Monday, September 2, 2013

பஞ்ச பட்சி சாஸ்திரம்

அன்பும் அருளும் எங்கும் நிலைக்கட்டும்
ஒம் குரு வாழ்க குரு நன்றாய் வாழ்க குருவே துணை
பஞ்சம் – வறுமை நீக்கும் பஞ்சாட்சி சாஸ்திரம்
பஞ்ச பூதங்கள் இந்த உலகத்தை இயக்குகின்றன. பஞ்சபூதங்கள் இறையருளால் இயங்குகின்றன. உலகில் காணப்படுகின்ற ஒவ்வொரு பொருளும், பஞ்சபூதத்தால் அல்லது பஞ்ச பூதத்தின் ஒரு கூறினால் ஆனவையே. உருவாயும், அருவமாயும் பஞ்சபூதமுள்ளது. நிலம், நீர் தீ, காற்று, வெட்டவெளி புறமாகிய அண்டத்தில் இருப்பது போல் பிண்டமாகிய நமது உடலாகவும், உடலுக்குள்ளும் உள்ளது. முன்வினைச் செயல்களால் ஏற்படும் விளைவுகளோ அல்லது சாபம், பாபம், தோணம் இவற்றால் ஏற்படும் சரிவுகளோ, வாழ்க்கை துன்பங்களோ பங்சபூதங்களினால் அல்லது பஞ்சபூத ரூபத்தினால் நம்மைத் தாக்கி துன்புறுத்துகின்றன. பஞ்சபூத இயக்க அசைவுகளை அல்லத அதன் விளைவுகளை நமக்கு சாதகமாக மாற்றிவிட்டால் வாழ்வில் எல்லா நலன்களையும் பெறலாம்.
இப்படி பஞ்ச பூத இயக்கத்தை செயல்பாட்டை நமக்கு சாதகமாக, சுலபமாக மாற்றிட, மனுபவித்தில் வெற்றிபெற, செல்வம் பெருபிட சித்தர்கள் நமக்கு வழங்கிய அற்புதக்கலையே பஞ்சபட்சி சாஸ்திரம்.
பஞ்சபட்சி
பஞ்சபட்சி சாஸ்திர குறியீடாக ஐந்து பறவைகளை வைத்தார்கள். உருவகித்தார்கள். அவையே 1. வல்லாறு    2. ஆந்தை 3. காகம். 4. கோழி 5.மயில் பஞ்சபட்சி சாஸ்திரத்தில் எல்லா செயல்களையும் நமக்கு சாதகமாக்க, அஷ்ட கர்மச் செயல்களும் செய்ய வழிவகை இருந்த போதும் செல்வம், பெருக, பஞ்சம், வறுமை நீங்கிட உள்ள வழியை இங்கு பார்ப்போம்.
பஞ்சபட்சி பார்க்கும் விதம்
நீங்கள் அமாவாசை தொடங்கி, பௌர்ணமிக்கு பிறந்தவரா? அப்படியென்றால் உங்களது பட்சி எது என்று பார்க்கும் முறை இதோ.
வல்லாறு பட்சி
அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகினி, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். நட்சத்திரம் தெரியவில்லையா ? கவலையில்லை. ஆ. ஆ ஒள முதல் எழுத்தாய் கொண்டவர்களுக்கு வல்லாறுதான் பட்சியாகும். உதாரணமாக அருணாசலம், கந்தசாமி, கார்த்திகேயன், தங்கசாமி, ராம்குமார், கமலா, தருண், பரமேஸ்வரன், லட்சுமி, லாரன்ஸ் இப்படி அ, ஆ கூட்டெழுத்து முதல் எழுத்தாய் உள்ளவர்கள்.
ஆந்தை பட்சி
திருவாதிரை, புனர்பூகம், பூசம் ஆயில்யம், மகம், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆந்தை பட்சிக்கு சொந்தக்காரர்கள். இ.ஈ முதல் எழுத்தாய் உள்ளவர்கள் ஆந்தை பட்சிக்கார்கள். உதாரணமாக கிருஷ்ணன், திருநாவுக்கரசு, பிரமிளா, ரிஷி, ரீட்டா, சிந்த இப்படி இ,ஈ, கூட்டெழுத்தாய் அமைந்தவர்களும் ஆந்தை பட்சிக்காரர்களே
காகம் பட்சி
உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் நட்சத்திரக்காரர்கள் காகப்பட்சியினைக் கொண்டவர்கள். பெயரில் முதல் எழுத்து உ.ஊ அமைந்தவர்களும் காகப் பட்சிக்காரர்களே, உதாரணமாக உசேன், உண்ணாமலை, முத்துச்சாமி, ருக்மணி, குமார்.
கோழிப்பட்சி
அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் (தனுசு) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோழிப்பட்சிக்காரர்கள். பெயரின் முதல் எழுத்தாய் எ, ஏ, கொண்டவர்களின் கோழிப்பட்சிக்குரியவர்கள். உதாரணமாக ஏழுமலை, தெட்சிணாமூர்த்தி, பெருமாள், தெய்வானை, மேரி, ஜெயலலிதா.
மயில் பட்சி
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மயில் பட்சியின் ஆட்சி உள்ளவர்கள்.  பெயரின் முதல் எழுத்தாய் ஒ,ஓ கொண்டவர்கள் மயில் பட்சிக்குரியவர்களே.
உதராணமாக கோகுல், கோபால், கோவிந்தம்மாள், ஜோசப் இதுவே தேய்பிறையில் அதாவது பௌர்ணமியில் அடுத்த நாளிலிருந்து அமாவாசைக்கு முதல் நாளுக்குள் பிறந்திருந்தால் எல்லாமே மாறிவிடும். அதன் விவரம் வருமாறு :-
தேய்பிறைக்கு பட்சிகள்
  பட்சி நட்சத்திரம் பெயரின் முதல் எழுத்து பட்சி மூலிகை லட்சமி கபாட்ஷம்
              1.
வல்லாறு திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி  இ, ஈ தகரை
2.
ஆந்தை ரேவதி உ,ஊ ஜோதிப்புல் (அ)மிளகு சாரணை
3.
காகம் அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் (தனுசு) ஒ,ஓ வெள்ளருகு (அ)குப்பைமேனி
4.
கோழி உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், திருவாதிரை, புனர்பூசம், பூசம் ஆ, ஆ, ஐ, ஒள நீலசங்குபுஷ்பம் கொடிவேலி
5.
மயில் ஆயில்யம், மகம், பூரம்,  பரணி, கிர்த்திகை, ரோகினி,  மிருக சீரிஷம் எ, ஏ வெள்ளெருக்கு(அ) நத்தைசூரி
குறிப்பு:-  மூலிகைகளுக்கு முறையாக காப்புக்கட்டி, சாப நிவர்த்தி, பூஜை முறைகள் முழுமையாக முடிக்கப்பட்டு எடுக்கப்பட்டு மேற்கண்ட மூலிகைகளின் வடக்கு வேர் அல்லது ஆணிவேர்.
வளர்பிறையில்
வல்லாறு பட்சிக்கான மூலிகை – விஷ்ணு கரந்தை (நீல நிற பூ)
ஆந்தை பட்சிக்கான மூலிகை – ஆடையட்டி அல்லது தொட்டாற்சிணுங்கி
காகம் பட்சிக்கான மூலிகை – கருந்துளசி அல்லது கருநொச்சி
கோழி பட்சிக்கான மூலிகை – பவளமல்லி அல்லது அழுகண்ணி
ஆந்தை பட்சிக்கான மூலிகை – ஆடையட்டி அல்லது தொட்டாற்சிணுங்கி
மயில் பட்சிக்கான மூலிகை – பலா மரத்தின் வேர் அல்லது வில்வமர வேர்.
படுபட்சி
மேற்கண்ட மூலிகைகளை எடுக்கும்போது படுபட்சி நாள் தவிர்த்து மற்ற
நாட்களில் எடுத்தால்தான் முழுப்பலன் கிடைக்கும். படுபட்சி நாளில் எடுத்தால்
மூலிகை சிறிதும் பலன் தராது என்பதை அறியவும். படுபட்சி என்றால் அந்த பட்சி
மரணமுற்ற அதாவது பலன் இல்லாத, எதிர்மறை பலன்தரும் நாளாகும்.
படுபட்சி விவரம்


