Wednesday, September 11, 2013

அறுபத்து நான்கு கலைகள்

1. அக்கர இலக்கணம் = எழுத்திலக்கணம் பற்றி அறிந்து கொள்வது,
2. இலிகிதம் = கடிதம் எழுதும் வகைகளை அறிவது
3. கணிதம் = கணக்கு வகைகளைப்பற்றிய நூலறிவு,
4. வேதம் = ரிக். யஜூர். சாமம். அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களைப் பற்றிய அறிவது.
5. புராணம் = பதினெண் புராணங்களை பற்றிய விளக்கங்கள் கற்று அறிவது
6. வியாகரணம் = மொழி மற்றும் நுண்கலைகளின் இலக்கண நூலறிவு
7. நீதி சாஸ்திரம் = சுக்கிர நீதி, மனுநீதி போன்ற சாஸ்திரங்களின் அறிவு
8. சோதிட சாஸ்திரம் = வான சாஸ்திரம், கோள்கறின் சஞ்சாரம் முதலியன கற்று பலன் சொல்லும் அறிவு
9. தரும சாஸ்திரம் = அற நூல்களை பற்றிய அறிவு
10. யோக சாஸ்திரம் = யோக நூல்களைப் பற்றிய கலைஞானம்
11. மந்திர சாஸ்திரம் = மந்திரங்களையும், உச்சாடனங்களையும் குருவின் மூலம் அறிந்து கொள்ளுதல்
12. சகுன சாஸ்திரம் = நன்மை, தீமை தருகின்ற நிமித்தங்களை பற்றிய சாத்திர நூலறவு மற்றும் கனவுகளின் பலன்கள்
13. சிற்ப சாஸ்திரம் = கருங்கற்களாலும், உலோகங்களாலும், மரம், மண் பிறவற்றாலும் செய்யப்படுகின்ற சிலைகளின் நுட்பமறிதல்
14. வைத்திய சாஸ்திரம் =
15. உருவ சாஸ்திரம் = மக்களின் உருவ அமைப்பு உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உள்ள உறுப்புகளின் அமைப்பு, உள்உருவ அமைப்பு ஆகியவற்றை அறிந்து கொண்டு மக்களின் குணம், செயல்களை ஆராய்ந்து கூறும் சாமுத்ரிகா லட்சணம் போன்ற நூலறிவு
16. இதிகாசம் = பாகசதம், சிவரகசியம், பாரதம், இராமாயணம் ஆகிய நூலறிவு
17. காவியம் = காவிய இலக்கணம் முப்பத்தெட்டு அறிந்திருத்தல்
18. அலங்காரம் = உவமை, உருவகம் முதலிய அணி வகைகளை கூறும் அலங்கார சாத்திர ஞானம்
19. மதுர பாடனம் = வாயினால் இனிமையாக பாடும் இசை ஞானம்
20. நாடகம் = கதை, கற்பனை நிகழ்ச்சிகளையும் பல பாத்திரங்களின் வாயிலாக மக்களுக்கு மேடை நாட கலையறிவு
21. நிருத்தம் = எழுத்தின் ஒலியே தெய்வம் என்று கொள்ளும் வாதிகள் புனைந்த நூல் பற்றி அறிவது.
22. சத்தப் பிரமம் = எழுத்தின் ஒலியே தெய்வம் என்று கொள்ளும் வாதிகள் புனைந்த நூல் பற்றி அறிவது
23. வீணை = வீணை போன்ற இசைக்கருவிகளை வாசிக்கும் அறிவு பெறுதல்
24. வேணு = மூங்கிலால் செய்யப்பட்ட புல்லாங்குழல் வாசிக்கும் இசை ஞானம்
25. மிருதங்கம் = தோல் கருவியாகிய மிருதங்கத்தில் சொற்கட்டுகளை தாள ஞானத்தோடு வாசிக்கும் கலை.
