Thursday, July 3, 2014

பிரபஞ்சம் ஒருவர் படைத்ததா? அல்ல தானாக உருவானதா?

நாம் இருக்கும் இந்த பிரபஞ்சம் ஒருவர் படைத்ததா? அல்ல தானாக உருவானதா?

இந்த பிரபஞ்சம் எப்படி உருவாணது னு நமக்கு தெரிஞ்ச உருப்படியான வின்ஞான விளக்கம் பிரபஞ்சம் ஒரு 'பெரிரிரிரிரிரிரிய்ய்ய்ய்ய வெடிப்பில்' (Big Bang Theory) உருவானது என்று.

எப்படி வெடிச்சது? எங்க வெடிச்சது?

அதாவது தூசு, சிறு சிறு துகள்கள் னு இருந்த எல்லாமெ ஒரே ஒரு மைய்யத்தை நோக்கி அதீத சக்தியுடன் ஈற்க்கப்பட்டது. அந்த சக்தி ஒரு குரிப்பிட்ட அளவை தான்டிய போது அது ஒரு தீபாவளி பட்டாசு வெடிக்குர மாதிரி வெடிச்சுருச்சு சார். "அது நமது பிரபஞ்ச்த்தின் கற்ப்பனை செய்து பார்க்க முடியாத ஒரு ஆடம்பரமான துவக்கம்". அப்படி துவங்கினது தான் இந்த பிரபஞ்சம். நமக்கு தெரிந்த வரை அனைத்தும் பஞ்ச பூதத்தில் அடக்கம் தானே. ஆனால் அதயும் தான்டி பல விசயம் இருக்கு.

அந்த வெடிப்பின் போது அங்கு இருந்த எல்லாமே ஒரே ஒரு திடப்பொருள் தான் என்றால் நம்ப முடிகின்றதா. நம்பவில்லை என்றால் கண்டிப்பாக தொடரவும். நம்பினாலும் தொடரவும் வின்ஞானம் நம்பிக்கைகளை சார்ந்தது இல்லை.

ஒரே பொருளா? எப்படி? நான் காண்பதனைத்தும் வேரு வேரு பொருளாக இருக்கின்றதே என்கிரீர்களா? சரி, நமக்கு தெரிந்த எல்லாபொருளும் எதனால் உருவானது என்று சிந்தித்து பாருங்கள். அனைத்தும் அணுக்களால் ஆனது தான். அவையனைத்தும் ப்ரோட்டான் நியுட்ரான் எலக்ட்ரான் என்று மூண்று ட்ரான்களால் ஆனது. அதனை பிளந்தால் ஹாட்ரான்களும் லெப்ட்ரான்களும் பல்லைக்காட்டுகிறன. அவற்றினுள் இருக்கும் 'குவார்க்' (Quark) தான் திடப்பொருள்களின் மூலம் (The fundamental constituent of all mater). இந்த குவார்க் தான் அதன் சௌகரியத்துக்கு ஒண்றோடு ஒண்று சேர்ந்து வேரு வேரு பொருளாக தோற்றமளிக்கின்றது.

ஏன் சேர்ந்தது அப்படியே இருந்து தொலைக்க வேண்டியது தானே. வேதியல் படிக்க எவ்வளோ கஷ்டபட்டேன் என நினைக்கும் அன்பர்களே. அவை அனைத்தும் அப்படியே இருந்ததென்றால் உயிரும் இல்லை, வேதியலும் இல்லை, கணிணியும் இல்லை, முகநூல் கூட இல்லை. சரி, ஏன் சேர்ந்தது என்றால் சக்தி அதாவது வெப்பம் தனிய தனிய அவை ஒன்றோடொன்று சேர்ந்தன. நீர் கொதிக்கயில் பார்த்தால் நீருக்குள் என்னமோ அங்கும் இங்கும் ஓடும், காரணம் அதற்க்கு வெப்பத்தால் சக்தி கிடைத்திருக்கிரது. அதனால் அது தனியாக செயல்பட துடிக்கிறது. அதே பொல தான், அந்த வெடிக்கும் கட்டத்தில் இருந்த அளவுக்கதிகமான சக்தி எல்லா குவார்க்கும் தனியாக செயல்பட வைத்தது. உஷ்னம் குறைந்தது தனியாக செயல்படும் அளவு சக்தி இல்லாமல் ஒன்றோடொன்று இணைந்து கொண்டன.

திடப்பொருள் எல்லாமெ ஒரே ஒரு பொருளின் கலவை தான் என்று விளக்கிய வின்ஞானத்திற்க்கு சவாலான விசயம் சக்திகள் அனைத்தும் ஒன்றே என் விளக்க முனைவது தான்.

