Tuesday, September 30, 2014

நல்ல வாழ்கை வாழ


நீங்கள் இங்கே யாருடனும் போர் புரிவதற்காக வரவில்லை.எனவே அடுத்தவரை எதிரியாக நினைக்காதிர்கள் .

இந்த கணத்தில் நீங்கள் உங்களுக்குள் எந்த அளவுக்கு அமைதியாகவும் ,ஆனந்தமாகவும் இருக்கிறீர்களோ......அது மட்டும்தான் உங்கள் வாழ்கையின் தரத்தை நிர்ணயிக்கிறது .

ஒவ்வொரு ஆணும் ,பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளும் வரை அவன் தன்னை உணர வாய்ப்பே இல்லை. ஏனெனில் அவனின் பாதியே பெண்மை தான் .

ஓர் எறும்பு என்ன செய்ய வேண்டுமோ,அதற்குத் தேவையான அறிவு அதற்கு இருக்கிறது .இது ஒவ்வொரு உயிரினத்துக்கும் பொருந்தும் .நமக்கும் பொருந்தும்.

என்ன நடக்கும் என்று மற்ற கிரகங்களை எல்லாம் கவனித்து கணக்குப் போடுவதை விடுத்து ,நீங்கள் வாழும் கிரகத்தை கொஞ்சம் பொறுப்புடன் கவனியுங்கள்.

ஆனந்தத்தை உங்களால் கொடுக்கவும் முடியாது .....வாங்கவும் முடியாது .அதை அனுபவிக்கதான் முடியும். அது எப்போதும் உங்களுக்குள்தான் இருக்கிறது.

மனச் சோர்வு என்பது ,உங்களுக்குள் இருந்து கொண்டே உங்களை உபயோகமில்லாமல் அழித்து விடும் ஒரு ஆயுதம் .

வாழ்க்கையிலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி இருந்தால் நோய்கள் நம்மை எட்டிகூட பார்க்காது .

தவறுகளை ஒப்புகொள்வது என்பது ,எதிரிகளையும் நண்பர்களாக்கி தரும் வரம் போன்றது.எதிர்த்து வீழ்த்த முடியாத பலம்.

வன்முறையை முன்வைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் கோழைகள்.அன்பை முன்வைத்து வாழ்க்கையை வாழ்பவர்களே வீரமானவர்கள்.

உங்களை திருத்திக் கொள்ளாமல் ,வாசலை இடித்து ஜன்னலாக்குவதாலோ ,கழிவறையை இடித்து சமையலறையைக் கொண்டு வருவதாலோ ,வசதிகள் மாறலாம்.ஆனால் வாழ்க்கை மாறிவிடாது .

மனிதனுக்கு அடுத்த கிரகத்தைப்பற்றி ஆயிரம் ஆராய்சிகள் செய்யத் தெரியும்.வசிக்கும் கிரகத்தில் சந்தோசமாக வாழ்வது எப்படி என்று மட்டும் தெரியாது.

விருப்பத்தோடு எதையும் செய்யும்போது , வாழ்க்கை சொர்க்கம் , விருப்பம் இல்லாமல் செய்யும்போது , வழக்கை நரகம்.

உண்டியலில் காசு போட்டு விட்டான் என்பதற்காக கடவுள் ஒருவனை காப்பாற்றவும் மாட்டார். போடாததற்காக இன்னொருவனை தண்டிக்கவும் மாட்டார் .

நன்றாக வாழத் தெரியாத மக்களே ,நன்றாக ஆளத் தெரியாதவர்களை தேர்ந்தேடுகிறார்கள்.

தங்களால் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஆதங்கம் தான் மற்றவரை குறை சொல்வதன் அடிப்படை.

உங்களை விட பலம் குறைந்தவரிடமோ உங்களை எதிர்க்க முடியாதவரிடமோ உங்கள் பலத்தை பிரயோகிப்பதை விட அருவெறுப்பான செயல் எதுவும் இல்லை .

மனிதர்கள் தமக்குள் சமாதானமாக இருந்தால்தான் , உலக சமாதானம் ஏற்படும்.
- சத்குரு ஜக்கி வாசுதேவ் உரைகள்

நன்றி :-http://uma-kannan.blogspot.in/

Wednesday, September 24, 2014

தியானப் பயிற்சி


உடலுக்கு உடற்பயிற்சி –உயிருக்குத் தியானப் பயிற்சி

தியானம் : தி = பேரறிவு

யானம் = பயணம்.

தியானம் என்றால் பேரறிவை நோக்கிய பயணம்.

இறைவனாகிய பேரறிவு, பெரும்சக்தி நம் இதயத்தில் வாழ்கிறது.

அந்தப் பேரறிவை, பேராற்றலை, தியானப் பயிற்சியால் வெளிக் கொணர்ந்து,

பெருக்கி பெரும் வல்லமை பெற்று, பேரானந்தம் (Eternal Bliss) பெற வேண்டும்.

தியானம் என்பது ஒரு

· ஒரு முகப் பயணம் (CONCENTRATION)

· உள் முகப் பயணம் (KNOW THYSELF)

· விழிப்புணர்வுப் பயணம் (AWARENESS)

தியானம் : பலன்கள்

புத்தி கூர்மை கூடுகிறது (INTELLIGENCE ++)

முடிவு எடுக்கும் திறமை வளர்கிறது (DECISION MAKING ++)

மனம் நிம்மதி பெறுகிறது (PEACE OF MIND ++)

மனம் நிறைவு பெறுகிறது (SENSE OF SATISFACTION)

இரத்தக் கொதிப்பு குறைகிறது (REDUCES HIGH BLOOD PRESSURE)
நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகிறது (IMMUNITY ++)

புதுச் சிந்தனை, புதிய ஆற்றல், புதிய கலைத்திறன் வளர்கிறது (DISCOVERY

AND INVENTION ++)

அகப்பொலிவு (தேஜஸ்) பெருகுகிறது (ENLIGHTENMENT OF BODY)
மன நோய்கள் அகல்கிறது (CURES PSYCHOSTS)

இறைநிலை கைகூடுகிறது (ACHIEVE DIVINE STATUS)

அறிவியல் தியானம் செய்முறை.

உடல் தூய்மைஉடல், கை, கால், முகம் அலம்பி தியானத்தை துவங்க வேண்டும்

உணவுவயிறு காலியாக இருக்க வேண்டும்

உகந்த நேரம்சந்தியா வேளை – காலை, மாலை

உகந்த இடம்காற்றோட்டமான அமைதியான சூழல்

ஆசனம்சுகாசனம் அல்லது பத்மாசனம், அர்த்த பத்மாசனம், சித்தாசனம் அல்லது வஜ்ராசனம்

முத்திரைசேஷ்டா முத்திரை அல்லது சின் முத்திரை

யோகம்சகஜ யோகம் – தசைகளை தளர்த்தி நாம் விரும்பியபடி அமர்தல் (RELAXED POSTURE)

உடல் நிலைதலை, கழுத்து, முதுகு மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்க

வேண்டும். முதுகு நிமிர்ந்து உட்கார வேண்டும்.

திசைதெற்கு திசை நோக்கி அமர வேண்டும்

வாய்அங் என்று சொல்லி நாக்கால் அன்னத்தைத் தொட்டு உதடுகளை லேசாக மூடுங்கள்

கண்கள்கண்களை புருவ மத்தியை நோக்கி இயல்பாகக் குவியுங்கள்

(புருவ மத்தியில் ஆன்மா உள்ளது. தியானத்தின் பக்குவ நிலையில் ஆன்ம ஒளி ஜோதியாகத் தெரியும்.)

மனநிலைஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என வாழ்த்துங்கள்
எண்ணக் குவிப்புஞான தீபம் நம் புருவ மத்தியில் இருப்பதாக பாவித்து வேறு

நினைப்பின்றி மனதால் அதைத் துதியுங்கள்

எண்ணங்கள் பின் செல்ல வேண்டாம்நம் எண்ணங்கள் அங்கும் இங்கும் ஓடும். கவலை

வேண்டாம். கஷ்டப்பட்டு எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டாம். மனம் அலைந்தால்

நீண்ட ஒரு பெருமூச்சு விட்டு, பிறகு தியானத்தை தொடருங்கள். எண்ணங்கள்
தானே திரும்பி வரும்.

மூச்சுமூச்சு இயல்பாக விடுங்கள்

தியான காலம்ஆரம்பத்தில் தியான நேரத்தை 5 நிமிடங்கள், பின் 10 நிமிடங்கள்,

பின் 15,பின் 30 நிமிடங்கள் எனப் படிப்படியாகக் கூட்டுங்கள். ஒருமாத

காலம் இத்தியானத்தை தொடர்ந்து செய்தால் ஒரு இனம் தெரியாத மன மகிழ்ச்சி,

மனநிறைவு, மன நிம்மதி, அபரிமிதமான மன ஆற்றல் எல்லாவற்றையும் விட ஒரு புது

மனிதராக நாம் மாறியிருப்பதை உணர்வீர்கள். வாழ்க்கையில் தியானம் ஒரு மறு

பிறப்பு. வாழ்க்கையில் நமது ஒவ்வொரு செயலும், தியானத்தின் பின் அர்த்தம்
உள்ளதாக, ஆனந்தம் தருவதாகத் தெரியும்.

“கண்களிக்கப் புகை சிறிதும் காட்டாதே புருவக்

கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே”

( வள்ளலார் )

பிராணயாமம்.

ஆசனங்கள் அனைத்திற்கும் மூலாதாரம் பிராணயாமம்

பிராணாயமம் = பிராணன் + அயாமம் (உயிர்க்காற்று + கட்டுப்படுத்துதல்)

மூச்சுக்காற்றை இயல்பாகக்

கட்டுப்படுத்தி நிதானமாக கால அளவோடு சுவாசிக்கும் பயிற்சியே
பிராணயாமமாகும்.

