Friday, January 16, 2015

வாஸ்துவின் அடிப்படை விதிகள்!

ஒரு வீடோ அல்லது தொழில் நிறுவனமோ அமைக்கப்படும்போது அதனை வாஸ்து விதிகளுக்கு உட்படுத்தி அமைப்பது சிறந்தது. 

வாஸ்துவில் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஆறு அடிப்படை விதிகள். அவை,

(1) ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம்.

(2) ஒரு கட்டடம் கட்டும் போது தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் அவசியம்.

(3) ஒரு இடத்தின் வடகிழக்கு பகுதி பள்ளமாகவும் / கனமில்லாமலும், தென்மேற்கு பகுதி உயரமாகவும் / கனமாகவும் இருத்தல் அவசியம்.

(4) ஒரு இடத்திற்கு அமைக்கப்படும் தலைவாசல் கட்டாயம் உச்சத்தில் தான் இருக்க வேண்டும்.

(5) உட்புற மற்றும் வெளிப்புற படிக்கட்டுகள் அமைக்கப்படும் நிலையை அறிவது அவசியம்.

(6) ஒரு இடத்தின் தெருக்குத்து மற்றும் தெரு தாக்கம் பற்றி அறிவது அவசியம்.

1.வாஸ்து முறைப்படி வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் அமைப்பது எப்படி:- (Car Parking)

நம் அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் வெவ்வேறு இடத்திற்கு செல்ல ஒவ்வொருவரும் வாகனங்கள் பயன்படுத்துகின்றோம். நாம் வசிக்கும் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக தனி இடத்தை அமைக்கின்றோம். அவ்வாறு அமைக்கப்படும் இடத்தை வாஸ்துப்படி சரியான முறையில் அமைக்க வேண்டும்.

* ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் எந்த பகுதியையும் / முனையையும் உடைத்து போர்டிகோ அமைக்க கூடாது.

* ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தை ஒட்டி அமைக்கப்படும் போர்டிகோ Cantilever முறையில் தூண் (Pillar) இல்லாமல் அமைக்க வேண்டும்.

நம் அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் வெவ்வேறு இடத்திற்கு செல்ல ஒவ்வொருவரும் வாகனங்கள் பயன்படுத்துகின்றோம். நாம் வசிக்கும் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக தனி இடத்தை அமைக்கின்றோம். அவ்வாறு அமைக்கப்படும் இடத்தை வாஸ்துப்படி சரியான முறையில் அமைக்க வேண்டும்.

* ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் எந்த பகுதியையும் / முனையையும் உடைத்து போர்டிகோ அமைக்க கூடாது.

* ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தை ஒட்டி அமைக்கப்படும் போர்டிகோ Cantilever முறையில் தூண் (Pillar) இல்லாமல் அமைக்க வேண்டும்.

* ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) அந்த இடத்தில் கட்டப்படும் தாய் சுவரையும், மதில் சுவரையும் தொடாமல் தனியாக அமைக்க வேண்டும்.

* ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) - மேல்கூரை (Roof) சமமாக அல்லது தெற்கு / மேற்கு உயர்த்தியும் வடக்கு / கிழக்கு தாழ்த்தியும் அமைக்க வேண்டும்.

2. மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள்

இயற்கையின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள். மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயுவான அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் தான் இவைகள்.

ஒரு புல் கூட கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை. அப்படி இருக்க ஒரு மரம் எந்த அளவு பலன் கொடுக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. 

இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. மழையை வருவிக்கும் வருணபகவானாக மரங்களும், செடி, கொடிகளும் உள்ளன.

நம்மால் ஒரு காட்டை உருவாக்க முடியாது. குறைந்தது ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க முடியும். அப்படி வளர்ப்பதால் நம் வீட்டிற்குத் தேவையான நிழல், குளுமை கிடைப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் நல்லது.

கொஞ்சம் நேசம், கொஞ்சம் மெனக்கெடல், கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் போதும், எல்லோரும் பசுமையைப் பயிரிடலாம். உடலுக்கும் பயிற்சி. அழகுக்கு அழகு. குழந்தைகளுக்கும் தொலைக்காட்சியிலிருந்து விடுதலை

• ஒரு வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் மரம், செடி, கொடிகள் அமைக்க வேண்டும்.