26. தாளம் = ஆதி ரூபகம், திருபுடை சிம்மநந்தனம் போன்ற 108 தாள, பேதங்களை அறிந்து, சங்கீத ஸ்ருதி பிரமாணம், அங்கம் இலயை, களை, காலம், கிரகம், கிரியை, சாதி பிரத்தாரம், மார்கம். மதி என்ற கூறுபாடுகளை பற்றிய தாள ஞானம்
27. அஷ்திர பரீட்சை = ஹஸ்த்ர பரீக்ஷை  வில்லில் வைத்து எய்யப்படும் அம்புகளின் தன்மை அமைப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ளும் அறிவு, மந்திரம் கூறி அம்புகளை எய்யும் நுண்ணறிவு
28. கனக பரீட்சை = ஆடகம், சாம்பூநதம், சாதரூபம், கிளிச்சிறை ஆகிய பொன்னின் மாற்று வகைகளை அறிந்துகொள்ளும் அறிவு
29. இரத பரீட்சை = தேர்களின் தட்டமைப்பு, அளவு மரம், அலங்காரம், கூம்பு, சக்கர அமைப்பு முதலியவற்றை பற்றி தெரிந்து கொள்ளும் அறிவு
30. கஜ பரீட்சை (அகம் – புறம்) = யானைகளின் தோற்றம், உருவ அமைப்பு, லட்சணம், குணம், திறமை முதலியவற்றை கண்டறிதல். குண்டலியின் தோற்றம் அதன் அரு-உருவ அமைப்பு, அதன் குணம், வேகம் முதலியவற்றை கண்டறிதல்
31. அசுவ பரீட்சை = குதிரைகளுக்கு ஏற்படும் நோய் வகைகளையும், நோய் தீர்க்கும் முறைகளையும் அறிதல். மேலும் அகக்குதிரையாகிய சுவாசத்தின் பேதங்களை அறிந்து வசமாக்குதல்
32. இரத்தின பரீட்சை = நவரத்தினங்களின் குணம் குற்றம், அவற்றை அணிவதால் எற்படும் பலன்கள் ஆகியவற்றை ஆராய்ந்து அறியும் அறிவு
33. பூமி பரீட்சை = மண் வகைகளின் தன்மை, கல்லின் தன்மை, நீரோட்டம் ஆகியவற்றை அறிதல் (ஜியாலஜி)
34. சங்கிராம இலக்கணம் = போர்பற்றிய விவரங்களையும், போர்களத்தில் வியூகம் வகுக்கும் முறைகளையும் கற்றுணர்தல்
35. மல்யுத்தம் = வீரர் இருவர் ஒருவரோடு ஒருவர் ஆயுதம் இன்றி போர்புரியும் கலை
36. ஆகருடணம் = ஆகர்ஷணம் என்பது பிறரையும், பிறவற்றையும் தன்னைநோக்கி அல்லது தான் விரும்பும் இடத்திற்கு இழுக்கும் மந்திர வித்தை. ஆகர்ஷணம் என்பது- 1. ராஜ ஆகர்ஷணம், 2. ஸ்திரி ஆகர்ஷணம் 3. புருஷ ஆகர்ஷணம் 4. மிருக ஆகர்ஷணம் 5. சத்ரு ஆகர்ஷணம் 6. மித்ரு ஆகர்ஷணம் 7. தேவதா ஆகர்ஷணம். 8. பஞ்சபூத ஆகர்ஷணம் என்று எட்டு வகைப்படும்.
37. உச்சாடணம் = மந்திர உச்சரிப்பு முறைகளால் பஞ்சபூதங்களால் ஆன என்ற ஒன்றிற்கும், பிறர்க்கம் தான் நினைக்கிற ஒன்றை ஏற்றுதல் அல்லது  யிரேற்றல் உச்சாடணம் என்பது. 1. ராஜ உச்சாடணம், 2. ஸ்திரி உச்சாடணம் 3. புருஷ உச்சாடணம் 4. மிருக உச்சாடணம் 5. சத்ரு உச்சாடணம் 6. மித்ரு உச்சாடணம்.  7. தேவதா உச்சாடணம் 8. பஞ்சபூத உச்சாடணம் என்று எட்டு வகைப்படும்.
38. வித்து வேடணம் = அடங்காதவரையோ, அடங்காத விலங்குகளையோ அவர்களுக்குள் விரோதம் ஏற்படச் செய்து அடக்குதல். பஞ்ச பூதங்களுக்குள் விரோதத்தை ஏற்படுத்தி மழை, புயல் மற்றும் இயற்கை சீற்றங்களை உண்டாக்குதல்.  வித்து வேடணம் என்பது – 1. ராஜ வித்து வேடணம் 2. ஸ்திரி வித்து வேடணம் 3. புருஷ வித்து வேடணம் 4. மிருக வித்து வேடணம் 5. சத்ரு வித்து வேடணம் 6. மித்ரு வித்து வேடணம் 7. தேவதா வித்து வேடணம் 8. பஞ்சபூத வசியம் என்று எட்டு வகைப்படும்.
