Wednesday, September 4, 2013

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க

 சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம்

ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.

எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது - அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் - சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி - கொடுமையாக தண்டிக்கிறார்.
 
ஆண்டவனுக்கு தெரியும். நமக்கு எது, எப்போ கிடைக்கனும்னு. மேல நடக்க வேண்டியதை பார்க்கலாம் பாஸு ! இதுக்கு மேல நீங்கதான் ராஜா! கலக்க போறீங்க. ....

இது எல்லாமே, சனி யால அவஸ்தை பட்டவங்களுக்கு நல்லா புரியும். மத்தவங்களுக்கு ஒரு காமெடியா தெரியலாம். கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் - யாரும் சனியோட கடுமையால பாதிக்க படக்கூடாதுங் கிறதுக்காக
ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்.


பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று
சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.

வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.

அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.

ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி - சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.


உடல், ஊனமுற்றவர்களுக்கு - காலணிகள், அன்ன தானம் - அளிப்பது , மிக நல்லது.

ஸ்ரீ ஆண்டாள்

ஸ்ரீஆண்டாள் தமிழ் நாட்டில் 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும்.

ஒரு குழந்தையாக, ஆண்டாள், துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர்.

தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். அவர் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை. இளம் வயதிலேயே சமயம், தமிழ் என்பன தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார்.

இதனால் கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார்.

தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்த பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன.

ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் பிடித்தவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டாராம்.

இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி'' என்றும் இறைவனை ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார். கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார்.

என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தாராம். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது கதை.

ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும், தத்துவம்,பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது. இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது.

இத்திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும். இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது.இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது.

இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாக காணப்படுகின்றது. ஆண்டாளின் இவ்விரு படைப்புகளும் தமிழ்நாட்டின் வைணவதலங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஓதப்படுகின்றது. வைணவ சமய வழிபாட்டில் ஒன்றறக் கலந்து விட்ட ஒன்று திருப்பாவையாகும்.

மாதவனாகிய எம்பெருமானுக்கு உகந்த மார்கழி மாதக் காலைகளில் அனைத்து வைணவக் கோயில்களிலும் இசைக்கப்படுவதே இதன் பெரும் சிறப்பு. தமிழில் புனையப்பெற்ற பாடல்களே ஆயினும், தமிழறியா அடியார்கள் கொண்ட வைணவத் தலங்களிலும், மார்கழி மாதக் காலைகளில் திருப்பாவை இசைக்கப்படுவதும், இந்தியாவில் எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப்பாகும்.

மொழி வேறுபாடின்றி, வைகுந்த நாதனின் வழிபாட்டில் இந்தியக் கண்டம் முழுவதும் விரவிக் காணப்படுவது திருப்பாவைத் தொழுகை. திருப்பாவையின் சிறப்பு முதன்மையாக அதன் பக்திப் பெருக்கு மட்டுமல்ல. பாற்கோவை முழுதும் விரவிக் கிடக்கும் கோதை மாதவன் பாற்கொண்ட தூய காதலமுதம் மற்றும் அதன் விளைவாய் அடியவருக்கும் அனைவருக்கும் அரும்பெரும் வரமாகக் கிடைத்த தமிழ் மணமாகும்.

ஸ்ரீமத் பகவத்கீதை

பாரத நாட்டின் இலக்கியத்தில் சிறந்த இடத்தைப் பெற்ற ஸ்ரீமத் பகவத்கீதை பாரதக் கலாசாரத்தின் உயிர்ச் சக்தியாக விளங்குகிறது. பகவத் கீதையில் அனைத்து உபநிஷத்துக்களின் சாரம் அடங்கியுள்ளது, மட்டுமில்லாமல் பாரதக் கலாசாரத்தின் சிறந்த வடிவமும் பரிசுத்தமான கண்ணாடியைப் போல் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனரின் உரையாடலின் மூலமாக அனைத்து மனிதர்களின் நன்மைக்காக, நல்லவர்களால் மிக்க ஆதரவுடன் சேவிக்கக்கூடிய பகவத்கீதை நல்வழியைக் காட்டுகிறது. இப்பேர்ப்பட்ட கீதை ஸம்ஸ்க்ருதத்தின் மூல ஆதாரமாகியுள்ள பல ரஹஸ்யமான அர்த்தங்களையும் எடுத்துரைக்கின்றது.
நமது பாரதக் கலாசாரத்தின் சிறப்பு என்னவென்றால், அனைத்திற்கும் தர்மமே மூலாதாரமாக நிற்கிறது. தர்மம் இரண்டு வகைப்படும் - சாமான்ய (சாதாரண) தர்மம், விசேஷ (அசாதாரண) தர்மம். அஹிம்ஸை, உண்மை, திருடாமலிருப்பது, சுத்தமாக இருப்பது, புலனடக்கம், தயை, மன்னிப்பு ஆகியவை சாதாரண தர்மம் எனப்படும். ஏனெனில் இவை எந்தவொரு குறிப்பிட்ட ஜாதிக்காகவோ, சம்ப்ரதாயத்தினர்களுக்காகவோ கூறப்படவில்லை, மொத்த மனிதர்களுக்காகக் கூறப்பட்டுள்ளன. அசாதாரண தர்மங்கள் குறிப்பிட்ட ஜாதி, மற்றும் வகுப்பினர்களின் பொருட்டு அவர்களுக்காகவே விதிக்கப்பட்டுள்ளன. சாதாரண தர்மங்களை அனுஷ்டிக்காமல் அசாதாரண தர்மங்களை அனுஷ்டித்தாலும் கூட பலன் ஏற்படாது. இந்த இரண்டு வகையான தர்மங்களுக்கும் சாஸ்த்ரம் மட்டுமே பிரமாணம் என்று கீதையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது -
(தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதொ)
சாஸ்த்ரத்தில் கூறப்பட்டதை மீறினால் இப்பூவுலகிலும், பரலோகத்திலும் நஷ்டம் தான் ஏற்படும் என்பதையும் கீதா சாஸ்த்ரத்தில் கூறியுள்ளதைப் பார்க்கலாம் -
(ய: சாஸ்த்ரவிதிமுத்ஸ்ர்ஜ்ய வர்ததே காமகாரத: ந ஸ ஸித்திமவாப்னோதி ந ஸுகம் ந பராங்கதிம்)


இப்போது உலகத்தில் பலவிதமான தர்மங்கள், சம்பிரதாயங்கள் நடைமுறையில் உள்ளன. அவையனைத்திலும் மனிதர்களால் பின்பற்றக்கூடிய கருத்துகளும் உள்ளன. அவற்றில் அடங்கியுள்ள கருத்துகள் சிலவற்றில் சிறிது குறைவாகவோ அல்லது சிறிது அதிகமாகவோ இருக்கலாம். ஆனால் நாம் சூக்க்ஷம பார்வையால் பாரதீய சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள தர்மங்களைப் பற்றி சிந்தித்தால், அந்த அனைத்துக் கருத்துகளும் பாரதீய சாஸ்திர பார்வையில் சாதாரண தர்மங்களுள்ளே அடங்கிவிடும். அனைத்து நாடுகளிலும் சுகத்தின், அமைதியின், நிறைவின், சமூகசகோதர மனப்பான்மையின் வளர்ச்சிக்காக அஹிம்சை, உண்மை முதலிய சாமான்ய தர்மங்கள் அடிப்படைத் தேவைகளாக உள்ளன. இந்த தர்மங்களைக் காப்பாற்றுவதற்கான உற்சாகம் நம்மிடத்தில் இல்லை. சுகம் - நிறைவுகளில் விருப்பமில்லை என்பது கலிகாலத்தின் லீலையாகும். இந்நாளில் அடிப்படையான இந்த தர்மத்திற்குக் குறை ஏற்பட்டுள்ளது, இதனால் மனிதசமுதாயம் எங்கும் கஷ்டத்தில் மூழ்கியுள்ளதைக் காணலாம். இன்று காம, க்ரோத, லோபங்களின் சாம்ராஜ்யம் மனித சமாஜத்தில் பலவிதமான பொருளாதாரச் சேர்க்கைகளுக்குக் காரணமாக உள்ளது. பாரதக் கலாசாரத்தில் அவற்றுக்கு இடமில்லை. பகவத்கீதையில் கூறுவதாவது -
(த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசனமாத்மன:
காம: க்ரோத: ததா லோப: தஸ்மாத் ஏதத்ரயம் த்ய«ஐத்)
தெய்வசம்பத்தையும் அசுரசம்பத்தையும் விரிவாகக் கூறுவதன் மூலம் கீதாசாஸ்திரம் மேற்கூறிய விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறது. சாத்வீகம் முதலிய குணபேதங்களால் மூன்று விதமான ஸ்ரத்தைகளைப் பற்றியும், புலனடக்க உபாயங்கள் பற்றியும் கூறியிருப்பது நன்மைக்காகத்தான் என்பதில் சந்தேகமில்லை.
எல்லாம் அறிந்த பரமேஸ்வரன் தான் நாம் செய்த கர்மங்களுக்குப் பலனளிப்பவன். அவனோ! பக்ஷபாதமில்லாமல், கர்மங்களை அனுசரித்து ப்ரஜைகளை சிருஷ்டி செய்கிறான். அப்போது பிராணிகளில் உச்ச, நீச எண்ணங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இவற்றின் அனைத்து செயல்பாடுகளும் சாஸ்திர ப்ரமாணங்களை மீறி சமமாக இருக்க இயலாது. கருணை சகோதரத்துவம் ஆகிய குணங்கள் எங்கும் சமமாக இருக்கவேண்டியவை. பகவத்கீதையில் கூறுவதாவது:
(ஆத்மொபம்யேந ஸர்வத்ர ஸமம் பச்யதி சோர்ஜுன
ஸுகம் வா யதி வா து:கம் ஸ யோகீ பரமோ மத:)
இவ்வாறு அந்தந்த வர்ணங்களுக்குச் சொல்லப்பட்ட விசேஷ தர்மங்களும் கூடி அந்தந்த தர்மங்களுக்குத் தகுதி பெற்ற மக்களின் நன்மைக்காகப் பயன்படுகின்றன. இது இவ்வாறு கூறப்பட்டுள்ளது -
விசேஷ தர்மங்களைக் குறித்தே இந்த கீதாவாக்யம் சொல்லப்பட்டுள்ளது.
(ஸ்வதர்மே நிதம் ஸ்ரேய: பரதர்மோ பயாவஹ:)
ஆக பாரதக் கலாசாரத்தை நிலை நிறுத்துவதில் கீதாசாஸ்திரத்தின் பங்களிப்பு மிக உயரியதாகும்.
சம்ஸ்கிருதத்தின் எழுச்சிக்கும் பகவத்கீதையின் பங்களிப்பு மிக உன்னதமானது. அனைத்து மொழிகளின் வளர்ச்சியானது அந்தந்த இலக்கியத்தின் பயன்பாட்டினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மொழியில் உள்ள நூல்களின் கருத்துகளைப் பிரசாரம் செய்வதால் அந்தந்த மொழிகளின் எழுச்சியானது வளர்ச்சியடையும். இவ்வாறு இருந்தபோதிலும் சரளமான சம்ஸ்கிருத மொழியில் அமைந்துள்ள இந்த கீதா சாஸ்திரம் “சிந்தாமணியைப் போல்” சகல விதமான நன்மைகளையும் அடையக் காரணமாகி, பிரசாரத்தை அடைந்து, சம்ஸ்கிருதத்தின் எழுச்சிக்கும் உறுதுணையாக உள்ளது.

வெற்றி பெற வள்ளுவர் கூறும் வழிகள்

எண்ணத்தில் உறுதி,

விடாமுயற்சி ,

வேண்டிய பொருள்,

ஏற்ற கருவி,

தக்க காலம்,

மேற்கொண்ட செயலின் தன்மை,

உரிய இடம்

ஆகிய ஐந்தினையும் குழப்பம் இல்லாமல் சிந்தித்து செயல் புரிய வேண்டும்.

இந்த ஐந்தில் ஒன்றில் குழப்பம் இருந்தால் கூட அது வெற்றி வாய்ப்பை பாதிக்கும்.

காலம் நீடித்தல்,

மறதி,

சோம்பல்,

அளவுக்கு மீறிய தூக்கம்

இந்த நான்கும் வெற்றியை பாதிக்கும் முக்கிய காரணிகள் ...

கோ பூஜை

நமது நாட்டில் ‘கோ’ எனும் பசு மாட்டைத் தாயாகவும், கடவுளாகவும் வணங்குகின்றோம். பசுவானது தன்னுடைய கன்றுக்கும் பால் கொடுத்து உலகத்திற்கும் பால் கொடுப்பதால் கோமாதாவாகவும், பசுமாட்டின் எல்லா உறுப்புகளிலும் இந்திரன் முதலான தேவதைகள் இருப்பதால் கடவுளாகவும் வணங்குகிறோம்.
உயிருடன் தானம் செய்யக்கூடிய ஒரே ஒரு பிராணி பசுமாடு மட்டுமே ஆகும். சுத்தம் செய்யக் கூடிய கழிவுப் பொருள் பசுவினது கோமயம் மட்டுமே ஆகும். கோவதம் என்கிற பசுவினைக் கொல்லும் செயல் ப்ராயச்சித்தம் இல்லாத ஐந்து மஹா பாபங்களில் ஒன்றாகும். “தாய் - மாத்ரு” “சிசு = குழந்தை” “ப்ராஹ்மணன்” “கரு” ஆகியவற்றை நாசம் செய்தால் அதற்குப் பரிஹாரம் இல்லை. அதைப் போல் பசுவைக் கொன்றாலும் அந்தப் பாபத்திற்கு ப்ராயச்சித்தம் இல்லை.
இவ்வளவு குணங்கள் உடைய பசுமாட்டினை நாம் கடவுளாக வணங்குவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. முதல் கன்று பிரசவித்தவுடன் அதற்கு “கோ” என்று பெயர் கிடையாது. அதற்கு “தேனு” என்று பெயர். “தேனுர் நவப்ரஸுதிகா” என்று அமரகோசத்தில் குறிப்பிட்டுள்ளது. தானத்திற்கோ பூஜைக்கோ தேனுவை உபயோகப்படுத்துவதில்லை என்ற பழக்கம் நடைமுறையில் உள்ளது.
ஆகவே இரண்டாவது கன்றினை ஈன்ற பசுவான “கோ”வை பூஜிப்பதும், தானம் செய்வதும் அஷ்டலக்ஷ்மி கடாக்ஷத்திற்கும், எல்லாப் பாபங்களையும் போக்குவதற்கும் மிகச் சிறந்த பிராயச்சித்தமாக பல தர்ம சாஸ்த்ர நூல்களில் கூறப்பட்டுள்ளது. தமிழ்ப் பண்டிகையான பொங்கலன்று அதாவது மாட்டுப்பொங்கல் நாளன்று கோ பூஜை செய்வது வழக்கமாக நடைமுறையில் இருக்கிறது. பண்டிகை இல்லாமல் காம்யமாகவே கோ பூஜை செய்யலாம்.


க்ருஹப்ரவேசம் முதலான விசேஷங்களுக்கும் கோ பூஜை உண்டு. கோவினுடைய பாதம் பட்ட வீட்டில் செல்வம் அளவற்றதாகவே இருக்கும். வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒரு ஜீவ பசுவை தானம் செய்ய வேண்டும். சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற விசேஷங்களில் கோதானம் என்பது ஓர் அங்கமாகவே இருக்கின்றது. தானம் செய்கின்றபோது “கொம்பு”, “வால்” “கழுத்து” “குளம்பு” முதலிய இடங்களில் தங்கம், ரத்னங்கள், சேர்ந்த ஆடை ஆபரணங்களை அலங்காரமாக அணிவித்து வயிற்றுக்கு பட்டு வஸ்த்ரத்தைச் சாற்றி பசுவிற்கு பூஜை செய்து கயிற்றை வாங்குகின்றவன் கையில் கொடுத்து தானம் செய்வது தான விதிகளில் கூறப்பட்டுள்ளது.
கோ பூஜையில் பூமாலை, வஸ்த்ரம், ஆகியவற்றைச் சாற்றி பசுவிற்கு பூஜை செய்வது வழக்கம். மற்ற தேவதைகளுக்குச் செய்யும் உபச்சாரங்கள் கோ பூஜையிலும், எல்லா தேவதைகளுக்கும் பாதங்களிலும், முகத்திலும் செய்யும் உபகாரங்கள் பசுமாட்டிற்கு மட்டும் பின்பகுதியில் செய்ய வேண்டும். நைவேத்யம் மட்டும் வாய் வழியாகக் கொடுக்க வேண்டும். கோ பூஜையில் காமதேனு என்ற தேவதையை மஹாலக்ஷ்மியின் உருவமாக த்யானம் செய்து ஆவாஹனம் செய்து, பிறகு ஜல, கந்த, புஷ்ப, தூப, தீபம் வரை லக்ஷ்மீ மந்த்ரங்களால் உபசாரம் செய்து நைவேத்யம், அப்படியே மாட்டினையும் சாப்பிடச் செய்ய வேண்டும்.
பசு மாட்டின் வாயில் மற்ற தேவதைகள் இருப்பதைப் போல "ஜ்யேஷ்டா” என்ற கலி தேவதை இருப்பதால் முகத்திற்கு பூஜை உபசாரங்கள் செய்வது விதிக்கப்படவில்லை.
இவற்றுடன் சேர்ந்து மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரங்கள் வேதத்தில் இருக்கும் ஸ்ரீஸூக்தம் முதலியவற்றை ஜபம் செய்யலாம். கோ பூஜைக்கு கன்றுக்குட்டியானது பசுவுடன் கூடவே இருக்கவேண்டும். sஸ்ஜிsணீனு ரீணீனீ! “ஸ வத்ஸாம் ச காம்” என்ற வார்த்தைக்கு “கன்றுடன் இருக்கும் பசுவினை” என்று பொருள். இப்படிப்பட்ட மாடுதான் பூஜைக்குரியதாகும்.
நமது நாட்டில் கோ பரிபாலனம், “கோ சேவை” முதலானவை சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் பசு வதை தடுப்புச் சட்டம் இருக்கின்றது.
நேபாளத்தில் தேசிய விலங்காக பசுதான் அறிவிக்கப்பட்டிருந்தது. பகவான் கண்ணபிரானுக்குப் பிடித்த பிராணியே பசுமாடாகும். அவர் தனது பெயரை “கோபால கிருஷ்ணன்” என்று அழைக்கும்படி செய்தார்.
பழைய காலத்தில் ஒரு பழமொழி இருந்தது. “பெண்ணாகப் பிறந்தால் பசுவாகப் பிறக்க வேண்டும்” ஏனென்றால் பால்சுரக்கும் வரையாவது ஒருவரின் ஸம்ரக்ஷணையில் பூஜை புனஸ்கார மரியாதைகளுடன் வாழ்க்கையைக் கழிக்கலாம். ஆகையால் கோ பூஜை, தானம், சேவை முதலானவை நமது நாட்டின் பண்பாடாகவே அமைகின்றது.

Tuesday, September 3, 2013

உறவுகள் மேம்பட……

1. எந்த விஷயத்தையும் பிரச்சனையயும் நாசூக்காக கையாளுங்கள்.
(Diplomacy)விட்டுக் கொடுங்கள்.(Compromise)


2. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான்
ஆக வேண்டும் என்று உணருங்கள்.(Tolerance)

3. நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.
(Adamant Argument)

4.குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.(Narrow Mindedness)

5,.உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை
அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும்
விடுங்கள்.(Carrying Tales)

6. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி
நினைத்து கர்வப்படாதீர்கள்.(Superiority Complex)

7. அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
(Over Expectation)

8.எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு
சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

9. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.

10. அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

11. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல்
கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.(Flexibility)

12.மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற
நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.(Misunderstanding)

13.மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும் இனிய இதமான
சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.(Courtesy)

14. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை
சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

15.பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும்
தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்துஅடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

16.அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

17.பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர
வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள்.
-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திருமாலின் தச அவதாரங்கள்

பரிணாமக் கோட்பாட்டின் தந்தை எனப்படுபவர் சார்லஸ் டார்வின்.

உயிரினங்கள் நீரினில் உருவாகி பல்வேறு மாற்றங்களை அடைந்து மனிதன்என்ற நிலையை அடைந்நதது என்பது டார்வினின் கோட்பாடு.
டார்வினின் கோட்பாடு வெளிவருவதற்கு முன்பே பல நுhற்றாண்டுகளுக்குமுன்பே இந்திய இலக்கியங்களில் பரிணாமக் கோட்பாடு பற்றிய விவரங்கள்காணப்படுகின்றன.

அந்த விவரங்கள் பக்தி இலக்கியங்களில் காணப் படுவதால் பக்தியாகமட்டுமே, மத ரீதியாக மட்டுமே, பார்க்கப் பட்டு விட்டதால் அதில் உள்ளஉண்மைத்தன்மை இந்த உலகத்திற்கு தெரிய முடியாமல் போய் விட்டது.