குறைவாகவும், மெதுவாகவும் மூச்சுவிடும் ஜீவன்களுக்கு ஆயுட்காலம் அதிகம்.

முயல் 1 நிமிடத்திற்கு 38 தடவை மூச்சு விடுகிறது. அதன்

ஆயுட்காலம் 8 ஆண்டுகள்தான். ஆமை 1 நிமிடத்திற்கு 5 தடவை மூச்சு

விடுகிறது. அதன் ஆயுட்காலம் 155 ஆண்டுகள்.

மனிதன் 1 நிமிடத்திற்கு 18

தடவை சுவாசிக்கின்றான். இதையே 9 முறை சுவாசித்தால் அவன் ஆயுட்காலம்

இரட்டிப்பாகும். கோபம், தாபம், மன அழுத்தம் அதிக உணர்ச்சிகள் உடைய மனிதன்

மிகவும் வேகமாக சுவாசிக்கின்றான். இதனால் அவன் நோய்வாய்ப்படுகிறான்.
மூச்சுப் பயிற்சியால் நோய் நொடி அகலும். ஆயுள் நீட்டிக்கும். பொதுவாக

நாம் உள்ளிழுக்கும் காற்று, மூன்றில் ஒரு பங்கு நுரையீரலைத் தான்

நிரப்புகிறது. மூச்சுப் பயிற்சியால் நுரையீரல் முழுதும் நிரம்பினால்,

பிராணவாயு அதிகம் கிடைத்து மூளை புத்துணர்ச்சி பெறும். ஞாபக சக்தி

மிகும். படிப்பாற்றல், புத்திசாலித்தனம் கூடும். எதிர்ப்புச் சக்தி

அதிகரிக்கும். நுரையீரல் வியாதிகளைத் தடுக்கலாம்.

மூச்சை உள்ளிழுத்தல்பூரகம்4 செகண்டுகள்

மூச்சை தக்கவைத்தல்கும்பகம்16 செகண்டுகள்

மூச்சை வெளியே விடல்ரேசகம்8 செகண்டுகள்

இந்த மூன்று பயிற்சியினுடைய விகிதம் 1 : 4 : 2 இருத்தல்

சாலச் சிறந்தது.

இடது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது இடகலை.

வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து

வெளிவிடுவது பிங்கலை.

இடது மூக்குத் துவாரத்தின் வழி மூச்சை உள்ளிழுத்து, வலது

மூக்குத் துவாரத்தின் வழி வெளிவிடுவது சுழுமுனை.

இடகலை = குளிர்ச்சி ; பிங்கலை = சூடானது. சுழுமுனை

பிராணவாயுவை அதிகம் நுரையீரலில் தக்க வைக்கும். காரணம் இடது

நாசியிலிருந்து சுவாசப் பையின் தூரம் 16 அங்குலம். வலது நாசியிலிருந்து

சுவாசப்பையின் தூரம் 12 அங்குலம். இடது நாசியால் இழுத்து வலது நாசியால்
வெளிவிடும் பொழுது 4 அங்குலம் மூச்சு (பிராணவாயு அதிகம் உள்ள மூச்சு)

நுரையீரலில் உள் தங்குகிறது. இது இரத்தத்தை சுத்தி செய்யும். பிராண

சக்தியை அதிகரிக்கும்.
பிராணாயாமம் அட்டாங்க யோகத்தின் நான்காம் யோகமாகும்.
(1) பஸ்திரிகா பிராணயாமம் ; செய்முறை.

தியானம் போல் இடம், ஆசனம், மற்றைய நியதிகள் இருக்கட்டும்.

பிராணயாமம் செய்யும் பொழுது மூச்சோடு மனம் ஒன்ற வேண்டும்.

மூச்சை வெளிவிடும் பொழுது வயிறு மட்டும் சுருங்க வேண்டும்.

மூடிய கண்கள் மூக்கின் நுனியைப் பார்த்தபடி இருக்கட்டும்.

மூச்சை இயல்பாக விட வேண்டும்.
வலது கைப் பெருவிரலால் வலது நாசியை அடைத்து இடது நாசியால்

மூச்சை முடிந்தவரை உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல் வலது கை மோதிர விரலால்

இடது நாசியை அடைத்து வலது நாசியின் வழியாக மூச்சை வெளிவிடவும். பின் வலது

நாசி வழியாக மூச்சை உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல், வலது நாசியை அடைத்துக்

கொண்டு மூச்சை இடது நாசி வழியாக வெளிவிடவும். இப் பயிற்சியை 5-10 தடவைகள்

செய்தால் போதுமானது.
(2) கபாலபதி பிராணயாமம் ; செய்முறை.

இரண்டு மூக்குத்துவாரங்களிலும் மூச்சை வேகமாக

உள்ளுக்கிழுத்து நிறுத்தாமல் உடனே அதிவேகமாக வெளிவிடவும். இப் பயிற்சியை

5-10 தடவைகள் செய்யவும்.
(3) உஜ்ஜயி பிராணயாமம்.

இரண்டு மூக்குத் துவாரங்களிலும் ஒரே நேரத்தில் மூச்சை

முடிந்தவரை உள்ளுக்கிழுத்து (4 செகண்டுகள்) பின் அப்படியே மூச்சை உள்

நிறுத்தி (16 செகண்டுகள்) பின் நிதானமாக மெதுவாக வெளிவிடுதல் வேண்டும் (8

செகண்டுகள்).
ஆசிபா (ABS) பயிற்சி

ஆசனவாய், சிறுநீர்ப்பை, பாலியல் உறுப்புகள் அனைத்தும் ஒரே
நரம்பினால் எஸ் – 2 (S 2 Segment) இயக்கப்படுகிறது. ஆசனவாயை சுருக்கி,

விரிவடையச் செய்யும் பயிற்சியால் அந்த நரம்பு வலுவடைகிறது. பயிற்சியால்

பெண்கள் பாலியல் உறுப்புகள் கட்டுப்பாடும், கர்ப்பப்பை வெளித்தள்ளுதல்

(Uterine Prolapse) தடுப்பும் பெறுகிறார்கள். சிறுநீரை அடக்குதல் சுலபமாக

சாத்தியமாகிறது. ஆண்களுக்கு நீர்த்தாரை கட்டியால் (Prostate) ஏற்படும்

முதுமைக்கால நீர்க்கசிவு, கட்டுப்பாடின்மை குறைகிறது. விந்துக் கசிவும்
கட்டுப்படுத்தப்படுகிறது.

ஆசிபா செய்முறை :

கால்களை கொஞ்சம் அகல விரித்து, நின்று கொண்டோ அல்லது

உட்கார்ந்து கொண்டோ ஆசனவாயை மெதுவாகச் சுருக்கி, பின் விரித்து 10 தடவை

பயிற்சி செய்யவும். இப் பயிற்சி செய்யும் பொழுது, மனம் பயிற்சியில் கவனம்

செலுத்த வேண்டும். பயிற்சி கஷ்டப்படாமல் இயல்பாக செய்யப்பட வேண்டும்.
பயிற்சி முடிவில் உஜ்ஜயி பிராணயாமம் செய்யவும். கைகளைக் கும்பிடுவது போல்

மேல் தூக்கி மூச்சை இரண்டு நாசிகளாலும் நாலு செகண்டுகள் உள்ளிழுத்து

பதினாறு செகண்டுகள் நிறுத்தி பின் எட்டு செகண்டுகள் மெதுவாக வெளிவிடவும்.
ஆசிபா பயிற்சியை ஐந்து முறையும் மாலையில் ஐந்து முறையும் செய்யவும்.

ஆ : ஆசனவாய். சி : சிறு நீர்ப்பை: ப : பாலியல் உறுப்புகள்

A : Anus, B : Bladder, S

: Sexual organs.

எல்லாப் பயிற்சிகளுக்கும் பொது நியதிகள்:

1. பயிற்சிக்காலம் முழுதும் வயிறு காலியாக இருக்க வேண்டும்.

2. காற்றோட்டமான இடத்தில் பயிற்சி செய்தல் நலம்.

3. பயிற்சியில் மனம் லயிக்க வேண்டும். (ஒருமை உணர்வு)

4. முக மலர்ச்சியுடன் பற்றுவைத்து பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

5. மூச்சை இயல்பாக விட வேண்டும்.

6. இரண்டு பயிற்சிகளுக்கு நடுவில் குறைந்தது 5 நிமிட இடைவெளி தர வேண்டும்.

7. பயிற்சி தொடங்குமுன் தசைகளை தளர்த்தி இயல்பாக மூச்சுவிட வேண்டும்.

8. மூச்சுப் பயிற்சியின்போது இருதய, நுரையீரல் நோயாளிகள் அதிக நேரம்

மூச்சை இழுத்து, உள்நிறுத்தி ‘தம்’ கட்டுவது தவறு. ஆபத்தாகும்.

9. பயிற்சி முடிந்ததும் உடனே எழுந்து வேறு வேலை செய்வது நல்லதல்ல.

குறைந்தது பத்து நிமிடம் ஓய்வு தேவை. விரும்பினால் சாந்தி யோகம்

செய்யலாம்.

10.பயிற்சிகள் முடிந்த பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

11.இளைஞர்கள் விளையாடுவதற்கு முன் இப் பயிற்சிகளை ஒரு ஆரம்ப

தயார் நிலை (Warm up) பயிற்சியாக செய்வது சிறந்த பலனைத் தரும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


அற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா

அற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா!

கர்ம வினை


குறிப்பு 1 : இந்தக் கட்டுரையை எந்த மதத்தினரும் படிக்கலாம். மதம் வேறு என்றாலும் கூற வரும் கருத்து அனைவருக்கும் உகந்ததே.