• ஒரு வீட்டின் தென்மேற்கு பகுதியில் உறுதியான உயர்ந்த மரங்களை வளர்ப்பது சிறப்பானது.

• ஒரு வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மரம், செடி, கொடிகள் அமைக்கக்கூடாது

3. வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை

கடந்த பல ஆண்டுகளாக நடத்திய நீர் பற்றிய ஆராய்ச்சியில், மனிதர்களுக்குத் தேவைப்படும் உயிர்ப்பாற்றலைக் கிரகித்து, அதனை மனிதர்களுக்கு வழங்கும் திறனைத் தண்ணீர் தன்னுள்ளே கொண்டிருப்பதால் உடல் நலத்தைப் பொறுத்தவரை தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. 

சக்தி ஊட்டப்பட்ட நீரில் குளிப்பது நன் மருந்தாகக் கருதப்படுகிறது. மனித உடம்பானது தோலின் மூலம் பிராண சக்தியை வெகுவேகமாகக் கிரகிப்பதாகக் கூறப்படுகிறது. பிராண சக்தியைப் பெற நீங்கள் ஒருநாள் முழுவதும் குடிக்கும் மொத்த நீர் இரண்டு லிட்டர் என்றால் பத்து நிமிடக் குளியலின் மூலம் அதே அளவு பிராண சக்தியைப் பெற முடியும். 

எனவே மிகுந்த சக்தி வாய்ந்த நீரைத் பயன்படுத்தி குடும்பத்தில் உள்ள எல்லோரும் நல்ல உடல் நலனைப் பெற ஒரு வீட்டில் / கட்டடத்தில் வசிக்கும் அனைவரும் ஆழ் துளை கிணறு மூலம் பெறும் நீரைத் தேக்கி வைக்க, அந்த வீட்டின் / கட்டடத்தின் மேல் தளத்தில் நீர்த் தேக்க தொட்டி (Over Head Tank) அமைப்பது உண்டு. அவ்வாறு அமைக்கப்படும் நீர் தேக்கத் தொட்டி சரியான முறையில் அமைக்க வேண்டும்.

* ஒரு வீட்டில் / கட்டடத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அந்த வீட்டின் / கட்டடத்தின் தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும். 

* ஒரு வீட்டில் / கட்டடத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அந்த வீட்டின் / கட்டடத்தின் வடகிழக்கு / வடமேற்கு / தென்கிழக்கு மூலையில் கண்டிப்பாக வரக் கூடாது.

4. ஜன்னல் அமைக்கும் முறை

ஓவ்வொரு மனிதனும் நோயற்ற வாழ்வு வாழ்வதற்குத் தூய்மையான காற்றும் சூரிய ஒளியும் மிக முக்கிய பங்கு ஆற்றுவது போல், ஒரு வீட்டில் / கட்டடத்தில் வசிக்கும் நபர்கள் வாழ்வில் சிறந்து விளங்க அந்த வீட்டிற்கு / கட்டடத்திற்குக் காற்றும் சூரிய ஒளியும் நன்கு உள்ளே வர வேண்டும். அப்படி வரவே நாம் ஜன்னல்கள் அமைக்கின்றோம்.

இவற்றை எவ்வாறு அமைக்க வேண்டும் எனப் பார்ப்போம்.

* ஒரு வீட்டில் / கட்டடத்தில் அமைக்கப்படும் ஜன்னல்கள் (Windows) உச்சத்தில் தான் அமைக்க வேண்டும்

* ஒரு வீட்டிற்கு / கட்டடத்திற்குக் கிழக்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் (Window), அந்த அறையின் வடக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும்

* ஒரு வீட்டிற்கு / கட்டடத்திற்கு வடக்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் (Window), அந்த அறையின் கிழக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும் 

* ஒரு வீட்டிற்கு / கட்டடத்திற்குத் தெற்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் (Window), அந்த அறையின் கிழக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும்

* ஒரு வீட்டிற்கு / கட்டடத்திற்கு மேற்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் (Window), அந்த அறையின் வடக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும்

* வடகிழக்கு பகுதியில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு திசையில் உள்ள ஜன்னல், 24 x 7 திறந்தே இருக்க வேண்டும்.