டார்வினின் பரிணாமக் கோட்பாடு இந்திய இலக்கியங்களில் எவ்வாறுகுறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிப் பாரப்போம்.

திருமாலின் அவதாரங்கள் பத்து எனக் குறிப்பிடப்படுகின்றன்.

அவை ,

1. மச்ச அவதாரம்

2. கூர்ம அவதாரம்

3. வராக அவதாரம்

4. நரசிம்ம அவதாரம்

5. வாமன அவதாரம்

6. பரசுராம அவதாரம்

7. ராம அவதாரம்

8. பலராம அவதாரம்

9. கிருஷ்ண அவதாரம்

10. கல்கி அவதாரம்


1. மச்ச அவதாரம் :

(மச்சம் என்றால் மீன்)

மீன் நீரினில் வசிக்கும் உயிரினம் .

பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் முதன் முதலில் நீரில் தோன்றியது என்பதைக் குறிப்பதே மச்ச அவதாரம் ஆகும்.

2. கூர்ம அவதாரம் :

(கூர்மம் என்றால் ஆமை)

ஆமை நீரிலும் வாழும் நிலத்திலும் வாழக் கூடிய ஒரு உயிரினம் .

நீரில் வாழ்ந்த உயிரினங்கள நீரானது வற்றிப் போன காலங்களில் நிலத்திலும்வாழ்வதற்குரிய மாற்றங்களை உடல் அமைப்பில் பெற்று காலப்போக்கில்நீரிலும் , நிலத்திலும் வாழ்வதற்குரிய தகவமைப்பைப் பெறுகிறது.

தகவமைப்பு என்பது குறிப்பிட்ட ஒரு சூழலுக்கு ஒத்துப்போகும் வண்ணம்மாற்றிக் கொள்ளுதல்.

பரிணாம வளர்ச்சியில் நீரில் வாழ்ந்த உயிரினங்கள் கால மாற்றத்திற்குதகுந்த படி நீரிலும் , நிலத்திலும் வாழ்வதற்கரிய உடல் அமைப்பைப் பெற்றனஎன்பதைக் குறிப்பதே கூர்ம அவதாரம்.

3. வராக அவதாரம் :

(வராகம் என்றால் பன்றி)

நீரிலும் , நிலத்திலும் வாழ்ந்த உயிரினங்கள் நீரானது வற்றிப் போனகாலங்களில நிலத்தில் மட்டுமே வாழ்வதற்குரிய தகவமைப்பைப் பெறுகிறது.

பன்றி நிலத்தில் வாழும் ஒரு உயிரினம். ஆனால் அது நீரில் வாழ்ந்த அதன்பதிவுகள் கலையாத காரணத்தினால் அதன் பதிவுகளின் துhண்டுதலினால்அடிக்கடி போய் சாக்கடையில் போய் படுத்து கொள்கிறது.

பரிணாம வளர்ச்சியில் நீரிலும் , நிலத்திலும் வாழ்ந்த உயிரினங்கள் நிலத்தில்மட்டுமே வாழ்வதற்குரிய தகவமைப்பைப் பெற்றன என்பதைக் குறிப்பதேவராக அவதாரம் ஆகும்.

4. நரசிம்ம அவதாரம்:

நரன் என்றால் மனிதன் சிம்மம் என்றால் சிங்கம். நரசிம்மம் என்றால்மனிதனும், சிங்கமும் சேர்ந்தது என்று பொருள்.

சிங்க தலையும், மனித உடலும் சேர்ந்தது தான் நரசிம்மம். பரிணாமவளர்ச்சியில் விலங்கிலிருந்து மனிதன் வரும்போது விலங்கின் உடலும்,மனிதன் உடலும் சேர்ந்து தான் இருந்தது.

அதைக் குறிப்பிடுவதே சிங்க தலையும், மனித உடலும் ஆகும்.
நாளடைவில் தான் முழு மனிதன் உடல் உருவானது.

பரிணாம வளர்ச்சியில் விலங்கிலிருந்து மனிதனாக மாற்றம் அடையும்போது விலங்கும், மனிதனும் சேர்ந்த நிலை தான் இருந்தது என்பதைக்குறிப்பதே நரசிம்ம அவதாரம்.