சக்தி என்பது என்ன? ஒளி, உஷ்னம், புரவூதா கதிர், ஒலி, புவி ஈற்ப்பு, EMF என்று பல விசயம் இருக்கு. ஆனால் இவை அனைத்தும் 4 ஆதார விசைகளால் வருகின்றதாம். அவை அணுவுக்கு உள்ளே மற்றும் வெளியே உள்ள வலுவான மற்றும் லேசான விசை, மின்காந்த விளைவு, மற்றும் புவிஈற்ப்பு. இந்த நான்கும் ஒரே சக்தியாக தான் பிரபஞ்ச வெடிப்பின் போது இருந்திருக்கும் என்பது வின்ஞானிகளின் கருத்து. ஐன்ஸ்டைன் இந்த சக்திகள் அனைத்தயும் ஒருமைப்படுத்த போராடி கைவிட்டார். சிலர் இரண்டு சக்திகளை ஒருமைப்படுத்தி நோபல் பரிசு பெற்றனர். அவர்களுள் ஒருவர் இந்த அப்துஸ் சலாம்.

திடப்பொருள், சக்தி இரண்டுமே ஒன்று தான் என்று என்று வின்ஞானம் என்றோடிப்ராக்லீ சமன்பாடு, பாலியின் எக்ஸ்க்லூசன் பிரின்சிபில், ஹான்சன்பார்க் நிச்சயமில்லா தத்துவம் னு பல விதத்தில் நிருபித்து விட்டது.

ஆக இந்த பிரபஞ்சமே ஒரு அதிர்வு தான். அதாவது சக்தி இருந்தால் செயல் இருக்கும், அதாவது அது ஒரு வித அதிர்வை வெளிப்படுத்தி கொண்டிருக்கும். ஒரு ஒரு விதமான அதிர்வும் ஒரு ஒரு வடிவம் எடுத்துள்ளது. இந்த பிரபஞ்சமே ஒரு அதிர்வு தான் என முடிக்கிரார்கள். இதற்க்கு பெயர் தான் ஸ்ட்ரிங் தியரி.

ஒரு வழியா முன்னுரை முடிஞ்சது. இனிமே தான் சூண்யம் | சுயம்பு முக்கிய கதயே வருது.

என்னதான் நாம் அப்படி இப்படினு எல்லாமே ஒன்னுதான்
"இது எல்லாமே எங்க இருந்து வந்துச்சு..

இந்த் கேள்விக்கு பாதி பதில் கிடைச்சுடுச்சு னு சொன்னா காமெடியா இருக்கும். ஆனா என்ன பன்ன நண்பர்களே, பாதி பதில் தான் கிடைத்தது. மீதியும் விரைவில் கிடைக்கும் என காத்திருப்போம், கிடைத்த பாதியை இப்ப பாப்போம்.

அதாவது என்னனா இருக்க எல்லாமே ஒன்னு தான் னு ஒத்துக்குரேன், அந்த ஒன்னு எங்க இருந்து வந்துச்சு? அத கடவுள் தான் படைக்கனும், தானா எப்படி வரும் எங்க இருந்து வரும்? முக்கியமான தலை சுத்த வைக்கும் கேளிவியே இது தான்.

இதுக்குள்ள இரண்டு உண்மை இருக்கு
1. எதுவும் இல்லாமலே ஒன்னு வந்துச்சு
2. எதோ ஒன்னு எப்பவுமே இருந்துச்சு

இதை நன்றாக புரிந்துகொண்டு தொடரவும்...

பிரபஞ்சத்தை படைக்க ஒரு சிருஷ்டி (GOD) தெளிவாக சொன்னால் அந்த கேள்வியே தேவையில்லை.

. நாம் நம்பியபடியே எதுவும் இல்லாத இடத்தில் இருந்து ஒன்று வந்தது என எடுத்துக்கொள்வோம். இதை உண்மை என நம்ப வைக்கும் அளவிற்க்கு நம்மை சுற்றி பல பல பொருளும் சக்தி வடிவங்களும் இருக்கின்றது, நாமும் அவற்றுள் அடங்குவோம்.

குவாண்டம் தியரி வெற்றிடம் என்றால் அங்கு அந்த இடத்தில் எப்போதும் எந்த சக்தியும் இருந்ததில்லை என வரையருத்தது (Energy in vacuum= 0). தற்ப்போது அதை சற்று வேறு விதமாக வரையருக்கிறது. அதாவது வெற்றிடம் என்றால் அந்த இடத்தின் சராசரி சக்தி தான் பூஜ்யம் என்கிறது (Average Energy in a vacuum space over a period of time = 0). இந்த கூற்று படி சிரு சிரு துகள்கள் சில மணித்துளிகள் இருப்புக்கு வந்து மீண்டும் மரைகிறது. இது எத்தனை ஆண்டு காலமாக நடக்கின்றது என்று கேட்பீர்களானால் "மனித கற்ப்பனை செய்து கூட பார்க்க முடியாத காலம் முதல்" என்பது தான் பதில் என்கிரார்கள். துகள்கள் வருவது மறைவதும் சுழற்ச்சியாக காலம் காலமாக நடந்துகொண்டு இருக்கிறது.

இது தெரிந்து கொண்ட ஒரு பாதி. மீதி என்னவெண்றால், எப்படி பிரபஞ்சம் முழுவதும் உள்ள அத்தனையும் ஒன்றுமில்லாததில் இருந்து வந்தது ..?

No comments:

Post a Comment