5. கழிவறை அமைக்கும் முறை

ஒவ்வொரு மனிதனும் தன் மனத்தைத் தூய்மையாக வைத்திருக்க எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து, நேர்மறையான சிந்தனைகளை நினைப்பது போல, தன் உடம்பை ஆரோக்கியமாக வைக்க, உடல் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற வேண்டும். அப்படிப்பட்ட கழிவுகளை வெளியேற்ற கூடிய இடமே கழிவறை ஆகும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கழிவுநீர்த் தொட்டி (Septic Tank) அமைப்பது எப்படி என்று பார்ப்போம்.

நாம் அன்றாடம் நமது உடலில் இருந்து வெளியேற்றும் கழிவுகள், கழிவறையில் இருந்து குழாய் மூலமாகவோ, கால்வாய் மூலமாகவோ, தனியாக அமைக்கப்பட்ட ஒரு தொட்டியில் வந்து சேரும். அப்படிப்பட்ட கழிவுகளைத் தேக்கும் தொட்டியே கழிவுநீர்த் தொட்டி ஆகும். 

கழிவுநீர்த் தொட்டி (Septic Tank) அமைக்கும் முறை:-

* ஒரு இடத்தில் அமைக்கும் கழிவுநீர்த் தொட்டியை, அந்த இடத்தின் வடமேற்கு - வடக்குப் பகுதியில் தான் அமைக்க வேண்டும். 

* ஒரு இடத்தில் அமைக்கும் கழிவுநீர் தொட்டியை அந்த இடத்தின் தாய்ச் சுவரையும் மதில் சுவரையும் தொடாமல் அமைக்க வேண்டும்.

* ஒரு இடத்தின் வடமேற்கு - வடக்குப் பகுதியில் அமைக்கும் கழிவுநீர்த் தொட்டியை, வடக்கு மதில் சுவருக்கு வெளியே, மதில் சுவரைத் தொடாமலும் அமைக்கலாம்.

* ஒரு இடத்தில் அமைக்கும் கழிவுநீர் தொட்டியை, அந்த இடத்தின் தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் கண்டிப்பாக அமைக்கக் கூடாது.

* கழிவறையில் இருந்து கழிவு நீர்க் குழாய் மூலம், கழிவுநீர்த் தொட்டிக்கு வரும் கழிவுகளில் அடைப்பு ஏற்பட்டால் பழுது பார்க்க அமைக்கப்படும் சிறிய தொட்டியை (Chamber), தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் அமைக்கக் கூடாது.

கழிவறை அமைக்கும் முறை:-

* ஒரு வீட்டில் கழிவறையை வடமேற்கு மூலையில் தான் அமைக்க வேண்டும்

* கழிவறையில் அமைக்கப்படும் கோப்பை (Closet)- யை வடக்கு <---> தெற்கு ஆகத் தான் அமைக்க வேண்டும் 

* கழிவறையின் தரைத் தளம், வீட்டின் தரைத் தளத்தை விட உயரமாக இருக்கக் கூடாது

* மேல்மாடியில் அமைக்கப்படும் கழிவறையின் தரைத் தளம் உயராமல் இருக்க, அதன் தளத்தை 1 அடி பள்ளமாக (Sunken Type) அமைப்பது சிறந்தது

6.. பொருட்கள் வைக்கும் அறை (Store Room) அமைக்கும் முறை

நாம் வசிக்கும் வீட்டில் / கட்டடத்தில் பொருட்கள் வைப்பதற்கென்று தனி அறை (Store Room) அமைப்பது உண்டு. பொருட்கள் வைப்பதற்காக அமைக்கப்படும் அறையை மிகுந்த கவனத்துடன் சரியான முறையில் அமைக்க வேண்டும். வாஸ்து அடிப்படையில் அதை எவ்வாறு அமைக்கலாம் எனப் பார்ப்போம்.

* ஒரு வீட்டிலோ / கட்டடத்திலோ அமைக்கப்படும் பொருட்கள் வைக்கும் அறையை (Store Room) அந்த இடத்தின் தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும்.

* ஒரு வீட்டில் / கட்டடத்தில் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சமையல் அறையில் அதன் தென்மேற்கு மூலையில் பொருட்கள் வைக்கும் அறையை (Store Room) அமைக்க வேண்டும்.

* ஒரு வீட்டில் / கட்டடத்தில் வடமேற்கு பகுதியில் உள்ள சமையல் அறையில் அதன் தென்மேற்கு மூலையில் பொருட்கள் வைக்கும் அறையை (Store Room) அமைக்க வேண்டும்.