குறிப்பு 2 : நாத்திகர்களுக்கான கட்டுரை அல்ல. தொடர்வது அவரவர் விருப்பம்.

இந்து மதம் பழமையான மதம் மட்டுமல்ல யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாதது. இவர் தான் தலைவர், குரு, கடவுள், உருவாக்கியவர் என்று எந்த அடையாளமும் இல்லாதது. யாரும் யாரையும் கட்டுப்படுத்த இந்து மதத்தில் முடியாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலர் உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டு இருந்தாலும், அவர்கள் கூறுவதை யாரும் காது கொடுத்து கேட்பதில்லை, கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை காரணம் இங்கு யாரும் யாருக்கும் கட்டளை இட முடியாது. இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது. இந்து மதத்தில் அவரவர் நிர்ணயிப்பதே அவரவர்க்கு கட்டுப்பாடுகள். Image Credit – Pagecovers.com

ஒரு இடத்தில் கட்டுப்பாடு இருந்தால், அதே போல இன்னொரு இடத்தை உருவாக்கி அந்தக் கட்டுப்பாட்டை மீறலாம் யாரும் வந்து ஏன் செய்கிறாய் என்று கேட்க முடியாது, அது அநாகரீகமாக இல்லாத வரை. புறக்கணிக்கலாம், எதிர்ப்புக் குரல் எழலாம் ஆனால், எதையும் தடுக்க அதிகாரமில்லை.

சொல்லப்போனால் உலகில் உள்ள மதங்கள் அனைத்துமே நல்ல விசயங்களையே போதிக்கிறது நாம் தான் பிரச்சனையான விசயங்களை / கட்டுப்பாடுகளை புகுத்தி அனைவருக்கும் சிக்கலை ஏற்படுத்துகிறோம்.

பண்டைய காலம் தொட்டே இந்து மதத்தில் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு மறைமுகக் காரணம் இருக்கும். நேரடியாக அதைப் பார்க்கும் போது மூட நம்பிக்கை போல தோன்றினாலும் அதன் உண்மையான பின்னணி காரணம் ஏதாவது ஒரு அறிவியல் உண்மையைக் கொண்டு இருக்கும். இது தெரியாத வரை நமக்கு அது மூட நம்பிக்கையாகத் தோன்றும். ஒரு சில நல்ல விசயங்களை செய்யக் கூறினால் செய்ய மாட்டார்கள் ஆனால், அதே அதற்கு ஏதாவது கட்டுக்கதையைக் கூறினால், அதற்காக பயந்து கொண்டு அதைச் செய்வார்கள். புதிதாக பார்க்கிறவர்களுக்கு அது மூட நம்பிக்கையாக இருக்கும். ஆராய்ந்து பார்த்தால், அதில் உள்ள அறிவியல் உண்மை புலப்படும். தற்போதைய விஞ்ஞானிகள் இத்தனை தொழில்நுட்பத்தை வைத்து கண்டறியும் பல விசயங்களை நம் முன்னோர்கள் முன்பே கண்டறிந்து இருக்கிறார்கள்.

இந்து மதத்திற்கு என்று ஒரு பெரிய சிறப்பு உள்ளது. அது தான் Flexibility. காலத்திற்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக்கொண்டே இருக்கும். எந்த புதிய விசயங்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டது. தண்ணீர் போல இடத்திற்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக்கொள்ளும். உதாரணத்திற்கு முற்காலத்தில் இருந்த பிற்போக்குத் தனங்கள் தற்போது இல்லை அல்லது குறைந்து விட்டது. இதைத் தான் செய்து ஆக வேண்டும் என்று கட்டுப்படுத்த யாருமே இல்லாதது தான் இந்த Flexibility க்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். இந்து மதத்தை சார்ந்தவர்கள் பெரும்பான்மையோர் தீவிர மதப் பற்றாளர்கள் கிடையாது. இதன் காரணமாகத் தான், இந்து மதப் பற்றாளர்கள் குரல் கொடுக்கும் போது பெரிய அளவில் மக்களிடம் இருந்து ஆதரவு கிடைப்பதில்லை. தற்போதைய சூழ்நிலையில் இது கொஞ்சம் மாற்றம் கண்டு வருவதாக அறிகிறேன்.

இந்து மதம் என்பது மதம் என்பதையும் தாண்டி ஒரு வாழ்வியலாகத் தான் கருதப்படுகிறது. அதாவது மக்கள் கோவிலுக்கு வருகிறார்கள் என்றால் அதற்கு பூ, தேங்காய், மாலை, நெய், பால், சந்தனம் etc என்று நிறைய வாங்குகிறார்கள். இதனால் இது தொடர்புடைய வியாபாரம் நடைபெறுகிறது. இதனால் நல்லதோ கெட்டதோ பலரும் இதனால் பயன் பெறுகிறார்கள். இது சம்பந்தப்பட்ட விவசாயத்தில் உள்ளவர்கள் பலன் பெறுகிறார்கள். தற்போது இது கமர்சியலாகி விட்டாலும், முன்பு இது போன்ற விசயங்களை மனதில் வைத்தே இவை உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். பலருக்கு இந்தக் காரணிகள் தான் வாழ்க்கை கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.

பண்டிகைகள், திருவிழா என்று பல வருவது அனைத்து மக்களும் கூடவும், சந்தோசத்தை பகிரவும், குடும்பமாக இணையவும், இதன் மூலம் பலரின் வியாபாரம் விரிவடையவும் என்று செல்கிறது. இது மதம் என்ற அளவிலும் பார்க்கலாம் அல்லது அதன் மூலம் நடக்கும் குடும்பக்களுக்கிடையேயான உறவுகளை பலப்படுத்தும் ஒரு காரணியாகவும் பார்க்கலாம். பார்ப்பவரின் எண்ணங்களைப் பொறுத்தது.

தற்போது தான் தலைப்பிற்கே வருகிறேன். கர்மவினை பற்றிக் கூறும் போது இந்து மதம் பற்றிய சிறு முன்னுரை இருந்தால், நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் கூறியது தான் மேலே இருப்பவை. சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், இந்து மதம் காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் “FLEXI” மதம்.

இந்து மதத்தை (உதாரணத்திற்கு) இரு வகையாகப் பிரிக்கலாம் அதாவது காலங்கள் மாறினாலும் அடிப்படைத் தத்துவங்கள், அறநெறிகள், நம்பிக்கைகள் போன்ற மாறாத விசயங்கள். இன்னொரு வகை “FLEXI மதம்” அதாவது காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டே இருப்பது. இந்த முதல் பிரிவில் தான் “கர்மவினை” என்பது வருகிறது. இதிலும் யாரோ தனிப்பட்ட ஒருவர் கூறியதை அனைவரும் பின்பற்றுவதில்லை, பல அறிஞர்கள் தங்கள் அனுபவத்தின் வாயிலாகக் கூறியதை நம் முன்னோர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இது தான் என்று யாரும் அறுதியிட்டுக் கூறவில்லை என்றாலும், இது தான் நமது இந்து மதத்தின் நம்பிக்கை என்றாகி விட்டது. பல தத்துவங்கள், அறிஞர்களின் தொகுப்பே இந்து மதம். கர்மவினை பற்றி பலர் கூறி இருந்தாலும் “விவேகானந்தர்” கூறியது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது என்று கூறலாம்.

கர்மவினை என்பது இந்து மதத்தில் மட்டுமே உள்ளது. பலரின் தெரியாத / புரியாத கேள்விகளுக்கு இது விடை கூறுகிறது ஆனால், கூறப்படும் விடையை ஏற்றுக்கொள்ள சிரமமாக இருக்கிறது. இதற்குக் காரணம் நம்மால் அதை ஜீரணிக்க முடியாதது தான்.

முன் குறிப்பிலேயே கூறி இருந்தாலும், திரும்பவும் ஒருமுறை நினைவு படுத்துகிறேன். பின்வருபவை கர்மவினை / இந்து மதக் கோட்பாடுகள் / ஆத்மா / மறுபிறவி / பாவ புண்ணியம் போன்ற ஏதாவது ஒன்றில் நம்பிக்கை உள்ளவர்களுக்குத் தான். எனக்கும் பல விசயங்களுக்கு பதில் தெரியாது ஆனால், அதற்கு எங்கோ பதில் இருக்கும் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.

இந்து மதத்தில் தான் “ஏன்? எதற்கு? எதனால் நடக்கிறது?” என்பதற்கு பதில் இருக்கிறது. அந்த பதில் தான் “கர்மவினை”. எந்த மத்தினராக இருந்தாலும், எல்லோருக்கும் சில பொதுவான கேள்விகள் இருக்கும். “நல்லவனாக இருக்கிறான் ஆனால், ஏன் அவன் கஷ்டப்படுகிறான்? அவர் எந்த தவறும் செய்யவில்லையே…! பின் ஏன் அவருக்கு இவ்வளவு சிரமம். நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்தது இல்லையே ஏன் எனக்கு இவ்வளவு துன்பம்? அவன் அவ்வளவு அநியாயம் பண்ணுறான் ஆனால், சுகமாக இருக்கிறானே! எப்படி? ஊரையே அடித்து உலையில் போட்டு இருக்கிறான் ஆனால், அவன் நல்லாத்தானே இருக்கிறான்!” இந்தக் கேள்விகள் இல்லாத மனிதர் இந்த உலகிலேயே இருக்க முடியாது

“கர்மவினை / ஆத்மா / மறுபிறவி / பாவ புண்ணியம்”. பற்றி. 

இந்து மத தர்மப் படி ஒருவன் நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் அதற்குண்டான பலனை அவன் பெற்றே ஆக வேண்டும் என்பது நியதி. இந்தப் பிறவியில் இல்லை என்றாலும் அடுத்த / அதற்கடுத்த பிறவியில் அதை அவன் அடைந்தே தீர வேண்டும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பதை காண வாய்ப்புக் கிடைக்கும். தற்போது இங்கே மறுபிறவி என்பது வருகிறது. இந்த மறுபிறவி என்பது எத்தனை இருக்கும் என்பது பற்றி எனக்குத் தெரியாது / புரிந்து கொள்ள அனுபவமில்லை.

