ஈர்ப்பு விதியின் இயக்க நிதிக்கு ஒரு உதாரணம் :
மிகபெரும் பணக்காரர்கள் எல்லோரும் தங்களது செல்வங்களை இழந்தவுடன் , மிக குறுகிய காலத்திலேயே அவைகளை திரும்ப பெற்று விடுகிறார்கள் , இவர்களைபோன்றவர்களை பற்றி நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள் , இப்படிப்பட்டவர்கள் உணர்ந்து இருந்தார்களோ இல்லையா தெரியாது !அவர்களுடைய எண்ணங்கள் முழுவதையும் செல்வங்கள் மட்டும் ஆக்கிரமித்து இருக்கும் .அதாவது உங்களது எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் இவ்விதி அதற்கு ஏற்றவாறே இயங்கும் .
ஒத்தவை ஒத்வைற்றையே ஈர்க்கும்
ஈர்ப்பு விதி என்பது என்னை பொறுத்தவரை , நான் என்னை ஒரு காந்தமாக எண்ணி கொள்வதற்கு ஒப்பானது .-ஜ்ஹோன் அசரப்
சுலபமா சொல்றேன் கேளுங்க ....
உங்களுடைய நண்பர்களை எல்லோரையும் பாருங்கள் நீங்கள் எல்லோரும் ஒத்த எண்ணங்கள் உள்ளவர்களாக இருப்பீர்கள் , அதே உங்களுடைய எண்ணத்திற்கு எதிரான எண்ணங்கள் உள்ளவர்களுடன் நீங்கள் நெருங்கி பழக மாட்டீர்கள் ,அன்னாஹசாரே ஊழலுக்கு எதிராக போராட ஆரம்பித்தவடன் எப்படி இந்தியாவில் உள்ள லட்சகணக்கான மக்கள் ஒன்று திரண்டு அவருக்கு கை கொடுத்தார்கள் , இங்கே பாருங்கள் அன்னா ஹசாரே -வின் எண்ணமும் மக்களின் எண்ணமும் ஒன்றாக இருந்த காரணத்தால் சுலபமாக அவர்களை அவரால் ஈர்க்க முடிந்தது , உங்களது வாழ்கையிலும் இந்த ஈர்ப்பு விதியின் தாக்கத்தை உணர்ந்து இருக்க கூடும் , உங்கள் நடந்த சோகமான நிகழ்வுகளை பற்றி நீங்கள் எண்ண ஆரம்பித்தவுடன் , அது தொடர்பாக மேலும் சோகமான நினைவுகள் உங்களுக்கு வர ஆரம்பித்திருக்கும் ,நீங்கள் நீடித்து இருக்கும் ஒரு எண்ணங்களை பற்றி எண்ணும்போது,ஈர்ர்பு விதி உடனடியாக அதனுடன் ஒத்த எண்ணங்களை உணக்ளுக்கு கொண்டு வந்து சேர்க்கும் ,அதனால் நீங்கள் மேலும் சோகமாக மாறுகிறீர்கள்.
எந்திரன் படத்தில் உள்ள கிளிமஞ்சாரோ பாடலை நீங்கள் கேட்கும்போது உடனே உங்களது மன திரையில் ரஜினியும் ,ஐஸ்வர்யாராயும் ஆடுவதும் , இந்த பாடல் படம் ஆக்கப்பட்ட விதம் குறித்து டைரக்டர் ஷங்கர் அளித்த பேட்டி உங்களுக்கு எப்படி நினைவுக்கு வருகிறது ?,நீங்கள் எதன் மீது கவனத்தை செலுத்துகிறீர்களோ அது சம்பந்தமாக விசயங்களை ஈர்ப்பு விதி உங்களிடம் கொண்டு வந்து சேர்த்து விடும் .
நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமக்கு என்ன தேவையோ அது குறித்த எண்ணங்களை நம் மனதில் விடாபிடியாக பிடித்து கொண்டிருப்பதோடு ,அவை குறித்த முழுமையான தெளிவையும் நம் மனதில் இறுதி கொள்ள வேண்டும் ,அப்பொழுது நீங்கள் எதை குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டு இருக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் ஆகி விடுவீர்கள்.
நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய் .- சுவாமி விவேகனந்தர் .
இன்றைய உங்களது வாழ்க்கை உங்களது கடந்த கால எண்ணங்களின் பிரதிபலிப்பே , அதில் நல்லவையும் அடங்கும் கெட்டவையும் அடங்கும் ,நீங்கள் அதிகமாக யோசிக்கும் விசயங்களை உங்களின் பக்கம் ஈர்ப்பதால் ,உங்களின் வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் அந்த எண்ணத்தின் ஆக்கிரமிப்பு அடங்கியுள்ளது என்பதை நீங்களே உணரலாம் .
உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் ,அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும் .-பாப் பிராக்டர்
இன்னும் ஈர்க்கும் ...
*************
No comments:
Post a Comment