* ஒரு வீட்டில் / கட்டடத்தில் எந்த ஒரு மூலையிலும் அதன் மேல் தளத்தைத் தாழ்வாக (Low Roof) அமைத்து, அந்த இடத்தை பொருட்கள் வைக்கும் அறையாக அமைக்கக் கூடாது.

* ஒரு வீட்டிலோ / கட்டடத்திலோ அமைக்கப்படும் பொருட்கள் வைக்கும் அறையை (Store Room) வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்கக் கூடாது.

* ஒரு வீட்டிலோ / கட்டடத்திலோ உபயோகம் இல்லாத பொருட்களைக் கிடங்கில் (Store Room) பாதுகாப்பதைத் தவிர்ப்பது நல்லது.

7. வீட்டில் படுக்கையறை அமைக்கும் முறை

உழைத்திடு, அமைதியாய் உறங்கிடு என்பதற்கேற்ப, மனிதர் ஒவ்வொருவருக்கும் அமைதியான உறக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.

ஒரு மனிதன் அமைதியான உறக்கம் பெற, வாஸ்து படி, வீட்டில் படுக்கையறையைச் சரியான முறையில் அமைத்திட வேண்டும். அது மட்டுமன்றி வீட்டில் உள்ள கணவன் - மனைவி உறவு நல்ல முறையில் இருந்திடவும் ஒரு வீட்டில் படுக்கையறையைச் சரியான முறையில் அமைத்திட வேண்டும். 

வீட்டில் படுக்கையறையை அமைக்கும்போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள்.

* ஒரு வீட்டில் கணவன் - மனைவி படுத்து உறங்கும் அறையை, வீட்டின் தென்மேற்குப் பகுதியில்தான் அமைக்க வேண்டும். வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் கட்டாயம் அமைக்கக் கூடாது.

* குழந்தைகளுக்கு மற்றும் வயது முதிந்ர்தவர்களுக்கு வடகிழக்குப் பகுதியில் படுக்கையறையை அமைத்துக்கொள்ளலாம்.

* படுக்கையறையில் படுக்கையைத் தென்மேற்கு மூலையில்தான் போட வேண்டும்.

* மேலும் படுக்கையறையில் போடப்படும் கழிவறை, வடமேற்கு மூலையில் போட வேண்டும்.

* படுத்து உறங்கும் போது வடக்கு திசையில் கட்டாயம் தலை வைத்து உறங்கக் கூடாது.

8. வா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை!

பொதுவாக வீட்டில் பூஜையறையை ஈசானிய மூலையில் அமைக்க வேண்டும் என்ற கருத்து பலரால் கூறப்பட்டு வருகின்றது. இந்த கருத்து முற்றிலும் தவறான ஒன்று. மேலும் வீட்டில் பூஜையறை அமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிகள்.

ஒரு வீட்டில் பூஜையறையை தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் தான் அமைக்கவேண்டும்.

பூஜையறையை கிழக்கு திசை பார்த்தவாரு அமைக்க வேண்டும்.

பூஜையறையை கட்டாயம் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் அமைக்கக்கூடாது.

9. கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (Sump) அமைக்கும் மூறை

இன்றைய காலகட்டதில் நீரின் பற்றாக்குறை அதிகரிப்பதை அடுத்து, ஒரு வீட்டிற்கோ, ஒரு தொழிற்சாலைக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ தங்களது தேவைக்காக கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பது அவசியமான ஒன்றாகும். வாஸ்து படி ஒரு இடத்தில் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் முறை.

ஒரு இடத்திற்கு கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை வடகிழக்கு பகுதியில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் அமைத்துக் கொள்ளலாம்.

கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஒரு கட்டடத்தின் தாய் சுவரையும், மற்றும் அந்த இடத்தின் மதிற்சுவரையும் ஒட்டாமல் அமைக்க வேண்டும்.

கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் பகுதி தரை தளத்தோடு சமமாக இருக்க வேண்டும்.

த‌விர, ஒரு இடத்தின் வடமேற்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் கட்டாயம் அமைக்ககூடாது. 

10. ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை...

ஒவ்வொரு இடத்திற்கும் அந்த இடத்தை சுற்றிலும் மதிற்சுவர் கட்டாயம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் வேலியாவது அமைக்கவேண்டும். 

