Wednesday, November 13, 2013

திருப்பாவை - 3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.

விளக்கம்: திருப்பாவை என்றாலே கிருஷ்ணாவதாரம் குறித்து பாடப்படுவது தான். அதிலே முதல் பத்து, அடுத்த பத்து, அதற்கடுத்த பத்து என மூன்று பிரிவாக்கி அதற்குள் ஒரு பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்பதும் ஆண்டாளின் அனுக்கிரஹமாக இருக்கிறது. இந்தப் பாடல் திருக்கோவிலூர்

(விழுப்புரம் மாவட்டம்) உலகளந்த பெருமாளைக் குறித்து பாடப்பட்டுள்ளது.

தெய்வத்திடம் அழுது முறையிட்டு வரம் கேட்பதுதான் நல்லது என்று எண்ணுகின்றார்கள்
1. பெரும்பகுதியானவர்கள் கோவிலுக்குள் சென்று, எந்த எண்ணத்துடன் வழிபடுகின்றார்கள்?

அன்று மெய்ஞானிகள் சொன்ன நிலைகள், கோவிலிலே போய் தியானம் செய் என்று சொன்னால், “அன்று அவர்கள் செய்ததெல்லாம் தப்பா.., முட்டாளா..,?” என்று கேள்வி கேட்கின்றார்கள்.

அங்கு கோவிலுக்குச் சென்று ரூ. 50, 100, 1000 என்று செய்வதற்குப் பதில் அந்த தெய்வகுணத்தை அருளிய மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் அந்த தெய்வகுணம் பெறவேண்டும் என்று எண்ணச் சொன்னால், 

அங்கே தெய்வத்திற்குக் காசைக் கொடுத்துவிட்டு, 

நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்தால் 

தெய்வம் ஓடி வந்து செய்யும் என்றுதான் எண்ணுகின்றார்கள்.

மத்திரத்தினால் சொல்லிச் சொல்லிப் பார்த்தால், இந்த மந்திரத்தினால் இன்னொரு மனிதரிடம் விளைந்தது இங்கே வரும். இது நம்மை அருளாடச் செய்யும்.

நாம் நான்கு பேருக்கு நல்லது செய்தோம், 

அவர்கள் கஷ்டத்தையெல்லாம் நுகர்ந்தோம். 

அவர்களுக்கு நல்லதாகிவிட்டது. 

ஆனால், தெய்வம் என்னை இப்படிச் சோதிக்கின்றதே என்று மறுபடியும் விஷத்தைத்தான் சேர்த்துக் கொள்கிறோம்.

அன்றைய ஞானிகள், முனிவர்கள் என்ற நிலைக்கு வரப்படும் பொழுது, புஷ்பம், பழம் மற்றவையெல்லாம் போட்டு மனிதனுடைய உணர்வுக்குள் ஆசையை எடுத்துச் சொல்லும் பொழுது, 

சாதாரண மனிதனுடைய ஆசைகள் நாலாகச் சேர்க்கும் பொழுது, 

இந்த ஆசைகள் கூடி அதன் வழிகளிலேதான் அழைத்துச் செல்லும். 

இப்படி பூஜை செய்து செல்ல வேண்டுமென்றால் மனித உணர்வுக்குள் போகலாம். இன்றைக்குக் காரியம் நடக்கும். ஆனால், செல்வம் பெற பூஜை செய்துவிட்டு, நீங்கள் எதை இழுக்கின்றீர்களோ அடுத்தவர்களுக்கு ஏதாவது சொல்லும் பொழுது அந்த உடலில் இருக்கக்கூடிய வியாதியெல்லாம் சேர்த்து இழுத்துக் கொள்ளும். 

ஆக, நான் எல்லாம் நல்லது செய்தேன், 

ஆண்டவன் எனக்கு முதலில் அருள் கொடுத்தான், 

இப்பொழுது தொல்லை கொடுக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருப்போம். 

