Friday, September 27, 2013

எங்கும் வெற்றி எதிலும் வெற்றி எப்படி?

எது குறித்தும் எஞ்சாதீர்கள்
எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு

ஆறிவுக்குள் உணர்ச்சியும் உணர்ச்சிக்குள் அறிவுமாகப் பின்னப்பெற்றுள்ள ஓர் அழகான பின்னல் ஆடையே நம் வாழ்க்கை

அறிவு நம் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுக்கிறது. உணர்ச்சி, அந்த இலக்கணத்தின் வழியே பொங்கும் இலக்கியமாகச் சுழன்று வெளிப்படுகிறது.

அறிவு நம் வாழ்க்கை என்னும் சக்கரமாகச் சுழன்று நம் இன்ப துன்பப் பயணத்தை நடத்தித்தருகிறது.

இந்த வாழ்க்கைப் பயணத்தில் எங்காவது தடை நேர்கிறது என்றார்... அந்தத் தடைக்கு அறிவு உணர்ச்சி என்னும் இந்த இரண்டு அம்சங்களில் ஏதோ ஒன்றில் தொழில் நுட்பச் சிக்கல் Technical Fault ஏற்பட்டுள்ளது என்பதே பொருள்

எந்த மாற்றத்திற்கும் தயார் என்ற ஊக்கத்துடன் மனத்தை வெட்டவெளியாகத் திறந்து வைத்திருப்போர்க்கு எந்த வெற்றியும் இந்த உலகில் எளிதாக வாய்க்கும்.

நான் எந்த விதத்திலும் மாறமாட்டேன். மற்றவர்கள்தாம் எனக்காக மாற வேண்டும் என்று அடம் பிடிப்போர்க்குத்தான் எல்லாமே கிக்கலாகத்தென்படும்.

மாறமாட்டேன் என்று அடம் பிடிக்கும் அந்தப் பிடிவாத மனத்திற்குப் பெயர்தான் விதி... வினைப்பயன்... துரதிர்ஷ்டிம் என்பன போன்ற பல பெயர்கள் வைத்துள்ளோம்.

சமையலில் உப்பு சற்று அதிகமாகத் தெரிந்தால் தண்ணீரைச் சேர்த்துச் சரி செய்யலாம். தண்ணீர் அதிகமாகிச் சப் பென்று இருந்தால் சிறிது உப்புச் சேர்த்துச் சரிசெய்யலாம்.

அதுபோல் உணர்ச்சிசார்ந்த சிக்கல்களுக்குச் சிறிது அறிவைக் கலந்தால் சரியாகிவிடும். அறிவு சார்ந்த சிக்கல்களுக்குச் சிறிது உணர்ச்சியைக் கலந்தால் சரியாகிவிடும்.

எல்லாமே தொழில் நுட்க் கோளாறு Techinical Fault தான்.

எனவே, எதற்கும் அஞ்சாதீர்கள் எல்லாவற்றுக்கும் தீர்வு உண்ட. இதைத் தெளிவுபடுத்துவதே எங்கும் வெற்றி எதிலும் வெற்றி எப்படி... என்ற இந்த நூலின் நோக்கம்.

படியுங்கள் பின்பற்ற முயலுங்கள் பயன் பெறுங்கள்.

வாழ்க வளமுடன்.


No comments:

Post a Comment