திடீரென்று , ஒரு மலையாள பத்திரிகை கொடுத்து படிக்க சொன்னால் , உங்களால் படிக்க முடியுமா? முடியாது இல்லையா... ஏன்? மலையாளம் படிக்கலை , அதனாலே நமக்கு புரியலை. அந்த மாதிரி இறைவன் ஒருவர் இருக்கிறதை நாம உணர்றதுக்கு நமக்கு உதவுவது தான் , கோவில்கள் , மந்திரங்கள், தியானம் இப்படிப் பல விஷயங்கள்.
நீங்க ட்ரெயின்லே போய்க்கிட்டு இருக்கிறீங்க . உங்களுக்கு ஹிந்தி தெரியும்னு வைச்சுப்போம்.. பக்கத்திலே ரெண்டு பேர் ஹிந்தி பேசுறாங்க..
என்னதான் நீங்க ஒரு புத்தகத்தை படிச்சுக்கிட்டு இருந்தாலும், உங்க காது , மனசு அவங்க பேசுறதை கவனிக்க ஆரம்பிக்கும்.. இல்லையா? நீங்க எதோ ஒரு வேலையா இருக்கிறீங்க ... அப்போ , உங்க பேர் சொல்லி , யாரோ ஒருவர் கூப்பிட்டதும், திரும்பி பார்க்கிறீங்க இல்லையா?
அதே மாதிரி - இறைவனை , அவனது கோவிலில் சென்று , நீங்கள் இந்த மந்திரங்கள் சொல்லி அழைக்கும்போது - அவனும் உங்களுக்கு செவி சாய்ப்பான்.. ராகு கால வேளையில் - லலிதா சஹஸ்ரநாமமோ, அல்லது சிவ ஆலயங்களில் ஸ்ரீ ருத்ரமோ, சமகமோ சொல்லும்போது - நீங்கள் அந்த பரம்பொருளால் நேரடியாக கவனிக்கப்படுவீர்கள்..... இது போதாதா ?
கடவுளை எப்படி வேண்டுவது?
உங்கள் தீராத பிரச்னைகளை , தீர்க்க சொல்லி - மனதில் மன்றாடுங்கள். உங்கள் குழந்தை ஒரு சில விஷயங்களில் அடம் பிடிக்குமே. சமயத்தில் , அந்த குழந்தை கேட்காமலே வாங்கி கொடுப்பீர்கள். சமயத்தில் , அது அழுது , முரண்டு பிடித்தாலும் - உங்களுக்கு அதை நிறைவேற்ற சக்தி இருந்தால் வாங்கி தருவீர்கள். இல்லையெனில் , உங்கள் இயலாமை , அந்த குழந்தைக்கு முதுகில் ஒரு அடியாக வெளிப்படும். அடித்த பிறகு , உங்களுக்கும் மனசு வலிக்குமே... !
இதில் ஒன்றை கவனியுங்கள். வேண்டும் ஒரு விஷயம் , கிடைக்க வேண்டும் என்பதற்காக - குழந்தை உங்கள் கவனத்தை திருப்புகிறது. அதற்குத் தெரியும், நீங்கள் மனது வைத்தால்... அந்த ஆசையை நிறைவேற்ற முடியும். அந்த கோரிக்கை , நியாயமானது எனில், நீங்கள் உடனே இல்லையெனினும், விரைவில் அந்த ஆசையை பூர்த்தி செய்ய முயலுவீர்கள்.. பிற்காலத்தில், ஒரு சில கெடுதல் ஏற்படும் விஷயங்கள் , என்று இருந்தால் - எப்பாடு பட்டாவது , அதை தடுக்க முயல்வீர்கள்.. இல்லையா?
அதே தான் சார்.. உங்கள் கோரிக்கை என்னவென்று மனதுக்குள் வேண்டுங்கள்.. கச்சா முச்சான்னு இருக்க வேண்டாம்.. ஒரே விஷயம்.. நியாயமான கோரிக்கையா இருக்கட்டும்.. !
உங்கள் ஆசையை நிறைவேற்ற யார் இருக்கிறா ? உங்கள் இஷ்ட தெய்வம்..
எப்படி , அந்த தெய்வத்தோட கவனத்தை உங்க மேல திருப்பப் போறீங்க? அடிக்கடி அந்த தெய்வத்தோட சன்னதிலே போய் நில்லுங்க.. பதிகம் பாடுங்க, ஸ்லோகம் சொல்லுங்க.. விரதம் இருங்க... ! மந்திரங்கள் எனக்கு புரியலையே என்று நீங்கள் வருத்தப்படாதீர்கள்.. I need something to eat ... என்று நீங்கள் புரியாமல் சொன்னால் கூட , ஆங்கிலம் தெரிந்த உங்கள் நண்பர் , உங்களுக்கு சாப்பிட ஏற்பாடு செய்வார்.. இந்த மந்திரங்கள் அனைத்தும், அவன் அருளால் , அவன் பக்தர்களுக்கு - சில நற்காரிய , காரணங்களுக்காக உருவானவையே.. ! அவனுக்கு இதன் அர்த்தம் நன்றாகவே புரியும் !
ஒரு ஆபீஸ்ல ப்ரோமோசன் வாங்குறதுக்கு நீங்க என்ன பாடு எல்லாம் படுறீங்க..? எவ்வளவு வித்தை எல்லாம் செய்யுறீங்க.. அதுக்கு அப்புறம் நீங்க தகுதி வாய்ந்தவர்ங்கிறதை அவங்க உணர்ந்துட்டா , உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்குது இல்லையா? அதே மாதிரி அத்தனை வித்தையையும், கடவுள் கிட்டேயும் நீங்க காட்டனும்.
கண்டிப்பாக திறமை மதிக்கப்படுவது போலே , உங்களுக்கும் இறைவன் முழு கருணை அளிப்பான்... சற்று தாமதம் ஆகலாம் .. ஆனால் , வெகுமதி நிச்சயம்.. நீங்கள் அவன் குழந்தை.. உங்களை ஏங்க வைத்து , அவன் சந்தோசம் அடையப்போவது இல்லை..
உங்கள் பெற்ற தாயிடம் வேண்டுவது போல , உரிமையுடன் - அந்த உலக மாதாவிடம் கேளுங்கள்.. ! தாய்க்கு கருணை ரொம்ப அதிகம்.. ! ஒரு எறும்பு , குருவி மேல் கூட பாசம் வைக்கும் அன்னை , உங்கள் மேல் இன்னும் பாசமுடன் இருப்பாள்.
தந்தை , உங்கள் திறமைக்கு ஏற்ப கொடுப்பவர். அதனால் , உங்கள் திறமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் எந்த துறையில் இருந்தாலும், அந்த துறையில் வல்லவராக முயற்சி செய்யுங்கள்.. குழந்தை திறமை சாலி எனில், முதல் ஆளாக ஊக்குவிப்பது தந்தை தான்.. !
என்ன தான் உமை அன்பைப் பொழிந்தாலும், ஈசன் உங்கள் திறமை வளர்க்க சந்தர்ப்பம் கொடுத்து , அதன் பின் உங்கள் ஆசை நிறைவேற செய்வான். !
அதனால் , அந்த பரம்பொருளின் கவனத்தை திருப்புங்கள். உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.. !
ஆசை பட்டது , கிடைக்கும்போது - மனம் அடையும் ஆனந்தத்திற்கு அளவு இல்லை.. !!
No comments:
Post a Comment