2. தெய்வத்திடம் அழுது முறையிட்டு வரம் கேட்பதுதான் நல்லது என்று எண்ணுகின்றார்கள்


கோவிலுக்குச் சென்று, அங்கே கஷ்டத்தை எல்லாம் விட்டுவிட்டு வருகிறோம். கோவிலுக்குச் சோர்வாக சென்றோம் என்றால் அவை நம்மைப் பிடித்துக் கொள்ளும். 

கோவிலுக்குச் சென்று வரும் பொழுது சோர்ந்துதான் வருகின்றோமே தவிர நன்றாக வருகின்றோமா? கோவிலுக்குப் போகும் பொழுது எந்த வேகத்தில் செல்கிறோமோ, அதே வேகத்தில் வீட்டிலிருக்கக்கூடிய கஷ்டத்தை எண்ணுகின்றோம். 

நீங்கள் சோர்வாக வரப்படும்பொழுது, இன்னொருவர் கஷ்டம் என்று சொல்வதைக் கேட்டுக் கொண்டேயிருந்தால் அந்தக் கஷ்டம் உடனே நமக்கும் வந்துவிடும். 

ஆக, நாம் கோவிலிலே போய் எதை எடுக்கிறோம்? சோர்வு வரப்பபடும் பொழுது இதே மாதிரி சோர்வலைகளை அங்கே நுகர்ந்தால் நம்மைச் சோர்வடையத்தான் வைக்கிறது. 

நம்மை அறியாமல் சோர்விலேயும் சஞ்சலத்திலேயும் தான் கோவிலுக்குச் சென்று வருகிறோமே தவிர, நல்லதை நாம் பெறமுடிவதில்லை.

இந்தச் சோர்வுடன் போய் தெய்வத்திடம் வரம் கேட்பதுதான் நல்லது என்று நினைக்கிறார்கள். 

3. நாம் எடுக்கும் எண்ணமே நமக்குள் தெய்வமாகி, நம் உடல் ஆலயமாகின்றது - ஆதிசங்கரர் காட்டியது


அந்த மெய்ஞானிகள் சொன்ன வழிப்படி, ஆத்ம சுத்தி என்ற நிலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கவும், விஞ்ஞான உலகத்தில் வரக்கூடிய விஷத்தை நீக்கி மகிழ்ந்த நிலையில் வாழவும் முடியும். 

உங்களுக்கு எது பிரியமோ அதைச் செய்யலாம். ஏனென்றால், நமது குருநாதர் காட்டிய நிலைகள், இந்த உடலைவிட்டுச் சென்றபின் நாம் எங்கே செல்லவேண்டும் என்ற நிலைகள்.

நம் உடலின் நிலைகளைத்தான் ஆலயங்களாகப் புறத்தால் காட்டப்பட்டது. எந்த ஆலயத்துக்குக் சென்றாலும், அந்த தெய்வகுணத்தைப் பெறவேண்டும், அதை அருளிய அந்த மகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

அப்படி எண்ணும் பொழுது, இந்த உணர்வின் அலைகள் நம் உடலுக்குள் மறைந்திருக்கக்கூடிய 

நல்ல குணங்களின் சக்தியை இயக்கி, 

நம் மூச்சினாலே பிறருக்குள் மகிழ்ச்சி ஊட்டி 

நம் காரியங்களைச் சித்தியாக்குகின்றது.

ஆக எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை, 

உன் உடலுக்குள் எடுக்கும் சுவாசம் 

உனக்குள் தெய்வமாக நின்று, 

உன் உடலுக்குள் இருக்கக் கூடிய பிணிகளை நீக்குகின்றது. 

உன் உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மைதான் 

உன் உடலை ஆலயமாக்குகின்றது. 

ஆக நீ எண்ணி எடுப்பதேதான், நீ வேள்விகள் செய்வது அல்ல. நீ செய்யவேண்டிய வேள்விகள் உன் எண்ணத்திற்குள் வேள்விகள் அடங்கியிருக்கின்றது என்று,. இவ்வாறு தனக்குள் மறைந்ததைத்தான் அன்று ஆதிசங்கரர் தெளிவாகக் காட்டினார்.

