விழிப்புணர்வுடன் செய்து வந்தால், உங்களுக்கு அந்த ஆகாயத்தின் ஒத்துழைப்பு கிடைத்துவிட்டால், வாழ்க்கை பல வழிகளிலும் ஒரு மந்திரஜாலத்தைப் போல நிகழும்.

நன்றி ishafoundation.org