Friday, August 30, 2013

மந்திரங்கள் எப்படி செயல்படுகின்றன?


மந்திரங்கள் எப்படி பலன் தருகின்றன?

இந்த வலைப்பூவை இப்போது நீங்கள் வீட்டில் உள்ள உங்களது மடிக்கணினியிலோ(லேப்டாப்),அல்லது இணையதள மையத்திலோ(பிரவுசிங் சென்டரிலோ)வாசிக்கிறீர்கள்.இந்த இடத்தில்
செல்போன் அலைகள் இருப்பது நிஜம்தானே?  செல்போன் அலைகள் 24 x 7 என்ற அளவில் பரவிக்கொண்டே இருக்கின்றன. அதற்குரிய செல்போன் நாம் வாங்கி இயக்கத்தில்(on செய்து) வைத்திருந்தால் நமக்கு மற்றவரின் அழைப்பு வருகிறது.அதே போலத்தான். நாம் குழந்தையாக பிறந்தது முதல் 9 கிரகங்களின் கதிர்வீச்சு நம் மூளையை விண்வெளியிலிருந்து
வந்தடைந்து கொண்டே இருக்கின்றன. இத்தனாம் வயதில் இது நிகழும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது.ஒரு எதிர்பாராத பிரச்னை அல்லது விபத்திலிருந்து தப்பிப்பதற்கு மந்திர ஜபம் அல்லது குறிப்பிட்ட சித்தர் வழிபாடு அல்லது மகான் வழிபாடு அவசியமாகிறது.ஒரு மந்திரம் உள்ளது.

ஓம் சர்வ சர நமச்சிவய நம(சிவாய அல்ல)

இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால் நமது வீண் செலவுகள் குறையும் என மகான்கள் கூறியுள்ளனர்.நாம் தினமும் 30 நிமிடம் நமது வீடு/அலுவலகம்/ட்டை மாடியில் காலையிலும் மாலையிலும் இந்த மந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஜபித்துக்கொண்டே  இருக்கிறோம். என்னாகும்?100 ஆம் நாளிலிருந்து நமது செலவுகள் குறையும்.வருமானம் மிச்சமாகும்.
எப்படி?
நமது மூளையில் இந்த மந்திர அதிர்வுகள் பதிவாகும்.அந்த பதிவுகள் நவக்கிரக அலைகளில் ஒரு பாதிப்பை உருவாக்கும்.நமது தலைக்குமேலே சுமார் ஆயிரம்கிலோமீட்டர்கள் உயரத்தில் மந்திர
அலைகளுக்கான அடுக்கு உள்ளது.அங்கு நமது தினசரி ஜபம் 100ஆம்
நாளில் போய் வேலை செய்து நமது நம்பிக்கையை நிஜமாக்கும்.ஒவ்வொரு மனிதனும் சுயமாகஉணரமட்டுமே முடியக்கூடிய
விஷயங்களில் ஒன்று இது:

கொலை, கொள்ளை, கற்பழிப்பு,ஏமாற்றுதல்,
பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம்
என சாஸ்திரங்கள் கூறுகின்றன.இதனால் ஏற்படும்
பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது.
இதை நீக்க ஒரு சிவ மகாமந்திரம்:

ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்

இந்த மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான
சிவன் கோவிலில் ஜபித்தால் நாம்- அதாவது நமது
கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய
நமது அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள்
7
தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்தபாவங்கள்
உடனே நீங்கிவிடும்.

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம்


காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.