மலரின் மணத்தைப் பெறவேண்டும் என்று எண்ணி எடுக்கும் பொழுது, அதே ஏக்கத்தில் திரும்பத் திரும்ப செயல்படுத்தும்போது அந்த மணத்தின் தன்மை நமக்குள் சுவாசிக்க நேருகின்றது. 
அந்த மலரின் குணத்தின் தன்மை எவ்வளவோ அதே போல செயல்படவேண்டுமென்று உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது, உணர்ச்சிகள் நமக்குள் ஊட்டி அந்த செயலின் தன்மை செயல்படும். மணத்தின் தன்மை கொண்டு பேசவைக்கின்றது. 

ஆக எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உயிராத்மாவில் படும்பொழுது அந்த நிலைகள் செயல்படுகின்றது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

4. உங்கள் உயிர் ஈசன், உங்களை நீங்கள் நம்ப வேண்டும்

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் தியானம் செய்து பழகுங்கள். உங்களுக்குள் மகிழ்ச்சி வருவதைப் பார்க்கலாம். 

அர்ச்சனை செய்வதற்குப் பதில் அந்தக் கோவிலிலே நின்று, இந்த தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும். இதை அருளிய மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று ஏங்கி தியானித்து அந்த மூச்சலைகளைப் பரப்புங்கள்.

பின், இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் இந்த தெய்வ குணத்தைப் பெறவேண்டும், 

அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்ற இந்த மூச்சலைகளை நூறு பேர் ஒவ்வொரு நாளும் அங்கே விட்டார்கள் என்றால் அங்கே எல்லாம் சுத்தமாகும்.

அர்ச்சனை செய்கிறீர்கள். அந்தக் காசை உண்டியலில் போடுங்கள். நல்ல காரியத்திற்கு அது பயன்படட்டும். அதை அந்த தேவஸ்தானம் செய்யும். வருபவர்களுக்குத் தங்குவதற்கு வசதி செய்யட்டும். 

நீங்கள் வசதியாகப் போய் அங்கே உட்கார்ந்து, இந்த தெய்வகுணத்தைப் பெறவேண்டும், இங்கே வருபவர்கள் எல்லாம் பெற்வேண்டும் என்று மூச்சை விட்டுப் பாருங்கள். அங்கே நல்லது நடக்கும்.

ஆக, அந்த மெய்ஞானிகள் காட்டிய அருள்வழியில் சென்றால் உங்களுக்குள் வரக்கூடிய இருளை நீக்கலாம். 

உங்கள் உயிர் ஈசன்.

உங்களை நீங்கள் நம்பவேண்டும்.

Tuesday, November 12, 2013

ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!

விஞ்ஞானி ஆண்ட்ரூ நியூபெர்க்

உலகின் பிரபல மூளை இயல் நிபுணரும் விஞ்ஞானியுமான ஆண்ட்ரூ நியூபெர்க் தனது அதிசய ஆராய்ச்சிகளின் மூலம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தியை அளித்துள்ளார். இறை நினைவு ஏற்படும்போதெல்லாம் மூளையில் அதிசயத்தக்க விதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் அது!

ஆண்ட்ரூ நியூபெர்க் பல பிரமிக்க வைக்கும் புத்தகங்களைப் படைத்தவர். 150க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர்கள் வியக்கும்படி சமர்ப்பித்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் மன மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.

ஆன்மீக அனுபவங்களால் பல்வேறு நிலைகளை அடையும் ஏராளமானோரை அவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். இதற்காக அவர் கையாளும் தொழில்நுட்ப உத்தியின் பெயர் சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி ( Single Photon Emission Computed Tomography ). இந்த ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காமா கதிர்களை வெளிப்படுத்தும் ஒரு வித கெமிக்கல், ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த கதிர்கள் தரும் தகவல்களை ஒரு கணினி சேகரிக்கிறது. அதன் மூலம் அவர்களின் மூளையில் ரத்தம் பாயும் பகுதிகள் பற்றிய படம் சித்தரிக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அதிகமாக ரத்தம் பாய்கிறதோ அங்கு மூளை அதிகமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்.