5. வாமன அவதாரம் :

வாமன அவதாரம் மூன்று அடி அளவு தான் உடையது.
பரிணாம வளர்ச்சியில் விலங்கிலிருந்து மனிதனாக அதாவது முழுமையானமனிதனாக மாற்றம் அடையும் போது முதன் முதலில் குள்ளமாகமூன்றடிக்குள் தான் இருந்தான் என்பதைக் குறிப்பதே வாமன அவதாரம்.

6. பரசுராம அவதாரம் :

மனிதன் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக காட்டு மரங்களைவெட்டியும்,

தன் பசியை தீர்த்துக் கொள்வதற்காக காட்டு விலங்குகளைவேட்டையாடியும் காட்டில் உயிர் வாழ்ந்தான்

பரிணாம வளர்ச்சியில் காட்டில் வாழ்ந்த மனிதன் காட்டில் உயிர்வாழ்வதற்கும்,
தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கும்,
ஏற்ற விதத்தில் கையில் கோடாரி வைத்திருந்த மனிதனாக பரசுராமஅவதாரத்தை உருவகப் படுத்தி வைத்திருக்கிறார்கள் .

7. ராம அவதாரம் :

காட்டில் வாழ்ந்த மனிதன் நாட்டில் தனக்கென்று ஒரு இராச்சியத்தைஉருவாக்கிக் கொண்டு, அரசாட்சி செய்தான்.
நாட்டில் வாழ்ந்த மனிதன் தன் பதிவின் காரணமாக பதிவின் பாதிப்புகாரணமாக காட்டில் சுற்றி திரிந்தான்

நாட்டில் இருந்த ராமர் சீதையை தேடி காட்டில் அலைந்தது இதன்அடிப்படையில் தான்.

பரிணாம வளர்ச்சியில் காட்டுக்குள் வாழ்ந்த மனிதன் நாட்டில் வந்துவாழ்ந்ததைக் குறிப்பதே ராம அவதாரம் ஆகும்.

8. பலராம அவதாரம் :

நாட்டில் வாழ்ந்த மனிதன் தன் பசியின் தேவையை தீர்த்துக் கொள்வதற்காகஉழுது பயிரிட்டு விவசாயம் செய்து வாழ்ந்தான் பலராமர் விவசாயம்செய்வதற்கு ஏற்ற விதத்தில் கலப்பையை கையில் வைத்திருக்கிறார்.

பரிணாம வளர்ச்சியில் நாட்டில் வாழ்ந்த மனிதன் விவசாயம் செய்துவாழ்ந்தான் என்பதைக் குறிப்பதே பலராமர் தன் தோளில் சுமக்கும் கலப்பைஆகும். இதுவே பலராமர் அவதாரம் ஆகும்.

9. கிருஷ்ண அவதாரம் :

கிருஷ்ண அவதாரம் என்பது அறிவு முதிர்ச்சியடைந்த நிலை ஆகும்
தீமைகள் பெருகி விட்ட நிலையில் தான் வாழ பிறரையும் அழிக்கலாம் என்றநிலை உருவாகி இருந்த நிலையில், அந்த நிலையை மாற்ற எத்தகையநிலையை பின்பற்றலாம் என்பதைக் குறிக்கிறது.

பரிணாம வளர்ச்சியில் மனிதனின் சிந்திக்கும் திறன் எத்தகைய வழிகளில்செயல்படுகிறது என்பதைக் குறிப்பதே கிருஷ்ண அவதாரம் ஆகும்.

10. கல்கி அவதாரம் :

பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் சூரிய குடும்பத்தில் வேறுஏதேனும் கிரகத்தில் வாழ முடியுமா என்று முயற்சி செய்துகொண்டிருக்கிறான்

குதிரையில் ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான் குதிரையின்பின்னங்கால்கள் இரண்டும் தரையிலும் முன்னங் கால்கள் இரண்டும்

பூமியில் படாமல் மேல் நோக்கி துhக்கி இருப்பதைப் பார்க்கலாம் இது மனிதன்வேறு கிரகத்தில் சென்று வசிக்க இடம் தேடுவதைக் குறிக்கிறது.

பரிணாம வளர்ச்சியில் மனிதன் பூமியில் இருந்து வேறு கிரகத்திற்கு சென்றுவசிக்க இடம் தேடுவதைக் குறிக்கிறது.

டார்வின் சொல்லும் பரிணாமக் கோட்பாட்டை நம் இலக்கியங்கள் முன்பேசொல்லி இருக்கின்றன.