ஒருவர் ஒரு பிறவியில் இறந்தால் அழிவது அவரது உடல் மட்டுமே, ஆத்மா அல்ல. பாவ புண்ணியங்களைக் கொண்ட அந்த ஆத்மா தன்னுடைய கர்மவினைகளை (நல்லது கெட்டதை) அனுபவிக்க சரியான உடல் கிடைத்தால் அதில் புகுந்து விடும். நான் கூறுவது ஆத்மா, ஆவி அல்ல . உதாரணத்திற்கு அந்த ஆத்மா அவரின் தலைமுறையில் யாருடைய பிறப்பு தன் கர்ம வினைகளை அனுபவிக்க பொருத்தமாக உள்ளதோ அவரின் உடலில் இணைந்து விடும். எனக்கு இதில், ஆத்மா அவரின் தலைமுறை மக்களிடையே மட்டுமே போகுமா அல்லது வேறு சம்பந்தமில்லாத ஒருவரின் உடலுக்கும் போகுமா என்பது பற்றி எனக்கு கேள்விகள் / சந்தேகம் இருக்கிறது.

நீங்கள் நடிகர் திலகம் அவர்கள் நடித்த “கர்ணன்” படம் பார்த்து இருப்பீர்கள். அதில் கர்ணனை அனைவரும் தாக்கியும் அவர் சாக மாட்டார் காரணம், அவர் செய்த தர்மங்கள் / புண்ணியம். அவரை அழிக்க வேண்டும் என்றால், அவரிடம் உள்ள புண்ணியம் அனைத்தும் தீர வேண்டும். இதற்காகத் தான் கிருஷ்ணர் அந்தணர் வேடம் பூண்டு கர்ணனிடம் இருக்கும் புண்ணியத்தை யாசகம் கேட்பார். தன்னுடைய புண்ணியங்களை கர்ணன் தாரை வார்த்துக்கொடுத்ததும் அடுத்த தாக்குதலில் இறந்து விடுவார். இந்த விசயம் ஓரளவு உங்களுக்கு கர்மவினை / பாவ புண்ணியம் பற்றி புரிந்து கொள்ள உதவும் என்று நினைக்கிறேன்.

தற்போது நீங்கள் சிரமம் அனுபவித்துக்கொண்டு இருந்தால், அது போன பிறவியின் வினைப்பயனாகத் தான் இருக்க வேண்டும். இவ்வாறு கூறுவதை ஏற்றுக் கொள்வது என்பது சிரமமான ஒன்று தான். இதை Just like that மறுத்து பேசி விட முடியாது. இதற்காக நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும். பழைய பின்னனிகளை தேடிப் பார்க்க வேண்டும். நம் முன்னோர்கள் செய்த தவறுகள் என்ன என்று தேடித் பார்த்தால் ஒருவேளை உங்களுக்கு இதற்கு விடை கிடைக்கலாம்.

உதாரணத்திற்கு என்னுடைய முன்னோர்கள் அநியாய வட்டிக்கு மக்களிடம் பணத்தைப் பெற்று அதிகளவில் நிலங்களை வாங்கிப் போட்டார்கள். “பணம் தேவைப் படுவதால் தானே மக்கள் வருகிறார்கள் நான் ஒன்றும் ஏமாற்றவில்லையே!” என்று நீங்கள் நினைத்தால்…! அது தவறு. நம்மிடையே முடியாமல் தான் வருகிறார்கள் ஆனால், நாம் அதை சாதமாகப் பயன்படுத்திக்கொண்டு அநியாய வட்டி வசூலித்தால், அதுவும் தவறே. எங்கள் விசயத்தில் நடந்தது அநியாய வட்டி. இதன் காரணமாக என்னுடைய அப்பா கடன் பிரச்சனையால் வட்டி கட்டியே எங்கள் நிலம் அனைத்தையும் இழக்க வேண்டி வந்தது. அதாவது “வட்டியில் சம்பாதித்த பணம் வட்டி கட்டியே போகும்” என்ற முன்னோர் வாக்கிற்கேற்ப.

கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என்று வாங்கும் நபர்கள், தற்போது புண்ணியத்தின் பலனால் பெரும் பணக்காரராக இருக்கலாம் ஆனால், அவர்களின் இறுதிக் காலத்தில் அல்லது அவரது அடுத்த தலைமுறையை கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், பெரும் துன்பத்தில் இருப்பார்கள். உங்கள் கிராமங்களிலேயே உங்கள் தாத்தா பாட்டி அம்மா அப்பாவிடம் கேட்டுப் பார்த்தீர்கள் என்றால் பல கதைகளைக் கூறுவார்கள். பலரின் சாபம், வயிறெரிந்து கொடுக்கப்படும் பணம் அவர்களை நிம்மதியாக வாழ விடாது.

சரிங்க! நான் போன பிறவியில் நிறைய பாவம் செய்து விட்டேன் போல அதனால் சிரமப்படுகிறேன் என்று வைத்துக்குங்க… இந்தப் பிறவியில் நல்லது செய்கிறேன் எனவே, இந்த வினைப்பயனில் இருந்து தப்பித்துக்கொள்ளலாமா! என்று கேட்டால்…

முடியாது. நீங்கள் செய்த பாவத்தின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும் அதில் இருந்து நீங்கள் எக்காலத்திலும், எத்தனை பிறவி எடுத்தாலும் தப்பிக்கவே முடியாது ஆனால், இந்த தாக்கத்தின் அளவைக் குறைக்க முடியும்.

எப்படி?

கர்மவினை நீங்கள் செய்த தவறுக்கு எப்படி தண்டனை / சிரமம் கொடுக்கிறதோ அதே போல நீங்கள் செய்யும் நல்லதுக்கும் உங்களுக்கு அது நன்மை செய்தே ஆக வேண்டும். இது நியதி. இதில் இருந்து கர்ம வினை கூட தப்பிக்க முடியாது. அதாவது “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை “மெய்வருத்தக் கூலி தரும்” என்பதும். அதே விதி இங்கேயும் பின்பற்றப் படுகிறது. நீங்கள் கடந்த பிறவியில் நிறைய பாவம் செய்ததால், இந்தப் பிறவியில் நீங்கள் பல சோதனைகளை சந்திக்க வேண்டும் அதில் இருந்து தப்பிக்கவே முடியாது ஆனால், நீங்கள் நல்ல விசயங்கள் பல செய்வதன் மூலம் இதன் கடுமையான தாக்கத்தில் இருந்து கொஞ்சம் இளைபாறுதல் பெறலாம். புரியும் படி கூறுவதென்றால், பாலைவனத்தில் நடக்கும் போது கொஞ்சம் ஜில்லுனு ஜுஸ் கிடைத்த மாதிரி ஆனால், நீங்கள் வெயிலில் தான் நிற்க முடியும், அதை தவிர்க்க முடியாது.

எப்படி?

நீங்கள் செய்த நல்ல விசயத்திற்கான பலனை கர்மா கொடுத்தே ஆக வேண்டும். நல்ல விசயம் என்பது ஒருவருக்கு உதவி செய்வது மட்டுமே அல்ல, உங்களின் நேர்மை, ஒருவரின் மிக நெருக்கடியான நேரத்தில் செய்யப்படும் சிறு உதவி, மற்றவர்களை வாய்ப்புக் கிடைத்தும் ஏமாற்றாமை, அடுத்தவரின் துயரத்தில் பங்கெடுப்பது etc ஆகவே, இதற்கான நற்பலனை கர்மா அவ்வப்போது கொடுக்கும் ஆனால், உங்களை சிரமப்படுத்தியே கொடுக்கும்.

எப்படி?

உங்களுக்கு ஒரு முக்கியப் பிரச்சனைக்காக பெரும் பணம் தேவைப்படுகிறது ஆனால், கிடைக்காது. ஏன்? வினைப்பயன். எனவே நீங்கள் பணத்தை திரட்ட படாதபாடு படுவீர்கள். யாரிடம் எல்லாமோ கேட்பீர்கள் ஆனால், கதறினாலும் கிடைக்காது. கடைசி நேரத்தில் எங்கு இருந்தோ உங்களுக்கு உதவி வரும்.

எப்படி?

அது நீங்கள் இந்தப் பிறவியில் செய்த நல்ல செயலுக்கான பலன். இவ்வளவு கஷ்டப்பட்டது சென்ற பிறவிக்கான வினைப் பயன். அதாவது கர்மாவால், நீங்கள் நல்லது பல செய்து இருந்தாலும் உங்களுக்கு சிரமம் இல்லாமல் ஒரு விசயத்தை நடத்திக்கொடுத்து விட முடியாது. ஆனால், சிரமப்படுத்தி இறுதியில் உதவி செய்து விடும், உங்களின் மிச்சம் இருக்கும் புண்ணியத்திற்கு ஏற்ப.

என்னுடைய வாழ்க்கையில் இது போல நிறைய நேர்ந்து இருக்கிறது. முதலில் எனக்குப் புரியவில்லை. பின்னர் ரொம்ப ஆராய்ந்து / என் அப்பாவிடம் விவாதம் செய்து காரணத்தைக் கண்டு பிடிப்பேன். இது எதனால் எனக்கு நடந்தது? ஏன் இன்னும் நடக்கிறது? நாம் இதில் இருந்து தெரிந்து கொண்டது என்ன? என்பன போன்றவை. நான் வாழ்க்கையில் ரொம்பக் கஷ்டப்பட்டு இருக்கிறேன் ஆனால், ஓரளவு நேர்மையாகவே நடந்து கொண்டுள்ளேன் (என்று நினைக்கிறேன்). இதனால் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், இனி என்னால் தாக்குப் பிடிக்க முடியாது என்ற இக்கட்டான சூழ்நிலையில், எனக்கு எங்கிருந்தாவது ஒரு உதவி வரும். கடந்த பிறவியில் ஃப்ராடாக இருந்து இருப்பேன் போல உதவி கிடைக்கும் என்று நான் கற்பனையில் கூட நினைத்து இருக்க மாட்டேன் ஆனால், கிடைக்கும். அது தான் கர்மா.