மதிற்சுவர் என்பது ஒரு இடத்தினை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், வாஸ்து படி ஒரு இடத்திற்கும் மற்றொரு இடத்திற்கும் பிரிவை உண்டாக்கி அந்த இடத்தை அதன் தனித்தன்மையுடன் செயல்பட வைக்கிறது.

மதிற்சுவர் அமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள்.

ஒரு கட்டடம் கட்டும் முன் அதன் மதிற்சுவரின் நான்கு மூலைகளையும் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்கும்படி சரியாக அமைத்திடவேண்டும்.

11. க‌ட்டட‌த்‌தி‌ன் தலைவாசல் அமைக்கும் முறை!

நம் உடலுக்கு மூளை எவ்வளவு அவசியமான ஒன்றோ, அது போல் ஒரு கட்டடத்திற்கு தலைவாசல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு கட்டடம் எந்த திசையை நோக்கி இருந்தாலும் அதன் தலை வாசலை உச்சத்தில் அமைப்பது அவசியம். 


தலைவாசல் இருக்க வேண்டிய இடங்கள்:

12. வாஸ்து படி குழந்தைகள் படிக்கச் சிறந்த இடம் எது?

இன்றைய நவீன காலகட்டத்தில் கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியமான ஒன்றாகும். ஒரு வீட்டில் குழந்தைகளுக்கென படிக்க ஒரு தனி அறை அமைத்து கொடுக்க வேண்டியது அவசியமாகும். எனவே, இந்த அறையை அமைக்கும் முன் கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிகள்.

ஒரு வீட்டில் குழந்தைகள் படிக்கும் அறையை வடகிழக்கு பகுதியில் தான் அமைக்க வேண்டும் .

இந்த அறையில் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் நிறைய திறப்புகளுடன் (ஜன்னல்கள்) அமைக்க வேண்டும்.

குழந்தைகள் படிக்கும்போது கிழக்கு திசையை நோக்கியவாறு அமர்ந்து படிக்க வேண்டும்.

இந்த அறையில் கனமான பொருட்களை வைக்ககூடாது.

மேலும் இந்த அறையின் வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் அலமாரி, பரண்கள் போன்றவற்றை அமைக்ககூடாது. 

13. மாடிப்படி அமைக்க சிறந்த இடம் மற்றும் அமைக்கும் முறை

ஒரு இடத்திற்கு தலைவாசல் அமைப்பதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறோமோ அது போல்தான் ஒரு கட்டிடத்திற்கு படிக்கட்டு அமைக்கும்போது மிகவும் கவனமாக செயல்படவேண்டும். 

ஒரு இடத்தின் நல்ல செயல்பாடுகளுக்கும் தவறான செயல்பாடுகளுக்கும் ஒரு இடத்தில் அமைக்கப்படும் படிகட்டுகள் பெரும் பங்கு வகிக்கும். 

ஒரு இடதிற்கு உட்புறமாகவும் மற்றும் வெளிப்புறமாகவும் படிக்கட்டினை அமைக்கலாம் அவை வரக்கூடிய இடங்கள்.

ஒரு இடத்திற்கு உட்புறத்தில் படிக்கட்டு அமைக்க விரும்பினால் அதனை தெற்கு அல்லது மேற்கு பகுதி நடுவில் அமைப்பது சிறந்தது.

ஒரு இடத்திற்கு வெளிப்புறத்தில் படிக்கட்டு அமைக்க விரும்பினால் அதனை தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடமேற்கு முலையில் திறந்த வெளி படிக்கட்டு "கேண்டிலிவேர்" (Cantilever) முறையில் மட்டுமே அமைக்க வேண்டும்.

14. கிணறு, ஆழ்துளை கிணறு அமைக்கும் முறை

வாஸ்து விதி படி ஒரு இடத்தில் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு அமைக்கும் முறை:

ஒரு மனை எந்த திசையை பார்த்து இருந்தாலும் அந்த மனையில் கட்டாயம் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு வடகிழக்கு பகுதியில் தான் வரவேண்டும்.

ஒரு இடத்திற்கு பூமி பூஜை செய்த உடன் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு தோண்டுவது மிகவும் நல்லது.

ஒரு இடத்தின் வடகிழக்கு பகுதியில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் கட்டிடத்தின் தாய்சுவரையும், மதில்சுவரையும் ஒட்டாமல் அமை‌க்க வேண்டும்.