ஆழ் மனதின் அற்புத சக்திகள் - 2

துவக்கத்தில் சில மருத்துவர்களும், சில ஆராய்ச்சியாளர்களும் ஆழ்மன சக்திகளில் காட்டியஆர்வத்தையும், ஆராய்ச்சிகளையும் பெரும்பாலான விஞ்ஞானிகள் சந்தேகக் கண்ணுடனேயே பார்த்தார்கள். பின் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் சிலர் காட்டிய அக்கறை அவர்களையும் சிந்திக்க வைததது.உதாரணத்துக்கு 1912-ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் அலெக்சிஸ் காரல் ஆணித்தரமாகத் தன் கருத்தை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சொன்னார். "கண்களின் உதவியில்லாமல் காண முடிவது, காதுகளின் உதவியில்லாமல் கேட்க முடிவது, ஐம்புலன்களின் உதவியில்லாமல் எண்ணங்களை பரிமாறிக் கொள்வது போன்றவை உண்மையானவையே. உண்மையாக சிந்திக்க முடிந்த எந்த மனிதனும் இது குறித்த தகவல்களை முழுவதும் ஆராயாமல் இந்த உண்மைகளை ஒதுக்கி விட முடியாது".
அவர் கூறியபடி அந்த உண்மைகளை ஒதுக்க முடியாமல் மேலும் ஆராய முற்பட்டவர் ஜோசப் பேங்க்ஸ் ரைன் (1895-1980). அவர் அறிவு தாகம் மிக்கவர். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் கடற்படையில் சேர்ந்து துப்பாக்கி சுடுவதில் சிறந்து விளங்கியவர். பின் தாவரவியலில் சிகாகோ பல்கலைகழக்த்தில் 1923ல் பிஎச்டி பட்டம் பெற்றவர். பின்பு ஹார்வர்டு பல்கலைகழகத்தில் மனோதத்துவத்திலும் பட்டம் பெற்றவர்.
ஒருமுறை அவரும் அவர் மனைவியும் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆர்தர் கானன் டாயில்இறந்தவர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் விஞ்ஞான பூர்வமாக இருக்கின்றன என்று உதாரணங்களுடன் ஆற்றிய உரையைக் கேட்க நேரிட்டது. இப்படியெல்லாம் நடக்க முடியும் என்கிற எண்ணமே அறிவு தாகம் உள்ள அவர் ஆர்வத்தைக் கிளறி விடவே ஆழ்மன சக்திகள் குறித்து முழுவதுமாக ஆராய்வது என்று அவர் தீர்மானித்தார். அது குறித்து பல நூல்கள் பற்றியும், பரிசோதனைகள் பற்றியும் படித்த அவர் 1930ல் ட்யூக் பல்கலைகழகத்தில் ஆழ்மன சக்திகள் குறித்த விரிவான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.
1931ல் லின்ஸ்மேயர் என்ற பொருளாதார மாணவரை வைத்து அவர் முதலில் தொடங்கிய ஆராய்ச்சி ஜெனர் கார்டுகளை (zener-cards) உபயோகப்படுத்தியதாக இருந்தன. அதில் கிடைத்த முடிவுகள் யூகத்தில் சொல்வதால் வரக்கூடிய விளைவுகளை விட அதிகமானதாக இருந்தன. ஆரம்ப ஆராய்ச்சிகளில் மிகவும் வெற்றிகரமாகக் கிடைத்த முடிவுகள் போகப்
போகக் குறைய ஆரம்பித்தன. காரணங்களை ஆராய்ந்த போது உற்சாகக்குறைவு, கவனச்சிதறல், வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற போட்டியுணர்வு ஆகியவை எல்லாம் காரணங்கள் என்பதை ரைன் கண்டுபிடித்தார்.
(இது இன்றளவும் உண்மையாக உள்ளது. பரபரப்பில்லாத உற்சாகம், முழுக் கவனம், வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற வெறியில்லாமல் அமைதியாக முயல்தல், களைப்பின்மை ஆகியவையே ஆழ்மன சக்திகள் வெற்றிகரமாக வெளிப்பட உதவுகின்றன. பின் ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி, பயன்படுத்துவதெப்படி என்பதை அலசும் போது இது பற்றி
விரிவாகப் பார்க்கலாம்) லின்ஸ்மேயரை விட்டு விட்டு ரைன் ஹுபர்ட் பியர்ஸ் என்பவரை வைத்து 1932ல் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அந்த கார்டுகளில் சிலவற்றை எடுத்து மறைத்து வைத்துக் கொள்ள அந்தக் கார்டுகளைச் சரியாக யூகித்துச் சொல்லும் அந்தப்
பரிசோதனைகளில் வியக்கத் தக்க சதவீத வெற்றிகள் கிடைத்தன. சில ஆராய்ச்சிகள் கார்டுகள் வைத்திருப்பவருக்கும், யூகிப்பவருக்கும் இடையே நிறைய இடைவெளியில் நடத்தப்பட்டன என்றாலும் அந்த விளைவுகளில் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
எடுத்த கார்டுகளை யூகிப்பது போலவே எடுக்கப் போகும் கார்டுகளையும் யூகிக்கும் ஆராய்ச்சிகளையும் ரைன் மேற்கொண்டார். ஜெனர் கார்டுகளைப் போலவே பகடைக் காய்களும் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டன. கையால்உருட்டிப் போடுவது, ஒரு கப்பில் வைத்து வீசுவது, எந்திரம் மூலமாக எறியப்படுவது போன்ற பரிசோதனைகளும் நிகழ்த்தப்பட்டன. எந்த எண் வரக்கூடும் என்ற யூகங்களையும் ஆராய்ச்சி செய்து சரிபார்த்தனர். அப்படிக் கிடைத்த முடிவுகளும் ஆழ்மன சக்திகளை உறுதிப்படுத்தும் அளவுக்கு உயர்ந்த சதவீதமாகவே இருந்தன.
1934ல் ரைன் தன் ஆராய்ச்சிகளைப் புத்தகமாக (Extra Sensory Perception) வெளியிட்டார். அது பல பதிப்புகளைக் கண்டு வெற்றிவாகை சூடியது. ரைன் மேலும் பல நபர்களை வைத்து தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 1960களில் ஆழ்மன ஆராய்ச்சிகளுக்காக Foundation forResearch on the Nature of Man என்ற அமைப்பை அவர் ஏற்படுத்தினார். பின்னர் அது மாற்றம் அடைந்து ரைன் ஆராய்ச்சி மையம் (Rhine Research Center) என்ற பெயரில் இன்றும் ஆராய்ச்சிகளை நடத்தியும், மற்றவர்களின் ஆராய்ச்சிகளுக்கு உதவியும் வருகிறது.
முறைப்படியான ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஜே.பி.ரைன் எடுத்த முயற்சிகள் இன்னொருமைல்கல் என்றால் அது மிகையாகாது. 1930 முதல் தன் மரண காலம் வரை கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் அந்த ஆராய்ச்சிகளில் சளைக்காமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவரது முயற்சிகள் தற்கால அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தன. பின்னால் வந்த பல ஆராய்ச்சியாளர்கள் அவருடைய அடிப்படைகளையே ஒரு அளவுகோலாக வைத்துக் கொள்ளும் அளவு இந்தத் துறைக்கு பெரும்சேவை புரிந்துள்ளார்.
அவர் மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் இது போன்ற அதீத சக்திகள் இருப்பதாகக் கருதினார். சிலர் அதிகமாக அதை வெளிப்படுத்த முடிந்தவர்களாக இருப்பதாகவும், அதுவும் சில குறிப்பிட்ட சமயங்களில் அந்த சக்திகள் அதிகமாக வெளிப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
"விளக்க முடியாத மகாசக்திகளைக் காணும் போது உற்சாகமாக அதைப் பற்றிக் கொண்டு ஆராய முற்படுகிற ஆராய்ச்சியாளன் அதில் ஒரு பெரிய பொக்கிஷத்தையே கண்டுபிடிக்கிறான். அது எந்த அளவு மர்மமானதாகவும் விளக்க முடியாததாகவும் உள்ளதோ அந்த அளவு உயர்ந்த ஞானத்தை அது விளங்கப்பெறும் போது தருவதாக இருக்கிறது," என்று 1947ல் ரைன் கூறியது போல பல ஆராய்ச்சியாளர்கள் ஆழ்மன சக்தியை ஆராய்ந்து மலைத்துப் போனார்கள்.
எத்தனை தான் ஆதாரங்களுடன் சொன்னாலும் ஆழ்மன சக்திகள் ஆர்வத்தைத் தூண்டும் அதே அளவுக்கு "உண்மையில் இப்படி இருக்க முடியுமா?" என்ற சந்தேகத்தையும் படிப்பவர் மனதிலும் கேள்விப்படுபவர் மனதிலும் ஏற்படுத்துவது இயல்பே. எனவே ஆராய்ச்சிகள் மேலும் அதிகமாகவும் ஆழமாகவும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் பூமியில் மட்டுமல்ல விண்வெளியிலும் இந்த ஆராய்ச்சி நடந்திருக்கிறது என்றால் நம்பக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை. அதன் விவரங்களைக் காண்போமா?
மேலும் பயணிப்போம்...

நன்றி: விகடன்


Thursday, August 29, 2013

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 1



நம்மில் ஒவ்வொருவரும் ஒருசில சந்தர்ப்பங்களில் ஆழ்மனதின் அற்புத சக்தியை நம் வாழ்க்கையிலேயே கண்டிருப்போம். நாம் ஒருவரைப் பற்றி எண்ணி சிறிது நேரத்தில் அவர் நேரில் வருவதைக் கண்டிருக்கலாம். அல்லது அவரிடமிருந்து போன் கால் வந்திருக்கலாம். ஒருவரிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவரே அந்தப் பேச்சை நம்மிடம் எடுத்திருக்கலாம். போன் மணி அடித்தவுடன் இவராகத் தான் இருக்கும் என்று நினைத்து ரிசீவரை எடுத்தால் பேசுவது நினைத்த அதே நபராக இருந்திருக்கலாம். ஆனால் இந்த விஷயங்கள் மிகச் சாதாரணமானவையாக இருப்பதாலும், நம்மை ஆழ்மன சக்தியாளராக நினைக்காததாலும் அவற்றை நாம் பெரிதாக நினைப்பதில்லை.
அதுவே மிகவும் அசாதாரணமான நிகழ்ச்சியாக இருந்தால் மட்டுமே அந்த சக்தியின் தன்மை நம்மால் உணர முடிகிறது.உதாரணத்திற்கு வின்ஸ்டன் சர்ச்சில் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லலாம். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஒரு நாள் தன் காரை நோக்கிச் செல்ல, டிரைவர் வழக்கமாக அவர் அமரும் இடத்தின் கார்க்கதவை திறந்து நின்றார். வின்ஸ்டன் சர்ச்சில் அந்த இடத்தில் அமர முற்படாமல் சுற்றிச் சென்று மறுபக்கக் கதவைத் திறந்து அந்தப்பக்கமே உட்கார்ந்து கொண்டார். சிறிது தூரம் சென்ற பின் அந்தக் காரில் வெடிகுண்டு வெடித்தது. அவர் வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தால் அவர் அந்த விபத்தில் கொல்லப்பட்டிருப்பார். இடம் மாறி அமர்ந்ததால் அவர் உயிர் பிழைத்தார். பின் அதைப் பற்றிச் சொல்லும் போது “ஏதோ ஒரு உள்ளுணர்வு வழக்கமான இடத்தில் என்னை உட்கார விடாமல் தடுத்தது” என்று சர்ச்சில் சொன்னார்.

அது உயிரைக் காப்பாற்றிய சம்பவமானதால் அது இன்றும் பேசப்படுகிறது. அதுவே உப்பு சப்பில்லாத ஒரு நிகழ்வைப் பற்றியதாக இருந்தால் யாரும் அதை நினைவு வைத்துக் கொள்வதில்லை. ஆனால் உண்மையில் ஒருவரைப் பற்றி நினைத்த சிறிது நேரத்தில் அவர் நம் எதிரில் வந்து நிற்பதும், சர்ச்சிலின் வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவமும் ஆழ்மன சக்தியின் சில வெளிப்பாடுகள் தான்.

ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள் பலதரப்பட்டவை. அவை :–

1. Psychokinesis எனப்படும் வெளிப் பொருள்கள் மீது இருக்கும் கட்டுப்பாடு. பொருட்களைப் பார்வையாலேயே நகர்த்துவது, அசைப்பது போன்றவை இந்த வகையில் அடங்கும். நினா குலாகினா என்ற ரஷியப் பெண்மணிக்கு இந்த சக்தி இருந்ததை நாம் முன்பு பார்த்தோம்.

2. Extra Sensory Perception (ESP) எனப்படும், நம் ஐம்புலன்களின் துணையில்லாமல் தகவல்கள் அறிய முடிவது. உதாரணத்திற்கு ஜெனர் கார்டுகளை வைத்து ஜோசப் பேங்க்ஸ் ரைன் செய்த ஆராய்ச்சிகளைச் சொல்லலாம். ஒருவர் எடுத்த கார்டு எது என்பதைப் பார்க்கலாமலேயே சொல்ல முடிந்ததை நாம் முன்பு பார்த்தோம்.

3. Telepathy எனப்படும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்திகளை அனுப்புவது. இது ஆழ்மன ஆராய்ச்சிகளில் ESP வகையிலேயே சேர்க்கப்படுகிறது. மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தியை இயல்பாகவே அதிகம் காணலாம். தாய்-குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருப்பதை நம்மால் காண முடியும். வளர்த்தும் செல்லப் பிராணிகளுடன் கூட சில மனிதர்களுக்கு இந்த சக்தி இருக்கும்.

4. Clairvoyance or Remote Viewing எனப்படும் வெகு தொலைவில் உள்ளதையும் காண முடியும் சக்தி. ஆப்பிரிக்கக் காடுகளில் அமெரிக்க விமானம் விழுந்து கிடந்த இடத்தை அட்சரேகை தீர்க்கரேகையோடு ஒரு பெண்மணி சொன்னதை ஜிம்மி கார்ட்டர் தெரிவித்தது நினைவிருக்கலாம். ஆவிகளுடன் பேச முடிவதையும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் இந்த வகையிலேயே சேர்க்கிறார்கள்.
5. Psychometry என்பது ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடிவது. இதற்கு உதாரணமாக பீட்டர் ஹுர்கோஸ் என்ற டச்சுக் காரரைச் சொல்லலாம். இவர் 1943ல் கீழே விழுந்து மண்டை உடைந்ததில் இந்த சக்தியை யதேச்சையாகப் பெற்றார். இவர் கொலை, கொள்ளை நடந்த இடங்களில் கிடைக்கும் தடயப் பொருள்களைப் பிடித்துக் கொண்டு குற்றவாளிகளை விவரிப்பதில் வல்லவராக இருந்தார். ஒரு வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் உடலில் இருந்த சட்டையைப் பிடித்துக் கொண்டே கொன்றவனின் அங்க அடையாளங்களைச் சொன்னார். மீசை, மரக்கால் உட்பட சரியாகச் சொல்ல முன்பே சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்திருந்த சிலரில் ஒருவன் அது போல இருக்கவே அவனைப் பற்றி போலீசார் சொல்ல அவன் கொலை செய்த ஆயுதத்தை ஒளித்து வைத்த இடத்தையும் பீட்டர் கூறினார்.

6. Precognition என்னும் நடப்பதை முன் கூட்டியே அறியும் சக்தி.உதாரணத்திற்கு இத்தோடரின் ஆரம்பத்தில் கிறிஸ்டல் பந்து ஞானி டிலூயிஸ் எப்படி பல விபத்துகளை நடப்பதற்கு முன் கூட்டியே சொன்னார் என்பதைப் பார்த்தோம்.

7. Post cognition என்னும் என்ன நடந்தது என்பதை நடந்த பின்னர் அறிய முடிந்த சக்தி. உதாரணமாக மேலே குறிப்பிட்ட பீட்டர் ஹூர்கோஸையே இதற்கும் கூறலாம். இன்றும் சில வெளிநாடுகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஆழ்மன சக்தியாளர்களின் இந்த சக்தியைக் காவல்துறை அதிகாரிகள் இரகசியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

8. Astral Projection or Out of Body Experience (OBE) உடலை விட்டு வெளியேறி பலவற்றையும் காணும் சக்தி. இந்த சக்தியை செத்துப் பிழைத்தவர்கள் என்று சொல்லப்படும் மரணம் வரை சென்று சில வினாடிகள் கழித்து உயிர்பெற்ற சிலர் உணர்ந்திருக்கிறார்கள். இந்த சக்தி ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆராயப்பட்டிருக்கிறது. இது குறித்து டாக்டர் சார்லஸ் டார்ட் ஆராய்ச்சி செய்திருக்கிறார். 1967ல் அவர் செய்த ஒரு ஆராய்ச்சியில் படுத்த நிலையில் உள்ள ஒரு ஆழ்மன சக்தியாளர் அடுத்த அறையில் தரையில் எழுதி வைக்கப்பட்டிருந்த ஐந்து இலக்க எண் என்ன என்பதை சரியாகச் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.

9. Psychic Healing or Spiritual Healing எனப்படும் மருந்துக்களின் உதவியில்லாமல் நோய்களைக் குணப்படுத்தும் சக்தி. இதற்கு உதாரணமாக டாக்டர் ஓல்கா வோராலைப் பார்த்தோம். இந்த குணப்படுத்தும் சக்தியைப் பலர் ஆழ்மன சக்தி வகைகளில் சேர்ப்பதில்லை. இது தெய்வீக சக்தி அல்லது ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை சக்தி வகைகளில் சேர்க்கிறார்கள். ஆனாலும் இது ஆழ்மன சக்தியிலேயே சேர்ப்பது பொருத்தம் என்று நான் நினைக்கிறேன்.


ஆழ்மன சக்திகள் முழுவதையும் இந்த ஒன்பது வகைகளில் அடக்கி விட முடியாது என்ற போதிலும் இவையே மிக முக்கியமானவை என்று சொல்லலாம்.




வாஸ்து சாஸ்திரம்

கிழக்கேயிருந்து வரும் சூரிய சக்தியையும்,வடக்கேயிருந்து வரும் காந்த சக்தியையும் வீட்டுக்குள் தேக்கி வைப்பதே வாஸ்து.
கோயிலின் வாஸ்து வேறு வீட்டின் வாஸ்து வேறு என்று சிலர் கூறுவார்கள். ஆனால் அடிப்படை ஒன்றே!அவற்றை மட்டுமே சிற்ப சாஸ்திர சிந்தாமணி என்ற நூலில் விளக்கி இருப்பதை சுலபமாக்கி கொடுத்துள்ளேன்.  
பழங்கால கிழக்குப் பார்த்த சிவன் கோவிலுக்குச் சென்றால்,உள்ளே நுழைந்தவுடன் இடது கைப்பக்க மூலையில் மடப் பள்ளி உள்ளது.(அதுவே சமையலறை வைக்க உகந்த இடம். அக்னி மூலை என்றழைக்கப்படும் தென் கிழக்கு மூலையே அது),அதில் கிழக்கு நோக்கி நின்று சமையல்காரர்கள் சமைக்கிறார்கள்.வீட்டிலும் அது போலவே மனையாளும் கிழக்கு நோக்கி நின்று சமைக்கட்டும். 
பிறகு பிரகாரம் சுற்றி வரும் போது கன்னி மூலையில் கணபதி(தென் மேற்கு மூலையில்) உள்ளார்.அவர் கனமானவர்,கண நாதர்,பரிகார தேவதைகளில் உயரமான கோபுரம் கொண்டவர்(கனமான மேல்நிலைத் தொட்டி,மாடிப் படிக்கட்டு தென்மேற்கு மூலையில் அமையுங்கள்,வீட்டிலேயே மிக உயரமான இடமாக இது அமையட்டும்)