39. மதன சாத்திரம் = காம விளையாட்டை பற்றி கலை நூல்கள்
40. மோகனம் = பிறர் மனத்தை மயக்க செய்தல், பிற விலங்கினங்களை தான் விரும்புகின்ற வழியில் மோகிக்க, மயக்க செய்தல். மோகனம் என்பது – 1. ராஜ மோகனம் 2. ஸ்திரி மோகனம் 3. புருஷ மோகனம்            4. மிருக மோகனம் 5. சத்ரு மோகனம் 6.மித்ரு மோகனம் 7. தேவதா மோகனம் 8. பஞ்ச பூத மோகனம் என்று எட்டு வகைப்படும்.
41. வசீகரணம் = பிறரை, பிற விலங்குகளை, பஞ்சபூதங்களை தன் கருத்திற்கு உடன்பட செய்யும் வித்தை. வசியமானது. 1. ராஜ வசியம் 2. ஸ்திரி வசியம்  3. புருஷ வசியம் 4. மிருக வசியம் 5. சத்ரு வசியம் 6. மித்ரு வசியம்  7. தேவதா வசியம் 8, பஞ்பபூத வசியம் என்று எட்டு வகைப்படும்.
42. இரச வாதம் = இரும்பு, செம்பு போன்ற தாழ்ந்த உலோகங்களையும், மண்ணையும் பொன்னாக மாற்றுதல்
43. காந்தருவ வாதம் = தலைவன் தலைவியை சந்தர்வ மணத்தால் கூடுவதற்கு பேசும் பேச்சுக்கலை.
44. பைபீல வாதம் = எறும்புகள் போன்ற ஜீவராசிகளின் பேச்சுக்களை அறிகின்ற கலை.
45. கவுத்திக வாதம் = கவுத்திக வாதம் என்பது வஞ்சத்தை மனதில் வைத்து வாதாடும் கலை
46. தாது வாதம் = பொன், இரும்பு, செம்பு துத்தநாகம் போன்ற அனைத்து உலோகங்களின் தன்மையறியும் கலை.
47. காருடம் = தன்னை கருடனாக பாவித்து பாம்பின் விஷத்தை எடுக்கும் மந்திர வித்தை.
48. நட்டம் = மேடையில் ஆடும் கூத்தின் கலை தெருக்கூத்துக்கள்
49. முட்டி = விரல்களை மடக்கிய கையினால் குத்துச்சண்டை போடுகின்ற போர்கலை அதாவது முட்டித்தம்
50. ஆகாயப் பிரவேசம் = ஸ்தூல சரீரத்தை யோக வித்தையால் மறைத்துக் கொண்டு சூட்சும சரீரத்தோடு ஆகாயத்தில் நுழைதல்.
51. ஆகாய கமனம் = சூட்சும சரீரத்தோடு ஆகாய மாக்கமாக பல இடங்களிலும் சஞ்சரித்தல்.
52. பரகாய பிரவேசம் = தன் சரீரத்தை விட்டு பிறிதொரு சரீரத்தினுள் சூட்சும சரீரத்தோடு புகுதல்.
53. அதிரிசயம் = காணப்படும் பொருள்களை காணாமற் போகும்படி செய்கின்ற அதிசய வித்தை.
54. இந்திர ஜாலம் = அற்புதங்களை செய்து காட்டும் வித்தை.
55. மகேந்திர ஜாலம் = நம்ப முடியாத பெரிய மாய வித்தைகளை செய்து காட்டும் வித்தை.
56. அக்கினி தம்பம் = நெருப்பு தனது உடலை சுடாது செய்யும் வித்தை.
57. ஜலத்தம்பம் = நீரின் மேல் நடந்து காட்டும் வித்தை.
58. வாயுத்தம்பம் = பிராண வாயு வெளியில் ஓடாமல் தடுத்து நீண்ட நேரம் அடக்கி சாதிக்கும் ஹடயோக வித்தை
59. சமையல் கலை =
60. வாக்குவாதம் = பிறர் பேச்சை பேச ஒட்டாமல் தடுக்கும் வாய்க்கட்டு வித்தை
61. சுக்கிலத்தம்பம் = இந்திரியத்தை வெளிவிடாது அடக்கம் வித்தை.
62. கன்னத்தம்பம் = காதை கேட்காமல் செய்யும் வித்தை
63. கட்கத்தம்பம் = கத்த போன்ற கூர்மையான பொருட்களால் வெட்டுபடாது உருவிலயாக மாறுகின்ற கலை.
64. அவத்தைப் பிரயோகம் = பகைவரை  ஸ்தம்பன, பேதன, மாரண அஷ்டகர்ம பிரயோகங்களை அறிந்து பில்லி, சூனியம், ஏவல் வைத்து அடிமையாக்குதல், மாரணம் செய்தல் மற்றும் கொடிய விலங்குகளின் பல்லி, சூனியம் வைத்துக் கொல்லுதல்.

1 comment: