இந்த உலகில் மனிதன் தனது அறிவை கொண்டு எவ்வளவு பெரிய விசயங்களைஎல்லாம் கண்டு பிடித்து விட்டான் , ஆனால் அவனால் அவனை திருப்தி படுத்தி கொள்ளவோ , தன்னை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளவோ ,முடியவில்லை , உதரணமாக உலகில் எவ்வளவு வன்முறைகள் நடக்கின்றன , நாடுகள் சண்டையிட்டு கொல்கின்றன , நாடு மக்களை கொல்கிறது , ஏன் தனக்கு என்ன வேண்டும் என்றே தெரியாமல் பல பேர் உள்ளார்கள் , ஏழை மேலும் , ஏழை ஆகிகொன்டே இருகிறார்கள் , வியாதிகள் மேலும் பெருகிகொண்டே இருகின்றன , இவை எல்லாவற்றையும் சரி செய்ய முடியுமா , இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்ன ?நாம் இவற்றை எல்லாம் மாற்ற முடியாது , ஆனால் நம்மால் நம்மை சரி செய்து கொண்டால் நம் ஒருவர் மூலம் இந்த சமுதாயத்திற்கு நல்ல விசயங்களை கொடுக்க முடியும் , இதே போல் எலோரும் நம்மை சரி செய்து கொண்டால் இந்த நாட்டில் அனைவர்க்கும் எல்லாம் கிடைத்து விடும் ,
இந்த தொடர் இந்தியாவை மாற்றுவதற்காக எழுதபடுவது அல்ல , ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு தேவை பட்டதை எவ்வாறு அடைவது என்பதை பற்றித்தான் , பொதுவாக எல்லா மனிதனுக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு இலக்கு இருக்கும் , உதாரனமாக ஒருவர் I.A.S பரிட்ஷை எழுத்து பாஸ் பண்ண வேண்டும் என்று வைத்து கொள்வோம் , எவளவு பேர் அதை செய்கிறார்கள் , ஏன் செய்ய முடியவில்லை ,?
மனித உறவுகளுக்கு உள்ளே எவ்வளவு முரண்பாடுகள் ?மொத்தத்தில் இந்த தொடர் தங்களது ஆளுமை திறனை வளர்த்து கொள்ள உதவியாக இருக்கும்
இங்கே அடிக்கடி பிரபஞ்சம் என்ற வார்த்தை உபயோகபடுத்த படும் , பிரபஞ்சம் என்றால் நீங்கள் இயற்கை என்று வைத்து கொள்ளலாம் , அல்லது உங்களுக்கு பிடித்த கடவுள் என்று வைத்து கொள்ளுங்கள் , அல்லது மஹா சக்தி என்று வைத்து கொள்ளுங்கள் .
உங்களுக்கு தெரியுமா ?
உலகில் சம்பாதிக்கபபடும் மொத்த பணத்தில் தொண்ணூற்றாறு சதவிகிதத்தை , உலகில் உள்ள மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் வகிபவர்கள் மட்டுமே சம்பாதிகிறார்கள், அவர்களுக்கு நமக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?அவர்கள் எதோ ஒன்றை புரிந்து வைத்து இருகிறார்கள் , நமக்கு அது தெரியவில்லை ? அது என்ன வென்று இனி வரும் தொடர்களில் நாம் பார்க்க போகிறோம் .
ஒத்தவை தன்னை ஒத்தவற்றையே ஈர்க்கும் என்பது விதி .அதன் விளைவாக மனப்போக்கு அதை ஒத்த சூழல்களை கண்டிப்பாக தன்பால் ஈர்க்கும் .
-சார்லஸ் ஹானால்
இன்னும் ஈர்க்கும் ...
No comments:
Post a Comment