பிறகு பிரகாரம் சுற்றி வரும் போது கன்னி மூலையில் கணபதி(தென் மேற்கு மூலையில்) உள்ளார்.அவர் கனமானவர்,கண நாதர்,பரிகார தேவதைகளில் உயரமான கோபுரம் கொண்டவர்(கனமான மேல்நிலைத் தொட்டி,மாடிப் படிக்கட்டு தென்மேற்கு மூலையில் அமையுங்கள்,வீட்டிலேயே மிக உயரமான இடமாக இது அமையட்டும்)

அடுத்து அமைந்துள்ளது முருகன் சன்னதி அமைந்துள்ள வாயு மூலை,சிவன் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளையும் சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தது வாயு பகவான்தான்.சம்பந்தம் புரிகிறதா!இந்த மூலை கன்னிமூலையை(தென்மேற்கை) அடுத்த உயரமாக அமையலாம்.கன்னி மூலை தோதாக அமையவில்லையானால் இங்கே மாடிப்படிக்கட்டு அமைக்கலாம்.

அடுத்து தீர்த்தத் தொட்டி,தண்ணீர் விழுவது கிழக்கானாலும் வெளியேறுவது வடகிழக்குத் திசையில்தான் வெளியேறுகிறது.அது போல வடகிழக்குத் திசை பள்ளமாக இருந்தால்தான் வடக்கு, கிழக்குத் திசையில் இருந்து வரும் காந்த சக்தியை தேக்க முடியும்.எனவே கிணறு,ஆழ்துளைக் கிணறு, கீழ்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, ஆகியவை அமைக்கலாம்.இந்தத் திசையே ஈசானியம் என்று அழைக்கப்படும் திசை.

மூலைகளில் கழிவறை அமைக்க வேண்டாம்.அவை தேவதைகளின் இருப்பிடம்.அது போல மனையின் நடுப்பகுதி பீஜ ஸ்தானம் என்று பெயர் அந்த இடத்தையும் முக்கியத்துவம் கொடுங்கள். கழிவறைகளை வீட்டின் கிழக்கு அல்லது மேற்குப் பகுதியில் அமையுங்கள்.வீட்டின் ஈசானியத்தை எவ்வளவுக்கெவ்வளவு திறப்பாக வைக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு சூரிய சக்தியும்,காந்த சக்தியும் உள்ளே வரும்.அது வீட்டின் மூன்றில் ஒரு பங்கு இருந்தால் நல்லது. அல்லது மூன்றில் ஒரு பங்கில்,மூன்றில் ஒரு பங்காவது காலியாக வைக்க வேண்டும்.

வீட்டின் ஈசானியத்தில் வாசல் வைப்பது, வடக்கு, கிழக்குத் திசைகளில்,சன்னல் வைப்பது போன்றவை சூரிய சக்தியும்,காந்த சக்தியும் உள்ளே வர ஏதுவாக இருக்கும்.தென்மேற்கு மூலையான,கன்னி மூலையில்(அல்லது தெற்கு,மேற்கு திசைகளில்),பரண் அமைப்பது,கனமான பொருட்களை வைப்பது,அந்தத் திசையை மூடுவது போன்றவை சூரிய சக்தியும்,காந்த சக்தியும் வீட்டின் உள்ளேயிருந்து வெளியே போகாமல் தடுக்கும்.

பீரோ,பணம் வைப்புப் பெட்டி ஆகியவற்றை தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கி வைப்பது இந்தக் காரணத்துக்காகவே.வடக்கு குபேரன் திசை எனவும் அங்கிருந்து செல்வம் வடகிழக்காக உள்ளே வந்து வெளியேறும் திசையான தென்மேற்கில் பணப்பெட்டியை வைத்து பிடித்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.