பிரான்ஸிஸ்கன் நன் களையும் திபெத்திய யோகிகளையும் தனது ஆய்வுக்கு வருமாறு ஆண்ட்ரூ அழைத்தார். மகிழ்வுடன் அவர்களும் இசைந்தனர். சுமார் 15 ஆண்டுகாலம் பென்சில்வேனியாவில் இடையறாது தன் குழுவினருடன் ஆய்வை நடத்தி வந்த ஆண்ட்ரூ மூளையின் முக்கியமான ஆறு பகுதிகளில் இறை உணர்வால் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டறிந்தார்.அந்த ஆறு முக்கிய பகுதிகள் :

1) முன் மடல் (frontal lobe)


2) லிம்பிக் அமைப்பு (limbic system)
                                         

3)ஆன்டீரியர் சிங்குலேட் (anterior cingulate)
4) அமிக்தலா (amygdale)

                               

5) தாலமஸ்(thalamus)
                                     
                                       
                                        
6) சுவர் மடல்(parietal lobe)
தியானம் அல்லது ஆன்மீக உணர்வுகள் மேம்படும்போது மடல்கள் ஒரு வலிமை வாய்ந்த உணர்வை அனுபவிக்க வைக்கின்றன. ரத்த ஓட்டத்தினால் முன் மடல் மேலே செல்வதற்குப் பதிலாக கீழே செல்கிறது! இதன் மூலம் அவர்கள் கூறும் அல்லது அனுபவிக்கும் அற்புத அனுபவங்கள் உண்மையே என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

இறை நினைவு அனைத்து மதத்தினருக்கும் ஏற்றம் தரும்

ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இறைவனைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதே மூளையில் வெவ்வேறு சர்க்யூட்டுகள் உருவாகின்றன. ஹிந்து, புத்த, யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இது ஏற்படுகிறது.

அறிவியல் உணர்த்தும் ஐந்து பேருண்மைகள்

பிரான்ஸிஸ்கன் நன்கள் மற்றும் புத்த குருமார்களை நான்கு வருட காலம் சிறப்பாக ஆய்வுக்குட்படுத்திய பின் ஆண்ட்ரூ பின் வரும் உண்மைகளைக் கண்டறிந்தார்.

1) மூளையின் ஒவ்வொரு பகுதியும் கடவுள் பற்றிய வெவ்வேறு கருத்தை அமைத்துக் கொள்கிறது. அதிகம் தியானிக்கத் தியானிக்க கடவுள் இன்னும் அதிக மர்ம புருஷராகிறார்!

(ஒப்பீடு:-சொல் பதம் கடந்த தொல்லோன் போற்றி-மாணிக்கவாசகர் திருவண்டப்பகுதியில்)

2) கடவுள் பற்றிய அமைப்பை ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாக அமைத்துக் கொள்வதோடு, கடவுளுக்கு வெவ்வேறு குணநலன்களையும், மதிப்பையும், அர்த்தத்தையும் கற்பித்துக் கொள்கிறான்.

(ஒப்பீடு:-அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என அடி உடையவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் - நம்மாழ்வார்)

3) மத நம்பிக்கையே இல்லாவிட்டாலும் கூட ஆன்மீகப் பயிற்சிகளை ஒருவர் மேற்கொள்ளும்போது உடல் நலமும் உள்ளநலமும் மேம்படுகிறது.
(ஒப்பீடு:-வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே – வள்ளலார்)

4) நீண்ட கால தியானப் பயிற்சி மூளையின் அமைப்பையே முற்றிலுமாக மாற்றி விடுகிறது!இது மூட் எனப்படும் மனநிலையை சீராக ஒரே மாதிரி இருக்கும்படி செய்கிறது.ஆன்ம அறிவை ஏற்படுத்தி புலன் உணர்வுகளை நன்கு உருவாக்குகிறது.