இதன் காரணமாகவே எனக்கு எந்தக் கஷ்டம் வந்தாலும் கவலைப்பட மாட்டேன் (மன அழுத்தம் இருக்கும் அதை தவிர்க்க முடியாது) ஏனென்றால், அனைத்தும் முயற்சி செய்து இனி என்னால் எதுவுமே செய்ய முடியாது என்ற இக்கட்டான நிலை வரும் போது எனக்கு எப்படியும் உதவி கிடைக்கும். இது பொய்யில்லை 100% உண்மை.

இது உங்கள் வாழ்க்கையிலும் நிச்சயம் நடந்து இருக்கும் (கடைசி நேர உதவி) ஆனால், பிரச்சனை முடிந்ததால், ஏன் என்று நீங்கள் யோசித்து இருக்க மாட்டீர்கள். தற்போது, இது போல நடந்தது எப்படி என்று யோசித்துப் பாருங்கள், ஒருவேளை உங்களுக்கு அதற்கான விடை கிடைக்கலாம். ஒருவேளை யாருக்காவது நீங்கள் இக்கட்டான சூழ்நிலையில் உதவி புரிந்து மறந்து இருக்கலாம். நீங்கள் மறக்கலாம் ஆனால், கர்மா மறக்காது. உதவியை மட்டுமல்ல நீங்கள் செய்த தவறுகளையும் .

எவ்வளவு கூறினாலும் அனைவருக்கும் இருக்கும் சந்தேகங்கள் / கோபங்கள் எனக்கும் இருக்கிறது. சிறு குழந்தை சிரமப்படுகிறதே, அரசியல்வாதிகள் அநியாயம் செய்கிறார்களே, பெண்கள் வன்புணர்விற்கு ஆளாகிறார்களே, அப்பாவிகள் கொலை செய்யப்படுகிறார்களே, நல்லவர்கள் ஏமாற்றப்படுகிறார்களே, நல்லதுக்கே காலம் இல்லாமல் இருக்கிறது இதற்கெல்லாம் என்ன சொல்லப்போகிறீர்கள்? என்று நீங்கள் நினைக்கும் அதே கோபம் கலந்த விடை தெரியாத கேள்விகள் எனக்கும் உள்ளது.

தற்போது அநியாயம் செய்து கொண்டு இருந்தும் சுகமாக இருப்பவர்கள் கடந்த பிறவியில் நிறைய நல்லது செய்து இருக்கலாம். அந்த புண்ணியத்தின் பலனைத்தான் தற்போது அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் புண்ணியம் தீர்ந்து போனால் அடுத்த “நொடியே” கடும் சிரமத்தில் வீழ்வார்கள். இதை நாம் கண்ணால் காணவும் வாய்ப்பு இருக்கிறது, இல்லாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது ஆனால், வினைப்பயனை அனுபவிக்காமல் தவறு செய்தவர்கள் தப்பிக்கவே முடியாது.

காரணமில்லாமல் காரியமில்லை. நமக்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இவ்வாறு கூறுவதை கேட்கும் போது ஜீரணிக்க சிரமமாக இருக்கிறது ஆனால், இது தான் கர்மவினைப் படி உண்மை. நமக்குத் தான் அதற்கான விளக்கம் கிடைப்பதில்லை. அந்த விளக்கம் தான் கர்மவினை ஆனால், இதை ஏற்றுக்கொள்ள மனது மறுக்கிறது.

நான் முன்னரே கூறியபடி சில விசயங்களுக்கு நமக்கு பதில் கிடைக்கிறது. சிலவற்றிக்கு பதில் கிடைக்கவில்லை என்பதாலே நாம் கோபம் அடைகிறோம். இது போன்ற சிரமமான கேள்விகளுக்கு ஞாநிகளுக்கு தான் பதில் தெரியும். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு அல்ல. நான் கூறுவது நிஜ ஞானிகள், சாதுக்கள் பற்றி, டுபாக்கூர் கார்பரேட் சாமியார்கள் அல்ல. நான் கர்மவினை பற்றிக் கூறிய சில விசயங்கள் ஒரு சிலருக்கு புதிதாக இருக்கலாம் காரணம், அனுபவம் இல்லாதது. எனக்கு வாய்ப்புக் கிடைத்து சிலது புரிந்து கொண்டது போல, அடுத்த கட்டத்திற்கான கேள்விகளுக்கான பதில் அந்த அளவிற்கு அனுபவம் பெற்றவர்களுக்கு / ஞாநிகளுக்குத் தான் தெரியும். இதிலும் L1 L2 L3 L4 சப்போர்ட் போல இருக்கிறது .

ரஜினி அடிக்கடி கூறுவார் “சில கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டு இருக்கிறேன்” என்று. முன்பு இதை கேட்கும் போது எனக்கு கிண்டலாகத் தான் தெரிந்தது ஆனால், இதெல்லாம் புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் போது தான் ரஜினி கூறியது எவ்வளவு உண்மை என்று புரிந்தது. இது போல தனக்குப் புரியாத விசயங்களுக்குத் தான் விடை தேடி இமயமலையை சுற்றிக்கொண்டு இருக்கிறாரோ என்னவோ!

மேற்கூறியது எதுவுமே நான் படித்து தெரிந்து கொண்டதல்ல. வாய்ப்புக் கிடைக்கும் போது எனக்கு என் அப்பா கூறியது. என் அப்பா கூறியதை நான் அனுபவங்களில் மேம்படுத்திக் கொண்டு இருக்கிறேன், அவ்வளவு தான். எனக்கும் ஆயிரம் விடை தெரியாத கேள்விகள் உள்ளது. இதை எல்லாம் நான் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் நான் இங்கே இருக்க முடியாது. இதற்குண்டான வழியில் தான் இருக்க முடியும். எனவே நமக்கு வாய்ப்புக் கிடைக்கும் போது காரணங்களை தெரிந்து கொள்ளலாம் / தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

விவேகானந்தர் எழுதிய 1920 – 1930 ல் வெளிவந்த “கர்மவினை” என்ற புத்தகத்தை எனக்கு என் அப்பா கொடுத்தார். அதன் அருமை தெரியாமல் எங்கோ தொலைத்துவிட்டேன். இன்று வரை அதற்காக வருத்தப்படுகிறேன். தேடினால் இதனுடைய மறுபதிப்பு கிடைக்கலாம் இருந்தாலும், அந்த பழைய புத்தகத்தின் மதிப்பு தனி தானே! ஒருவேளை இதற்கும் ஏதாவது காரணம் இருக்கலாம் நான் தான் கண்டு பிடிக்க வேண்டும்.

நாம் நம் கடமையை சரியாகச் செய்ய வேண்டும், நம்முடைய தவறுகளுக்கு கர்மாவை காரணம் காட்டி தப்பிக்கப்பார்த்தால் அது நம் தவறு, கர்மாவின் தவறல்ல. அப்படி நினைக்க வைத்து உங்களை மேலும் சிரமப்படுத்துவது கர்மாவின் நோக்கமாக இருக்கலாம், அதனால் நீங்கள் அதற்கு இடம் கொடுக்காமல் தொடர்ந்து போராடி கஷ்டத்திற்கே கஷ்டம் கொடுத்தால், வேறு வழியில்லாமல் கர்மாவே “என்னடா! இவன் எப்படி பால் போட்டாலும் அடிக்கறானே என்று.. சரி! கொஞ்சம் சிரமத்தை குறைப்போம்” என்று முடிவு செய்யும்.

விதியைக் காரணம் காட்டி நீங்கள் தப்பித்துக்கொள்ள முயற்சித்தால் Pls Attention your honour உங்களை கர்மா அவ்வாறு செய்ய / நினைக்க வைத்து உங்களை தந்திரமாக பலி வாங்கி, மேலும் மேலும் தவறு செய்யத் தூண்டி உங்களை சிரமத்தில் ஆழ்த்தப் பார்க்கிறது என்று அர்த்தம். எனவே நீங்கள் நமக்கு சிக்கல் வருகிறது என்று உணர்ந்து உஷாராகி தவறு செய்யாமல் எதிர்த்துப் போராடி வினைப்பயனை குறைக்கப் பார்க்க வேண்டும். இது புரியாமல் நீங்கள்… “அட போப்பா.. நேரமே சரியில்லை.. விதிப்படி நடக்கட்டும்” என்று பயந்து விலகினால் கர்மா குஷியாகி உங்களைப் போட்டுத் தாக்கும். சோம்பேறிகளும் கோழைகளும் மட்டுமே விதியைக் குற்றம் கூறுவார்கள்.

இறுதியாக, கர்மா பஞ்ச் வசனம் மட்டும் தான் பேசாது மற்றபடி தவறு செய்பவர்களை, கொடுஞ்செயல் புரிபவர்களை அடித்து துவம்சம் செய்து விடும். அது எப்போது என்பது தான் யாருக்கும் தெரியாது. உங்களின் தவறுகளை நிறுத்தி நல்லது செய்யவில்லை என்றால், பெரும் சிக்கலில் மாட்டுவீர்கள். கர்மா ஒரு “சூப்பர் கணினி” போல, நீங்க என்ன செய்தாலும் கவனித்து அதில் உள்ள பாவ புண்ணியங்களை கணக்கெடுத்துக்கொண்டே இருக்கும். 