பட்சி வளர்பிறை தேய்பிறை
1. வல்லாறு வியாழன், சனி செவ்வாய்
2. ஆந்தை ஞாயிறு, வெள்ளி திங்கள்
3. காகம் திங்கள் ஞாயிறு
4. கோழி செவ்வாய் வியாழன், சனி
5. மயில் புதன் வெள்ளி, புதன்

வளர்பிறை மூலிகை எடுக்க சிறந்த நாள் மற்றும் நேரம்மேற்குறித்த நாட்களில் அந்தந்த பட்சிக்கு உள்ளவர்கள் அந்தந்த நாட்களைத் தவிர்த்து மூலிகைகள் எடுக்க, தொழிற் செய்ய நற்பலன்களைப் பெறலாம்.

பட்சி நாள் நேரம்
1. வல்லாறு வெள்ளி காலை 6.00 முதல் 6.45
2. ஆந்தை புதன் காலை 6.00 முதல் 6.30
3. காகம் வியாழன் காலை 6.00 முதல் 6.30
4. கோழி புதன் காலை 6.00 முதல் 6.48
5. மயில் வியாழன் காலை 6.00 முதல் 6.48
தேய்பிறை மூலிகை எடுக்க சிறந்த நாள் மற்றும் நேரம்

பட்சி நாள் நேரம்
1. வல்லாறு வெள்ளி காலை 6.00 முதல் 6.45
2. ஆந்தை புதன் காலை 6.00 முதல் 6.30
3. காகம் வியாழன் காலை 8.23 முதல் 8.42
4. கோழி புதன் காலை 8.23 முதல் 8.42
5. மயில் வியாழன் காலை 8.23 முதல் 8.42
குறிப்பு
நேரம் சூரிய உதயம் காலைர. 6.00 மணி என கணக்கிடப்பட்டு பலன் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் மூலிகை எடுக்கின்ற நாளில் சூரிய உதயத்தை சரியாகக் கணக்கிட்டு, சரியான நேரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக வல்லாறு பட்சிக்கு உரியவர் மூலிகை எடுக்க வெள்ளிக்கிழமை சூரிய உதயம் காலை 5.47க்கு என இருந்தால் 5.47ல் இருந்து 6.32க்குள் மூலிகை எடுத்துவிட வேண்டும்.
அதேபோன்று மூலிகையை தாயத்து (குளிசம்) உள்ளே அடைத்து மூடும்போது இதேபோல் நேரம் அறிந்து உள் அடைக்கவும். நீங்கள் உங்கள் குல தெய்வத்தையும், உங்கள் இஷ்டதெய்வத்தையும் வணங்கி மூலிகையை எடுத்து தாயத்தில் அடைத்து அணிந்து கொள்ள வறுமை நீங்கி செழுமையான வாழ்க்கை வாழலாம். செல்வ கபாட்சமும், நல்ல வருவாய் வருவதையும் அனுபவத்தில் உணரலாம்.

3 comments:

 1. வளர்பிறை தேய்பிறை பட்சிகளுக்கு சில நட்சத்தரம் மாறுபடுகிறது

  ReplyDelete
 2. ஐயா வணக்கம்,

  நான் பஞ்சபட்சி பற்றிய எனது இணையதள தேடலில் ஒரு சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனது சந்தேகங்களை உங்களாள் தீர்க்கமுடியும் என்று நினைக்கிறேன்.

  கீழ்கண்ட Link-ல் பாற்க்கும் போது நட்சத்திர பட்சி கீழ்கண்டவாரு உள்ளது.
  Sri Arul Thavasi Jothidalaya (http://arulthavasi.com/site/html/panjapatshi.html)

  வளர்பிறை பட்சி நட்சத்திரம் தேய்பிறை பட்சி
  வல்லுறு அக்வனி, பரணி, கிருத்தி, ரோஹி, மிருகசிரிஷ் மயில்
  ஆந்தை திருவாதி, புளர்பூச, பூசம், ஆயில்ய, மகம், பூரம் கோழி
  காகம் உத்திரம், அஸதம்,சித்திரை,சுவாதி, விசாகம் காகம்
  கோழி அனுஷம்,கேட்டை,மூலம்,பூராட்ம்,உத்ராடம் ஆந்தை
  மயில் திருஓண, அவிட்ட, சதயம்,பூரட், உத்திரட், ரேவ., வல்லுறு


  மற்ற Link-ல் பாற்க்கும் போது நட்சத்திர பட்சி கீழ்கண்டவாரு உள்ளது.

  வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் எனும் பஞ்சபட்சிகள் 27 நட்சத்திரங்களுக்கு வளர்பிறையில் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகின்றன :
  அசுபதி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் – வல்லூறு
  திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் – ஆந்தை
  உத்ரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் – காகம்
  அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம் – கோழி
  திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி, உத்ரட்டாதி, ரேவதி – மயில்

  வல்லூறு,ஆந்தை, காகம், கோழி, மயில் எனும் பஞ்சபட்சிகள் 27 நட்சத்திரங்களுக்கு தேய்பிறையில் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகின்றன :
  அசுபதி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் – மயில்
  திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் – கோழி
  உத்ரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம் – வல்லூறு
  கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் – காகம்
  அவிட்டம்,சதயம்,பூரட்டாதி, உத்ரட்டாதி, ரேவதி – ஆந்தை  இதில் எது சரி ஐயா?

  நன்றி ஐயா.

  ReplyDelete