1. மனிதன் எவன்? அவன் எதனால் ஆக்கப்படுகிறான்? மனிதன் எண்ணம். அவன் எண்ணத்தால் ஆக்கப்படுகிறான்.
2. மாறுதல்கள் எல்லாம் இயல்பானவை. நீங்கள் ரயிலில் பிரயாணம் செய்யும் போது, காட்சிகள் மாறாவிட்டால் ரயில் நின்று விட்டிருப்பதைக் காண்பீர்கள். மாறுதல் இன்றேல் வாழ்க்கை இல்லை.
3. சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். அது இதயத்தின் இசை.
சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். அது இளமையின் ரகசியம்
படிக்க நேரம் ஒதுக்குங்கள். அது மகிழ்ச்சிக்கு வழி.
உழைக்க நேரம் ஒதுக்குங்கள். அது வெற்றியின் விலை.
4. காசையோ, நோட்டையோ எண்ணிக்கொடுக்கும் போது ஞாபகமாக வாழ்த்திக் கொடுங்கள். அதனிடம் அதனிடம் சொல்லுங்கள். " செல்வமே! யார் உன்னைத் தொட்டாலும் அவர்களுக்கு நன்மை செய்வாயாக. போய், பசித்தவர்களின் பசியைத் தணித்து, துணியில்லாதவர்களுக்கு ஆடை அணிவித்து, பன்மடங்காகப் பல்கிப் பெருகி என்னிடம் திரும்பி வருவாயாக!
5. ஒரு சிறிய இன்பத்தைத் துறப்பதன் மூலம் ஒரு பெரிய இன்பத்தை அடைய முடியுமெனின், பெரியதற்காகச் சிறியதை விட்டுக் கொடுப்பவன் அறிவாளி
6. நம் அன்றாட வாழ்க்கையில் கழியும் ஒவ்வொரு கணத்திலும் பெரிய பொருள் பொதிந்திருக்கிறது. இது ஆண்டவனுடையது என்ற உணர்ச்சியுடன் ஒரு சாதாரணக் காரியம் செய்தபோதிலும் அது புனிதமாகி விடுகிறது.
7. முதியவர் ஒருவருக்கு அளிக்கப்படும் கௌரவம், கடவுளுக்குச் செய்யப்படும் மரியாதையாகும். அப்படிக் கண்ணியமளிக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் அவர்களது வயோதிகப் பருவத்தில் மரியாதை செய்பவர்களைக் கடவுள் நியமிக்கிறார்.
8. உலகத்திலேயே மிகப் பெரிய மனிதன் யார்? ஒரு வேர்க்கடலையைச் சாப்பிட்டு விட்டு அத்துடன் நிறுத்திக் கொள்ளும் மனோபலம் உள்ளவன்.
9. சரீரத்தால் மற்றவர்களுக்குக் கைங்கர்யம் செய்வது பெரிய புண்ணியம். ஒவ்வொருத்தரும் பிறருக்குக் கூடத் தெரிய வேண்டாம்; ஏதோ ஓர் ஒற்றையடிப் பாதைக்குப் போய் அங்கேயுள்ள முள்ளை, கண்ணாடியை அப்புறப்படுத்தி வந்தால் போதும், அது சித்த சுத்திக்குப் பெரிய உதவி.
10. உற்சாகமாக இருப்பதற்கு ராஜபாட்டை என்ன? நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு ஏற்கெனவே உற்சாகமாக இருப்பது போல் பாவனை செய்து கொண்டு உற்சாகத்துடன் பேசி , உற்சாகமாகப் பழகுவதுதான்.
No comments:
Post a Comment