முடிந்த வரை, குழப்பாமல் எளிமையாக எழுதி இருப்பதாக நினைக்கிறேன். உங்களுக்கு இது வரை படித்ததில் சில புரிந்தது போலவும் சில புரியாதது போலவும் இருக்கும். இருப்பினும் “கர்மவினை” குறித்து உங்களுக்கு ஓரளவு புரிதல் கிடைத்து இருக்கும் என்று நம்புகிறேன். மேலே நான் கூறியதில் தவறுகள் இருக்கலாம் எனவே, இதை ஒரு மேலோட்டமான தகவலாக எடுத்துக்கொண்டு, மேலும் ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இது குறித்த புத்தகங்களைப் படியுங்கள். குறிப்பாக விவேகானந்தர் எழுதிய “கர்மவினை”. இந்தக் கட்டுரை எழுத தூண்டுதலாக இருந்தது.

இந்து மதத்தின் அறநெறிகளை, கர்மவினைகளை, பாவ புண்ணியங்களை நம்புவர்களுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.
thanks to 

Friday, September 19, 2014

உங்கள் செல்போனில் கண்டிப்பாக இருக்க வேண்டிய எண்கள்


* மனித உரிமைகள் ஆணையம் - 22410377* போக்குவரத்து அத்துமீறல் - 09383337639* போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ்.     அனுப்ப - 9840983832* குழந்தைகளுக்கான அவசர உதவி - 1098* முதியோருக்கான அவசர உதவி - 1253* தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி -     1033* கடலோர பகுதியில் அவசர உதவி - 1093* ரத்த வங்கி - 1910* கண் வங்கி - 1919* விலங்குகள் பாதுகாப்பு - 044-22354989

Thursday, September 18, 2014

கணாதி ஸேகஜானனம் பூதவிதம்----பொருள்


                                                                                  

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்  
உமா ஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள்: யானை முகம் கொண்டவரே! பூத கணங்களால் வழிபடப்படுபவரே! விளாம்பழம், நாவல்பழங்களின் சாரத்தை ரசித்து உண்பவரே! உமையவளின் புத்திரரே! துன்பம் தீர்ப்பவரே! விநாயகப்பெருமானே! உம் திருவடி தாமரைகளைப் போற்றுகிறேன்

Tuesday, September 16, 2014

மௌனம்


வார்த்தைகள் இல்லாத புத்தகம் மௌனம். ஆனால், வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள். மௌனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மௌனம் என்பது இருட்டு. எல்லாத்துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மௌனம் என்பது மூடி! இதை தயாரித்து விட்டால் எல்லா உணர்ச்சிகளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம். மௌனம் என்பது போதி மரம். இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.

“மௌனம் என்பது வரம்” நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும் மௌனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்!”

எங்கோ, எப்பொழுதோ படித்திதயத்தை வருடிய வரிகள், உலகத்திலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். நமக்குப் பிடித்த பேச்சு நமது பேச்சுதான். அதனால் நாம் பேச ஆரம்பித்தால் மணிக்கக்காகப் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரிகளில் பேசுகிறோம். நாம் பல சமயம் யாரிடம் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம எந்த இடத்தில் பேசுகிறோம் எனபதைப் பற்றியே சிந்திப்பதில்லை. நமக்குத் தெரிந்ததை பேச வேண்டும் என்பது, மட்டுமே நமது இலக்கு. புத்திசாலி மற்றவர்களைப் பேசவிட்டு,, மௌனம் சாதித்து, தேவையான பொழுது மட்டும் பேசி பேசுபவர்களின் நட்பைப் பெறுகிறான். பேசுவதால் நம் இருப்பை பிறர்க்கு உணர்த்துகிறோம். நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால் சில நேரங்களில் வருத்தப்படுவோம். நமது நாக்கு ஈரமுடையது.

நாவின் அமைப்பைப்போல் நம் சொல்லும் இரக்கத்தில் மலர்ந்த இன்சொல்லாக இருக்க வேண்டும். நிலைபெறும் நீங்கில் என் உயிரும் நீங்கும் – வள்ளலார். எல்லா உறுப்புகளையும் இரண்டாகப் படைத்த இறைவன், நாக்கை மட்டும் ஒன்றாகப் படைத்ததில் காரணம் “வரப்புயர” என்று சுருங்கப் பேசி வாழ்வதற்காகத்தான். இரட்டை நாக்கு உடையவர்களை உலகம் நம்புவதில்லை. பொய் சொல்ல முயன்றால் சுற்றியுள்ள பற்கள் நாக்கைக் கடிக்கும். பொய் பேசியபின் பிறர் அறியாமல் நாக்கைக் கடித்துக்கொள்கிறோமல்லவா? அதிகம் பேசாதவனை உலகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை உலகம் மதிக்கிறது. பேசாத ஞானியை உலகம் தொழுகிறது.

மௌனத்தின் வெளிப்பாடுகள் பல. கல்யாணப் பெண்ணின் மௌனம் சம்மதமாகிறது. கரை கடந்த இன்பத்தில் மனிதன் மௌனிக்கிறான். துன்பத்தின் உச்சியில் மௌனமே பேசுகிறது. மௌனம் இறைவன் மொழி, அது தட்சினாமூர்த்தி த்துவம். “பிள்ளை மதி செஞ்சடையான், பேசாப்பெருமையினான்” என்று, தாயுமானவர் தன் மௌன குருவைப் பாடுவார். “நீதி நடஞ்செய், ஏரின்ப நிதி, அதை ஓதி முடியாது என்று வள்ளலார் பாடுவார்.

“சும்மா இரு சொல்லற என்றதுமே அம்மா பொருள் என அறிந்திலமே” என்று, முருகன் அருணகிரிநாதருக்கு உபதேசித்த ம்திரமொழி மௌனம் தான். கல் ஆலின் கடை அமர்ந்து மௌனித்து உடல்மொழியால் (Body Language) சின் முத்திரை த்த்துவத்தை போதித்த தட்சினாமூர்த்தியை “வாக்கு இறந்த பூரணம் சொல்லாமல் சொன்னவன்” என்று திருவிளையாடற் புராணம் வர்ணிக்கும். அமைதி வேறு. மௌனம் வேறு. போருக்கு பின் அமைதி வரும். அமைதி மேலோட்டமானது. மோனம் உள்ளிருந்து வருவது. மௌனம் என்பது வார்த்தைகளற்ற நிலையல்ல. எண்ணங்கள் அற்ற நிலை. மௌனத்தை நம் முன்னோர்கள் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தால் உணர்த்தினார்கள்.

ஓம் என்ற பிரணவத்தை = அ+உ+ம் என பிரிக்கலாம். (அ) அறிவாக, உள்ள இறைவனை, (உ) உயிராக உணர்கிற மனிதன், (ம்) பேரின்ப நிலையாகிய மௌனத்தில் ஆழ்கிறான் என்பது பிரணவப் பொருள். “நற்பூதி அணிந்த திருவடிவம் முற்றும் தோழி, நான் கண்டேன்! நான் புணர்ந்தேன்! நான் அது ஆனேன்!” வள்ளலார்.

இது அவசர உலகம். இயந்திர கதியில் மனிதர்கள். வாய்க்கும் வயிறுக்கும் போராட்டம். நின்று, நிலைக்க நேரமில்லை, வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம் ஒரு முறை தினசரிக் காலண்டரில் ஞாயிறன்று ஆறு நாட்களைச் சேர்த்து கிழிக்கிறோம். தேவை நிம்மதி. தேவை மன அமைதி. தேவை மகிழ்ச்சி. இது மௌன தவத்தால் கிட்டும்.

உடம்பு அசையாமல் யோகநிலையில் கட்டைபோல் தன்னை வைத்திருப்பது காஷ்ட மௌனம். அதாவது இம்மௌனத்தில் உடல் பேசாது (No body language). இரண்டாவது வாக் மௌனம். வாய்மூடி மௌனமாக இருத்தல். இதைத்தான் பொதுவாக மௌன விரதம் உள்நோக்குகிறான். கடவுளோடு பேசுகிறான் என்கிறோம். இந்த மௌனத்தை மேற்கொள்ளும் சிலர் கையில் நோட்புக் வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக எழுதி அறுப்பார்கள். மௌனத்திலிருந்து பெறும் அகத்தாய்வையும் அனுமதியையும் இவர்கள் இழக்கிறார்கள். அடுத்து மனோ மௌனம். இதுவே தலைசிறந்த மௌனம். இதில் மனம் அலைபாயாத விச்ராந்தியாக இருக்கும். சலனமற மனமே மோனத்தன் நிறைநிலை. இந்த மௌனத்தில் மனிதன் தன்னை உள்நோக்குகிறான். கடவுளோடு பேசுகிறான்.

மௌன தவம் செய்பவன் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்கிறான். அவனது புறக்கதவுகள் மூடி அக்கதவுகள் திறக்கின்றன. அவன் பேசாதபொழுது அவனுள்ளிருக்கும் இறைவன் பேசுகிறான். தனது நிறை, குறைகளை அவன் ஆராய்கிறான். அவனது பேராசை நிறை மனமாகிறது. சினம் பொறைமாயக மாறுகிறது. கடும்பற்று ஈகையாகிறது. முறையற்ற பால்கவர்ச்சி கற்பாக மாறுகிறது. வஞ்சம் மன்னிப்பாகிறது. அவன் அனைத்தையும் சமன் செய்து சீர்தூக்குகிறான். அவனது தன் முனைப்பு, அகந்தை அகன்று தான் பரம்பொருளின் அம்சம் என உணர்கிறான். முடிவு வாழ்க்கை கல்வியில் தேர்ச்சி.

“தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே! ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே” வள்ளலாரின் பாடல் அவன் காதில் ஒலிக்கிறது. தான் இறைவனின் அம்சம் என்று உணர்ந்த மறுகணமே (யத்பாவம் த்த் பவதி) அவன் இறைவனது பேராற்றலையும், பேரறிவையும் பெறுகிறான். சாதனைகள் கைகூடுகிறது. அவன் மனம் நிறைகிறது.

மௌன நோன்பு இருவகைப்படும். ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்று மன உறுதியோடு சங்கற்பம் செய்து கொண்டு அவ்வேலை முடியும் வரை பேசாமல் இருப்பது. இது மனதையும், உள்ளாற்றலையும் சிதறாமல் பாதுகாக்கும். காரியம் வெற்றியுறும். இரண்டாவது ஆன்ம தூய்மைக்காக குடும்பம், பொருளாதாரம், வாணிபம் இவற்றில் விலகி நின்று நோன்பு எடுப்பது. இந்நோன்புதான் அகத்தாய்வுக்கு உதவும். அறிவின் இயக்கத்தில் சீரமைக்க உதவும் குண்டலினி யோகம், துரியாதீத தவம் போன்றவை மௌன தவமாகாது. அவை குறுகிய கால உளப்பயிற்சியாகும்.

ஜான்கேஜ் என்பவர் “மௌனம்” என்ற புத்தகத்தில் எழுதுகிறார், எந்த சப்தமும் வராத ஒரு அறையை ஆக்ஸஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கினார்கள். கேஜ் அதில் நுழைந்ததும் இரண்டு சப்தங்களைக் கேட்டார். ஒன்று இருதயம் இயங்குகிற சப்தம். அதாவது இரத்த ஓட்டத்தின் சப்தம். (Cardiac Echo) மற்றொன்று மனம் வேலை செய்கிற சப்தம். கேஜ் ஆச்சரியமாகச் சொன்னார். “இதுவரை நான் இந்த சப்தங்களைக் கேட்டதேயில்லை.”

மௌனம் அனுசரிப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி ஒரு கதையுண்டு. மூன்று துறவிகள் மௌனம் இருந்தனர். ஐந்து நிமிடங்கள் ஆயிற்று. முதல் துறவி மற்றொரு துறவியின் முகத்தில் கரித்தூளைக் கண்டார். “உன் முகத்தில் கரி” என்றார். இரண்டாம் துறவி “நீ பேசிவிட்டாய்” என்றார். மூன்றாம் துறவி “நான் மட்டும்தான் பேசவில்லை” என்றார். தமிழன்பனின் உள்ளொலியை மௌனமாக்க்கேளுங்கள். உன் வார்த்தைகளிலேயே மிக அழகானது எது? உதடு திறகாமல் பதில் சொன்னது மொழி. ஓசை இல்லாமல் பதில் சொன்னது மொழி, வார்த்தை இல்லாமல் பதில் சொன்னது மொழி.

“மௌனம்”

நன்றி :-http://sssjna.blogspot.in/

கொட்டிக் கிடக்கும் - சக்தி ரகசியம் !


ஓஷோவின் - மறைந்திருக்கும் உண்மைகள் படித்து இருக்கிறீர்களா? 

அவர் சொல்லிய ஒரு கருத்தை , மனதுக்குள் அசை போட்டு, அலசி ஆராய்ந்து - அப்புறம் நமக்கு உள்ளே தோணிய விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு பேச்சுக்கு , ஏதோ ஒரு அசம்பாவிதம் , ஒரு மூன்றாம் உலக யுத்தம் மாதிரி ஒன்று நடந்து - இந்த உலகில் பேரழிவு நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் இப்போது உபயோகிக்கும் - (satellite ) செயற்கைக்கோள்கள் எல்லாம் ஸ்தம்பித்துப் போய்விட்டது. செயல் இழந்து விட்டது.. உலகமே 90 % அழிந்துவிட்டது. பெட்ரோல் எல்லாம் காலி. மின் உற்பத்தியே இல்லை .

உலகமே கற்காலம் போல் ஆகி விட்டது .. மக்கள் கோடிக்கணக்கில் மடிந்து விட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் - மீதி இருக்கும் மக்கள் மன நிலை எப்படி இருக்கும்.. ?

டிவி, கம்ப்யூட்டர், கார், ரேடியோ, மொபைல் போன், - எல்லாமே வேலை செய்யாது.. வெறுமனே டப்பா.. தான். பொம்மை மாதிரி தான். ஒன்னும் பிரயோஜனப் படாது .... இல்லையா? ஆனால், அதே சமயத்தில் - அதை உபயோகித்தவர்கள் - வெளியிலும் தூக்கி எறிய மாட்டார்கள்.. அது பாட்டுக்கு - வீட்டிலே இருக்கும். பரண் லே இருக்கும். ஊர்லே மூலையிலே இருக்கும்.. அடுத்த அடுத்த சந்ததிக்கு - அதோட பலன் தெரிய வந்தா பரவா இல்லை.. இல்லை நாளடைவிலே .. அப்படியே மறைஞ்சு போயிடும்.. திரும்ப என்னைக்கவாது ஒரு நாள், எத்தனையோ வருஷம் கழிச்சு - திரும்ப satellites கண்டுபிடிச்சா, எண்ணைக் கிணறு கண்டு பிடிச்சா - இது எல்லாமே , திரும்ப உபயோகப்படும்.. ..

ஒத்துக்கிறீங்களா?

இதே மாதிரி தான்.. கோவில் ஒரு செல்போன் டவர் மாதிரி. கடவுள் ஒரு விண்ணில் இருக்கும் கோள் மாதிரி கற்பனை பண்ணிக்குவோம்.. அங்கே இருந்து சிக்னல் வாங்கி உங்களுக்கு தர்ற டவர் தான் ஆலயங்கள். ஜீவ சமாதிகள்.. அதன் மூலமா எத்தனை எத்தனையோ ஆத்மாக்கள் பலன் அடைஞ்சு இருக்கலாம்.. அந்த கதிர் activation பலமா இருக்கிற ஆலயங்கள் இன்னும் இருக்கு. நீங்க - ஒரு மொபைல் போன் மாதிரி. நீங்க அந்த டவர்க் கிட்டே எவ்வளவுக் கெவ்வளவு நெருக்கமா இருக்கிறீங்களோ, அந்த அளவு சிக்னல் கிளீயரா இருக்கும். அதனாலே பலனும் இருக்கும். இல்லை , சிக்னல் கிடைக்காது.. நாட் ரீச்சபிள் தான்.

அந்த ஆலயங்களுக்கு - சார்ஜ் பண்றதுக்கு தான் - கும்பாபிஷேகம் - அந்த கும்பம் இறைவனிடம் இருந்து - கதிர் அலைகளை , உள்ளே இருக்கிற கர்ப்ப கிரகத்துக்கு அனுப்புகிறது.. தீப ஆராதனை காட்டுறப்போ - அது இன்னும் தூண்டப்படும்.. அருள் அலைகள் உள்ளே இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும்.. கையை மேலே தூக்கி - அந்த நேரத்திலே வேண்டுவாங்க... இல்லையா? .. உயரமா இருக்கிற அந்த கைவிரல்கள் மூலம் உள்ளுக்குள் அந்த அலைகள் உங்களுக்குள் இறங்கும்..

இதைப் போலே - ஏராளமான விஷயங்கள் , நம்மை அறியாமலே , நாம் செய்து கொண்டு தான் இருக்கிறோம்..அதற்கு பக்காவா விளக்கம் தான் தெரிவது இல்லை.. ஆனால் தொடர்ந்து செய்கிறோம்.. அதன் முழு பலன்களும், கண்டிப்பாக , நாம் உணரும் பொது தான் தெரிய வரும்..

satellite இருக்கு (ஆண்டவன் ) . செல் போன் டவர் (ஆலயம் ) இருக்கு. செல் போனும் ( நாம் தான் ), சிம் கார்டும் (மனசு) இருக்கு. ஆனாலும், நமக்கு செல் போன் உபயோகம் தெரிஞ்சா தானே .. அதை உபயோகப் படுத்த முடியும்.. இல்லை , வெறுமனே பொம்மை தானே.

அதைப் போலே , பொம்மை மாதிரி தான் .. நாம் இருக்கிறோம்.. நம்மை உணரனும்.. இறையை உணரனும்.. பிறகு , நமக்கு எல்லாமே புரிய வரும்..

அதுவரை - சிக்னல் கிடைக்கவே வாய்ப்பு இல்லாத - பொம்மை தான் மனிதர்கள்..

இந்த கோட்பாடுகளை - தெளிவாக உணர்ந்து , நாம் நம்மை உணரும் வரை ... நமது சக்தி தெரியாதவர்கள் தான்.. மனம் என்னும் சாவி கொடுக்கும் , விசையால் சொடுக்கப்பட்டு நடமாடும் வெறும் பொம்மைகள்.

நாம் காலை எழுந்தது முதல், இரவு வரையில், எத்தனையோ இடங்களுக்கு போகிறோம். இவைகளோடு, கோவிலுக்கு போவது என்ற பழக்கத்தையும் வைத்துக் கொள்வது நல்லது. பகல் முழுவதும் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் அலை மோதுகிறது.

உங்களுக்கு விவரம் தெரிந்து , இன்றும் சில கிராமங்களில் - வயதான முதியவர்கள் - நாள் தவறாமல் ஆலயம் செல்லும் பழக்கம் வைத்து இருப்பார்கள். அவர் வயதை யொத்த இன்னும் முதியவர்கள் அந்த ஆலயங்களில் கூடி இருப்பர். பார்த்து இருக்கிறீர்களா? இள வயது அன்பர்கள் ஏன் அவ்வாறு செல்வதில்லை..? வீட்டுக்கு வீடு TV , இன்டெர்நெட் வந்த பிறகு - நிறையப்பேர் வெளியில் தலை காட்டுவதேயில்லை.