(ஒப்பீடு: அடிமுடியும் நடுவும் அற்ற பரவெளிமேல் கொண்டால் அத்வைத ஆனந்த சித்தம் உண்டாம்: நமது குடி முழுதும் பிழைக்கும்; ஒரு குறையும் இலை – தாயுமானவர்)

5) சாந்தி, சமூகம் பற்றிய விழிப்புணர்வு. தயை ஆகியவற்றிற்கு ஆதாரமான குறிப்பிட்ட மூளை சர்க்யூட்டை அதற்குரிய பகுதியில் வலிமைப்படுத்துகிறது. 
(தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே- மாணிக்கவாசகர் – சிவ புராணத்தில்)

கடவுளை இடைவிடாது நினைக்க நினைக்க அவர் உங்கள் மூளையை நிச்சயம் மாற்றிக்கொண்டே வருகிறார்.

இப்படி ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தில் நம்பிக்கை கொண்டவர்களே அதிக நோபல் பரிசுகளை சமாதானத்திற்காகப் பெற்றதை ஆண்ட்ரூ சுட்டிக் காட்டுகிறார்.மார்ட்டின் லூதர் கிங்.,பிஷப் டெஸ்மாண்ட் டுடு. தலாய் லாமா, மதர் தெரஸா ஆகியோர் உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்கு அவர்கள் உலகின் பால் கொண்டுள்ள அதீத தயை உணர்ச்சியே ஆகும்!

நியூரோபிளாஸ்டிசிடி

நியூரான்கள் ஒரு கட்டத்தில் கற்பதை நிறுத்தி விடுகின்றன என்று மூளை இயல் நிபுணர்கள் இது வரை கருதி வந்தனர். ஆனால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான எரிக் காண்டல்,” மூளை நியூரான்கள் கற்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை.உள்ளும் புறமும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ப நரம்பு செல்கள் மாறுகின்றன.இது வயதானாலும் தொடர்கிறது” என்று கூறுகிறார். இப்படிப் பல கண்டுபிடிப்புகளை இன்று நமக்குத் தரும் புதிய துறையின் பெயர் நியூரோபிளாஸ்டிசி.

ஆன்மீகவாதிகளுக்கு மூன்று ‘C’க்களில் அதிக திறன் ஏற்படுகிறது. Cognition. Communication creativity ஆகிய அறிவுத் திறன், தகவல் தொடர்புத் திறன், படைப்பாற்றல் திறன் மூன்றும் அபரிமிதமாக செழிக்கிறது.இறுதியாக ஆன்மாவை அறியச் செய்கிறது!

ஒழுங்கான முறையான விரதம், தியானம், பிரார்த்தனை, வழிபாடு, இதர மதச் சடங்குகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் போது இரண்டு விதமான மாற்றங்களை ஏற்படுத்துவதை மூளை காண்பிக்கிறது.

ஆன்மீகப் பயிற்சி தரும் அளப்பரிய நன்மைகள்

ஆகவே 
1)உலகில் நிலை பெற்றிருக்கும் கடவுள். 
2)அவரைப் பற்றிய ஆழ்மன நிலையில் நமது அறிவும் அனுபவமும், 
3)வெளிப்படையாக அவரைப் பற்றிய நமது கருத்தினால் முன்மடல், பக்கமடல்,சுவர் மடல் ஆகிய மூளைப் பகுதிகளில் நாம் அமைத்துக் கொள்ளும் அமைப்பு 
ஆகிய மூன்று நிலைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இதற்கு பிரார்த்தனை உள்ளிட்ட அனைத்தும் நமக்கு உதவி செய்து வியக்கவைக்கும் சாந்தியை நமக்கு அளிக்கிறது.
தயை என்பது நமக்கு உயரிய ஆன்மீக அனுபவத்தைத் தருகிறது. இந்த தயை (பிற உயிர்களிடத்து இரக்கம்) உச்சநிலையை எட்டுவதற்கும் நமது ஆன்மீகப் பயிற்சியே அடித்தளமாக அமைகிறது.

மூளையை மாற்றும் இறைவன்

இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக கடவுள் உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறார் (How God Changes Your Brain) என்ற பல லட்சம் பிரதிகள் விற்பனையான தனது புத்தகத்தில் மார்க் ராபர்ட் வால்ட்மேன் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார் ஆண்ட்ரூ!

இதன் ஆழமான பொருள் அறிவியல் ஆராய்ச்சியால் அல்லவா இப்போது விளங்குகிறது.அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்!!