மதம் பக்தி நீக்கி பார்த்தால் ஆழ்ந்த அறிவியல் அறிவு நம் முன்னோர்களுக்குஎப்படி இருந்ததை என்பதையும், அதை புரிந்து கொள்ளும் சக்தி நமக்குஇல்லை என்பதையும் குறிக்கிறது .





Monday, September 2, 2013

ஹோரை அட்டவணை


மணி-முதல்  
ஞாயிறு  
திங்கள்  
செவ்வாய்  
புதன்  
வியாழன்  
வெள்ளி  
சனி  
  6.00 - 7.00
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன் 
சனி  
  7.00 - 8.00
 சுக்ரன் 
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
  8.00 - 9.00
 புதன் 
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
  9.00 -10.00
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
10.00 -11.00 
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
11.00 -12.00 
குரு  
 சுக்ரன் 
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
12.00 -01.00
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
01.00 -02.00 
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
02.00- 03.00 
சுக்ரன் 
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
 குரு 
03.00-04.00 
புதன்  
 குரு 
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
04.00-05.00 
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
05.00-06.00
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
06.00 -07.00
குரு 
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
07.00 -08.00
செவ்வாய் 
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
08.00 -09.00
சூரியன் 
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
09.00 -10.00
சுக்ரன் 
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
10.00 -11.00 
புதன் 
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
11.00 -12.00 
சந்திரன் 
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
12.00 -01.00
சனி 
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
01.00 -02.00 
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
02.00- 03.00 
செவ்வாய் 
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
 03.00-04.00 
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
 04.00-05.00 
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  
புதன்  
குரு  
 05.00-06.00
புதன்  
குரு  
சுக்ரன்  
சனி  
சூரியன்  
சந்திரன்  
செவ்வாய்  


ஹோரை அறிந்து நடப்பவனை . யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. அப்படிப் பட்ட ஒரு மகத்தான விஷயம் பற்றி நாம் இன்று பார்க்க விருக்கிறோம். இது உங்களுக்கு அளப்பரிய பலன்கள் தரும்.

ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது.

பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.

சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர்.

அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர்.

இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.

இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் - இந்த ஹோரைகளில் துவங்கலாம்.

ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை.

இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்.

இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும்.

பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.

6 - 1- 8 - 3

இந்த வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். காலை 6 மணிக்கு வரும் ஓரை , திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும் , பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும்.

சூரிய ஓரை :

சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல், போன்ற பெருந்தலைகளை சந்திக்கும் காரியம் செய்யலாம்.

இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.

சுக்கிர ஓரை :

சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.

புதன் ஓரை :

கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஓரையில் காணாமல் போகும் பொருள் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.

சந்திர ஓரை :

வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது.

இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம். இந்த ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்.குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.

சனி ஓரை :

இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.

உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.

குரு ஓரை :

 எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஓரை சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் . உடனே கிடைத்து விடும்.

செவ்வாய் ஓரை

செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் . அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.தாமதித்தால் கிடைக்காது.

===================================================

ஒரு சிறந்த ஜோதிடராக நீங்கள் ஹோரை சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமும் உண்டு. நவ கிரகங்களில் - ஒன்றுக்கொன்று கடும் பகை கிரகங்களும் உண்டு. அல்லவா ? அதையும் நீங்கள் மனதில் கொண்டு , ஹோரை தேர்ந்தெடுங்கள். என்னதான் குரு ஓரை சுப ஓரை என்றாலும், வெள்ளிக் கிழமை - குரு ஹோரை தேர்ந்தெடுக்க வேண்டாம்.

சரி, நிஜமாகவே இந்த ஹோரையின் செயல்பாடு அறிய - நீங்களே ஒரு சில விஷயங்களில் , துவங்கிப் பாருங்கள். வியந்து போவீர்கள். மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.

குறிப்பாக கணவன் , மனைவி ஏதாவது வாக்குவாதம் செய்யத் துவங்கினால் , செவ்வாய் அல்லது சனி ஓரை வந்தால், அடக்கி வாசியுங்கள். அது மிகப் பெரிய சண்டையாகிவிடும். கணவன் . மனைவி என்றில்லை. மற்றவருக்கும் பொருந்தும். ஆதலால் , காலத்தின் இந்த ரகசிய கணக்கு - நீங்களும் தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை...

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் - மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.