சில பெரியவர்கள், சாயந்திரம் அநுஷ்டானம் முடிந்ததும், “சந்திகாலம் ஆகிவிட்டது; கோவிலுக்குப் போய் சந்திகால தீபாராதனை பார்த்து விட்டு வந்து விடு கிறேன்…’ என்று சொல்லிவிட்டு, கோவிலுக்கு போய் தரிசனம் செய்துவிட்டு வருவர். ஒரு நாள் பொழுதை கழிக்கும் போது, கடைசியாக தெய்வ தரிசனத்தோடு முடித்தால், வாழ்நாளில் பெரும்பாலான புண்ணியத்தை அடையலாம்.

இரவு வந்ததும், கோவிலுக்குச் சென்று, பகவானிடம் மனதை வைத்து, சிறிது நேரம் தரிசனம் செய்யும் போது, மனம், மற்ற விஷயங்களை மறந்து, சில நிமிட நேரமாவது பகவானிடம் லயித்திருக்கும்; மனதுக்கும் அமைதி கிடைக்கும். அதே சந்தர்ப்பத்தில், பகவானிடம், “பகவானே… நான், பிறர் கையை எதிர்பாராமல், வாழ்நாளை போக்கி விட வேண்டும்!’ என்று பிரார்த்தித்து கொள்ள சொல்லியிருக்கிறது.

அதனால், தினமும் ஒரு முறையாவது, கோவிலுக்குச் சென்று வர வேண்டும். பிறருக்காக உழைக்கிறோம்; சம்பாதித்து போடுகிறோம்; குடும்பத்தை கவனிக்கிறோம். இதெல்லாம் ஒரு கடமை. அதேபோல தன் நன்மைக்கும், ஆத்ம லாபத்துக்கும், பரலோக சுகத்துக்கும் சுலபமான வழி, பகவானை வழிபடுவது தான்.

“பகவான் தான் எங்கும் இருக்கிறாரே… கோவிலுக்கு ஏன் போக வேண்டும்? வீட்டிலிருந்து கொண்டே அவரை நினைத்தால் போதாதா?’ என்று வேதாந்தம் பேசுவதில், பிரயோஜனமில்லை.

பூமியின் அடியில் எங்கும் நீர் நிறைந்துள்ளது; ஆனால், நமக்கு தண்ணீர் வேண்டுமானால், ஒரு கிணற்றிலிருந்தோ, குளத்திலிருந்தோ தான் எடுக்க வேண்டியுள்ளது.

பசுவின் மடியில் பால் உள்ளது. பால் வேண்டுமானால், அதன் மடியிலிருந்து தான் பால் கறக்க முடியும்; அதன் கொம்பை திருகினால், பால் வருமா? அதுபோல எங்கும் கடவுள் இருக்கிறார் என்றாலும், நாம் நாலு பக்கமும் சுற்றி, சுற்றிப் பார்த்தாலும், கடவுளைக் கண்டோம் என்று சொல்ல முடியாது.

கோவிலுக்குப் போய், கடவுளை தரிசித்தால் தான், மன நிம்மதி கிடைக்கும். கோவிலுக்குள் உள்ள தெய்வம் வெறும் சிலையல்ல; அது மந்திர பூர்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, தெய்வ சாந்நித்யம் கொண்டது. கண்ணுக்கு தெரியாத கடவுளை, அந்த விக்ரகத்தில் ஆவாகனம் செய்து வைத்திருக்கின்றனர்.

அதற்கு காலா காலத்தில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, தூப தீப நைவேத்தியம், கற்பூர ஆரத்தி என்று வரிசையாக உபசாரங்கள் உள்ளன. இது, ஒவ்வொரு நாளும் ஆறு காலம், நான்கு காலம், மூன்று காலம் என்று நியமனம் செய்து, அதன்படி நடந்து வருகிறது. அதனால், ஏதாவது ஒரு கால பூஜையையாவது பார்த்து, தரிசனம் செய்து வருவது நல்லது.

சிந்து சமவெளி நாகரிகம் - என்று , தொல் பொருள் துறையினர் - சுமார் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன் இருந்த, ஒரு நாகரீகம் மிக்க மனிதர்கள் வாழ்ந்து இருக்கக் கூடும் என்று நிருபித்து இருக்கின்றனர்.. யோசித்துப் பாருங்கள்.. அப்படிப் பட்ட ஒரு உலகம், ஏதோ ஒரு காரணத்தால் - கிட்டத் தட்ட ஒட்டு மொத்தமாக அழிந்து இருக்கிறது..

அதன் பிறகு - கொஞ்சம் கொஞ்சமாக , ஒரு இரண்டாயிரம வருடமாக , ஒரு வரலாறு - ஓரளவுக்கு தெரிந்து இருக்கிறது.. எந்த காலத்தில் இருந்தோ, நமது முன்னோர்களில் ஒருவர் , இந்த ஆலயங்களின் பயன்பாடுகள் தெரிந்து , அவர் சந்ததிக்கு சொல்லி , அதில் ஒரு 0 .0000001 % கருத்து உண்மையாய் இருந்ததால் , இன்றும் ஆலயங்கள், வழிபாடுகள், தியானங்கள் கடை பிடிக்கப்பட்டு வருகின்றன..

எதுவும் கேலிப் பொருள் அல்ல. அதை உணர நமக்கு நேரம் ஆகலாம் இப்போது ஜப்பானில், சுனாமி - அதனால் - அணு உலைகள் வெடிப்பு.. விளைவு?

பார பட்சமே இல்லமால் , ஒவ்வொரு நாடும் அணு ஆயுதங்கள் செய்து / வாங்கி குவித்து உள்ளன... கத்தியை கையாள்வது போல இது .. பிற நாடுகளுக்கு அச்சுறுத்த என ஆரமபித்த விஷயம் , உலகத்துக்கே - ஒரு முடிவாக கூட மாறலாம்.

பூமி அந்தரத்தில், ஏதோ ஒரு விசைக்கு கட்டுப் பட்டு - ஒரு குறிப்பிட்ட சாய்வில் - பந்து போல , தானும் சுற்றிக் கொண்டு - ஒரு குறிப்பிட்ட பாதையில் - பயணித்துக் கொண்டும் இருக்கிறது...

ஒரு மேஜை இருந்தால், அதை செய்த ஒரு தச்சர் இருந்து தானே ஆக வேண்டும் . பூமி, சூரியன் , பிற கோள்கள் என்று இருந்தால் - அதைப் படைத்தவர் , ஒரு சக்தி இருந்து தானே ஆக வேண்டும்.. அந்த சக்தி , எந்த சக்திக்கு கட்டுப்பட்டு - இந்த பிரபஞ்சம் இயங்குகிறதோ, அந்த சக்தி - கோடி சமுத்திரம் போன்றது.. அந்த சக்திக் கடலில் இருந்து, தெறித்த துளிகள் போல இயங்குபவை தான் உலகமும், நாமும்... நாமும் நம்மை உணரும் போது , அந்த சமுத்திரத்தில் நமது ஐக்கியம் புரிய வரும்..

ரஜினிகாந்த் நடித்த "பாபா" படம் பார்த்தீங்களா..? அங்கே , மகா அவதார் பாபா சம்பந்தப்பட்ட காட்சிகள் - சுத்த ஹம்பக்.. உளறலின் உச்சம் .. கற்பனைன்னு ஒதுக்க முடியுமா? அப்படி ஒரு விஷயம் இல்லைனா.. அந்த மனுஷன் ஏன் , அங்கே போய் - தவமா கிடைக்கிறார்..? அவருக்கு இல்லாத வசதிகளா, ரசிகர் பட்டாளமா..? புகழா? இது எல்லாம் தாண்டி , இது வேண்டாம்னு ஒதுக்க, ஒதுக்க , அவருக்கு இன்னும் கூடுது.. இல்லையா..?

நாமும், ஒவ்வொருத்தரும் - இதே மாதிரி தான் .. பணம் , புகழ் , ஆசை எல்லாம் வைச்சுக்கிட்டு - அதையே தேடி ஓடுறோம்.. இது எல்லாம் கிடைச்ச பிறகு, அடுத்தபடி யோசிப்போம்.. .. அந்த நிலை வரும்போது தான் , நமது ஆன்மா பத்தி, முக்தி பத்தி, ஆண்டவன் பத்தி , ஞாபகம் வரும்...

நான் ஏற்கனவே சொல்லி இருந்தது ஞாபகம் இருக்கா..? கடைசி காலத்துலே, ஆடி அடங்கி , நாடி தளர்ந்து - இறுதிக் கட்டத்திலே இருக்கிறப்போ - நாம சம்பாதிச்சதோ, எதுவுமே நம்ம கூட இருக்க போறது இல்லை.. நம் கூட இருப்பது ... வெறும் நினைவுகள்.. .. ஞாபகங்கள் மட்டுமே... இருக்கிற கொஞ்ச நாட்களில் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை வாழ்வோம்.. சக மனித துவேஷம் இல்லாமல் வாழ்வோம்..

தினமும் , ஆலயம் செல்வதை உங்கள் அன்றாட கடமையாக கருதுங்கள்.. அதனால் , உங்களுக்கு , அபரிமிதமான பலன்கள் கிடைக்கலாம்.. உங்கள் வாழ்க்கை என்னும் ராஜ பாட்டையில் ஒளி மிகுந்த ஒரு பாதை தெரிய வரும். - அதி விரைவில் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்...!!

இப்படி ஏராளமான ரகசியங்களை, சக்தியை உள்ளடக்கி இருப்பவை தான் , சதுரகிரி, திருவண்ணாமலை, திருப்பதி, பழனி போன்ற மலைகளும், இதைப் போன்ற பிற ஆலயங்களும்...!! மன நிம்மதி உங்களுக்கு கிடைப்பது உறுதி 

நன்றி :-http://sssjna.blogspot.in/