ஒரு கட்டிடத்திற்குள் கிணறோ அல்லது ஆழ்துளை கிணறோ கண்டிப்பாக அமைக்ககூடாது.

மேலும் ஒரு இடத்தின் வடமேற்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் கட்டாயம் அமைக்ககூடாது.

15. மின் இணைப்புப் பெட்டி (E.B Box) அமைக்கும் முறை

நாம் வசிக்கும் ஒரு வீட்டில் / கட்டடத்தில் இருள் நீங்கி வெளிச்சத்துடன் இருக்கவும், ஒரு வீட்டை / கட்டடத்தை வண்ண விளக்குகளால் மென்மேலும் அழகுபடுத்தவும் பற்பல இதர பணிகளுக்காகவும் மின் இணைப்பு தேவைப்படுகின்றது.

வாஸ்து அடிப்படையில் மின் இணைப்புப் பெட்டியை (E.B Box) எப்படி அமைக்கலாம் என்று பார்ப்போம்.

* மின் இணைப்புப் பெட்டியை ஒரு வீட்டின் / கட்டடத்தின் அக்னி மூலையான தென்கிழக்குப் பகுதியில் அமைக்கலாம்.

* மின் இணைப்புப் பெட்டியை ஒரு வீட்டின் / கட்டடத்தின் வாயு மூலையான வடமேற்குப் பகுதியிலும் அமைக்கலாம்.

* ஒரு வீட்டின் / கட்டடத்தின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் மின் இணைப்புப் பெட்டி (E.B Box) கட்டாயம் அமைக்கக் கூடாது.

* Inverter - ஐ ஒரு வீட்டின் / கட்டடத்தின் அக்னி மூலையான தென்கிழக்குப் பகுதியில் அமைக்கலாம்.

* Inverter - ஐ ஒரு வீட்டின் / கட்டடத்தின் வாயு மூலையான வடமேற்குப் பகுதியிலும் அமைக்கலாம்.

* ஒரு வீட்டின் / கட்டடத்தின் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதியில் Inverter கட்டாயம் அமைக்கக் கூடாது.

16. அடுக்கு மாடி (Appartment) வீடுகளி‌ன் அடிப்படை வாஸ்து விதிகள்!

அடுக்கு மாடி (Appartment) வீடுகளில் வடகிழக்கு மூலையில் உள்ள வீடுகளுக்கு மட்டும்தான் ஓரளவு வாஸ்து பொருந்தும். 

அடுக்கு மாடி (Appartment) வீடுகளில் பார்க்க வேண்டிய முக்கிய அடிப்படை வாஸ்து விதிகள். 

வடக்கு மற்றும் கிழக்கு பகுதி பொது சுவராக இல்லாமல் திறப்புகளுடன் இருக்க வேண்டும்.

தலை வாசல் உச்சத்தில் இருக்க வேண்டும். 

தாய்சுவரின் எந்த முனையும் உடையாமல் இருக்க வேண்டும்.

கழிவறை வடகிழக்கிலும், தென்மேற்கிலும் கண்டிப்பாக இருக்க கூடாது.

சமையலறை / பூஜையறை வடகிழக்கிலும், தென்மேற்கிலும் கண்டிப்பாக இருக்க கூடாது.

17.நன்மை தரக்கூடிய தெருக்குத்து...

நாம் வாஸ்து படி ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகும். அதில் முக்கியமாக, ஒரு இடத்தை வாங்கும் போது அந்த இடத்தில் ஏதேனும் தெருக்குத்து இருக்கிறதா என்பதை நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும்.


தெருக்குத்து என்பது ஒரு மனைக்கு எதிரில் தெரு இருந்தால் அது தெருக்குத்து எனப்படும். தெருக்குத்து இரண்டு வகைப்படும். அவை, நன்மை தரக்கூடிய தெருக்குத்து, நன்மை தராத தவறான தெருக்குத்து.

நன்மை தரக்கூடிய தெருக்குத்து,

வடகிழக்கு(வடக்கு) தெருக்குத்து.
வடகிழக்கு(கிழக்கு) தெருக்குத்து.
வடமேற்கு (மேற்கு) தெருக்குத்து.
தென்கிழக்கு(தெற்கு) தெருக்குத்து.


No comments:

Post a Comment